Sunday, 25 December 2022

தக்கோலம் கங்காதர ஈஸ்வரர் கோவில்

 🌹🌹#தண்ணீர் #தட்டுப்பாடு #போக்கும்

#கங்காதரர்🌹🌹🌹


சூரியன், சந்திரன், தக்கன், தாட்சாயிணி, உதிதி முனிவர் என பலராலும் வழிபாடு செய்யப்பட்ட தலம். ஏழுவிநாயகர், ஏழு சிவாலயங்கள், ஏழு அம்மன் கோயில்கள் கொண்ட அரிய ஊர். பருவ காலத்திற்கேற்ப நிறம் மாறும் தீண்டாத்திருமேனி திகழும் தலம், தொண்டை வள நாட்டின் 12-ஆவது பாடல் பெற்ற தலம், கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் இருந்தே புகழ் மிக்கதாய் விளங்கிய ஊர். பல்லவன், சோழன், விஜயநகர மாமன்னன் எனப் பல்வேறு மன்னர்களும் திருப்பணி மேற்கொண்ட தலம், குருப்பெயர்ச்சிக்குப் பெயர் பெற்ற ஸ்ரீதட்சிணாமூர்த்தி எழுந்தருளிய இடம். ‘தக்கோலப்போர்’ மூலம் இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஊர், தண்ணீர் தட்டுப்பாடு போக்கும் கங்காதீசுவரர் எழுந்தருளிய தலம் என தக்கோலத்தின் பெருமைகள் ஏராளம்.


தக்கோலத்தில் ஏழு சிவாலயங்கள் இருந்தாலும், அதில் தற்போது புகழ்பெற்று விளங்குவது அருள்மிகு கிரிராஜ கன்னிகாம்பாள் உடனுறை அருள்மிகு ஜலநாதீசுவரர் ஆலயமும், அதன் உள்ளே குடிகொண்டிருக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தியுமே ஆகும்.



திருஊறல்


ஆனால், தேவாரப் பாடல் மூலம் பாடப்பெற்றதும், திருஊறல் என்ற பெயருக்கு காரணகர்த்தாவுமான அருள்மிகு கங்காதீசுவரர் ஆலயமோ, குடத்திலிட்ட விளக்காகவே இருக்கிறது. ஷீரநதி எனப்படும் கொற்றலை (குசஸ்தலை என்றும் கூறுவர்) ஆற்றின் கரையோரம் எழுந்துள்ள ஆலயம் ஸ்ரீகங்காதீசுவரர் ஆலயம். கங்கைக்கு இணையான நீர் வளத்தினைத் தரவல்ல இறைவன் இவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். இவரை முறையாக வணங்கினால் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கிவிடும் என்பது ஐதீகம்.



ஸ்ரீ கங்காதீசுவரர் ஆலயத்தின் சிறப்பே இங்குள்ள நந்திதான். இந்த நந்தியின் செயல்பாட்டை வைத்தே இன் றைய 'தக்கோலம்' அன்றைய திருஊறலாக அழைக்கப் பட்டது.


நந்தியின் வாய் வழியே நீர்


இந்த வட்டாரத்தில் நீர்நிலை உயர்ந்து இருப்பது கண்டு. எந்த இடத்தில் நந்தியை அமைத்தால், இடைவிடாது அதன் வாயிலிருந்து நீர் வழியும் என்பதைக் கண்டறிந்த அக்கால கட்டட நிபுணர்கள் நந்தியையும் அதற்கேற்ப இறைவன் ஸ்ரீ கங்காதீசுவரரையும் அமைத்துள்ளனர். இனி, நந்தியின் வாய் வழியே நீர் ஊறும் விதத்தினைக் காண்போம்.


சிவலிங்கத்தின் அடிப்பகுதியில், கிழக்கு நோக்கி வருகின்ற நீர், சிவலிங்கத்திற்கு எதிரேயுள்ள நந்தியின் வாயில் நுழைந்து வெளியே வருகின்றது. பின்பு, கருவறையைச் சுற்றியுள்ள பள்ளத்தில் பாய்ந்து, நுழைவாயிலுக்கு கிழக்கே உள்ள கட்டடத்தை ஊடுருவி, கோயிலுக்கு வெளியே கட்டப்பட்டுள்ள குளத்தில் விழுகிறது. இதன்பிறகு, மேற்குப்புறம் உள்ள மற்றொரு நந்தியின் வாய்வழியே வெளிவந்து கலக்கின்றது. இந்த அருமையான அமைப்பு தற்போது பாழ்பட்டு கிடப்பது பரிதாபம்.


நமது முன்னோர்கள் கட்டடக்கலையிலும், மின்சார உதவியில்லாமலும் அரிய நீரூற்றை வடிவமைத்துள்ளது பாராட்டுதற்குரியது.அவர்களின் நிபுணத்துவம் பெருமைப்படத்தக்கது. மேலும் தற்போது ஆற்றிலும் நீர் இல்லை. என்றாலும் நிலத்தடி நீர் அபரிமிதமாகக் கொட்டிக் கிடக்கின்றது. தோண்டிய இடமெல்லாம் நீர்வளம். இதற்குக் காரணம் இப்பகுதியில் குடிகொண்ட ஸ்ரீ கங்காதீசுவரரின்கருணை என்றால் அது மிகையல்ல. இதற்கென ஒரு புராணக்கதையும் கூறப்படுகின்றது.


உதிதி முனிவர்


உதிதி முனிவர், தான் தொழுநோயால் துன்புற வேண்டியிருப்பதை முன்கூட்டியே அறிந்தார். அதிலிருந்து மீள என்ன வழி என இறைவனை கேட்க, 'நீ ஷீரநதியோர நந்திதேவனை வழிபட்டு நலம் பெறுவாயாக' எனக் கூறினார். அதற்கேற்ப விருத்திஷீர நதியில், நந்திதேவரை வழிபட்டார். உதிதி முனிவர்.


உதிதி முனிவர் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த நந்தி தேவர், கங்கையையே தனது வாய்வழியே வெளிவரச் செய்து அதன்மூலம் ஒரு பொய்கையை உருவாக்கினார்.


அந்தப் பொய்கையில் நீராடி வழிபட்ட உதிதி முனிவரும் நலம் பெற்றார். அத்துடன் இந்த நீர்வளம் இப்பகுதியில் எக்காலமும் இருந்து நிலைக்க வேண்டும் என்ற வரத்தினையும், இறைவனிடமிருந்து பெற்றார் முனிவர். அதன் விளைவாகவே இன்றளவும் நீர்வளம் நிறைந்த பகுதியாக விளங்குகின்றது, தக்கோலம்.


ஒளவையாரால் சுரந்த கிணறு


தக்கோலத்திற்கு சுமார் ஏழு மைல் தொலைவில் உள்ள ‘புள்வேளூர்’ என்ற ஊரில் (தற்போது இதன் பெயர் பள்ளூரி ஏழு கிணறு என்ற இடம் உள்ளது. இக்கிணற்றிற்கு சங்ககாலப் பெருமை உண்டு என்பதும், இக்கிணற்று நீர் இன்றளவும் வற்றாது சுரந்து கொண்டிருப்பதும் ஓர் அபூர்வமான நிகழ்வாகும். ஒருசமயம் சங்ககாலப் புலவர் ஔவையார் புள்வேளூர் பூதனிட்ட வரகரசிச் சோற்றை உண்ட மகிழ்ச்சியில் பாடியபோது, இக்கிணற்றில் நீர் சுரக்கத்

தொடங்கியது என்பது வரலாறு. இன்றும் இது நீடிப்பது வியப்பான செய்தியாகும். இனிதக்கோலம் ஸ்ரீ கங்காதீசுவரர் ஆலயத்திற்கு வருவோம்.


பாடல் பெற்ற தலம்


 திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இறைவனும்இவரே.


“நீரின்மிசைத் துயின்றோன்


நிறை நான்முகனும் அறியாது அன்று


 திருஊறலை உள்குதுமே"


என்ற பாடலின் மூலம் இறைவனைப் புகழ்வதை அறிய முடிகின்றது.


இறைவனின் காட்சி


நான்முகனும், திருமாலும். இறைவனது திருமுடியைக் காணாமல் ஏமாற்றம் அடைந்த நிலையில், இறைவன் திருவுருவைக் காண வேண்டி தவம் இருந்தனர். இதேபோல வியாழ பகவானின் தம்பியும், 'சம்வர்த்தனர்' என்று அழைக்கப்பட்ட உதிதி முனிவரும். இறைவனின் திருக்கோலம் காண தவம் இருந்தனர். இம்மூவரின் ஆசையையும் நிறைவேற்ற, இறைவன் தன் துணைவியுடன் இந்தத் திருவூறலில் எழுந்தருளியதாக வரலாறு.


கட்டடக்கலை, அரிய நீரூற்று அமைப்பு ஆகிய சிறப்புகள் கொண்ட ஸ்ரீகங்காதீசுவரர் ஆலயம் இன்று புதர் மண்டிக் கிடக்கின்றது. மன்னர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு திருப்பணி செய்த ஆலயம். இன்று ஒரு கால பூஜை என்ற அளவில் தன்னைச் சுருக்கிக் கொண்டுள்ளது, வேதனையான விஷயம்.



தண்ணீர் குறைதீர்


இக்கோயில் இறைவனை வழிபட்டு, வரம் பெறுவோர் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி நீர்வளத்துடன் வாழ முடியும் என்பது ஐதீகம். இவரை வழிபட்டு இவரது மனதைக் குன்று வைப்பது நல்ல பலனைக் கொடுக்கும் என்பது இப்பகுதி மக்களின் அசையாத நம்பிக்கை.


இச்சிறப்புமிகு தலமான 'தக்கோலம்' வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ளது. சென்னைக்கு மேற்கே 64 கி.மீ., காஞ்சிபுரத்திற்கு வடக்கே 30 கி.மீ., அரக்கோணத்திற்கு தென்கிழக்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு 86, 91, 91பி, 107, 108 என்ற எண்ணுள்ள பேருந்து வழித்தடங்கள் சென்னைப் விருந்து செல்கின்றன. இரயில் மூலம் செல்ல விரும்பினால் அரக்கோணத்தில் இறங்கி அங்கிருந்து பேரம்பாக்கம் செல்லும் பேருந்தில் பயணம் செய்தால், தக்கோலம் அடையலாம். தக்கோலம் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசிக்க வருவோர் ஆற்றங்கரையோரம் அமைந்துளள ஸ்ரீசுங்கா தீசுவரரையும் வழிபட்டு, நீர்வளப்பேறு பெறலாம். அத்துடன் குடத்திலிட்ட விளக்காகத் திகழும் இவ்வாலயம், குன்றி லிட்ட விளக்காகத் திகழ தன்னால் ஆன திருப்பணியையும் செய்யலாம்.

Gangatheswarar Temple https://maps.app.goo.gl/MDmF6ftPAjz1YPH69



ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


Agathiyar Temple JeevaNadi

Tiruppur, Tamil Nadu

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in


முகநூல் -


https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

No comments:

Post a Comment