#ஸ்கந்த புராணம் - பகுதி 35
#அசுரர்களைக் கொன்ற வீரபாகு
====================
யாளிமுகனின் படைத்தளபதி வீரசிங்கன், பறந்து செல்லும் வீரபாகுவை பார்த்து விட்டான். டேய் ! நில், நீ யார் ? எங்கே போகிறாய் ? என்றான். வீரபாகு சற்றும் கலங்காமல், நான் வெற்றி வடிவேலனின் வீரத்தளபதி வீரபாகு. நான் சூரபத்மனின் அரண்மனை நோக்கி வடிவேலனின் தூதுவனாக சென்று கொண்டிருக்கிறேன். நீ உன் வழியில் போ, என்றான். வீரபாகுவை அவன் தடுத்தான். எங்கள் அசுரகுல தலைவரைப் பார்க்க கேவலம் நீ செல்வதா ? உன்னை ஒழித்து விடுகிறேன், என பாணங்களைத் தொடுத்தான். அத்தனை அஸ்திரங்களையும் பொடிப்பொடியாக்கிய வீரபாகு, முதலில் வீரசிங்கனின் படைகளை ஒழித்தான். பின்னர் வீரசிங்கனின் இலங்கைப்பட்டிணத்தில் குதித்தான். அவன் குதித்த வேகத்தில் அந்த பட்டணமே பூமிக்குள் புதைந்து விட்டது. ஏராளமான அசுரர்கள் இறந்தனர்.
அங்கிருந்து தப்பித்த யாளிமுகனின் மகன் அதிவீரன் வீரபாகுவிடம் போர்புரிய ஓடி வந்தான். அவனது ஆயுதங்களையெல்லாம் சுக்குநூறாக்கிய வீரபாகு, அதிவீரனைக் கொன்றான். பின்னர் சூரபத்மன் வசித்த வீரமகேந்திரபட்டணத்தை வந்தடைந்தான். நகர எல்லைக்குள் நுழைந்த போது, நான்கு திசை வாசல்களிலும் பலத்த பாதுகாப்பு இருப்பதைப் பார்த்தான். இத்தனையையும் மீறி நகருக்குள் செல்லும் வழியை ஆலோசித்தான். அப்போது தெற்குவாசலைக் காவல் செய்த யானை முகம் கொண்ட கஜாமுகன் என்ற காவல்படை தலைவன் வீரபாகுவை பார்த்து விட்டான்.
ஏய் நீ யார் ? தேவர்களின் ஏவலாளி போல் தெரிகிறாயே ! பாதுகாப்பு மிக்க இந்த பட்டணத்துக்குள் எப்படி நுழைந்தாய் ? மாய வித்தைகளைக் கடைபிடித்து உள்ளே வந்தாயா ? என்று சொல்லிக் கொண்டே வீரபாகுவை நோக்கி ஒரு மலையைத் தூக்கி எறிந்தான். விஸ்வரூபம் எடுத்திருந்த வீரபாகுவின் மீது விழுந்த அந்த மலை நொறுங்கியது. பின்னர் அவன், ஆயிரம் ஆலமரங்களை பிடுங்கி மொத்தமாகச் சேர்த்து கட்டி, வீரபாகு மீது வீசினான். அவற்றை வீரபாகு ஒரு அஸ்திரத்தை வீசி தூள்தூளாக்கி விட்டான். கோபம் தாளாத கஜாமுகன், ஆயிரம் மலைகளைப் பிடுங்கி அவன் மீது விசினான். அதுவும் பலனளிக்கவில்லை. அவற்றைத் தூளாக்கிய வீரபாகு, வலிமை மிக்க அஸ்திரம் ஒன்றை எய்து, கஜாமுகனை காலால் எட்டி உதைத்தான். வலி தாங்காமல் புரண்ட கஜாமுகன் உயிரை இழந்தான்.
பின்னர் தனது உருவத்தை சுருக்கி நிஜஉருவம் எடுத்த வீரபாகு, ஒரு கோபுரத்தின் மீது ஏறி, மகேந்திரபுரியை நோட்டமிட்டான். மிக அற்புதமாக அமைக்கப்பட்டிருந்த அந்த நகரின் அழகு அவனைக் கவர்ந்தது. ஓரிடத்தில் இருந்த சிறைச்சாலையில் ஒரு அறையில் தேவர்களும், ஒரு அறையில் தேவமாதர்களும் அடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான்.
தொடரும்...
ஓம் சரவண பவாய நமஹ!
#ஸ்ரீஅருணகிரிநாதர்_அருளிய
#சிதம்பரத்_திருப்புகழ்.
#நாடா_பிறப்பு_முடியாதோ
#நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி
நாயே னரற்றுமொழி வினையாயின்
#நாதா திருச்சபையி னேறாது சித்தமென
நாலா வகைக்குமுன தருள்பேசி
#வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி
வாய்பாறி நிற்குமெனை அருள்கூர
#வாராய் மனக்கவலை தீராய் நினைத்தொழுது
வாரே னெனக்கெதிர் முன் வரவேணும்!
#சூடா மணிப்பிரபை ரூபா கனத்தவரி
தோலா சனத்தியுமை யருள்பாலா!
#தூயா துதித்தவர்கள் நேயா வெமக்கமிர்த
தோழா கடப்பமல ரணிவோனே!
#ஏடார் குழற்சுருபி ஞானா தனத்திமிகு
மேராள் குறத்திதிரு மணவாளா!
#ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை
ஈடேற வைத்தபுகழ் பெருமாளே!
#பொருள் :
🌻நாடா = நாடித் தேடி ஆராய்ந்து பார்த்து,
🌻பிறப்புமுடி யாதோ வெனக்கருதி = இந்தப் பிறவித் தொழிலுக்கு
முடிவே கிடையாதோ என்று எண்ணி,
🌻நாயேன் அரற்றுமொழி = அடியேன் ஓலமிட்டு அலறும் இந்த மொழி,
🌻வினையாயின் = என் முற்பிறவி வினையின் காரணத்தால்,
🌻நாதா திருச்சபையி னேறாது சித்தமென =நாதனே!, உன் திருச்
சந்நிதியிலோ உன் மனத்திலோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை
யான் உணர்ந்து,
🌻நாலா வகைக்கும் உனது அருள்பேசி = பலவிதமாக உன்னுடைய
திருவருளின் பெருமையே பேசி,
🌻வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி = என்றும் வாடாத உனது
திருவடி மலர் என்னும் முக்தியைக் கொடுத்தருள்! கொடுத்தருள்! என்று
குழறி,
🌻வாய்பாறி நிற்குமெனை = வாய் கிழிபட்டு நிற்கும் எனக்கு
🌻அருள்கூர வாராய் = உன் கிருபை கூடும்படி வந்தருள்வாயாக!
🌻மனக்கவலை தீராய் = என் மனத்துயரங்களெல்லாம் தீர்ப்பாயாக!
🌻நினைத்தொழுது வாரேன் எனக்கு = உன்னைத் தொழுது வருதல்
என்பதே இல்லாத எனக்கும்
🌻எதிர் முன்வரவேணும் = நேர் எதிரிலே முன்பு எழுந்தருளி வர
வேண்டுகிறேன்.
🌻சூடா மணிப்பிரபை ரூபா = தெய்வமணியின் ஒளி விளங்கும்
உருவத்தாளும்,
🌻கனத்த அரி தோல் ஆசனத்தி = பெருமை வாய்ந்த சிங்கத்தின்
தோலை ஆசனமாகக் கொண்டவளும் ஆகிய
🌻உமை அருள்பாலா ... உமாதேவி பார்வதி அருளிய குழந்தையே!
🌻தூயா துதித்தவர்கள் நேயா =பரிசுத்த மூர்த்தியே, துதித்து
வணங்குபவர்களின் நேயனே,
🌻எமக்கமிர்த தோழா = அடியேனுக்கு அமிர்தம் போல் வாய்த்த
அருமைத் தோழனே!
🌻கடப்பமலர் அணிவோனே = கடப்ப மலரினை அணிபவனே!
🌻ஏடார் குழற்சுருபி = மலர் நிறைந்த கூந்தலை உடைய வடிவழகியும்,
🌻ஞான ஆதனத்தி = ஞானம் என்ற ஆசனத்தை (பீடத்தை)
உடையவளும்,
🌻மிகு மேராள் = மிக்க கம்பீரமானவளும் ஆன
🌻குறத்தி திரு மணவாளா = குறமகளாகிய வள்ளியின் அழகிய கணவனே!
🌻ஈசா தனிப்புலிசை வாழ்வே = ஈசனே, ஒப்பற்ற பெருமை வாய்ந்த புலியூரில்
(சிதம்பரத்தில்) வாழ்கின்ற செல்வமே!
🌻சுரர்த்திரளை ஈடேற வைத்தபுகழ் பெருமாளே = தேவர்
கூட்டத்தை வாழ்விக்கச் செய்த புகழ் கொண்ட பெருமாளே!
#ஸ்ரீஸுப்ரஹ்மண்ய #கராவலம்பாஷ்டகம்
ஹே ஸ்வாமிநாத கருணாகர தீந பந்தோ
ஸ்ரீ பார்வதிச முக பங்கஜ பத்மபந்தோ
ஸ்ரீ சாதி தேவகண பூஜித பாதபத்ம
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 1
தேவாதி தேவஸுத தேவ கணாதிநாத
தேவேந்த்ர வந்த்ய ம்ருது பங்கஜ மஞ்ஜுபாதா
தேவாரிஷி நாரத முநீந்த்ர ஸுகீத கீர்த்தே
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 2
நித்யான்னதான நிரதாகில ரோக ஹாரின்
தஸ்மாத் ப்ராதன பரிபூரித பக்த காம
ச்ருத்யாகம் ப்ரணவ வாச்ய நிஜஸ்வரூப
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 3
க்ரெளஞ் சாஸுரேந்த்ர பரிகண்டந சக்தி சூல
பாஸாதி ஸஸ்த்ர பரிமண்டித திவ்யபாணே
ஸ்ரீ குண்டலீச த்ருத துண்ட சிகீந்த்ரவாஹ
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 4
தேவாதி தேவரத மண்டல மத்யமேத்ய
தேவேந்த்ர பீட நகராத்ருத சாபஹஸ்த
சூரம் நிஹத்ய அஸுரகோடி ப்ரிர்த்யாமன
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 5
ஹாராதி ரத்ன மணியுக்த கிரீடஹார
கேயூர குண்டல ஸஸத் கவசாபிராம
ஹே ! வீர ! தாரக ஜயாமரப்ருந்த வந்த்ய
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 6
பஞ்சாக்ஷராதி மநுமந்த்ரித காங்கதோயை :
பஞ்சாம்ருதை : ப்ரமுதிதேந்த்ர முகைர் முநீந்த்ரே :
பட்டாபிஷிக்த ஹ்ரியுக்த பராஸநாத
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 7
ஸ்ரீ கார்த்திகேய கருணாம்ருத பூர்ணத்ருஷ்ட்யா
காமாதி ரோக கலுஷீக்ருத திஷ்ட சித்தம்
ஸிக்த்வாதுமா மவ கலாதர காந்தகாந்த்யா
வல்லீஸநாத மமதேஹி கராவலம்பம். 8
ஸுப்ரம்மண்யாஷ்டகம் புண்யம் யேபடந்தித்விஜோத்தமா :
தே ஸர்வே முக்தி மாயாந்தி ஸுப்ரம்மண்ய ப்ரஸாதத :
ஸுப்ரம்மண்யாஷ்டகமிதம் ப்ராதருத்தாய ய : படேத் :
கோடி ஜன்ம க்ருதம் பாபம் தத்க்ஷணாதேவ நச்யதே ! 9

No comments:
Post a Comment