Thursday, 30 April 2020

பச்சை புடவைக்காரி










ஈசன் வெளிப்பட்டார்


குரங்கு சாபம் - மஹா பெரியவர் அருளிய விமோசனம்

*"ஒன்றும் செய்யாதீர்கள்"-குரங்குகளை-பெரியவா*

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு

தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு கோடைக்கால ஞாயிற்றுக் கிழமை. காஞ்சீபுரம் ஸ்ரீ மடத்தில், பல்லக்கில் உட்கார்ந்து தரிசனம் தந்து கொண்டிருந்தார்கள், பெரியவா. ஏராளமான பக்தர்கள் வந்திருந்தார்கள். தட்டுத் தட்டாகப் பழங்கள், திராட்சை,கல்கண்டு,தேன் பாட்டில்கள் பல்லக்குக்கு வெளியே சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

திடீரென்று ஒரு குரங்குப் படை அங்கே வந்தது.

அட்டகாசம்தான்! பழங்களைக் குதறித் தின்றன; தேன் பாட்டில்கள் உருண்டன.

பெரியவாளிடம் போய் விஷமம் செய்யப் போகின்றனவோ? - என்று சிஷ்யர்கள் தவியாய்த் தவித்தார்கள்.

பெரியவா முகத்தில் சஞ்சலத்தின் ரேகையே தென்படவில்லை.

"ஒன்றும் செய்யாதீர்கள்" என்று விரலைச் சொடுக்கி,ஈசுவராக்ஞை! தடிகளைக் கொண்டு வந்த அன்பர்கள்,செயலிழந்து, தடிகளாக நின்று விட்டார்கள்.

ஒரு வழியாகத் தம் வேலைகளை முடித்துக் கொண்டு, ராம காரியத்துக்காகப் போய் விட்டன வானரங்கள்.

பக்தர்களுக்கு, ஒரு சம்பவம் சொன்னார்கள் பெரியவா.

தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில்,குரங்குகளின் தொல்லை தாங்க முடியவில்லை. அசட்டுத் தனமாக மாட்டிக்கொண்டுவிட்ட, ஒரு குரங்கைத் தடியால் அடித்துவிட்டார், ஒருவர். உட்காயம் ஏற்பட்டு, அந்தக் குரங்கு, சில நாட்களுக்குப் பின் உயிரை விட்டது.

அடுத்ததாக அவருக்குப் பிறந்த குழந்தைக்குப் பேச்சு வரவில்லை. பெண் குழந்தை, கல்யாணம் செய்து கொடுக்க வேண்டிய பருவம் வந்தது.

பெரியவாளிடம் வந்து, செய்த பாவத்தைக் கூறி அழுதார்கள், தம்பதி.

"மண்ணால் குரங்கு பொம்மை செய்து, உங்க ஊர் கிராம தேவதைக் கோயிலில், காணிக்கை மாதிரி சமர்ப்பித்து விடு.மனமொப்பிக் கல்யாணம் செய்து கொள்பவனாகப் பார்த்து விவாஹம் செய்து கொடு"

அப்படியே நடந்தது. வாய் பேசாத அந்தப் பெண்ணுக்கு, சுட்டித்தனமாகப் பேசுகிற குழந்தையும் பிறந்ததாம்.

"குரங்கை அடிக்கக் கூடாது. அவைகளிடம், கருணை காட்ட வேண்டும்.ராம சேவகர்கள் பரம்பரையில் தோன்றியவை. நமக்குத் தொந்தரவு கொடுத்தாலும்,ஆஞ்ஜநேயனை நினைத்துக் கொண்டு இவைகளை விட்டு விடணும்.

பெரியவாளிடமிருந்தே சம்பவத்தையும்,உபதேசத்தையும் கேட்ட அன்பர்கள் உருகிப் போனார்கள்.


பெரிய பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை

*பெரிய பெருமாளுக்கு உடம்பு சரியில்லாமல் போன கதை!*

ஒரு சுவையான சம்பவம் ஸ்ரீ ராமானுஜர் அவதார சமயத்தில் நடந்தது.

ஸ்ரீ ராமானுஜர், பெரிய பெருமாளை பார்க்க சென்றார்.

அப்பொழுது தைல காப்பு சாத்தி இருந்தார் பெரிய பெருமாள்.

என்ன காரணத்தாலோ, துணியால் போர்த்திக்கொண்டு படுத்து இருந்தார் பெரிய பெருமாள்.

இதை பார்த்த ஸ்ரீ ராமானுஜருக்கு பெரிய பெருமாளுக்கு உடம்புக்கு ஏதோ சௌகரியம் இல்லையோ என்று மனதில் தோன்றியது.

அர்ச்ச அவதாரம் தானே, கல் தானே என்று நினைக்கும் அஞானிக்கு, ஸ்ரீ ராமானுஜரின் நிலை எப்படி புரியும்?

பெரிய பெருமாளை பார்த்து "ஏன், திருமேனி பாங்கு இல்லையோ?" என்று கேட்டே விட்டார் ஸ்ரீ ராமானுஜர்.

ஸ்ரீ ராமானுஜரை பார்த்தார் பெரிய பெருமாள். பக்தன் மனோபாவத்துக்கு ஏற்று, பெருமாள் பழகுவார்.

அர்ச்ச அவதாரமாகவே பேசினார்,
"ஆமாம். கொஞ்சம் சரியாக இல்லை." என்று சொன்னார் பெரிய பெருமாள்.

"ஏன் இப்படி ஆனது?" என்று ஸ்ரீ ராமானுஜர் கேட்க,

எனக்கு தயிர் சாதத்துடன், நெல்லிக்காயை வைத்து நிவேதனம் செய்து விட்டனர். நாமும் பக்தன் கொடுப்பதால் சாப்பிட்டு விட்டோம்.
இதனால் கொஞ்சம் உடலுக்கு ஒத்துக்காமல் ஆகி விட்டது. ஜுரம் வந்து விட்டது" என்றாராம் பெரிய பெருமாள்.

தன் பக்தனிடம், பக்தனின் மனோ நிலைக்கு ஏற்றாற்போல லீலை செய்வார் பகவான்.

அதுவரை ஸ்ரீ ரங்கராஜ்யம் நடத்தும் பெரிய பெருமாளுக்கு, தன் ரங்க ராஜ்யத்தில் அரச மருத்துவன்  இல்லையாம்.
இதற்காக ஸ்ரீ ராமானுஜரின் மனதில் இப்படி ஒரு எண்ணம் தோன்ற சங்கல்பம் செய்தார், பெரிய பெருமாள்.

பெரிய பெருமாளோ அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார்.
ஸ்ரீ ராமானுஜர் 'பெருமாளுக்கு ஜுரம்' என்று கேட்டவுடன், கண்ணீர் விட்டார்.

ஸ்ரீ ராமானுஜர், பெரிய பெருமாளை பார்த்து,
"ஒரு மாமிச சரீரமாக இருந்தால், ஒரு மருத்துவரை கூட்டிக்கொண்டு வந்து காட்டலாம்.
உங்களுடைய அப்ராக்ருத திவ்ய சரீரத்துக்கு எந்த மருத்துவரை (டாக்டரை) கொண்டு வந்து காட்டுவேன்?"
என்று கண்ணீர் விட்டார்.

"நமக்கு தான் டாக்டர் இருக்கிறாரே"
என்றாராம் பெரிய பெருமாள்.

"அதை தேவரீர் தான் சொல்ல வேண்டும்" என்று ராமானுஜர் பிரார்த்திக்க,
"நம் சன்னதியில், 'தன்வந்திரி'யை பிரதிஷ்டை செய்யும். அவர் என்னை அடிக்கடி பார்த்துக்கொள்வார்"
என்று பெரிய பெருமாள் சொன்னார்.

அன்று முதல்,
பெரிய பெருமாளுக்கு எந்த பதார்த்தங்கள் தயார் செய்தாலும், அந்த பதார்த்தங்கள் பெரிய பெருமாளுக்கு உகக்குமா? என்று தன்வந்திரி எதிரில் வைத்து, அவர் அனுமதித்த பின் தான், பெரிய பெருமாள் நிவேதனம் செய்வாராம்.

பெரிய பெருமாளும், தன்வந்திரி அனுமதித்த பதார்த்தங்களை மட்டும் தான், அன்று முதல் தொடுவாராம்.
அப்படி ஒரு ப்ராதான்யம் (முக்கியத்துவம்) பெரிய பெருமாள், தன்வந்திரிக்கு கொடுத்துவிட்டார்.

தன்வந்திரியின் பெருமையை காட்ட, ஸ்ரீ ராமானுஜரின் பக்தி பாவத்தை காட்ட பெரிய பெருமாள் செய்த ரசிக்கதக்க லீலை இது.

இப்படி பெரிய பெருமாளே தனக்கு மருத்துவன் என்று வைத்து இருக்கும் தன்வந்திரியும் அவரே தான்.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

பார்த்திபனூர் சங்கரனார்

*குழப்பங்கள் நீங்க அருளும் பார்த்திபனூர் சங்கரனார்*
 *சிவகங்கையிலிருந்து 31 கிமீ தொலைவில் உள்ளது பார்த்திபனூர். பண்டைய காலத்தில் ‘நல்லூர்’ என்ற பெயரில் இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. இங்கு பழமையான சங்கரனார் கோயில் உள்ளது. மூலவராக சங்கரனார் என்று அழைக்கப்படும் சிவபெருமான் வீற்றிருக்கிறார். மூலஸ்தானத்தில் சங்கரனார், சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். அம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. மதுரை மீனாட்சியின் உருவ அமைப்பில் அம்பிகை காட்சி தருவது சிறப்பாகும். சித்தி விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகன், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நாகர் சிலைகள் உள்ளன. தல மரமாக மாவலிங்க மரம் உள்ளது. சங்கரன்குளம் தீர்த்தம் உள்ளது*
*தல வரலாறு*
*சங்கரனார் கோயிலை கட்டியவர் குறித்தும்,* *கட்டிய ஆண்டு குறித்தும் சரிவர விபரங்கள் இல்லை. பண்டைய காலத்தில்,* *மகாபாரத போரில் பாண்டவர் மற்றும் கவுரவ படையினர் ஒருவருக்கொருவர் சளைக்காமல் சண்டையிட்டனர்.* *சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரத்தை பெற்றால் துரியோதனனை எளிதில் வெற்றி பெறலாம் என்று* *அர்ஜுனனுக்கு, வியாசர் ஆலோசனை* *வழங்கினார் அதன்படி அர்ஜூனனும் சிவபெருமானை வேண்டி தவமிருந்தார் இதனையறிந்த துரியோதனன்,* *அர்ஜூனனின் தவத்தை கலைக்க முகாசுரன் என்ற அரக்கனை அனுப்பினான்  பன்றி வடிவில் வந்த அசுரனை அர்ஜூனன் அம்பு எய்து கொன்றார்*
*அங்கு வேடன் வடிவில் வந்த சிவபெருமான்,* *பன்றியை நான்தான் கொன்றேன். எனவே அது எனக்கு சொந்தமானது’’* *என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்த அர்ஜுனன், வேடன் மீது அம்பெய்தார். அம்பு பட்டதால் வேடனின் தலையில் காயமேற்பட்டது. ரத்தம்* *வழியும் நிலையில் தனது சுயரூபத்தை அர்ஜுனன் முன்பு சங்கரனார் வெளிப்படுத்தினார். இதனால் வருந்திய அர்ஜுனன், சிவபெருமானிடம் தன்னை* *மன்னிக்குமாறு வேண்டினார். சிவபெருமான் அவரை மன்னித்ததுடன், அவருக்கு பாசுபதாஸ்திரத்தை வழங்கினார். பின்னர்,* *அர்ஜுனன் பல சிவத் தலங்களுக்கு சென்று வழிபட்டார். இந்த கோயிலுக்கும் வந்து, இங்குள்ள மூலவரை வழிபட்டுள்ளார்.*
*தனது பாடலில் பிழை இருப்பதாக கூறி தன்னை எதிர்த்த நக்கீரரை,* *சிவபெருமான்  நெற்றிக்கண்ணால் எரித்தார்.* *சங்கப்புலவர்கள் வேண்டியதால், சிவபெருமான் நக்கீரரை மீண்டும் உயிர்ப்பித்தார். தவறை உணர்ந்த நக்கீரர், சிவபெருமானை வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். பின்னர் பல சிவன்* *கோயில்களுக்கு அவர் யாத்திரை சென்றார். யாத்திரையின் போது, இங்குள்ள மூலவரையும் அவர் வழிபட்டார் நக்கீரர்* *சிவபெருமானுடன் வாதம் செய்த போது, சங்கறுப்பது எங்கள் குலம், சங்கரனாருக்கு ஏது குலம்’’ என்றார்.* *சிவபெருமானை சங்கரனார் என்று நக்கீரர் குறிப்பிட்டதால் இந்த தலத்தில் சங்கரனார் என்ற பெயரில் மூலவர் அழைக்கப்படுகிறார் என்பது புராணம்.*
*திருக்கார்த்திகை, சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம் உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்களாகும். மூலவரை வேண்டினால் மனக்குழப்பங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. திருமணத்தடை, கிரக தோஷம் நீங்க அம்மனிடம் வேண்டுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் மூலவர் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் நடை தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும்  திறந்திருக்கிறது.*


கன்னியாகுமரி அம்மன் வரலாறு

*51சக்திபீடங்கள்*

*பகவதி_அம்மன்_கோயில்*

*குமரி_பீடம்*
*கன்னியாகுமரி10*

இந்த ஆலயம் சுமார் 3000 வருடம் பழைமையான ஆலயம்.இந்த ஆலயம் உலகில் உள்ள 108 சக்தி பிடத்தில் ஒன்று.இந்த ஆலயத்தை கட்டியவர் பரசுராமர்.இதுவே துர்க்கை  அம்மனுக்கு எழுப்பட்ட ஆலயம்.

பானாசுரன் என்னும் அரக்கன் பிரம்மனிடம் தனக்கு மரணம் நேரகூடாது அப்படி நேர்தால்  அது கன்னி பெண் கையால் மட்டும் தான் நேர வேண்டும் என்று தவம் செய்தான்.அவன் கேட்ட மாறிய அவன் ஆசை நிறைவேறியது.இதனால் ஆணவம் தலைக்கு எரிய பானாசுரன்.இந்நிரனை அவன் அரியாசனத்தில் இருந்து துறத்தினான்.தேவர்களை கொடுமை செய்தான்.இதனால் அனைவரும் சிவனையும்,விஷ்னுவையும் நாடினார்கள்.அவன் வரம் வாங்கியுள்ளதால் அவனை  அழிக்க முடியாது என்பதால் விஷ்னு சக்தியிடம் வேண்ட சொன்னார்.சக்தியிடம் அனைவரும் நடந்த அனைத்தையும் கூறினார்கள்.இதனால் சக்தி கன்னி பகவதி பெண்னாக தோன்றினார்.பகவதி மீது அன்பு வைத்த சிவன் பகவதியை மணக்க விருப்பம் தெரிவித்தார்.பகவதியும் மணக்க சரி என்று விருப்பம் தெரிவித்தனர்.பகவதிக்கும் சிவனுக்கும் திருமணம் நடந்தால்.பானாசுரனை அழிக்க முடியாது என்பதால் நாரதர் இந்த திருமணம் நடக்ககூடாது என்று முடிவு செய்தார்.அதனால் நாரதர் முதலில் பகவதியை குழப்ப முடிவு செய்தார்.நாரதர் பகவதியிடம் சென்று பானாசுரன் சிவனை விட பெரிய வலிமையானவன் என்று குழப்பினார்.இதனால் சிவனின் வலிமையை அரிய உலகில் யாராலும் செய்ய முடியாத 3 நிபந்தனைகளை பகவதி தன்னை திருமணம் செய்ய  நிறைவேற்ற வேண்டும் என்று சிவனிடம் கூறினார்.

1.கண் இல்லா தேங்காய்.
2.நரம்பு இல்லா வெற்றிலை.
3.அடி தண்டு இல்லா கரும்பு.

இதை எல்லாம் தன்னை திருமணம் செய்ய வரும் போது கொண்டு வரவேண்டும்.பின்பு காலை சேவல் கூவும் முன் வர வேண்டும் என்று பகவதி கூறினார்.
சிவன் அனைத்தையும் தன் வலிமையால் செய்தார்.திருமணத்திற்கு சிவன் சுசீந்தரத்தில் இருந்து கிளம்பினார்.இதை கவனித்த நாரதர் 12.00 மணிக்கே சேவல் வடிவம் எடுத்து கூவி விட்டார்.இதனால் காலம் கடந்து விட்டது என்பதால் சிவன் மறுபடியும் சுசீந்தரத்திற்கே திரும்பி விட்டார்.ஆனால் அங்கு பகவதி காத்து கொண்டு இருக்கிறார்.திருமண சமையலுக்கு தேவையான பொருள்கள் அனைத்தும் சமைக்காமல் இருக்கிறது.சிவன் வராததால் பகவதி கோபத்தில் எல்லா சமையல் பொருட்களையும் தூக்கி விசிவிட்டனர்.கோபத்தில் தீயசக்தியை அழிக்க தவம் செய்தனர் பகவதி.தவத்தில் இருந்த பகவதியை பார்த்த பானாசுரன் பகவதியை திருமணம் செய்ய வேண்டும் என்றான்.இதற்கு பகவதி மறுப்பு தெரிவித்ததால் பானாசுரன் தன் வலிமையால் பகவதியை அடைந்து விடலாம் என்று நினைத்து பகவதியிடம் தன் வீரத்தை காட்டினான் பானாசுரன்.பகவதி தன் சக்தியால் பானாசுரனை அழித்து விட்டாள்.பின்பு அந்ந கடற்கரையிலேயே தெய்வமாக அனைவருக்கும் அருள் பாலிக்கிறார்.பகவதி அம்மன்:கன்னி+கழியாத+குமரி என்பதால் கன்னியாகுமரி என்று அந்த மாவட்டத்திற்கு பெயர் வந்தது.

ஸ்ரீ துர்க்கை என்ற பெயரில் எல்லாம் சாத்தியம்.

******************ஸ்ரீ துர்க்கை போற்றி******************

மந்திரம்:அம்மே நாராயணா,தேவி நாராயணா,லஷ்சுமி நாராயணா,பத்ரே நாராயணா.

பகவதி அம்மன் மூக்கிள் ஓரு நாக ரத்தின மூக்கூத்தி உள்ளது.இந்த நாக ரத்தினம் ராஜ நாக பாம்பின் வயிற்றில் உருவாகுவது.அவ்வளவு அரிதாக கிடைகாது.அதன் ஒளி கடல் வரைக்கும் விசும் .இதனால் ஒரு முறை ஒரு கப்பல் காரன் கலங்கரை விளக்கம்  என்று நினைத்து அந்த ஒளியை நோக்கி வந்து பாறையில் மோதிவிட்டான்.அதனால் வருடத்திற்கு 5 முறை மட்டும் தான் அந்த கதவு திறக்கப்படும்.

தேர் திருவிழா           :மே/ஜீன்.
நவராத்திரி திருவிழா:செப்டம்பர்/அக்டோபர்.

நடை திறப்பு:
காலை:4.30-11.30.
மாலை:4.00-8.30.

ஆலயத்தின் உள்ளே தொலைபேசி,புகைபட கருவி மற்ற பைகளுக்கு அனுமதி கிடையாது.
சக்தி வாய்ந்த அம்மன் கோவில்களில் மிகவும் பிரபலமானது கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் இருக்கும் இடம் முன் காலத்தில் தானியங்கள் விளையும் காடாக இருந்தது. ஸ்ரீமூலம் திருநாள் மன்னர் காலத்தில் பகவதி அம்மன் கோவில் அமைக்கப்பட்டது. அப்போது கன்னியாகுமரி பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. மன்னர் ஆட்சி நடந்தது. தாராசூரன் என்ற அரக்கன் தனக்கு நிகர் யாருமில்லை என்ற அகம்பாவத்தில் வாழ்ந்து வந்தான்.

அவன் சிவபெருமானை வழிபட்டு கடும் தவம் செய்து இறைவனை வணங்கி நிற்க சிவபெருமான் அவன் முன் தோன்றி என்ன வரம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு அரக்கன் நான் கடலுக்கு அப்பால் கோட்டை கட்டி அங்கே தேவர்கள், முனிவர்கள் அனைவரும் என்னை வணங்கி பணிவிடை செய்து ஏவல் செய்ய வேண்டும். மேலும் எனக்கு தேவர்களாலும் மனிதர்களாலும் மற்றுமுள்ள விலங்குகளாலும் மரணம் ஏற்படக் கூடாது என்று ஈசனிடம் கனிந்து கேட்டுக் கொண்டான். அவன் கேட்டது போல் பகவான் அவனுக்கு வரங்களை அளித்தார். வரங்களைப் பெற்ற மமதையில் அன்னை உமாதேவியை மதிக்காமல் வணங்காமல் ஏளனமாக பேசினான்.

7 கன்னியர்கள் போரிட்டனர் :

இதைக் கண்ட தேவி கடும் கோபமுற்று சாபமிட்டாள். அன்னையின் சாபத்தை ஏளனமாக கருதிய அவன் கடும்கோபத்துடன் தேவர்கள், முனிவர்கள், நவக்கிரகங்கள் மற்றுமுள்ள அனைவரையும் கொடுமைகள் செய்து துன்புறுத்தி வந்தான். இந்த நிலையில் தாராசூரனின் கொடுமைகள் தாங்காமல் அன்னை பார்வதிதேவியிடம் அனைவரும் தங்கள் துன்பங்களை சொல்லி கண்கலங்கி நின்றனர்.

இதை கேட்ட உடன் அன்னை கொதித்து எழுந்து ஈஸ்வரனை வணங்கி தாரகனின் அக்கிரமங்களை எடுத்து சொல்லி இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்கு வேண்டினாள். இதைக் கேட்ட இறைவன், தேவி! இந்த உலகத்தில் இருக்கும் எந்த ஆணினாலும் அவர்களது படைகளாலும் என்னை கொல்லக்கூடாது என்ற வரத்தை பெற்றவன் அவன்.

ஆதலால் அவனை அழிப்பதற்கு என்னால் இயலாது. தேவி உன்னுடைய அம்சத்தில் 7 கன்னியர்களை உருவாக்கி அனுப்புவோம். இதைக் கேட்ட தேவி சர்வசக்தியுமான 7 கன்னியர்களை பிறப்பித்து அவர்களுக்கு தகுந்த ஆயுதங்களையும் கொடுத்து அனுப்பினாள். அவர்கள் 7 பேரும் பூலோகம் வந்து தாராசூரனின் படைகளோடு போர் செய்தனர். கடுமையான போர் நடைபெற்ற போதிலும் தாரகனின் படைகளை அழிக்க முடியவில்லை. தாரகனின் படைகள் தரையில் சாய்ந்தாலும் அடுத்த நிமிடம் மீண்டும் உயிர்பெற்று எதிர்த்து நின்றனர்.

தவக்கோலத்தில் தேவி :

தெய்வ கன்னியர்களால் தாராசூரனை அழிக்க முடியவில்லை. இதைக் கண்ட தெய்வ கன்னியர்கள் 7 பேரும் துயருற்று என்ன செய்வது? என்று தடுமாறி நின்றனர். தேவலோகம் சென்றாலும் அவமானம் என்று நினைத்து அவர்கள் பூலோகத்தில் சோட்டாணிக் கரை, கொடுங்கல்லூர், செங்கண்ணூர், மண்டைக்காடு ஆகிய பல இடங்களில் கோவில் கொண்டனர். தெய்வ கன்னியாகிய பராசக்தியின் அம்சமான குமரி பகவதி தேவலோகம் செல்ல மறுத்து கடலின் அருகில் இருக்கும் சீவலப்பாறை என்னும் இடத்தில் வந்து மறைவாக பல வருடங்களாக கடும் தவக்கோலத்தில் இருந்து வந்தாள். வருடங்கள் பல கடந்தது.

வாணாசூரன் முதலான அசுரர்களை அழிப்பதற்கு தக்க தருணங்களை எதிர்பார்த்து நின்றாள். குமரியை அடுத்த பக்கத்து ஊரான கடற்கரையை அடுத்த வாவத்துறை என்ற ஊரை சேர்ந்த மீனவ தாயார் ஒருவர் அந்த சீவிலிப் பாறைக்கு சென்ற போது அந்த தாயாருக்கு பகவதி அன்னை சிறுமியாக காட்சி கொடுத்தாள்.

தேவி அந்த அம்மாளை பார்த்து அம்மா! என்னை உன் பெட்டியில் எடுத்துக் கொண்டு கரையில் விடுவாயா? என்று கேட்டாள். அதற்கு அந்த தாயார், நான் உன்னை கூடையில் வைத்து எடுத்து செல்கிறேன். இப்போது ஆலயம் இருக்கும் இடமானது அப்போது பருத்தி விளையும் இடமாக இருந்தது. அந்த இடத்தில் இருப்பதற்கு எண்ணம் கொண்ட தேவி சுமையை உண்டாக்கினாள். தான் சுமந்து வந்த கூடையை அந்த இடத்தில் இறக்கி வைத்து குழந்தையை இறக்கினாள். தான் சுமந்து வந்தது குழந்தையல்ல தேவி என்பதை புரிந்து கொண்ட பெரியவள் அன்னையை வணங்கி நின்றாள்.

சூரன் வதம் :

அன்னை அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டாள். குமரி பகவதி மறைந்த பருத்தி விளையானது. தேவி அந்த விளையின் உரிமையாளரான சான்றோருக்கு தான் வந்திருப்பதை காட்சி கொடுத்தாள். அவரால் அன்னைக்கு பணிவிடை செய்யப்பட்டு அங்கு அன்னை கோவில் கொண்டாள்.

வாணாசூரன் முதலானவர்களை வதம் செய்வதற்கு அதற்கு இசைந்த புரட்டாசி மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் நவமி வரை உள்ள 9 நாட்களில் முன் பகவானால் வதம் செய்வதற்கு கொடுத்து அனுப்பிய ஆயுதங்களை பூஜையில் வைத்து விஜயதசமி அன்று பூஜை செய்த பின் தனக்கு துணையாக அம்பும் வில்லும் சுமப்பதற்கு சான்றோர்களின் பரிவாரங்களும் நாதஸ்வர இசை முழங்க.  மேளதாளங்களுடன் அன்னை ஆண் போல் உடை அணிந்து குதிரை மேலேறி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு ஆக்ரோசத்துடன் மகாதானபுரம் கிராமத்தின் அருகில் வைத்து கொடியவன் சூரனிடம் போர் புரிந்து அவனையும் அவனது ஆய பலங்களையும் சில நிமிடங்களில் அழித்து வெற்றிக்கொடி புனைந்து கடலில் நீராடி முன் போலவே வந்து நின்று தவக்கோலம் கொண்டாள்.

மேலும் சீவிலிப் பாறையில் தேவி சின்னக் குழந்தையாக உருவத்தில் வாழ்ந்த போது தவம் செய்து ஓடி ஆடி விளையாடிய அம்பிகையின் கால் தடம் உள்ளது. அந்த கால் தடம் விவேகானந்தா கமிட்டியினரால் விளக்கேற்றி பூஜைகள் செய்யப்பட்ட் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது. சூரன் வதம் முடிந்து வாகனத்தில் வெற்றி நடை போட்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி அன்னை கன்னியாகுமரி கோவில் வந்து தவக்கோலம் அடைந்தாள்...

#அமைவிடம் :

நாகர்கோவிலில் இருந்து 15 கி.மீ தொலைவில் கன்னியாகுமரி உள்ளது. சென்னையில் இருந்து 725 கி.மீ தொலைவில் கன்னியாகுமரி அமைந்துள்ளது. சென்னை, நாகர்கோவில், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, திருவனந்தபுரம் போன்ற இடங்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.

மும்பை, டெல்லி, ஹவுரா, கொல்லம், திப்ருகர், மாதா வைஷ்ணவ தேவி, இராமேஸ்வரம், புதுச்சேரி போன்ற இடங்களில் இருந்து கன்னியாகுமரி வர ரயில் வசதி உள்ளது.

நீதிக்கதை

ஒர் பிச்சைக்காரன் தினமும் ஒரு ஆலயத்தின் வாசலில் பிச்சை எடுத்து உணவு அருந்திவந்தான். அப்போது அந்த ஆலயத்தில் ஒரு மகான் வந்தார். அவரை பார்த்த பிச்சைக்காரன் சாமி என் வாழ்க்கை கடைசிவரை இப்படிதான் இருக்குமா என்று கேட்டான். அதற்கு சாமியார் அது உன் தலையில் எழுதிய விதி. உன் கடைசி வாழ்நாள் வரை இப்படிதான் இருக்கும் என்றார். பிச்சைக்காரன், சாமி என் தலைவிதி மாறாதா, மாற நான் என்ன செய்யவேண்டும் என்றான். அதற்கு சாமியார் நீ புத்தர் பெருமானை பார்த்தால் உன் தலை எழுத்து மாற வாய்ப்பு உள்ளது. அவரை போய் பார் என்றார். பிச்சைக்காரன் புத்தரை பார்க்க புறப்பட்டான். வெகுநேரம் ஆகியதால் இரவு ஒய்வு எடுக்க ஒர் செல்வந்தர் வீட்டின் கதவை தட்டி, ஐயா இன்று இரவு இங்கே தங்கி ஒய்வு எடுக்க அனுமதிக்குமாறு கேட்க, செல்வந்தர் நீ எங்கு செல்கிறாய். என்று கேட்க. அதற்கு பிச்சைக்காரன் நடந்ததை சொல்ல. செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் உதவி செய்யவேண்டும் என்று கேட்க. பிச்சைக்காரன் என்ன உதவி வேண்டும் என்று கேட்க. அதற்கு செல்வந்தரும் அவர் மனைவியும் எங்களுக்கு ஒர் பெண் உள்ளது. அவள் பிறவிஊமை அவள் எப்போது பேசுவாள் என்று புத்தரிடம் கேட்டு எங்களுக்கு சொல்லவேண்டும் என்றனர். அதற்கு பிச்சைக்காரன் சம்மதித்து இரவு ஒய்வு எடுத்துவிட்டு காலையில் புறப்பட்டான். வெகுநேரம் கடந்த பின் ஒரு பெரியமலைவந்தது. அதை கடக்க முடியாமல் இருந்த நேரத்தில் ஒரு மந்திரவாதி அங்கு வந்தார். அவர் பிச்சைக்காரனுக்கு இந்த மலையை என்மந்திரகோல் மூலம் உன்னை கடக்க வைக்கிறேன். நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும் என்றார். பிச்சைக்காரன் என்ன உதவி என்று கேட்க. மந்திரவாதி நான் 500 ஆண்டுகளாக முக்தி அடையாமல் உள்ளேன். நீ புத்தரிடம் என் முக்திக்கு என்ன வழி என்று கேட்டு சொல்லவேண்டும் என்றார். அதற்கும் பிச்சைக்காரன் சம்மதம் தெரிவித்தான். மந்திரவாதி மலையை கடந்து பிச்சைக்காரனை விட்டு சென்றார். மீண்டும் நடக்க ஆரம்பித்தான் பிச்சைக்காரன்.  அப்போது ஒர் ஆறு வந்தது இந்த ஆற்றை கடந்தால் தான் புத்தர் இருக்கும் இடத்திற்க்கு செல்லமுடியும். ஆற்றை கடக்க என்ன செய்வது என்று நினைத்த நேரத்தில் ஆற்றில் ஒரு ஆமைவந்தது. அது பிச்சைக்காரனிடம் விசாரித்து அதுவும் நான் உனக்கு உதவி செய்கிறேன். பதிலுக்கு நீ புத்தரிடம் எனக்கு பறக்கும் சக்தி வேண்டும். அதற்குநான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டு சொல் என்று ஆற்றை கடந்து பிச்சைக்காரனை விட்டது. பிச்சைக்காரனும் ஒரு்வழியாக புத்தர் இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தான். புத்தரை பார்த்து ஆசி பெற்றான். புத்தர் என்னிடம் இருந்து உனக்கு வேண்டியதை கேளென்றார். ஆனால் மூன்று கேள்விதான் கேட்க வேண்டும் என்றார். பிச்சைக்காரன் யோசனை செய்தான். நாம் நான்கு கேள்வி கேட்கவேண்டும். புத்தரோ மூன்று தான் கேட்க வேண்டும் என்றார். என்ன செய்வது என்று புரியாமல் யோசனையில் இருந்தான். சற்று நேரத்தில் ஒர் யோசனை வந்தது. நாம் பிச்சை எடுத்து நம் காலத்தை ஒட்டிவிடலாம். ஆனால் அந்த மூன்று பேர்களின் பிரச்சினையையாவது தீரட்டும். என்று எண்ணி மூன்று பேரின் பிரச்சனையை புத்தரிடம் சொல்லி அதன் தீர்வையும் தெரிந்து கொண்டு திரும்பிவந்தான். முதலில் ஆமை என் கேள்விக்கு புத்தர் என்ன சொன்னார் என்று கேட்டது. அதற்கு பிச்சைக்காரன் உன் ஒட்டை நீ கழட்டி எறிந்தால் உனக்கு பறக்கும் சக்திவரும் என்றான். உடனே ஆமை தன் ஓட்டை கழட்டி பிச்சைக்காரனிடம் கொடுத்ததுவிட்டு பறந்துசென்றது.  அந்த ஓட்டில் பவளமும்,முத்துக்களும் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். மந்திரவாதியை பார்த்து உன் முக்திக்கு நீ செய்ய வேண்டியது அந்த மந்திரக்கோலை விடவேண்டும் என்றான். மந்திரவாதி அந்த மந்திரக்கோலை பிச்சைக்காரனிடம் கொடுத்துவிட்டு முக்தி அடைந்தார். மீண்டும் புறப்பட்டு செல்வந்தரை சந்தித்தான். செல்வந்தரிடம் உன் மகள் எப்போது அவள் மனதிற்க்கு பிடித்தவனை பார்க்கிறாளோ. அன்று அவள் பேசுவாள் என்றான் பிச்சைகாரன். மாடியில் இருந்து இறங்கிய செல்வந்தரின் மகள் அப்பா இவர் தானே அன்று இரவு வந்தது என்று கேட்டால். செல்வந்தர் தன் ஒரே மகளை பிச்சைக்காரனுக்கு மணமுடித்து வைத்தார். அன்று முதல் அவன் ஒரு செல்வந்தர் மற்றும் மந்திரகோல், இதை தவிர பவளம், முத்துகளும், அழகான மனைவியும் அமைந்து சந்தோஷமாக வாழ்ந்தான்.
இந்த கதையின் மூலம் நாம் அறிவது என்னவென்றால் நமக்காக கடவுளிடம் வேண்டுவதை விட பிறர் நலனுக்காக வேண்டினால் நம் துயரமும், பிறரின் துயரமும் மறைந்துவிடும். அதே போல் கடவுள் நம் தலையில் எழுதிய விதியை அவரால் மட்டுமே மாற்றி எழுதமுடியும். நம்மால் விதியை மாற்றமுடியும் என்று எண்ணி வீதிக்கு வராமல் இருந்தால் போதும்.

புருசுண்டி முனிவர் சரித்திரம்

புருசுண்டி முனிவர்

த்ரேதா யுகத்தின் ஆரம்ப காலம் அது.

தண்டகாரண்யம் இந்தியாவின், சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது.

சுமார் 90,000 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதி.

தண்டகாரண்யம் எனும் வனத்தின் துத்தூரம் என்ற பகுதியில், விப்ரதன் என்று ஒரு வேடன் வாழ்ந்து வந்தான்.

மிருகங்களை வேட்டையாடி, தன்னையும் தன் கூட்டத்தினரையும் பசியின்றிப் பாதுகாத்து வந்தான்.

திடீரென மழை பொய்க்கவே, வனம் வறண்டது.

பறவைகளும் மிருகங்களும் புகலிடம் தேடி, வனத்தை விட்டு அகன்றன.

விப்ரதன் தன் கூட்டத்தாருடன் உணவும் தண்ணீருமின்றித் தவித்தான்.

வேறு வழியின்றி, வழிப்பறிக் கொள்ளையில் இறங்கினான்.

ஒருநாள் அந்த காட்டு பக்கம் வந்த முனிவரிடம் கொள்ளை அடிக்க முடிவு செய்தான்.

அவர் தன்னை மறந்த நிலையில் கணபதி நாமத்தினை உச்சரித்தபடியே சென்றுக்கொண்டிருந்தார்.

முனிவரை கண்டதும் அவரிடம் கொள்ளையடிக்கலாம் என எண்ணியவாறு அவர்முன் கத்தியுடன் போய் விப்ரதன் நின்றான்.

இவனை கண்டு முனிவர் அதிர்ச்சயடையாமல் அமைதியாய் நின்றார்.

முனிவரின் போக்கு விப்ரதனை ஆச்சர்யப்படுத்தியது.

தன்னைக்கண்டு மிருகங்களே பயப்படும், கத்தியுடன் நின்றும் இந்த மனிதர் தன்னைக்கண்டு பயப்படாததை கண்டு மலைத்து கத்தியை கீழே தவறவிட்டு நின்றான்.

அவன் மனதிலிருந்த குரூரம் மறைந்தது.

அந்த முனிவரை வணங்கி
தாங்களை கண்டதும் எனது மனதில் உள்ள தீய எண்ணங்கள்
தொலைந்து போனது
எனக்கு இனி தீய வழி வேண்டாம்
இனி நல்வழியில் நடக்க தங்கள்
ஆதிர்வாதம் வேண்டும் என்றார்.

விப்ரதன் தலையில் கை வைத்து,
‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம், க்லீம், க்லௌம், கம், கணபதயே நமஹ!’ என முனிவர் வாழ்த்தினார்.

தன் கையில் வைத்திருந்த ஊன்றுக்கோலை அவனிடம் தந்து, இதை நீரூற்றி, நான் சொன்ன மந்திரத்தை ஜெபித்து வளர்த்து வா! அது துளிர்க்கும்வரை முயற்சியை கைவிடாதே! உனக்கு தெய்வீக சக்திகள் கிட்டும் என சொல்லி தனது பயணத்தை தொடர்ந்தார்.

ஊன்றுக்கோலை நட சிறந்த இடம் தேடி அலைந்தபோது, ஒரு கணபதி கோயிலும், அருகில் இருந்த தெய்வீகப் பொய்கையும் விப்ரதனைப் பெரிதும் கவர்ந்தன.

அதனால், அவன் அங்கேயே தங்கி உணவின்றி உபவாசமாக இருந்து, தடாகத்தில் நீராடி, முனிவர் சொன்னபடி ஜபத்தில் ஈடுபட்டான் விப்ரதன்.

காலங்கள் ஓடின.

அன்ன ஆகாரம் இன்றி, அவன் செய்த தவத்துக்குப் பலன் கிடைத்தது. காய்ந்த அந்த மரக்கிளை, துளிர்க்கத் துவங்கியது.

நம்பிக்கையுடன் கணபதி மந்திரத்தை இடையறாது உச்சரித்த விப்ரதனுக்கு, கணபதியைப் போலவே தும்பிக்கை வளர்ந்தது.

அவன்முன் தோன்றிய விநாயகர், ”விப்ரதா! பக்தியுடன் எனது மந்திரத்தை ஆழ்ந்து ஜபித்ததால், நீயும் என்போன்ற உருவத்தைப் பெற்றுவிட்டாய். புருவங்களுக்கு மத்தியில் தும்பிக்கையைப் பெற்றிருப்பதால், நீ ‘புருசுண்டி’ என அழைக்கப்படுவாய்.

உனது மந்திர பலத்தால் துளிர் விட்ட இந்த மரம், கற்பக விருட்சமாகிவிட்டது.

எந்தச் செல்வத்தைக் கேட்டாலும், அதைத் தரும் வல்லமை இதற்கு உண்டு.

வேறு என்ன வரம் வேண்டும், கேள்!” என அருளினார்.

இதில் சிலிர்த்தவன், ”தங்களின் தரிசனமே கிடைத்து விட்டது. இதற்கு மேல் வேறு என்ன வேண்டும், சுவாமி! தங்களின் திருவடியைச் சரணடைந்து தொண்டாற்றுகிற பாக்கியம் கிடைத்தால் போதும்!” என்றான்.

சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கினைக் கடைப்பிடித்து, விரைவில் எம்மை அடைவாயாக!” என்று அருளி மறைந்தார் மகா கணபதி.

அப்படியே செய்யத் துவங்கினார்

கணேச மந்திரத்தையும், விரதத்தையும் தொடர்ந்து கடைபிடித்தார் புருசுண்டி என்ற முனிவராக ஆனார்.

புருசுண்டி முனிவர் பூலோகத்தில் எல்லாரும் சங்கடங்கள் தீர்ந்து சிறப்பாக வாழ சங்கடஹர சதுர்த்தியை தோற்றுவித்தார்.

நம் சங்கடங்களை களைவதற்காகவே நாம் சங்கடஹர சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற ஐதீகம்.

தண்டகாரண்யம்  அந்த காலத்தில் குற்றங்கள் செய்தவர்களை விடும் இடமாக இருந்தது.
புருசுண்டி முனிவர் குற்றசெயலில் ஈடுபட்டதால்
நரகத்தில் தவித்த தன் முன்னோர்களுக்கு விடுதலை கிடைக்கவும் பெற்றார்.

ஓளரவ முனிவர்-சுமேதை தம்பதியின் மகள் சமி.

தெளமிய முனிவர் என்பவரின் மகன் மந்தாரன்.

இவன் செளனக முனிவரின் சீடனும்கூட.

பெற்றோர் விருப்பப் படி சமிக்கும், மந்தாரனுக்கும் திருமணம் நடந்தேறியது.

ஒருமுறை சமியும், மந்தாரனும் தங்களின் உறைவிடத்துக்குப் போகும் வழியில், விநாயகரின் அருள்பெற்ற புருசுண்டி முனிவர் எதிர்ப்பட்டார்.

இவர்கள் இருவரும் அவரை வணங்கவில்லை.

மாறாக, அவரின் உருவத்தைக் கண்டு எள்ளி நகையாடினர்.

புருசுண்டி முனிவர், விநாயகரைப் போன்றே யானை முகம் கொண்டவர்.

அவர், தன்னை சமி-மந்தாரன் தம்பதி ஏளனம் செய்வதைக் கண்டு கோபம் கொண்டு, மரங்களாக மாறும்படி அவர்களை சபித்தார்.

தங்கள் தவறை உணர்ந்த கணவன், மனைவி இருவரும் சாப விமோசனம் அருளும்படி முனிவரிடம் வேண்டினர். “விருட்சங்களாகத் திகழும் உங்கள் நிழலில் விநாயகர் குடிகொள்ளும்போது விமோசனம் கிடைக்கும்” என்று கூறிச் சென்றார் முனிவர்.

சாபத்தின்படி மந்தாரன் மந்தார மரமாகவும், சமி வன்னி மரமாகவும் மாறினர்.

இந்த நிலையில் தங்களின் பிள்ளை களைக் காணாமல் தவித்த பெற்றோரும், மந்தாரனின் குருவான செளனகரும் அவர்களை எங்கெங்கோ தேடி அலைந்தனர்.

இறுதியில் ஞான திருஷ்டியின் மூலம் நடந்ததை அறிந்து வருந்தினர்.

செளனகர் அந்த மரங்களைக் கண்டடைந்தார்.

அவற்றின் கீழ் அமர்ந்து விநாயகரை எண்ணி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் புரிந்தார்.

அதன் பலனாக விநாயகப் பெருமான் காட்சி தந்தார்.

அவரிடம், தன் மாணாக்கனுக்கும் அவன் மனைவிக்கும் சாப விமோசனம் அருளும்படி வேண்டினார் செளனகர்.

உடனே விநாயகர், ‘‘முனிவரே! அடியவர்கள் இட்ட சாபத்தை எவராலும் போக்க இயலாது. எனவே, இவ்விருவரும் விருட்சங்களாக இருந்தபடியே முக்தியை பெறுவார்கள். நாம் இம்மரங்களின் நிழலில் எழுந்தருள்வோம். வன்னி மற்றும் மந்தாரை மரங்களையும் அவற்றின் கீழ் இருக்கும் என்னையும் வழிபடுபவர்களுக்கு சகல இடர்களும் நீங்கும். அவர்களது விருப்பங்கள் யாவும் ஈடேறும். வன்னி இலையாலும் மந்தார மலர்களாலும் என்னை அர்ச்சித்து வழிபடுவோரும் இன்னல்கள் நீங்கி இன்பம் அடைவர்’’ என்று அருள்பாலித்தார்.

புருசுண்டி முனிவரின் பெருமையை நாரதர் மூலம் அறிந்த தேவேந்திரன், புருசுண்டியைத் தரிசிக்க பூலோகம் வந்தான்.

தவத்தில் ஈடுபட்டிருந்த புருசுண்டியிடம் பக்தனாக, யாசகனாக வந்து நின்றான் தேவேந்திரன்.

எது கேட்டாலும் தருவதாகக் கூறிய புருசுண்டியிடம், கற்பக விருட்சத்தைத் தரும்படி கேட்டான். அதன்படி, கற்பக விருட்சத்தை தேவேந்திரனுக்குத் தானமாகத் தந்தருளினார் புருசுண்டி.

விநாயகர் தந்ததையே மனமுவந்து தானமாக இந்திரனுக்கு வழங்கிய அந்தக் கணத்தில், அங்கு தோன்றிய மகா கணபதி, புருசுண்டியை தன் திருப்பாதத்தில் சேர்த்துக்கொண்டு, அவருக்குப் பிறவா நிலையை அருளினார்.

கற்பக விருட்சமும் தேவலோகம் சென்றடைந்தது.

திருப்புகழ் - 1120 பத்து ஏழு எட்டு

*திருப்புகழ் - 1120 பத்து ஏழு எட்டு  (பொதுப்பாடல்கள்)*


பத்தே ழெட்டீ ரெட்டேழ் ரட்டால்
வைத்தே பத்திப் ...... படவேயும்

பைப்பீ றற்கூ ரைப்பா சத்தா
சற்கா ரத்துக் ...... கிரைதேடி

எத்தே சத்தோ டித்தே சத்தோ
டொத்தேய் சப்தத் ...... திலுமோடி

எய்த்தே நத்தா பற்றா மற்றா
திற்றே முக்கக் ...... கடவேனோ

சத்தே முற்றா யத்தா னைச்சூர்
கற்சா டிக்கற் ...... பணிதேசா

சட்சோ திப்பூ திப்பா லத்தா
அக்கோ டற்செச் ...... சையமார்பா

முத்தா பத்தா ரெட்டா வைப்பா
வித்தா முத்தர்க் ...... கிறையோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.

*விளக்கம்*

 பத்து, ஏழெட்டு = ஐம்பத்தாறு, ஈரெட்டு = பதினாறு, ஏழ் ரட்டால் = பதினான்கு, ஆக (10+56+16+14=96) தொண்ணூற்றாறு தத்துவங்களால்*  அமைக்கப்பட்டே ஒழுங்குபடப் பொருந்தி உள்ள, தோல் பை, கிழிபட்டு அழியும் ஒரு சிறு குடிலாகிய இந்த உடல் பாசத்தின் வலிமையால் (அதே உடலைப்) பேண உணவுக்கு வேண்டிய வழியைத் தேடி, எந்த எந்த நாடுகளுக்கோ ஓடிச் சென்று அந்த நாடுகளுடன் ஒன்றுபட்டு இருந்து, தொலைவிலுள்ள சப்த தீவுகளுக்கும் ஓடிச் சென்று, இளைத்துப் போய், அவ்விடங்களில் விரும்பி நின்று ஆசையுடன் பற்றிக் கொண்டு, வளப்பமான நாடித் தாதுக்கள் யாவும் வலிவு இழந்து, வேதனைப்படுதல்தான் என் தலையில் எழுதியுள்ளதோ?

உண்மைப் பொருளே, என்றும் இளமையானவனே, அத்தனைச் சேனைகளோடு கூடி வந்த சூரனையும், கிரெளஞ்ச மலையையும் அழிவு செய்து நீதி நெறியை நிலை நாட்டிய ஒளி பொருந்தியவனே, ஒளி விளங்கும் திரு நீற்றை அணிந்த ஆறு திரு நெற்றிகளை உடையவனே, அந்தக் காந்தள் மாலையையும் வெட்சி மாலையையும் அணிந்த மார்பனே, (மண், பெண், பொன் என்ற) மூவாசை உள்ளவர்களுக்கு எட்டுதற்கரிதான சேமப் பொருளே, அறிவிற் சிறந்தவனே, இப்பிறவியிலேயே ஞானம் பெற்றவர்களுக்குத் தலைவனே, முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.


திருவாதவூர் திருமறைநாதர் கோவில்

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் #திருவாதவூர் திருமறைநாதர் கோவில்





சனி பகவானின் வாத நோய் தீர்த்த புண்ணியஸ்தலம்

 
கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், திருமறைநாதர் ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும்.

திருவாதவூர் திருமறைநாதர் கோவில்
திருவாதவூர் திருமறைநாதர் கோவில்

மூளையில் இருந்து நரம்புகளுக்கு உணர்வோட்டமோ அல்லது ரத்த ஓட்டமோ இல்லாமல் நின்று போனால், அந்தந்த உறுப்புகளின் தசைகள் இயங்காமல் சோர்ந்து போய்விடும். அதனை கை, கால் வாதம் என்றும், பக்கவாதம் என்றும் கூறுகிறோம். அதற்கு மருத்துவம் செய்வதுடன், கை, கால்களுக்கு பிசியோ தெரபி என்னும் உடலியக்க பயிற்சி கொடுத்து நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறார்கள். இத்தகைய மருத்துவத்தோடு இறைவனை வழிபடுபவர்களும் உண்டு. வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் இடமாக விளங்கும் தலங்களில் ஒன்றுதான் திருவாதவூர் திருத்தலம். ‘எங்கோ கேள்விபட்ட பெயராக இருக்கிறதே!’ என்று யோசிக்கிறீர்களா? ஆம்! திருவாதவூரர் என்னும் பெயர் பெற்ற மாணிக்கவாசகர் அவதரித்த தலம்தான் இது. வாதவூர் என்றதும் வாத நோய் உள்ளவர்கள் உள்ள ஊர் என்பது பொருள் அல்ல.

வேதங்களின் பொருளை வாதம் செய்து (Debate), மெய்ப் பொருளை அறிந்த ஊர் என்று பொருள் கொள்ள வேண்டும். அதனால் தான் இத்தல இறைவன் ‘வேதநாதர்’ என்றும், ‘திருமறை நாதர்’ என்றும் அழைக்கப்படுகிறார். சனி பகவானுக்கு, ஒரு முனிவரின் சாபத்தால் முடக்கு வாதம் ஏற்பட்டது. அவர் இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் திருமறை நாதரை வழிபட்டதன் பயனாக நோய் தீர்ந்தது என்று தல புராணம் கூறுகிறது. இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார் சனி பகவான். அவர் ஒரு காலை மடக்கி வைத்து, மற்றொரு காலைத் தொங்கவிட்டபடி, காகத்தின் மீது அமர்ந்து அருள்பாலிக் கிறார். சனி பகவானுக்கு வாதநோய் தீர்த்த வாதவூர் பெருமான், தன்னுடைய பக்தர்களை மட்டும் காப்பாற்றாமல் விட்டு விடுவாரா என்ன?.

கை, கால்களை அசைக்க முடியாமல், எழுந்து நடக்க முடியாமல் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து, திருமறைநாதரை மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும். மேலும் மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அந்த எண்ணெயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, கை, கால்களில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முப்பது நாட்கள் அல்லது நாற்பத்து எட்டு நாட்கள் தொடர்ச்சியாக தேய்த்து வந்தால், வாத நோய் குணமாவதாக கூறப்படுகிறது. சித்தா, ஆயுர் வேத மருத்துவத்திலும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது ஒரு வைத்திய முறையாகும். வாதநோய் குணமான பிறகு, இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து, அன்னதானம் செய்து வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.

சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர், அரிமர்த்தனப் பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர். அவர் சிவன் மீதுள்ள பக்தியின் காரணமாக மன்னன் கொடுத்த பொற்காசுகளைக் கொண்டு ஆவுடையார் கோவில் என்னும் ஊரில் கோவில் அமைக்கும் பணிக்காக செலவிட்டார். அத்தகைய சிறப்புமிக்க அன்பரான மாணிக்கவாசகருக்கு, திருவாதவூரில் தனிக்கோவில் கட்டப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அவரைத் தரிசித்து விட்டு சிறிது தூரம் நடந்து சென்றால், ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட கிழக்கு நோக்கிய சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயம்தான் திருமறைநாதர் வீற்றிருக்கும் கோவிலாகும். இதன் முன்பாக தீர்த்தக்குளம் ஒன்றும் இருக்கிறது. திருமாலுக்கு ‘மறையின் பொருள் நானே’ என்று இத்தல ஈசன் உபதேசித்தார். எனவே அவர் திருமறைநாதர் என்று பெயர் பெற்றுள்ளார். பசுவின் குளம்பு பதிந்த சுயம்புத் திருமேனியுடன் விளங்கும் எம்பெருமானை, திருமால், பிரம்மன், அக்னிபகவான், வாயு, சனீஸ்வரர் ஆகிய தேவர்கள் வழிபட்டு நற்பேறு பெற்றுள்ளனர்.

ஆரணவல்லி அம்பிகை கிழக்கு பார்த்த சன்னிதியில் இருந்து அருள்கிறார். இந்த அம்பாளுக்கு ‘திருமறை நாயகி’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இவர் பிரம்மனின் வேள்வியில் தோன்றியதாகத் தல புராணம் சொல்கிறது. தாமரை தடாகத்தில் உள்ள ஒரு மலருக்கு பசுவொன்று பால் சொரிந்து அபிஷேகம் செய்து வந்தது. இதைப் பார்த்த திருமால் அங்கே சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு, அதற்கு பூஜை செய்தார். இதன் வாயிலாக பிருகு முனிவரிட்ட சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார் என்பது புராணக் கதை. இந்த ஆலயத்தின் தல விருட்சமாக மகிழ மரம் உள்ளது. பழமையான கோவில் என்றாலும் இத்தலத்தில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய பதிகங்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் பாண்டிநாட்டு தேவார வைப்புத் தலங்களில் ஒன்றாக இந்த ஆலயம் கருதப்படுகிறது.

இந்த ஆலயத்தில் தான் மாணிக்கவாசகருக்கு, இறைவன் சிலம்பொலி ஓசை கேட்கச் செய்தார். இந்த தகவலை, ‘வாத வூரினில் வந்தினிது அருளிப் பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும்’ என்ற திருவாசக வரிகள் எடுத்துரைக்கின்றன. திருமண வரம், குழந்தைப் பேறு, தொழில் வளர்ச்சி போன்றவற்றிற்கும், இத்தல இறைவனை வழிபடும் பக்தர்கள் ஏராளம். பொதுவாக சிவாலயங்களில் நடைபெறும் அனைத்து விழாக்களும் இந்த ஆலயத்திலும் நடைபெறுகின்றன. என்றாலும் 12 நாட்கள் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா சிறப்புக்குரியது. இந்த விழா மாணிக்கவாசகருக்காக இறைவன் நரியை பரியாக மாற்றிய கதையை நினைவுபடுத்துகிறது.

தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் திருவாதவூர் திருத்தலம் அமைந்துள்ளது. மேலூரில் இருந்து பஸ் வசதிகள் உள்ளன. மதுரை ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் சென்று, அங்கிருந்து சுமார் 8 கிலோமீட்டர் சென்றால் திருவாதவூர் ஆலயத்தை அடையலாம்.

ஓம் நமசிவாய

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாசபட்டி, தேனி மாவட்டம்.


இன்றைய கோபுர தரிசனம்...

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், கைலாசபட்டி, தேனி மாவட்டம்.

மூலவர்–கைலாசநாதர்

தாயார்–சிவகாமியம்மன்

தல விருட்சம்–வில்வம்

தீர்த்தம்–சுனைநீர்

பழமை–1000 வருடங்களுக்கு முன்

ஊர்–கைலாசபட்டி

மாவட்டம்–தேனி

மாநிலம்–தமிழ்நாடு

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான வரலாற்று சிறப்புமிக்கது. அகத்திய முனிவர் இத்திருத்தலத்தை பற்றி கைலாசநாதர் கோயில் கண்டேன். அங்கு ஓர் சுனை கண்டேன் என்று பாடியுள்ளார். இம்மலைக்கு தியான மலை என்ற பெயரும் உண்டு. சட்டநாத மாமுனிவர் இம்மலைக்கு வந்து தியானம் செய்துள்ளதாக வரலாறு கூறுகிறது. கைலாசநாதர் மலைக்கு திருவாச்சி போன்று மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது சிறப்பு. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் இத்திருக்கோயிலில் பெரிய தேர் இழுக்கப்பட்டுள்ளது என்பதற்கு சான்றாக மலையில் இரும்பு வடம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கல்வெட்டுகளும் உள்ளன.

இங்குள்ள வெள்ளை விநாயகர் கோயில், குடைவரைக் கோயிலாக அமையப்பெற்றது. பிள்ளையார்பட்டி விநாயகருக்கு அடுத்தபடியாக குடைவரை விநாயகராக இந்த வெள்ளை விநாயகர் சிறப்பு பெற்றவர். பவுர்ணமியன்று கிரிவலம் வரும் பக்தர்கள் நோய்களை விலக்கி ஆரோக்கியத்தை தரும் ஆற்றல் கொண்டது இந்த மலை. அத்துடன் நவகிரகக் குன்றுகளையும் சுற்றி வந்த பலன் கிடைப்பதால், கிரக தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

பெரியகுளம்–தேனி மெயின் ரோட்டில் கைலாசபட்டியில் இருந்து கைலாசநாதர் கோயில் நுழைவு ஆர்ச் வழியாக இரண்டு கிலோமீட்டர் பயணித்தால் மலையடிவாரத்தை அடையலாம். அடிவாரத்திலிருந்து மலைக்கு செல்ல தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. அடிவாரத்தில் வெள்ளை விநாயகர், சந்திர லிங்கம் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் இலிங்கத்திருமேனியராக உள்ளார்.

திருவிழா:

பிரதோஷம், பவுர்ணமி கிரிவலம், ஆடி அமாவாசை, கார்த்திகை மகாதீபம்.

கோரிக்கைகள்:

திருமணம் கைகூட, குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள மூலவரை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

சிவபுராணம் - நந்திபனை மற்றும் நந்தி நாகாத்பதம் உருவாதல்

*🚩🔔சிவபுராணம்🌙🔱*

*பாகம்-139*

*நந்திபனை மற்றும் நந்தி நாகாத்பதம் உருவாதல்*

*சிவபுராணம்*

*நந்திபனை உருவாதல்*

நந்திதேவர் என்னை எண்ணி தவம் புரிந்த இந்த புவனை நதியானது நந்திபனை என்று இனிவரும் காலங்களில் அழைக்கப்படும் என்றும், எவர் ஒருவர் இந்த நதியில் நீராடி என்னை சரண் அடைகின்றார்களோ அவர்கள் திருக்கைலாயம் அடையும் பாக்கியம் பெறுவார்களாக என்று எம்பெருமான் கூறினார்.

*நந்தி நாகாத்பதம் தோன்றுதல்*

எம்பெருமான் அருளியதை கேட்ட உடனே புவனை நதியின் நதியானவள் அவ்விடம் தோன்றி சிவபெருமானை பலவாறாக துதித்து போற்றினாள். பின்பு, எம்பெருமானிடம் தங்களின் மைந்தனான நந்தியானவர் என்னுள் இருந்து இந்த மாபெரும் பாக்கியத்தை அடைந்துள்ளதால் இக்கணப்பொழுது முதல் நந்தியும் தனக்கு புத்திரனாகும் பாக்கியத்தை எனக்கு தாங்கள் அருள வேண்டும் என்று வேண்டி நின்றாள். அடியார்க்கு வேண்டியவற்றை அருளும் கருணைக்கடலான எம்பெருமான் நதியானவள் வேண்டுகோளை ஏற்று நந்தியை நதிக்கும் மகனாக இருக்கப்பெறுவாய் என்று அருளினார்.

அவர் அளித்த அருளின் படியே நந்தியும் தனது அன்னையான புவனையின் திருவடிகளில் விழுந்து வணங்கி, ஆசி பெற்றதும் தனது மகனை ஆசீர்வதித்த நதியானவள் நந்தியை தனது மார்போடு அணைத்து மனமகிழ்ச்சிக் கொண்டாள். நதியானவள் மகிழ்ச்சி கொண்ட ஆனந்த நிலையில் அவளின் தனத்திலிருந்து அமுத நதியானது பிறந்து உலகம் முழுவதும் மகிழ்ச்சி அளிக்கும் பொருட்டு பாய்ந்து சென்றது. நந்திதேவரின் மீது கொண்ட ஆனந்த நிலையினால் உருவான இந்நதிக்கு 'நந்தி நாதாத்பதம்" என்று பெயர் உண்டாகி அனைவராலும் அழைக்கப்பட்டது.

*ஒளி பெருகுதல்*

சிவபெருமான் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட காண்பதற்கு அரிய செயல்பாடுகள் கொண்ட சொர்ணத்தால் உருவாக்கப்பட்ட தங்க மகுடத்தை நந்தியின் சிரசின் மீது சு+ட்டி, எப்போதும் அழியாத என்றும் புதிது போன்று காட்சி அளிக்கும் தன்மை கொண்டு விளங்கும் வெண்பட்டு ஆடையை அவரின் மீது போர்த்தி ஆயிரம் தாமரை மலர்களால் ஆன மாலை ஒன்றினை நந்திக்கு அணிவித்தார். அப்பொழுது நந்திதேவரை காணும்போது பல இலட்ச ஆதவ ஒளிகளை தன்னகத்தே பொருந்தியவர் போல காட்சியளித்தார்.

*தேவியின் அருள் பெறுதல்*

எம்பெருமான் தனது அருகில் இருந்த பார்வதி தேவியைப் பார்த்து தேவி!... நம் மைந்தனாகிய நந்திக்கும் உனது அருள் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று கூறவே, பார்வதி தேவியும் அக்கணத்தில் தனது பதியின் விருப்பத்தை மனதார ஏற்றுக்கொண்டு நந்திதேவரை தனது கரங்களால் வாரி எடுத்து அணைத்துக் கொண்டு மகனே... எம்பெருமானின் வாக்கு எக்காலத்திலும் பொய்யாகாது என்றும், உலகில் நீ இருக்கும் காலம் குறைவாக இருப்பினும் எப்போதும் காலன் உன்னை அணுக மாட்டான் என்றும், என்னுள் இருக்கும் என் நாதனின் விருப்பம் போல என்றும், அவர்களின் கணங்களுக்கு இன்று முதல் நீயே தலைவனாக இருப்பாய் என்றும் ஆசி கூறினார்.

*கணப்படைகளின் வருகை*

பார்வதி தேவியின் கூற்றுகளை அடுத்து எம்பெருமான் தனது படைத்தலைவர்கள் மற்றும் தேவர்கள் என அனைவரையும் இவ்விடம் வரும்படி எண்ண கணப்பொழுதில் எட்டு திக்குகளில் இருந்து ருத்திர கணங்கள் அனைவரும் கரங்களில் ஆயுதங்கள் மற்றும் சு+லம் ஏந்தியாவாறு நீலகண்டமும் ஒளி வீசும் அக்கினி கொண்ட விழிகளை உடைய எண்ணிறந்தோர் அங்கு வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் மட்டும் அல்லாத ஏனைய வீரர்களான கபாலீசன், விசோகன், சதநேத்திரன், சதாநிலன், அநத்தருத்திரன், நு}று பாதங்களை மற்றும் முகம் கொண்ட சர்வ லோகங்களையும் ஆளக் கூடியவர்களும், காண்போரை அச்சம் கொள்ளும் வகையில் முகமும், பயமுறுத்தும் புருவங்கள் மற்றும் அகலமும் உயரமும் கொண்ட கராளவதளனும், நான்கு முகங்களும் வெண்மையான மேனியும் பஞ்ச நாக்குகளும் விண் நோக்கிய காதுகளும், அதிக வேகமுடைய பாரபு+தி என்பவனும், அவரை போன்ற வீரம் கொண்ட சதகோடி சைன்னியங்களும், தியானத்தில் சிறந்தவருமான சோமவர்ஷன் என்பவனும் வந்து சிவபெருமான் முன்னே தோன்றினார்கள்.

மகாகாயனும், நு}று கோடி ருத்திரர்கள், அஜைகபாதன், நிகும்பன், சங்கரன், சு+ரியாப்பியானன், ஸர்வமானி சந்திராயுதன், மகாதேஜன், கடாகடகன் என்ற கணவீரர்கள் ஆறுகோடி ருத்திர சைன்யத்துடன் வந்து சேர்ந்தார்கள். இவர்களைத் தவிர சு+ரியாப்வியானன், ஸ்வர்மானி, சந்திராயுதன், பகாதேகன், தடாகடன், சங்குகர்ணன், உஸ்மாண்டன், ஏகபாதன், தாரகேசன், பெப்த கிரோசனன், மகாபாலன், அபஸ்மாரன், பர்வதாபரணன், இமயன், மாருதயு, பிருங்கி ரிட்டன் என பலவித கணங்களுக்கும் தலைவர்களாக இருந்தவர்கள் கோடிக்கணக்கில் இருந்து வந்த வீரர்களும், சிவ படைகளும் ஒன்றாக அவ்விடத்தில் வந்து குழுமி நின்றனர். சிவனின் மைந்தர்களான விநாயகர், முருகர் மற்றும் வீரபத்திரன் என அனைவரும் அங்கு வந்து காட்சியளித்தனர்.

*தொடரும்*

*🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻*

Wednesday, 29 April 2020

தியானத்தில் அருளாளர்கள் அருளுரை 29.04.2020


நேற்று 29.04.2020 இரவு சுமார் 11 மணி அளவில் உறங்க செல்லும் போது த்யானம் செய்தேன். அப்போது அன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தும் மனக்கண் முன் வந்து நின்றன. சரி , ஆகட்டும் , இப்போது இன்று நடந்த நிகழ்வுகளில் ஏதேனும் உனக்கு கேட்க வேண்டி உள்ளதா என்று உள்ளே இருந்து ஒரு குரல். சரி கேட்போமே என்று சிறிதும் யோசிக்காமல் கேள்விகள் ஒன்றன் பின் ஒன்று வந்து கொண்டே இருந்தது. அடடா கேட்பது யார் என்று கூட புரியவில்லை. சரி கேள்வியும் நீயே பதிலும் நீயே என்று விட்டு விட்டேன்.

1. சுகப்ரம்மத்துக்கு கேள்வி - தங்களை இப்போது எப்படி சந்திப்பது, தரிசனம் பெறுவது

சுகப்ரம்மம் பதில் - நீ, வட இந்தியாவில் நான் பாகவதம் உரைத்த அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்து பாகவதம் கையில் வைத்து கொண்டு படி. அர்த்தம் புரிந்தாலும் புரியாவிட்டாலும் பரவாயில்லை. அப்போது 7 நாள் அங்கே தங்கி தினமும் அந்த மரத்தின் அடியில் அமர்ந்து பாகவதம் படி. அப்போது நானும் நீ படிப்பதை எல்லாம் கேட்பேன். யார் யார் பாகவதம் படிக்கிறார்களோ, எங்கெல்லாம் படிக்கிறார்களோ, அங்கெல்லாம் நான் சூட்சுமமாக வந்து ஆசி புரிவேன், காட்சி கொடுப்பேன்.

2. அஸ்வத்தாமன் இப்போது எங்கே உள்ளார்

அஸ்வத்தாமன் பதில் - எங்கெங்கெல்லாம் வஞ்சம் இருக்குமோ, எங்கெங்கெல்லாம் போர் நடக்குமோ, எங்கெங்கெல்லாம் ஆயுதங்கள் பிரயோகம் செய்யப்படுமோ, அங்கெங்கெல்லாம் அந்த ஆயுதத்தின் முனையில் நான் இருப்பேன். வஞ்சம் கொண்டவர்கள் மனதில் நான் இருந்து வஞ்சம் தீர்ப்பேன். இவர்களது முகங்களின் மூலமாக தான் என்னை காண முடியும்.

3. வேல் தத்துவம் யாது, இளையனார் வேலூரில் சிறப்பு என்ன

பதில் - முருகப்பெருமான் - வேலாயுதம் நிறுவிய இடமே இளையனார் வேலூர். அதனை தாண்டி யாரும் அதன் அனுமதி இல்லாமல் உள்ளே செல்ல முடியாது. மூவுலகிலும் எம்மையும் எம் தந்தையும் தவிர யாராலும் அதனை எதிர்க்க முடியாது. சூக்ஷுமமாக நான் சிவசக்தி ஸ்வரூபமாக வேல் இல் உள்ளேன். அதனை புரிந்து கொள். முற்காலங்களில் வேல் வழிபாடு மிகவும் உண்டு. வேல் இருக்கும் இடத்தில கந்தன் இருப்பான், அன்னை இருப்பாள், சிவமும் இருக்கும். எனவே வேல் வெறும் ஆயுதமன்று, அதையே சகல சொரூபமாக பார்த்தால் அதுவே எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கும். வேல் வடிவத்தை நோக்கினால் கீழே ஒரு புள்ளியில் ஆரம்பம், பின்னர் நெடித்து வளர்ந்த தண்டு பகுதி, பின்னர் இதுவே இரண்டாக பிரிந்து இடப்புறமும் வலப்புறமும் வளைந்து, பின்னர் நடுப்புறம் நோக்கி பாய்ந்து சென்று, பின்னர் ஒரு புள்ளியில் இருபுறமும் இனைந்து கூர்மையாக இருப்பதே வேல். அதன் ஆரம்பத்தில் சிவம் உண்டு இரண்டாக பிரியவது இடகலை பிங்கலை நாடிகள், வள்ளி, தெய்வானை தத்துவம் ஆகியவை, கூர்மையான நடுவு பகுதி உச்சி மற்றும் தண்டு எமக்குரியதாகும். இதுவே முருக வழிபாட்டு தத்துவம். இந்த வேல் போன்ற ஒரு அமைப்பே உன் உள் சூட்சுமமாக இருக்கிறது. அதனை கண்டு உணரவே வேல் வழிபாடு. வேலுண்டு  வினையில்லை. ஆசிகள்.

4. அகத்திய முனி என்று ஒரு ஊர் இமய மலை சாரலில் உள்ளது - அதன் பெருமையை பற்றி உரைக்கவும்  அய்யனே

பதில் - அகத்திய முனிவர் - மகனே, அகத்தியன் இவ்விடத்தில் இருந்தது உண்மையே. அவ்விடத்திலேயே அமர்ந்து இருந்திருந்தால் அகத்தியனுக்கு தமிழ் கிடைத்து இருக்குமா, தமிழ் மூலம் அகத்தியனை வானுலகம் போற்றுவதற்கு வழி செய்ததே எமது தந்தை மகேசுவரன் ஆயிற்றே. அகத்தியன் கிளம்பிய இடத்துக்கு சிறப்பு என்றால் அதை விட அகத்தியன் என்றென்றும் வாழும் தமிழ் தாய் மடிகள் தான் எமக்கு என்றுமே சிறப்பு. நாம் அனைவரும் தமிழ் அன்னையின் மடிகளில் தவழும் பிள்ளைகள். குறையேதும் வராது. நிறைவு நிறைவு நிறைவு.

5. அய்யனே ஒளவை பிராட்டியார் பற்றி உரைக்கவும்

பதில் - அகத்திய முனிவர் - அவள் ஒரு தெய்வ பிறவி, தமிழ் தாயின் பூரண அனுக்கிரகம் பெற்றவள். அவளது பெயரிலேயே நீ தெரிந்து கொள்ளலாம். கோடியில் ஒருவரே ஒள என்ற எழுத்தை தனது நாமத்தின் முதல் எழுத்தாக அமைத்து கொள்வார்கள்.அந்த எழுத்தின் சக்தி விநாயகரை சாரும். மேலும் சக்தி ஸ்வரூபமான என் குருநாதன் முருகனை சாரும். தமிழ் அன்னையின் தவப்புதல்விக்கு நிகராக இன்று வரை வேறு யாரும் தோன்றவில்லை என்பதே அவளது பெருமை.


6. ரகோத்தமர் பிருந்தாவனம் பற்றி சில வார்த்தைகள் கூறவும்

பதில் - ரகோத்தமரிடம் இருந்து - மிக்க மகிழ்ச்சி பிள்ளாய், எம்மை பற்றி கூறும் போது யாம் வாழ்ந்த காலங்களில் யாம் இந்த இடங்களில் கையில் தண்டத்துடன் எமது ஆடை என் தலை உச்சியை மூடிய வண்ணம் உடை அனிந்து எமது சீடர்களுக்கு அருள் பாலித்து வந்த இடம் அது. நீ என்ன இப்போது நான் உள்ளே இருப்பேனா அருள் புரிவேனா என்றெல்லாம் சிந்தித்து கொண்டு இருக்கிறாயா....... (நடுவில் ராகவேந்திரர் வந்து பேச்சை தொடர்கிறார் ) - மகனே எம் போன்ற மகான்கள் எல்லாம் எமது காலம் முடிந்த வுடன் சூட்சுமமாக தத்தமது பீடங்களில் அமர்ந்து இந்த உலகம் முழுவதுக்கும் எமது அருள் அலைகளை பரப்பி கொண்டே இருப்போம். அப்போது எம் சந்நிதியில் ஒருவன் வந்து நின்று வணங்கினால் அவனது மனதின் எண்ண அலை பீடத்தினுள்ளே அமர்ந்து இருக்கும் எம்மை வந்து அடையும். அதனால் தான் எண்ணங்களை சிதற விடாமல் எம் நாமத்தை ஜெபி, என்னை துதி, எமது பீடத்துக்கு அபிஷேகம் அலங்காரம் தீப ஆராதனை ஆகியவை செய்யும் பொது எமது எண்ணமே உம்முள் மிகும். அப்போது எனது அருள் அலைகள் உம்மை எளிதில் வந்து அடையும். இதற்காக தான் எனது குரு ரகோத்தமர், மற்றும் எமக்கும் பீடங்கள்  அமைக்கப்பட்டு வழிபட்டு வரப்பெறுகின்றன. இங்கே எமது பீடத்துக்கு உள்ளே வந்து தான் தொழ  வேண்டும் என்பது இல்லை. அவரவர் இடங்களிலேயே எம்மை நினைத்து மனம் உருகி உமது பிரார்த்தனைகளை வைத்தாலே போதுமானது. இன்னும் ஒரு படி மேலே சென்றால், எமது சேய்களுக்கு ஒரு கவலை என்றாலும் ஒரு மகிழ்ச்சி என்றாலும் எந்த ஒரு உணர்வாக இருந்தாலும், எமது சீடர்களுடன் யாம் எப்போதும் இனைந்து இருப்பதால் உடனுக்குடன் எனக்கு நேரிடையாக அவர்களின் உணர்வுகள் வந்து சேர்ந்து விடும், எம்மை அழைக்காமலேயே, இது பல பிறவிகளாக தொடர்ந்து வரும். அவர்கள் என்னை நினைத்தாலும் நினைக்காமல் விட்டாலும் யாம் அவர்களுடன் ஏற்படுத்திய இணைப்பை மாற்ற இயலாது. என் சித்தப்படியே அவர்களது வாழ்வு அமையும்.

7. நரேந்திர மோடி விவேகானந்தரின் மறு  பிறவி என்று கூறுகிறார்களே - அதை பற்றி ....

பதில் அகத்தியரிடம் இருந்து - ஆம் குழந்தையே. அவனை இயக்குவது ஆட்கொண்டு உள்ளது விவேகானந்தனே. விவேகானந்தனுக்கும் தமது எண்ணத்தை  பூர்த்தி செய்து கொள்ள ஒரு சிறப்பான வாய்ப்பாக மோடி என்பவர் உள்ளார். அவரே தான் இவர் என்று கூற  இயலாது. அவர் வேறு பிறவி , இவர் வேறு பிறவி நிலை. மோடி என்பவர் சிறுவயதிலேயே விவேகானந்தனை படித்து அவரது ஆன்மாவால் ஈர்க்கப்பட்டு பின்னர் விவேகானந்தனின் ஆன்மாவில் ஆட்கொள்ளப்பட்டு செயல்பட்டு கொண்டு உள்ளார் என்பதே உண்மை.

8.  ஒரு மோர் விற்பவள் தஞ்சை பெரிய கோவிலுக்கு கூரை அமைக்க கல் கொடுத்தாள் என்பது பற்றி

அகத்தியர் - இது எல்லாம் இறைவனின் திருவிளையாடல் மகனே, அந்த மோர் விற்பவரின் மனதில் சேவை செய்ய எண்ணங்கள் தூண்டியது, அவள் ஆலயத்தின் பணியில் பங்கு கொள்ள ஏங்கியது, எல்லாமே இறைவனின் திருவிளையாடல் செயல். தமக்காக ஏங்கும் தமது குழந்தைகளுக்கு இறைவன் என்றுமே இறங்கி வந்து அருள் புரிய கடமை பட்டு உள்ளார். இவ்விஷயத்தில் அப்படியே, தனது தூய அன்பின் மூலம் அந்த பெண் இறைவனின் கருணைக்கும் பார்வைக்கும் பாத்திரமானார்.