#ஸ்ரீ_மஹா_வாராஹி
#திருவடி_மாலை
1. அண்டத்தை படைத்தவள் அகில லோக நாரணி
தண்டத்தை எடுத்தவள் தர்மத்தை காத்தவள்
பிண்டத்தை பிடித்தவள் பிணி போக்கியவள்
கண்டத்தில் நின்று பவனி வருபவள் வாராஹி
2. கருனை வடிவனாவள் கற்பக தருவானவள் வாராஹி
அருள் வடிவாக அபய ரூபிணி அவளே வாராஹி
தருணம் கண்டு அழைத்ததால் மறுப்பாளோ வாராஹி
குருவாகி வருபவள் குழந்தை எம்மை காப்பவள் வாராஹி
3.பைரவ நாயகி சிவ ஞான போதகி பைரவி
பிறவா நிலை தரும் முக்தி தரும் வாராஹி
மறவாத வரம் தர வேண்டுமே உன் நினைவிலே
அரவம் விளையாடும் ஆதிசக்தி வாராஹி
4. சங்கர ரூபத்தில் சங்கடம் போக்கி சக்தியானவளே
பங்கஜ ரூபிணி பயங்கர ரூபிணி பார்வதி தேவி
சங்கு சக்ர தாரிணி சர்வ பக்த பிரிய ரூபிணி
பொங்கிடும் செல்வமே புண்ணிய வடிமே வாராஹி
5. ஆதியாகி ஆதியின் பாதியாகி பரம்பொருளே
சோதியாகி சுந்தர வடிவாகி வந்த வாராஹி
சதியாகி சர்வ சக்தியாகி பயங்கர ரூபிணி வாராஹி
திதியாகி திதியும் திருநாளாக வருவாய் எம் வாராஹி
6கலப்பை எடுத்து கதிவரன் போல வருபவளே
உலக்கை எடுத்த உன் மத்த பைரவியே
சலங்கை ஒலியுடன் சதிராடும் சங்கரியே
கலங்கதா உள்ளத்தில் இருக்கும் உமையே வாராஹி
7. காற்றாகி கருணை ஊற்றாகி வருபவளே வாராஹி
போற்றி போற்றி வந்தோமே வாராஹி திருமகளே
தூற்றுபவர் யாரே தூயவளே உன் பார்வையிலே
வற்றாத அருள் சுடரே வாராஹி பெருங்கடலே
8, தேடிய செல்வமே தேவை உன் திருவடி திருவருளே
ஓடி உனை காண வந்தேன் உமையாவளே பரம்பொருளே
நாடிய பேரை நலமுடன் காப்பவளே நாயகியே
துடிய வாராஹி திருமகளே
9,புண்ணிய ரூபினி பூமி தாயே பாவம் தீர்ப்பவளே
எண்ணிய பேரை காத்திடும் சுந்தரி கலியுக நாயகி
மண்ணில் உள்ள உயிர்களை ரட்சிக்கும் நாரணியியே
புண்ணிய தேவி புவனம் காத்திடும் சங்கரி வாராஹி தேவி
10,பஞ்ச பூத ரூபிணி பயங்கரி வாராஹி
தஞ்சை நகர் உறைகின்ற சங்கரி வாராஹி
நஞ்சுண்டவன் நாயகி நலம் தரும் தேவி வாராஹி
தஞ்சம் என்று அடைந்தோம் தேவி வாராஹி
11, மாதவனின் தங்கையே மங்கள செல்வி
ஆதவன் தாயே அருள் புரிவாயே அம்பிகையே
வாதம் புரிந்திட வந்திட்ட சக்தி வாராஹி திருவருளே
பாதம் பற்றினோம் வடிவழகே வாராஹி பரதேவி
12,உக்ர ரூபத்தில் அரக்கனை அழித்தவளே
சக்ர தேரினிலே பவனி வரும் வாராஹி திருமகளே
வக்ர பார்வையில் சத்ருவை அழிக்கும் எம் தாயே
சர்வ சக்தி மஹா வாராஹி திருவழகே.
ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1
ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1
முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.
*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.
தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.
ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.
பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.
நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.
மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.
தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏
Agathiyar Temple JeevaNadi
Tiruppur, Tamil Nadu
093843 95583
கூகிள் வரைபடம் வழி கீழே 👇
https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in
முகநூல் -
https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/
No comments:
Post a Comment