Tuesday, 7 April 2020

ஜாதகத்தில் நாகதோஷம் எனப்படும் ராகு, கேது தோஷம் நீங்கி #திருமண #யோகம் கைகூட இப்பதிகத்தை பாராயணம் செய்யலாம்

🌺#மனத்தகத்தான் #தலைமேலான் #வாக்கினுள்ளான்🌺

#திருநாவுக்கரசர் பாடிய இந்தப்பாடல் #காளஹஸ்தி #ஸ்ரீ_காளஹஸ்தீஸ்வரர், #ஸ்ரீ_ஞானப்பூங்கோதை மீது பாடப்பட்டது. ஜாதகத்தில் நாகதோஷம் எனப்படும் ராகு, கேது தோஷம் நீங்கி #திருமண #யோகம் கைகூட இப்பதிகத்தை பாராயணம் செய்யலாம். இங்குள்ள அம்பிகை #கல்வி தேவதையாக விளங்குவதால் மாணவர்களும் கல்வி விருத்திக்காக படிக்கலாம். அம்பாளின் பெயர் #ஒன்பதாம் பாடலில் உள்ளது.

#இறைவர்_திருப்பெயர் : ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி

#இறைவியார்_திருப்பெயர் : ஸ்ரீ ஞானப்பூங்கோதை

#திருமுறை : ஆறாம் திருமுறை 008 வது திருப்பதிகம்

🌺#மனத்தகத்தான்_தலைமேலான் வாக்கினுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தம் சிரத்தின் மேலான்
ஏழ் அண்டத்து அப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத்தகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான்
காளத்தியான் அவன் என் கண் உளானே.🌺 ..... (05)

#பொருளுரை: மனத்திலும் தலைமேலும் சொற்களிலும் உள்ளானாய், மனம் மெய்மொழிகளைச் செயற்படுத்தித் தன் திருவடிகளை வாயாரப்பாடும் தொண்டர் இனத்தானாய். தேவர்கள் தலை மேலானாய், ஏழுலகங்களையும் கடந்தவனாய், இவ்வுலகில் செவ்விதாகிய பொன் போன்ற நல்ல விளைவை நல்கும் குறிஞ்சி முதலிய நிலத்தில் உள்ளானாய், நறிய கொன்றைப் பூவில் உறைபவனாய், மலை நெருப்பு காற்று மேக மண்டலம் இவற்றில் உடனாய் இருந்து இவற்றைச் செயற்படுப்பவனாய்க் கயிலாயத்து உச்சி உள்ளானாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான்.
———
🌺"#தேனப்பூ_வண்டுண்ட கொன்றையான் காண்
திரு ஏகம்பத்தான் காண் தேனார்ந்து உக்க
#ஞானப்பூங்கோதையாள் பாகத்தான் காண்
நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண்
வானப்பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து
நின்றான் காண் வண்டார் சோலைக்
கானப்பேரூரான் காண் கறைக் கண்டன் காண்
காளத்தியான் அவன் என் கண் உளானே.🌺 ..... (09)

#பொருள் : வண்டுகள் நுகரும் தேனை உடைய கொன்றை சூடியாய்த் திருஏகம்பத்தனாய், தேன் ஒழுகும் பூக்களை அணிந்த ஞானப்பூங்கோதை அம்மையை இடப்பாகமாகக் கொண்டவனாய், நமக்கு இனியவனாய், ஞானப் பிரகாசனாய், ஊழியிறுதியில் வானமும் உலகும் அழியுமாறு விரைந்து ஒடுக்க வல்லவனாய், வண்டுகள் பொருந்திய சோலைகளை உடைய திருக்கானப்பேரூரில் உறைபவனாய் நீலகண்டனாய்க் காளத்திப் பெருமான் என்கண்
🌺"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"🌺


No comments:

Post a Comment