Tuesday, 7 April 2020

தினம் ஒரு சிவவாக்கியம்

*தினம் ஒரு சிவவாக்கியம்
*

🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🌸

சிவவாக்கியம்-148 🙌

ஆதிஉண்டு அந்தம் இல்லை அன்றி நாலு
 வேதம் இல்லை

சோதி உண்டு சொல்லும் இல்லை சொல்லிறந்தது ஏதும் இல்லை

ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவும்

ஆதி அன்று தன்னையும் யார் அறிவது அண்ணலே!!!

ஆதியை அறிந்து, அது ஒன்றையே பற்றி, தவம் புரியும் ஞானிகள் அழிவது இல்லை. அவர்களுக்கு நான்கு வேதமும் தேவை இல்லை.

அவர்கள் சோதியான ஈசனைக் கண்டு அங்கே சொல் ஏதும் இல்லாமல் சொல்லிறந்த தன்மையும் இல்லாமல் மௌனத்தில் ஊன்றி சும்மா இருப்பார்கள்.

ஆதியான அணுவில் அயன், அரி, அரன் என மூவரும் இருப்பதை உணர்ந்து, பிராணசக்தியாக வாலை அமர்ந்தே தானாகி நிற்பதனையும் உணர்ந்து தியானத்தில் இருப்பார்கள். இதனை வேறு யார் அறிவார்கள் அண்ணலே!!!

🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🌸


No comments:

Post a Comment