Tuesday, 31 March 2020

திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர்

*திருமுருகன்பூண்டி முருகநாதேஸ்வரர்*
🙏
 கோயில் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது.. இத்தலத்திற்கு துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவி மரத்தைக் கொண்டுவந்தார் என்பது தொன்நம்பிக்கை. இறைவன் தன் பூத கணங்களை ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்த தலமென்ற நம்பிக்கையும் உள்ளது. முருகக்கடவுளின் பெயரிலேயே அமைந்த திருத்தலம் திருமுருகன்பூண்டி. திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தலம், முருகப்பெருமான் விரும்பி வந்து சிவவழிபாடு செய்த பெருமைக்கு உரியது. ஸ்ரீமங்களாம்பிகையுடன் ஸ்ரீமாதவனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் இத்தலத்துக்கு,  இன்னும் பல புராணப் பெருமைகள் உண்டு.
 *பகிர்வு. forwarded*
〽️〽️〽️〽️〽️〽️〽️
முருகநாதசுவாமி சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. சுவாமி, அம்மன் சந்நதிகள் மேற்கு நோக்கி அமைந்துள்ளன. கோயிலின் நடுவில் சண்முகதீர்த்தம்; இடப்புறத்தில் ஞானதீர்த்தம்; வலப்புறத்தில் பிரம்ம தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் உள்ளன. முருகன் வழிபட்டதற்கு அடையாளமாக முருகன் சந்நதியின் கருவறையில் மேற்கு நோக்கியவாறு லிங்கம் உள்ளது. இங்குள்ள முருகனிடம் வேலும் மயிலும் இல்லை. அவற்றைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வந்து சிவனை முருகன் வழிபட்டதாகத் தொன்நம்பிக்கை உள்ளது. சுந்தரர் பொருட்களைப் பறிகொடுத்த இடமான கூப்பிடு விநாயகர் கோவில் அவினாசிக்கு அருகில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் வீரராஜேந்திரன், கோனேரின்மை கொண்டான், குலோத்துங்க சோழ தேவன், விக்கிரம சோழதேவன், வீர நஞ்சையராய உடையார் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன.முருகனால் வழிபடப்பட்டதால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள முதன்மைக் கடவுளான சிவன் முருகநாதேஸ்வரர் எனப் பெயர்பெற்றார் என்ற மரபு வரலாறும் வழக்கத்தில் உள்ளது. அகத்தியர், மார்க்கண்டேயர் துர்வாசர் ஆகியோர் வழிபட்ட தலம். இதற்கு மாதவிவனம் என்றும் பெயர். துர்வாசர் கற்பகவுலகிலிருந்து மாதவிமர (குருக்கத்தியை) த்தை இங்குக் கொண்டு வந்தார் என்பர். சுந்தரர் இவ்வழியே செல்லும்போது, இறைவன் தன் பூதகணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்ட தலம். சுவாமியும் அம்பாளும் மேற்கு பார்த்த சந்நதிகள். மூலவர் அம்பாள் பீடத்தின் கோமுகம் வடக்கு நோக்கியுள்ளது.

வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய (வேடுபறி நடந்த இடம்) ‘கூப்பிட்டுவிநாயகர்’ அவிநாசிக்குப் போகும் வழியில் 1 கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார். கோயில் நுழைவு வாயிலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சந்நதி உள்ளது. இதைத் தாண்டி உள்ளே சென்றால் வலப்புறம் வேடுவர் உருவமும் சுந்தரர் உருவங்கள் இரண்டு (ஒன்று பறிகொடுத்து முகம் வாடிய நிலையிலும் மற்றொன்று மீண்டும் பெற்ற மகிழ்ச்சி நிலையிலும்) உள்ளன. கோயில் பிராகாரத்தில் பைரவர் சந்நதியும் நவகிரகங்களும் உள்ளன. இங்குள்ள சண்முகநாதர் சந்நதி சிறப்பானது. பிரம்மதீர்த்தம், ஞானதீர்த்தம், சுப்பிரமணிய தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தங்கள் உள்ளன. தலமரம் = வில்வம். இத்தலம் பிரம்மகத்தி தோஷம் நீங்கிய தலம்.

சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் இவை நீங்க வேண்டுவோர் இங்குவந்து நீராடி வழிபடுவதையும், பல நாட்கள் இங்கேயே தங்கியிருப்பதையும் இன்றும் காணலாம். இங்குள்ள பிரமதாண்டவ நடராஜர் சந்நதி விசேஷமானது. இக்கோயிலுக்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் மாலாதரன் எனும் வேடமன்னன் வழிபட்ட பைரவர் சந்நிதி. இது விசேஷமானது. சுவாமி கிழக்கு நோக்கியுள்ளார். (சுயம்புமூர்த்தி என்று சொல்லப்படுகிறது) கோயிலின் முன் மண்டபம் உள்ளது. எங்கும் இல்லாத புதுமையாக இங்கு, இம்மண்டபத்தின் மேலே பெரிய நந்தி, ஆலயத்தைப் பார்த்தவாறு சுதையால் அமைக்கப்பட்டு உள்ளது. ஆலயச் சுவற்றில் நிருதி விநாயகர், கேது ஆகியோரின் சந்நதிகள் உள்ளன. இத்தலத்திற்குத் தலபுராணம் உள்ளது. செட்டிப்பாளையம் வாசுதேவ முதலியார் பாடியது. நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மாசி மாதத்தில் 11 நாட்களுக்குப் பெருவிழா நடைபெறுகிறது.

தன் நண்பரான சேரமான்பெருமாள் தந்த பெருஞ்செல்வத்துடன் இவ்வழியே பயணித்துக் கொண்டிருந்தாராம் சுந்தரமூர்த்தி நாயனார். அவருடைய தெள்ளுதமிழ் பாடல்களைக் கேட்க விரும்பிய இறைவன், தமது திருவிளையாடலைத் துவக்கினார். வேடன் வடிவில் வந்து செல்வங்களை அபகரித்துச் சென்றார். இதனால் ஆத்திரமும் ஆதங்கமும் கொண்ட சுந்தரர், இந்தத் தலத்தின் கோயிலுக்கு வந்து பாடல்கள் பாடி இறைவனிடம் முறையிட, அவர் பறிகொடுத்த செல்வங்கள் மீண்டும் கிடைத்தன என்கிறது தல புராணம். சிவனாரின் பிரம்மதாண்டவம் அரங்கேறிய தலமாகவும் இது கருதப்படுகிறது. வெகுநாட்களாக குழந்தை பாக்கியம் கிடைக்காது வருந்திய பாண்டிய மன்னன் ஒருவன், இங்கு வந்து வழிபட்டு குழந்தை வரம் பெற்றான். இதுகுறித்த சிற்பக் காட்சிகளை இங்கு தரிசிக்கலாம்.

இத்தலத்தைப் புதுப்பித்து வணங்கிய வேடன் ஒருவருக்கும் இங்கு சிலை உள்ளது. லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரர், துர்க்கை,  தட்சிணாமூர்த்தி, சூரிய  சந்திரர், பைரவர், நவகிரகங்கள் ஆகிய தெய்வங்களையும் இங்கு தரிசிக்கலாம். கொங்கு மண்டலத்தில் சிறந்த கேது பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. முனிவர் ஒருவரின் சாபத்துக்கு உள்ளான கேது பகவான், இந்தத் தலத்துக்கு வந்து துர்வாச தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீமாதவனேஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றதாக தலபுராணம் விவரிக்கிறது. எனவே, இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. நாகதோஷங்கள் நீங்கி வாழ்வில் நல்லன அனைத்தும் நிறைவேற, நீங்களும் ஒருமுறை திருமுருகன்பூண்டி இறைவனைத் தரிசித்து திருவருள் பெற்று வாருங்களேன்! திருப்பூர் ரயில்நிலையத்துக்கு வடக்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம். திருப்பூரில் இருந்து அவினாசி வழியாக கோவை செல்லும் எல்லா பேருந்துகளும் திருமுருகன்பூண்டியில் நிற்கும்.🙏🌹

இந்த பாடலை அனுதினமும் பக்தியோடு ஓதுபவர்கள் சகல கலைகளிலும் மிக குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற்று பெரும்புகழோடுவிளங்குவார்கள் என்பது சத்தியம்.

இந்த பாடலை அனுதினமும்
பக்தியோடு ஓதுபவர்கள்
சகல கலைகளிலும் மிக
குறுகிய காலத்தில் தேர்ச்சி பெற்று
பெரும்புகழோடுவிளங்குவார்கள்
என்பது சத்தியம்.

அகத்தியர் இயற்றிய வண்டார்குழலி பாடல்.
பாடியவர் திருமதி பிருந்தா மாமி அவர்கள்

 அந்த பாடல் இதோ

1.வண்டார் குழலி வாணி என் தாயே
வாழ்க வாழ்க நினதருளே
வெண்தாமரை எனதுள்ளமாக நீ
வீணையை மீட்டிடுவாயே -உன்
வீணையை மீட்டிடுவாயே

2.கருணையின் கனியே
கலைகளின் நிலையே
காணவேண்டும் நினதுருவே
வருக வருக எனதிதய மலரிருந்து
மங்களமே தருவாயே -உன்
வீணையை மீட்டிடுவாயே

3. அறியாமை இருள் மனமாயை அற
அருணோதயமாய் வருவாய்
சிறியேனையுமோர் பொருளாய் கருதி என்
ஜீவனை மீட்டிடுவாயே -உன்
வீணையை மீட்டிடுவாயே

4.உனதருட்பார்வையின்
அருள்பெறும் ஊமையும்
உபநிஷதம் பொழிவானே
எனதியம்தனில் என்றும் இருந்து நீ
இன்னிசை செய்திடுவாயே -நீ
வீணையை மீட்டிடுவாயே

5.பொருள் உளதாயினும் அருள்
அறிவிலையானால்
பொன்னுள்ள  வானரமல்லவோ 
என் இருநயனங்களும் அறிவொளி வீசிட
இயலிசையாய் வருவாயே -உன்
வீணையை மீட்டிடுவாயே

6.கோடி கோடி கவி பாடிடுவேன்
தமிழ் கோகிலமே வருவாயே
எனதிதயம்  ப்ரணவத்வனி செய்திடும்
ஏக சுகம் தருவாயே -உன்
இசை அமுதம் பொழிவாயே-உன்
வீணையை மீட்டிடுவாயே

7.சத்திய வாழ்க்கையினால்
உலகெங்கிலும் சாந்தியோங்க
வரமருள்வாய்
சங்கீதாமுத தாரையினாலெனைத்
தன்மயம் ஆக்கிடுவாயே -இனி
சாகாக்கலை தருவாயே -உன்
வீணையை மீட்டிடுவாயே

8.கருவுடல்போயினும் கவியுடல் எய்தி
காலம் முழுதும் நிலை பெறுவேன்
ஹரிநாராயண சிவ சிவ குஹஎனும்
நாமரசம் தருவாயே -பர
நாதலயம் தருவாயே -என்
நாவில் நடம் புரிவாயே -உன்
வீணையை மீட்டிடுவாயே





என்னுடைய தனிப்பட்ட பதிவுகளின் தொகுப்பு


Nadi readings for self and for common purpose
































Skandhar nadi







Ambal Nadi



Sukar maharishi






Own writings, experiences



































Monday, 30 March 2020

ஆத்ம தொடர்பு - சூரிய உதயத்தின் பொது த்யானம் செய்தால் ஏற்படும் அனுபவங்கள்


ஆத்ம தொடர்பு

சூரிய உதயத்தின் பொது த்யானம் செய்தால் ஏற்படும் அனுபவங்கள்

*********************************************************************************
மார்ச்சு மாதம் 28 ஆம் தேதி 2020 அன்று ஒரு அமெரிக்க நண்பர் என்னை அழைத்தார் - பேசிக்கொண்டு இருந்தோம் . சுமார் காலை 7.30 மணியில் இருந்து 1 மணி நேரம் பேசி கொண்டு இருந்தோம் .

அப்போது திடீரென்று அம்பாள் ஆசி வாங்கி விட்டீர்களா என்று கேட்டேன்.

இதில் கவனித்து பார்க்க வேண்டியது என்னெவென்றால் - பேசிக்கொண்டு இருந்த தலைப்பு வேறு - வேறு தலைப்பில் உரையாடி கொண்டு இருக்கும்போது சம்மந்தமே இல்லாமல் நான் ஓரு கேள்வியை அவரிடம் கேட்கிறேன், ஏன் கேட்டேன் என்று தெரியாது. அவர் இருப்பது அமெரிக்காவில் நான் இருப்பது கோயமுத்தூரில் அம்பாள் நாடி வாசிப்பது காட்பாடி யில்.

நான் கேள்வியை கேட்ட அதே நேரம் அங்கே காட்பாடியில் அம்பாள் உபாசகர் அவர்கள் நமது அமெரிக்க நண்பருக்காக அம்பாளிடம் விண்ணப்பித்து நாடி மூலம் ஆசி வாங்கி கொண்டு இருக்கிறார்கள். எஙகளுக்கு இது தெரியாது ஆனால் நான் கேட்கிறேன் நாடியில் ஆசி வாங்கி விட்டீர்களா என்று. அதற்கு அவர் சொல்கிறார் நான் ஆசி கேட்டு ரொம்ப நாள் ஆகி விட்டது இன்னும் கிடைக்கவில்லை காத்து கொண்டு உள்ளேன் என்றார்.

பேசி முடித்தததும் அம்பாள் நாடியில் இருந்து அவருக்கு ஆசி நூல் வாசிக்கப்பட்டு வாட்ஸ்  அப் இல் பகிரப்பட்டது.

இதில் என்ன மேலும் ஆச்சர்யம் என்றால் மற்றொரு   சென்னை நண்பர் மூலம்  தான் அம்பாள் நாடியில் ஆசி கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். சென்னை நண்பரிடம் நிறைய பேர் விண்ணப்பம் செய்து இருந்ததால் அவர் ஒவ்வொருவராக தான் அனுப்புவார்.

எனவே உனக்கு  நேரம் வரும் போது  உனக்காக நாடி வாசிக்க சொல்லி  கேட்பார் என்றேன். அதே சமயம் தான் அந்த நண்பர் அம்பாள் நாடி உபாசகரிடம்  பேசி அமெரிக்க நண்பருக்கு ஆசி நூல் வழங்கும்படி கேட்டு கொண்டு உள்ளார்.

எல்லாமே ஆத்ம தொடர்பு - அமெரிக்க நண்பர் உலக நலனுக்காக யாகம் செய்தவர் - நான் எல்லோரிடமும் ஆத்ம தொடர்பில் உள்ளவன் - சென்னை நண்பர் மிகப்பெரிய அகத்திய நிலையில் இருப்பவர் - எல்லோரும் ஆத்ம தொடர்பில் உள்ளதால் யாரும் பேசிக்கொள்ளாமலே எல்லாமும் எல்லோருக்கும் தெளிவாக தெரிந்து அதுவே விளக்கம் கொடுத்து நம் நாவில் அமர்ந்து பேசி செயல் செய்து வேண்டுவனவெல்லாம் அளிக்கிறது.

என்னே இறை செயல் - இதுவல்லவோ இறைவனது சோசியல் நெட்வொர்க்கிங் - ஹஹஹஹ - ஓம் சிவாய அகத்தீசாய நம - மேல்மலையூனோர் வாழும் அன்னை அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி போற்றி - முருகனருள் - ஓம் கம் கணபதயே நமஹ - ஓம் நமோ நாராயாணாய - சர்வம் க்ரிஷ்ணார்ப்பணம்

*********************************************************************************

இன்று 31/03/2020 காலை 8.30 மணிக்கு நமது நண்பர் ஒருவரின் மனைவி பல் மருத்துவம் செய்கிறார் அவரிடம் எனது பல்லை சென்று காட்டலாம் என்று நினைத்தேன் - ஆனால் இந்த சூழ்நிலையில் அது சாத்தியமில்லை - ஏனென்றால் ஒவ்வொருவரும் முகமூடி அணியும் கட்டாயம் - நோயாளியிடம் இருந்து வாயில் இருந்து கிருமிகள் தொற்றும் வாய்ப்பு மிக அதிகம் - மேலும் இது இப்போது எனது பல்லில் எந்த அவசர பிரச்னையும் இல்லை - அவர்கள் மருத்துவமனையை இப்போது ,மூடி தான் வைத்து இருப்பார்கள்

பின்னர் அந்த நண்பர் தனது தொழிற்சாலையையும் மூடி தான் வைத்து இருப்பார் - வியாபாரம் எதுவும் இருக்காது - வங்கிக்கு கட்ட வேண்டிய அசல் வட்டி ஆகியவை கட்டுவதற்கு சிரமப்படுவார் - அதிக கால அவகாசம் கேட்பார் - நேராக நமக்கு தான் அழைத்து கேட்பார் என்றெல்லாம் எண்ணம் தோன்றுகிறது - சரி என்று விட்டு விட்டேன்

அந்த நண்பர் எனக்கு கடைசியாக தொலைபேசியில் அழைத்தது பிப்ரவரி மாதம் 2019, சுமார் ஒரு வருடம் முன்பு - அதாவது கடந்த ஒரு வருடங்களாக தொலைபேசியில் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை - இந்த சூழ்நிலையில் சுமார்   9 மணிக்கு - அதாவது சரியாக நான் அவரை நினைத்து அரை மணி நேரத்தில் அவர் அழைக்கிறார் என்னை .

அழைத்து நலம் விசாரித்து விட்டு வங்கிக்கு பணம் கட்ட அவகாசம் கிடைக்குமா என்று கேட்கிறார் - பின்னர் தன தொழிற்க்கூடத்தை 144 தடை உத்தரவினால் மூடி வைத்து இருப்பதாகவும் அரை மணி நேரம் முன்பு வங்கியை பற்றியும் கடன் கட்ட அவகாசம் பற்றியும் என்னிடம் பேச வேண்டும் என்று தோன்றியதாகவும் பின்னர் தொழிற்கூடத்துக்கு சென்று பார்த்து விட்டு பின்னர் அழைக்கலாம் என்று அரை மணி நேரம் கழித்து தற்போது அழைத்ததாகவும் கூறினார்.

*********************************************************************************

ஆத்ம இணைப்பு

ஆத்ம இணைப்பு - சிம் கார்டு தேவையில்லை - முக நூல் செய்தி தேவை இல்லை  - கடந்த ஒரு வருடமாக தொலைபேசியில் அழைக்காதவர் கடந்த பத்து நாட்களாக கொரோனா பாதிப்பின் போது அழைக்காதவர் இன்று நான் நினைத்ததும் இன்று அழைக்கிறார் என்றால் நமது மனதின் குவிப்பால் அனைத்தும் சாத்தியமே

நல்ல த்யான நிலையில் இருக்கும் ஒருவரின் எண்ணங்கள் வலிமை பெறுகிறது - அதனால் தான் பெரியவர்கள் நல்லதையே நினை நல்லதையே பேசு என்று கூறுகிறார்கள் - பெரியவர்களிடம் ஆசி வாங்குவது எல்லாம் இந்த காரணத்தால் தான்.


மிக்க நன்றி

TRS தி. இரா.சந்தானம்
கோவை 9176012104

*********************************************************************************


Saturday, 28 March 2020

ராமாயணம்

நேற்று சுந்தர காண்டம் கதை காலக்ஷேபம் zoom ஆப் மூலம் நேரலையில் கேட்டு கொண்டு இருந்தேன். முதல் 15 நிமிடம் கேட்டு முடித்தவுடன் என்னை அறியாமல் உறங்கு விட்டேன். பின் 10 நிமிடம் கழித்து உறங்கி விட்டதற்காக வெட்கப்பட்டேன். ஆனால்.....

உறக்கத்தில் கிடைத்த விளக்கம் கண் முன்னே விரிந்தது
எதற்கு ராமாயணம் கேட்க வேண்டும். என்ன பிரயோசனம்
அடேய், அதன் உள் அர்த்தத்தை புரிந்து கொள்ளுடா
ராமன் தான் பரம்பொருள்
அயோத்தியை தான் சத்திய உலகம்
சீதை தான் நீ, பரம்பொருளுடனேயே இணைந்து வாழ்ந்தவன்
ஒரு கால கட்டத்தில் அயோத்தியா வை விட்டு விலகி
கனகம் செல்ல நேர்ந்தது. அது தான் இந்த உலகம்
நீ தான் பத்தினி, உன் பதி பரம்பொருள். அவன் உன் உள்ளேயே கலந்து இருக்கான். எங்கே இருக்கான்? இந்த உலகம் என்னும் கானகத்துக்கு உள்ளே பரம்பொருளை சுமந்து கொண்டு  நீ.
பின் சீதை தீய சக்தியால் ராமனிடம் இருந்து பிரிக்கப்பட்டான்
நீயும் உன் ஆசை கோபம் அஹங்காரதால் பரம்பொருளிடம் இருந்து விலகி நின்றாய்
சீதை மாயை இல் மாய மானில் சிக்குண்டு தன் தகுதியை குறைத்து கொண்டாள்
நீயும் அவ்வாறே மனதில் அழுக்கு குணங்கள் கொண்டு உன் தகுதியை குறைத்து கொண்டாய்.
ராவணன் கவர்ந்து சென்றான் சீதையை
உன்னை உன் கர்ம வினைகள் கவர்ந்து உன்னை ஆட்டி படைக்கிறது.
சீதை சிறைப்பட்டது அசோக வனத்தில்
நீ சிறைப்பட்டது இந்த உடலில் இந்த உலகில் ஜனன மரண நிலையில்
ராமன் சீதையை கை விட்டானா ... இல்லையே
இறைவனும் உன்னை கை விடவில்லை
உனக்கு கஷ்டங்கள் கொடுக்கிறான். அந்த அம்புகள் உனக்கு இல்லை அவை உன் தீய குணங்களாகிய இராவணனுக்கு.
திருந்தாத ராவணனுக்கு இறைவன் எவ்வளவு முறை எச்சரிக்கை கொடுத்து வாய்ப்பு அளிக்கிறான். அவை யாவுமே உனது பிறவிகள்.
ஒவ்வொரு பிறவியிலும் இறைவன் வாய்ப்பு அளிக்கிறான் நீ திருந்துவதற்கு...
இறுதியில் ராவனன் மரணம் அடைகிறான் ராம பானத்தில். உன் அகங்காரம் உன் முக்தியில் மரணம் அடைகிறது.
சீதை ராமனுடன் சேர்கிறாள் மீண்டும்
நீ இறைவனுடன் மீண்டும் ஒன்றாகி நிற்கிறாய், தீய குணங்கள் வீழ்ந்த பின்பு
சீதைக்கு அக்கினி பிரவேசம் செய்து சோதனை செய்தார் ராமர்
அதே போல இறைவனும் உம்மை சோதித்து பார்ப்பார், நீ எவ்விதம் நடந்து கொள்கிறாய் என்று.
ராம தூதன் அனுமன், சதா ராம நாமம் ஜெபிப்பவர்
இந்த உலகில் உன் குரு தான் அனுமன், பரம்பொருளின் தூதுவன்
சதா பரம்பொருளுடன் இணைந்து இருக்கும் பாலமே உன் குரு அனுமன்
உன் குரு அகத்தியன் ஒரு சிரஞ்சீவி... அவன் உன்னை கரை சேர்ப்பான்
ராம ராஜ்ஜியம் தான் சத்திய உலகம்
ராமன் பாலம் அமைத்து இலங்கை அடைந்தான்
அதே போல இறைவனும் சத்திய உலகத்தில் இருந்து உன் மேல் இரக்கப்பட்டு இவ்வுலகத்துள் இறங்கி வந்து இருக்கிறான்.
ராமன் உனை தேடி வந்து கொண்டு இருக்கிறான் நீ கவலைப்படாதே என்று கூறுவதய சுந்தர காண்டம்
ஆகவே சுந்தர காண்டம் படித்தால் இறைவன் வருவார் அனுமன் வருவார். இந்த உலகத்தில் மாய சக்திகள் அசோக வனத்தில் சீதையை சூழ்ந்து இருக்கும்படி உன்னை சூழ்ந்து இருக்க, நீ தைரியமாக இரு.
ராவணன் என்ற எமன் உனை நெருங்குமுன் ராமன் என்ற இறைவன் உனை  அந்த காப்பார். எனவே  நீ சீதையாக மாறு. மனதை தூய்மையாக வை. ராமன் வரும் வரை. அதன் பின் ராமன் பொறுப்பில் உண்னை ஒப்படை.

மரணம்

மனம் நொந்து போகும் வேளையில்
உடல் வெந்து நிற்கும் சடுதியில்
பலம் குன்றி நிற்கும் காலையில்
எமன் எமை அழைக்கிறான், வந்து விடு, இன்னுமா நீ இந்த உலகிலே இருக்க வேண்டும்... சிரிக்கிறான்
நான் என் ஐயனை பார்க்கிறேன்
ஏன்.....?...
எந்த பதிலுமில்லை
எனது தலை கவிழ்கிறது
சாவதற்கு மனமில்லை
வாழ்வதற்கு வழியில்லை
இனி செய்வதற்கு ஒன்றுமில்லை
நடப்பதெல்லாம்  நாராயணன் செயல்
சரி .... நீ பதில் கூற வேண்டாம்
உன்னை பற்றி நிற்கும் யான் இப்போது அகங்காரத்தை பற்றி கொள்வது ஏன்
வாழ்வும் சாவும் எவர் பொறுப்பு
நித்தம் மரணம் நொடிக்குநொடி
எல்லாம் வேஷம்
நன்றாக வாழ்வது போல் நடிக்கலாமே தவிர
உண்மையில் உள்ளே இருப்பது மரணம் மட்டுமே
மரணத்தை தான் இந்த உலகம் ஆனந்தம் என்று கொண்டாடுகிறது
மரணத்தை நோக்கி செல்லும் போது சிறிது சிறிதாக சுய நினைவை இழக்கும் போது
அதற்கு மனிதன் போதை என்று பெயர் வைக்கிறான்
இறைவனை முன் நிறுத்தி தன் செயக் ஏதும் இல்லாமல் தனது எண்ணம் சொல் செயல் எல்லாமே இறைவன் செயலாக மாற்ற முடியாமல்...
தன் சுய நினைவை இழந்து, என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஏதேதோ செய்கிறான்.
எல்லாமே ஒரு போதை தான்
உனக்கு ஒரு அளவிற்கு மேல் வாழ முடியாத ஒரு சூழ்நிலை வரும் போது
நீ என்ன செய்வாய் என்று ஒரு பாடம்
சாவதற்கு முடிவெடுப்பதென்பது மிக எளிது
ஆனால் சமாளிக்க வேண்டும்
நம்பிக்கை வேண்டும்
வாழ விடுவார்கள் என்ற நம்பிக்கை வேண்டும்
ஏன்......?...
இப்போது என் கேள்விக்கு விடை வருகிறது
மனிதர்களின் நிறம் என்ன என்று நீ புரிந்து கொள்ள வேண்டும்
அப்படியா... இவ்வளவு நாள் நான் புரிந்து கொண்டதெல்லாம்.....
எல்லாம் மாயை, தோலை உரித்து காட்டினால் தானே தெரியும், அவர்கள் சுயரூபம்
தெரிந்து என்ன ஆக போகிறது
தெரிந்து விட்டால் தெளிவு பெறலாம்
தெளிவின் கண் கிடைப்பது யாது.
தெளிவின் கண் கிடைப்பது ஞானம்
ஞானத்தின் கண் கிடைப்பது யாது
ஞானத்தின் கண் அறிவு கிடைக்கும்
அறிவு கிடைத்தால் வழி கிடைக்கும்
விளக்கம் கிடைக்கும், சமாதானம் கிடைக்கும்
தலைக்கு மேல் வெள்ளம் சென்ற பிறகு ஜான் என்ன முழம் என்ன
இந்த மரண பயமெல்லாம் ஓரளவுக்கு தான்
அளவு தாண்டி விட்டால் உன் சுய ரூபம் வெளிப்படும்
உன் சுய ரூபம் தான் சத்தியம் ஆயிற்றே சத்திய நோக்கம் ஆயிற்றே
ஆனால் சத்தியமாக நான் சொல்லுகிறேன் நான் என் ஆன்மீக லட்சியங்களுக்காக முழு மூச்சியும் அர்ப்பணித்து வருகிறேன். என் பார்வை முழுவதும் இறையின் மேல் சாய்ந்து உள்ளது.
திசை திருப்பி வேறு விஷயங்களின் மேல் பார்த்தால் அவை தாங்காது.
கத்தியை கையில் எடுத்தால் தானாகவே உயிர் பயம் அகன்று விடும். அருள் இருந்தால் அறிவு இருக்கும் உயிர் பிழைக்கும். அறிவு இல்லையென்றால் அருள் இல்லை என்று தான் அர்த்தம். உயிர் பிழைக்குமா? தெரியாது, அதன் விடை பரம்பொருளிடமும் நம்முள் இருக்கும் அதன் பகுதிக்குமே தெரியும்.
ஓம் சிவாய அகத்தீசாய நம
மகத்தான அகத்தீசா
ஓங்காளி பர பிரம்ம ஸ்வரூபினியே போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Wednesday, 25 March 2020

கோரோணா மரண பயம்

ஒவ்வொரு தரமும் வெளியே போய்வரும்போது பயந்து கொண்டு இருந்தது உண்மை. சில நேரம் தலைவலி, சில நேரம் கஷாயம் குடித்ததால் உடல் சூடாகி சிறுநீர் கழிப்பதில் மிகவும் சிரமம், தொண்டை வலி, உடல் அசதி, மூச்சு சிரமம், கிட்டத்தட்ட கோரோணா போன்றே பயமுறுத்தும் அறிகுறிகள். மூச்சை இழுத்து அடக்கி பார்த்தால் சுமார் 45 sec to 60 sec நிறுத்த முடிகிறது. சரி அப்போது பயமில்லை, என்று தேற்றி கொண்டு தயிர் மோர் தவிர்த்து எண்ணெய் குளியல் தவிர்த்து குளிர்பானம் தவிர்த்து ரசம் குடித்து, அப்பப்பா, ஏன் இந்த பயம்.... மீண்டும் மீண்டும் பயம். ஆனால் இன்று அகத்தியர் உரைத்த ஹோம புகை வெண்கடுகு மருதாணி விதை கருங்குங்கிலியம் ஓமம் தர்பை அருகம்பில் பச்சைக்கற்பூரம் ஆகியவை இட்டு வீடு முழுதும் புகை இட்டவுடன் தலை வலி தொண்டை வலி நீங்கி உடல் அசதி நீங்கி தலை மார்பு சளிகள் வெளியேறி அட்டகாசமான ஒரு நிலை, அப்பப்பா, இது தான் அகத்தியமப்பா. வீட்டில் அனைவரும் இந்த புகையை சுவாசித்ததால் அனைவருக்கும் ஏதவாது தொந்தரவு இருந்தாலும் நீங்கி விடும். பயமில்லாமல் இருக்கலாம். இந்த புகை ஏவல் பேய் பில்லி சூனியம் பிசாசு ஆகியவற்றை ஒழிக்கும், அருளை நிறைக்கும், வாஸ்து குறைகளை நீக்கும், பின்னர் இது போன்ற வைரஸ் கிருமிகளை நம் வீட்டிலும் அதில் உள்ள மனிதரையும் அண்டவே விடாது விரட்டும், அழிக்கும். நான் இவை எல்லாம் ஏற்கனவே 6 மாதத்துக்கு மேல் செய்து பலன் பெற்று வருகிறேன். போபால் விஷவாயு தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்த போது தினமும் ஹோமம் செய்யும் ஒரு வீட்டில் அனைவரும் பிழைத்தது எல்லோருக்கும் தெரியும் ஆனால் நல்ல பழக்கங்களை பின்பற்றுவதென்பது நமக்கு ஆகவே ஆகாது. உயிர் போகும் நிலையிலும் வீட்டையும் நாம் குடியிருக்கும் இந்த கூட்டையும் காத்து கொள்ள ஒரு சிறிய ஹோமம் கூட செய்ய மாட்டோம், இது வெறும் சாம்பிராணி புகை போல தான். ஆனால் ஒரு ஹோம குண்டத்தை வைத்து சமித்து குச்சி மற்றும் ஏருவாமுட்டை வைத்து அக்கினி மூட்டி அதில் இந்த பொருட்களை இடும் போது அகத்தியரை நினைத்து கொண்டாலே போதுமே, ஒரு சித்தர் யாகம் செய்த நன்மை கிட்டுமே. இதற்கு ஆகும் செலவு மிக குறைவு, பலன்களோ மிக அதிகம்.

ஓம் அகத்தீசாய நம
அய்யன் புகழ் ஓங்குக
Trs......

Monday, 23 March 2020

My experience 23/03/2020


As per agathiya maharishi’s advice through jeeva nadi, I regularly eat the sprouts of fenugreek seeds in the morning. I have been doing this for last about 1 year and feeling very good healthy life. I used to soak the fenugreek seeds in the water for 7-8 hours and then take them out and put them in a cloth, tie it like a knot and the cloth will be let to hang on the window grill to get sunlight and water will be sprinkled occasionally. We have been doing this last 1 year regularly. But this time, they had put it in a closed container and allowed it to sprout. All got decayed after 4-5 days, instead of sprouting. Again we had put fresh fenugreek seeds in the cloth as usual and hung it on the window grill. Again after 4-5 days, it showed signs of decaying. Third time we removed it once again and repeated the same process, the sprouts are not visible and taking time and also showing marginal signs of decaying. Then we thought this is something mysterious or might be some issue in the seeds. But that’s not the case. I got intuition and I asked agathiyar within me as to why is this happening. Why not instead I eat the fenugreek seeds in raw form as a substitute to this and ensure atleast some medication until the sprouts are again ready. Immediately the answer came spontaneously, You fool, don’t you understand when third time the seeds failed to sprout. If you take them now, your body will get cooled and it will be supporting the virus to thrive there. Hence we have adviced to take hot food and all. So whatever I have told you is good in normal course, but in this situation you avoid your body becoming cool, so that the heat in your body resists the viruses very well. I am blessed to hear that from Agathiyar and it is an evidence that each and every act of mine is scrutinized and monitored by him all times and when something is wrong, he just prevents it. How come a seed will decay 3 times in last 1 month when it never happened in last 12m. it is not just a coincidence. He never wanted to advice me. He just did what was required to be done. But I wanted to super sede him by consuming the fenugreek in raw form, so he came out and gave me a lecture about that to keep me calm. Why should I be afraid when such a father available with me always. It is all his responsibility and love and care and affection to ensure that this life given to me should not go a waste and it should be towards the attainment of fulfilment for the soul. Of course, my soul belongs to him and so, he cannot allow it to waste one life. Each life is an opportunity given by god, which we have to make use of to attain godly status. When we show interest, they are ready and waiting to take us through pleasantly – But we should be ready to look above and see the gods out there waiting for us. Don’t like Agathiyar, go and pray Murugar, Don’t like Murugar, go and pray shiva, don’t like shiva go and pray parasakthi, don’t like them go to Vinayak, what more you want, lakshmi, saraswathi, bramma, Narayan, narasimha, prathyankira so many so many…. Sai baba, Ramakrishna, Vivekananda, raghavendra , Gnananada, and lot more……… which ever suits you go with them. The end point is the same. What you cook is the same, we have different vessal options to cook, that’s all. Some vessals cook fast, some vessals cook slow, but the end result is only towards the enlightenment.


.........  Trs ............. 23/03/2020

Sunday, 22 March 2020

அம்பாள் நாடி - அன்னை எனக்கு அளித்த ஆசி


ஓம் சிவாய அகத்தீசாய நமஹ
 
அருள் அன்னை ஆதி சக்தி ஜீவ நாடி நூல் விளக்கம்
 
பலன் எடுக்கப்பட்ட நாள் 23.02.2020, ஞாயிற்று கிழமை
 
பலனை கேட்பவர் அருள் தவரிஷி ஆசான் அகத்தியனின் அடிமை திரு சந்தானம் அய்யா அவர்களுக்கு
 
நூலினை எடுத்து இயம்பியவர் ஆசான் அகத்தீசரின் கொத்தடிமை
 
Dr S விஜயகுமார், ஓங்காரக்குடில் வேலூர்
 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
நூலினை பார்ப்போம்
 
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
 
 
தில்லை ஈசன் திருவடியை பணிந்து போற்றி
 
தெரிவிப்பேன் சக்தி என் ஜீவ மொழி ஆசி
 
இந்த நாள் என்னை நாடி இல்லாளுடன் கூடி
 
இனிமைபட வந்திருக்கும்  சந்தானம் வாழ ஆசி
 
ஆசி தாரேன் அன்னை யானோ மனமகிழ்ந்து இன்று
 
அருள் உலகில் அவதார பாலகனாய் வந்தாய்
 
அவனியிலே தருமம் காக்க பாமரர் காக்க  வந்த நீயும்
 
இன்றுமே விக்கிரமன் ஆட்சி செய்த தலமதுவில்
 
இனிய வாக்கிதனை அன்னை என் மூலம்
 
மூலமாக பெறுவதற்கு இறை கணங்கள் வழி கொடுக்க
 
மகன் நீயும் இல்லாளுடன் இனிய சேயுடனும் கூடி
 
வந்திருக்காய் , பல நலன்கள் வகைபட தாரேன்
 
வற்றாத  அருள்  சக்தி உன்னுள் பாயும்
 
பாயுமடா அகத்தீசன் அருளோடு திருமூலன் கந்தனருள்
 
பக்குவங்கள் பல  கடந்தாய்
 
கடப்பாய் இனியும் தொட்டு
 
நிலை உயரும்
 
அருள் பெருகும் 
 
வரம் கிட்டும்
 
வளம் வளரும்
 
சாற்றிட ... சக்தி யானோ
 
மனமகிழ்ந்து இன்று நாள்
 
ஜெகத்திலே  சிவனருளோடு
 
நாராயணன் அருளும்
 
அருளும் கூட்டி  தந்து
 
நவகோடி சித்தர்களின்  துணையோடு
 
அருள்கிறேன் ஜீவசக்தி
 
மெய்ஞ்ஞான சக்தி  கூட
 
உன் இல்லில் உத்தம சித்தர்களும்
 
நடமாடி உயர் ஞான அருள் வரங்கள் தந்து வாரார்
 
என் மகனே ,
 
என்றுமே
 
சயனம் முன்  சயனம் பின்
 
ஏற்றிடப்பா அகத்தியன் நாமம்
 
அதுவே உனக்கு தவம்
 
தவமாகும் அது போதும்
 
தயை சிந்தை பெருகும்
 
தாய் யானும் அகத்தீசனை ஜெபிக்க
 
அகத்துள் இறங்கி
 
உந்தனுக்கு வாக்குரைக்கும் காலமதும் நெருங்கி விட்டு
 
உத்தமனே உன் வழியில் வருவோர்கள் ஞானியாவர்
 
ஞானியாவர் உன்னிடத்து பயில்வோரெல்லாம்
 
ஞாலமதில் ஞான பண்டிதன் அருள் பலமும் உண்டு
 
சித்தமதில் அகத்தீசன் அருளாய் இறங்கி
 
சித்தனாக வாழுகுன்ற சத்தியன் நீயடா
 
நீயடா உந்தனுக்கு பல வரங்கள் முற்பிறப்பும்
 
நீதியுடன் அளித்திட்டார் சிவ சித்தர் எல்லாம்
 
வரம் பெற்று இது பிறப்பில் வந்துதித்த பாலன் நீ
 
வையகம் காக்க உன்னையும் கருவியாக்கி மகிழ்வேன்
 
மகிழ்ந்திடுவேன் அன்னை யானோ எது நிலைகளிளும் கைவிடாது
 
மகன் நீயும் சுத்த பர சோதியுள் கலப்பாய்
 
எடுத்துரைக்க பரம சித்தன் அனுக்கிரகம் பூரணமாய்
 
ஏகாந்த நிலையில் இருந்து இறங்கியே வந்திருக்க
 
வந்திருக்க நிந்தனுக்கு ஆகமங்கள் ஏதும் இல்லை
 
நிந்தனுக்கு இருப்பதெல்லாம் புண்ணியம் மட்டும்
 
சாற்றிட
 
மூபிறவி தொடர்பிலே வந்த மகளே 
 
 
 
 
 
 
 
 
 
சத்தியம் பட இது பிறப்பும்
 
இல்லாளாய் கரம் பிடித்தாய்
 
கரம் பிடித்தாய்
 
அவள் பலத்தால் உந்தனுக்கும்
 
அருள் பலம்
 
கலியுகத்தில் வெற்றி அடைய
 
சித்தர் வழி சூட்சுமம்
 
இச்சா சக்தி க்ரியா சக்தி ஞான சக்தி
 
ஒன்று கூடி இது உலகில் உன்னையே
 
வழி காட்டி நிற்கும்
 
நிற்குமப்பா
 
உந்தனுடைய சேயோர்கள் மேலான பலனை
 
நீதியுடன் பெற்று வாழ அருள் பலமும் தாரேன்
 
இந்த நாள் உந்தனுக்கு ஏழரையுடன் கந்தக சனி குற்றம்
 
இருப்பதுவும் உண்மை தான் அன்னை அறிந்தேன்
 
ஆகவே இனி வரும்கால் தேய்பிறை அஷ்டமி தோரும்
 
ஆண் நீயும் பைரவரை தொழுதிடப்பா
 
நன்மை உண்டு
 
உண்டு தான் அதனாலே உயர் பலன்கள்  உன் விதியில்
 
உன் விதியும் மாறி நிற்கும்
 
தேறி வாழ்வாய்
 
ஆசி ஆசி
 
எடுத்துரைக்க ஏற்றமான சூழ்நிலைகள் உந்தனுக்கு
 
எப்போதும் அகத்தியனே குருவாய் வந்திறங்கி
 
வந்திறங்கி கரம் பிடித்து கை பிடித்து
 
கடைத்தேற்றி வைக்க
 
வேலவன் வேல் படையுடன் வந்துமே ஆசி தந்து
 
காப்பாக கருணை  கொண்டு கடமையாக அவரும்
 
எண்ணி காளை உனை காத்தருள்வார் அஞ்சிடாதே இது உலகில்
 
இது உலகில் உந்தனுக்கு யாருமில்லை உற்ற துணை
 
இருப்பதெல்லாம் அகத்தியமே
 
அகத்துள் நீ கண்டு தேறி
 
நிலமதனில்  கண்ட சத்தியம்
 
கண்டபடி உரைத்திட
 
நிந்தனுக்கு சக்தி தருவார் அகத்தியன்  மனம் இறங்கி
 
மனம் இறங்கி அவரும்
 
வந்து விட்டார்  உந்தனிடம்
 
மண்ணுலகில் அவர் வழியில்
 
வந்த சித்தர் பலரில்
 
சத்தியமாய் உந்தனுக்கும்
 
பொன் ஏட்டில் ஓர் பெயரும்
 
சித்தனாக வாழ்வாய் என்று
 
சத்தியம் இது காலும்
 
இது காலும் தருகிறேன் ஆசி பெற்று உயர்வடைவாய்
 
இயம்பியவாறு சத்தியமாய் நடக்கும் இது திண்ணம்
 
எடுத்துரைக்க ஈன்ற சேய்கள்
 
இருவருடன்  வாழ்வு உயர்வு
 
ஏற்றம் காணும் அகதியானால்
 
ஆசி ஆசி
 
ஆசி தாரேன்  என் மகனே
 
பெற்றிட்ட சிவ  தீட்சை சிறக்கும்
 
அவனியிலே அருள் வழியில் பொருளும் பெற்று
 
தட்டாது மந்தன் பலமுள்ள தொழிலில் பல யோகம்
 
தானுனக்கு கிட்டி வாழ
 
ஆசி தாரேன்
 
தருகிறேன் பூரண பலமும் அருளாசியும் இன்று
 
தரணிதனில் தவரிஷி அகத்தியனின் ரூபத்தில்
 
என் மகனே நீயுமே உருமாறி உட்கலந்து
 
எப்போதும் அகத்தியன் செல்லுமிடம் நீயும் கூட
 
நீயும் கூட சூட்சுமமாய் செல்லுதற்கு அனுக்கிரகம்
 
நிலமதனில் வரங்களாக பெற்று தாரேன் ஈசனிடம்
 
இன்று நாள் அன்னை யானோ மனமகிழ்ந்து
 
இது நூலில் இனிய வாக்கு தருகிறேன்
 
ஆசி ஆசி
 
ஆசி பெற்ற என் சேயே
 
உன்னோடு உந்தன் குலம்
 
அருள் வழியில் அவனியிலே சித்தர் குலம் என்று சிறக்க
 
சத்தியமாய் ஈரேழ் தலைமுறையுடன்
 
உங்களுக்கும் பிறருக்கும்
 
தட்டாது
 
சித்தர் குடில்
 
உந்தனுக்கே அமையும் என்று
 
தரணி தனில் வாக்கு தந்து
 
மகிழ்ந்தேன் அன்னை
 
அன்னை யானோ வாக்கு இதை நூலின் வழி
 
அறிவிக்க மனம் மகிழ்ந்து இருக்கான் அகத்தீசன்
 
செப்புகிறேன் உந்தனுக்கு கோள் வினைகள் நீங்கி ஓட
 
சத்தியமான ஆகமத்தின் நெறிமுறைகள் இது நூலில்
 
இது நூலில் உந்தனுக்கு
 
மூவினைகள் மூகருமம்
 
நிலமதனில் நீங்கி ஓட
 
அருள் பலம் தாரேன்
 
சாற்றிட இனிவரும் கால்
 
அகத்தியனின் நாமத்தையே
 
சத்தியமான மூலமாக ஏற்றுமே ஓதிடப்பா
 
ஓதிடப்பா அதனுடனே
 
சிவனார் வழி  தீட்சை கூட
 
ஒளஷதமாய் உயர்வு அருளும் காய சித்தி காணுதற்கும்
 
அப்பப்பா பரம சித்தன் அருள் சேயும் அளித்த தீட்சை
 
அவனியிலே சத்தியமாய் சித்தனாக்கி உன்னை வைக்கும்
 
வைக்குமடா அதை தொட்டு தொடர்ந்துமே
 
தொடாது  கர்மம் தான் நீயும் ஜெபித்து தேறி
 
ஜெகத்தை காக்க நிலவுலகில் அதிகாரம்
 
அருள் பலம் தாரேன்
 
நிந்தனுக்கு  இது நிகழ்விற்கு இதுநூலே சாட்சி
 
சாட்சியாக அன்னை யானோ இகுதின் காலம்
 
சிவனாருடன் நவநாத சித்தர்களை சாட்சி வைத்து
 
எடுத்து சொன்னேன் இது வாக்கை சத்திய உபதேசமாய்
 
ஏகாந்த நிலையிலே நீ வாழ ஆசி
 
ஆசி தாரேன் உந்தனுக்கு
 
காய சித்தி யோக சித்தி காண
 
அருள் வழியில் ஜோதி தரிசனம் உன்னுள் காண
 
சிற்சபையுடன் பொற்சபையுடன் ஞானசபை ஏதென்று
 
சக்தி யானோ இது நூலில் செப்பி மகிழ்வேன்
 
மகிழ்ந்திடுவேன் என் எழுத்து ஏதென்று அறிந்து கொள்ளு
 
மகன் உனக்கு எட்டு இரண்டு ரகசியமும் அதுவே
 
அவ்வை தாய் உபதேசித்த ரவி மதி அக்கினி கூட
 
அவ்வையால் மெய்ப்பொருளாய்  உபதேசித்த நிலையே ஆகும்
 
நிலையாகும் அதை நீயும் புரிந்து நட புண்ணியம் பெருகும்
 
நிம்மதியும் படிப்படியாய் விதியில் பெறுவாய்
 
தான் உனக்கு சப்தமத்தில் ஞானியும் அமர்ந்திருக்க
 
தரணி தனில்  இல்லாள் வழி உதாசீனம் உருவாகி நிற்கும்
 
நிற்குமப்பா நிரந்தர பிரிவு வரும் கேடு கூட
 
நிலமதனில் பரம  சித்தன் காத்து  தருவான் ஆசி உண்டு
 
என் மகனே குருவோடு அறிவோனும் கூடி இருக்க
 
ஏற்றமான சூழலும் இல்லறத்தில் உண்டு உண்டு
 
உண்டு தான் சாப வினை நீக்கி தந்தேன் இதுகால்
 
உத்தமனே இல்லறத்தில் குறைகாணா நீயும் வாழ
 
சத்தியமாய் புகரின் வாரம் கங்கனுட ஹோரையில் நீ
 
வழிபட்டு வந்திடுவாய் பள்ளியறை தரிசனமும்
 
தான் நீயும் இல்லோளுடன் கூடியே ஈசன் தடம்
 
தட்டாது இனிப்பதுவை அடியாருக்கு ஈந்து மகிழ்ந்து
 
மகிழ்ந்துமே வழங்கி வா இல்லறத்தில் குறைகள் வாரா
 
மகன் உனக்கு பாதுகாப்பு அரவணைப்பு அன்னை தந்து
 
சத்தியமாய் அன்றே உனை அகத்தீசன் அருள் மகனாக
 
சத்திய வழியில் வந்திட்ட மகளுக்கு லோபா மாதாவின்
 
மாதாவின் அருள் பலத்தை இறக்கி தந்து
 
கலியுகத்தில் மக்களை காத்திடும் அருள் அடியவர்களாய் உருவாக்கி
 
உங்கள் வழி வந்திருக்கும் சேய்களுக்கும் ஞான  வழி
 
உத்தமமாக காட்டி தந்து
 
குவலயத்தில் வழி வகுத்து
 
ஏற்றமான பெரு நிலைகள் தான் அவரும் பெற்று வாழ
 
ஏறுமுகம் கொண்டு வாழ கந்தனருள் துணை நிற்க
 
நிற்கவே அன்னை யானோ அருள் பலத்தை இன்று நாளில்
 
நீதி அரசர் தில்லைஈசன் திருவடியை சாட்சி பட
 
வழங்குகிறேன் வரங்களையும் ஆசியையும் கொடையாக
 
வற்றாத அருள் நிலைகள் தான் பெற்று சிறப்பாய்
 
சிறப்பாய் ஐம்பான் இரண்டில் குருவாகி குவலயம் காப்பாய்
 
ஜெகத்திலே உந்தனுக்கும் ஏடு வழி அருள் வாக்கு நிலைகள்
 
எடுத்து உரைக்கும் ஆசியதும் சத்தியமாய் உண்டு
 
ஏற்றமுண்டு உந்தனுக்கு அன்னை யானே
 
வழி தந்து
 
தந்துமே நூல் தந்து உபதேசிக்கும் முறையை கூட
 
தாயாக குருவாக அமர்ந்துமே
 
 
அறிவு தந்து
 
மெய்ஞ்ஞான விளக்கத்தை உன்னுள் இறங்கி பேசி
 
மெய்ப்பொருளில் நாம் வாழ அருள்வேன் ஆசி
 
ஆசி தந்தேன் உந்தனுக்கு என்ன குறை
 
என்று பார்க்க
 
அவனியிலே ஏதுமில்லை
 
அகத்தியன் முன்னே நிற்க
 
எடுத்துரைக்க உள்ளதெல்லாம் புண்ணியமே பரம்பொருள் வரமே
 
ஏதும் குறை இனியும் இல்லை உந்தன் விதியில்
 
விதியிலே வந்த குறை வரும் குறை அனைத்தும் தீர
 
வளவன் உனக்கு ஆகமத்தை செப்பி விட்டேன்
 
தட்டாது தான் பெற்ற
 
சிவனாரின்  அருள் தீட்சை
 
தான் உன்னை அகத்தியத்துள் திண்ணமாக
 
உள் நுழைக்கும்
 
உள்  நுழைக்கும் விரும்பினாலும்
 
கட்டுண்டு கடைத்தேற
 
வளவன் உனை
 
ஐயமிலா அழைத்துமே
 
செல்லும் அதுவும்
 
நீதியுடன் தொடங்கிடுவாய் மேலான
 
சிவனார் ஜெபமும்
 
நித்தமும்
 
என்னுள் நீ
 
உன்னுள் நான்
 
கலந்து வாழ்வோம்
 
அருளாசி முற்றே
 
- சுபம் -
 
ஓம் சிவாய அகத்தீசாய  நம
 
TRS……..
Coimbatore
Ph.91760 12104