Wednesday, 25 March 2020

கோரோணா மரண பயம்

ஒவ்வொரு தரமும் வெளியே போய்வரும்போது பயந்து கொண்டு இருந்தது உண்மை. சில நேரம் தலைவலி, சில நேரம் கஷாயம் குடித்ததால் உடல் சூடாகி சிறுநீர் கழிப்பதில் மிகவும் சிரமம், தொண்டை வலி, உடல் அசதி, மூச்சு சிரமம், கிட்டத்தட்ட கோரோணா போன்றே பயமுறுத்தும் அறிகுறிகள். மூச்சை இழுத்து அடக்கி பார்த்தால் சுமார் 45 sec to 60 sec நிறுத்த முடிகிறது. சரி அப்போது பயமில்லை, என்று தேற்றி கொண்டு தயிர் மோர் தவிர்த்து எண்ணெய் குளியல் தவிர்த்து குளிர்பானம் தவிர்த்து ரசம் குடித்து, அப்பப்பா, ஏன் இந்த பயம்.... மீண்டும் மீண்டும் பயம். ஆனால் இன்று அகத்தியர் உரைத்த ஹோம புகை வெண்கடுகு மருதாணி விதை கருங்குங்கிலியம் ஓமம் தர்பை அருகம்பில் பச்சைக்கற்பூரம் ஆகியவை இட்டு வீடு முழுதும் புகை இட்டவுடன் தலை வலி தொண்டை வலி நீங்கி உடல் அசதி நீங்கி தலை மார்பு சளிகள் வெளியேறி அட்டகாசமான ஒரு நிலை, அப்பப்பா, இது தான் அகத்தியமப்பா. வீட்டில் அனைவரும் இந்த புகையை சுவாசித்ததால் அனைவருக்கும் ஏதவாது தொந்தரவு இருந்தாலும் நீங்கி விடும். பயமில்லாமல் இருக்கலாம். இந்த புகை ஏவல் பேய் பில்லி சூனியம் பிசாசு ஆகியவற்றை ஒழிக்கும், அருளை நிறைக்கும், வாஸ்து குறைகளை நீக்கும், பின்னர் இது போன்ற வைரஸ் கிருமிகளை நம் வீட்டிலும் அதில் உள்ள மனிதரையும் அண்டவே விடாது விரட்டும், அழிக்கும். நான் இவை எல்லாம் ஏற்கனவே 6 மாதத்துக்கு மேல் செய்து பலன் பெற்று வருகிறேன். போபால் விஷவாயு தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்த போது தினமும் ஹோமம் செய்யும் ஒரு வீட்டில் அனைவரும் பிழைத்தது எல்லோருக்கும் தெரியும் ஆனால் நல்ல பழக்கங்களை பின்பற்றுவதென்பது நமக்கு ஆகவே ஆகாது. உயிர் போகும் நிலையிலும் வீட்டையும் நாம் குடியிருக்கும் இந்த கூட்டையும் காத்து கொள்ள ஒரு சிறிய ஹோமம் கூட செய்ய மாட்டோம், இது வெறும் சாம்பிராணி புகை போல தான். ஆனால் ஒரு ஹோம குண்டத்தை வைத்து சமித்து குச்சி மற்றும் ஏருவாமுட்டை வைத்து அக்கினி மூட்டி அதில் இந்த பொருட்களை இடும் போது அகத்தியரை நினைத்து கொண்டாலே போதுமே, ஒரு சித்தர் யாகம் செய்த நன்மை கிட்டுமே. இதற்கு ஆகும் செலவு மிக குறைவு, பலன்களோ மிக அதிகம்.

ஓம் அகத்தீசாய நம
அய்யன் புகழ் ஓங்குக
Trs......