Thursday, 22 December 2022

ஏலே வானசூரா“ என்று இராமன், அனுமனை அழைத்த சிவ திருத்தலம்

 “ஏலே வானசூரா“ என்று இராமன், அனுமனை அழைத்த சிவ திருத்தலம்


.

உளுந்தூர்பேட்டையிலிருந்து கள்ளக்குறிச்சி செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது எலவனாசூர்கோட்டை திருத்தலம்.

இராமனுக்கும் இராவணனுக்கும் நடந்த போர் முடிந்து இராமன், அனுமனை “ஏலே வானசூரா” என்றழைத்த திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர், ஸ்ரீ பெரியநாயகியுடன் அருள்பாலிக்கும் திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

வல்லபை என்னும் அரக்கி மக்களைத் துன்புறுத்தியதால், அம்மக்களின் வேண்டுதலை ஏற்று அவளை வதம் செய்த வல்லபை விநாயகர் அருள்பாலிக்கும் திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

தெய்வீக மன்னன் என்ற மன்னன் முதன் முதலில் கோயில் எழுப்பிய திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

பிற்கால சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், பிற சிற்றரசர்கள் வளர்த்தெடுத்த திருத்தலம் எலனாசூர்கோட்டை.

சேந்தமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்து வந்த கோப்பெருஞ்சிங்க காடவராய மன்னன் காலத்தில் 100 கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் மூலவரை நோக்கி அமர்ந்திருக்க வேண்டிய நந்தியம்பெருமான், மூலவரைப் போன்றே மேற்கு நோக்கி அருளும் திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

நடுநாட்டை ஆண்ட தெய்வீக மன்னனுக்கும் காருண்டன் என்னும் அரக்கனுக்கும் நடைபெற்ற யுத்தத்தைக் காண்பதற்காகவே நந்தியம்பெருமான் இவ்வாறு மேற்கு நோக்கி திரும்பி அருள்பாலிக்கும் திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

மாடக்கோயில் அமைப்பில் கட்டப்பட்டிருக்கும் திருக்கோயில் அமைந்துள்ள திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

பலா மரத்தை ஸ்தல விருட்சமாகக் கொண்ட திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

சிலா தல தீர்த்தம், தண்ட தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் அமைந்த திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

பஞ்ச பிரகாரம் (ஐந்து பிரகாரங்கள்) அமைந்த திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

அனுமனுக்கு அருகில் உள்ள மலை மீது 15 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ள திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

பிரம்மஹத்தி தோஷம், திருமணத் தடை தோஷம் நீங்கும் திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

எதிரிகளைக் கொல்லும் சக்தியும் ஆற்றலும் அருளும் வல்லபை கணபதி அருள்பாலிக்கும் திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

சனீஸ்வர பகவான் தனிச் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கும் திருத்தலம் எலவனாசூர்கோட்டை.

ஓம் நமசிவாய.


No comments:

Post a Comment