2. சகலகலாவல்லிமாலை
(ஸரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)
(ஸரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)
கட்டளைக் கலித்துறை
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. |
1
|
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. |
3
|
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் தௌிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. |
3
|
தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. |
4
|
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. |
5
|
பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதௌி தெய்தநல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. |
6
|
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தௌிக்கும்வண்ணம் காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. |
7
|
சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர் செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும் கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. |
8
|
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. |
9
|
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. |
10
|
>
3. நீதிநெறி விளக்கம்
(ஸரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)
(ஸரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)
காப்பு
நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று.
நூல்
அறம்பொரு ளின்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையு நாட்டும் - உறுங்கவலொன் றுற்றுழியுங் கைகொடுக்குங் கல்வியி னூங்கில்லை சிற்றுயிர்க் குற்ற துணை. |
1
|
தொடங்குங்காற் றுன்பமா யின்பம் பயக்கும் மடங்கொன் றறிவகற்றுங் கல்வி - நெடுங்காமம் முற்பயக்குஞ் சின்னீர வின்பத்தின் முற்றிழாய் பிற்பயக்கும் பீழை பெரிது. |
2
|
கல்வியே கற்புடைப் பெண்டிரப் பெண்டிர்க்குச் செல்வப் புதல்வனே யீர்ங்கவியாச் - சொல்வளம் மல்லல் வெறுக்கையா மாணவை மண்ணுறுத்தும் செல்வமு முண்டு சிலர்க்கு. |
3
|
எத்துணைய வாயினுங் கல்வி யிடமறிந் துய்த்துணர் வில்லெனி னில்லாகும் - உய்த்துணர்ந்தும் சொல்வன்மை யின்றெனி னென்னாகு மஃதுண்டேற் பொன்மலர் நாற்ற முடைத்து. |
4
|
அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார் அவையஞ்சா வாகுலச் சொல்லும் - நவையஞ்சி ஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும் பூத்தலிற் பூவாமை நன்று. |
5
|
கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் - மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோன் மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யு முடம்பு. |
6
|
நெடும்பகற் கற்ற வவையத் துதவா துடைந்துளா ருட்குவருங் கல்வி - கடும்பகல் ஏதிலான் பாற்கண்ட வில்லினும் பொல்லாதே நீதென்று நீப்பரி தால். |
7
|
வருந்தித்தாங் கற்றன வோம்பாது மற்றும் பரிந்துசில கற்பான் றொடங்கல் - கருந்தனம் கைத்தலத்த வுய்த்துச் சொரிந்திட் டரிப்பரித்தாங் கெய்த்துப் பொருள்செய் திடல். |
8
|
எனைத்துணைய வேனு மிலம்பாட்டார் கல்வி தினைத்துணையுஞ் சீர்ப்பா டிலவாம் - மனைத்தக்காள் பாண்பில ளாயின் மணமக னல்லறம் பூண்ட புலப்படா போல். |
9
|
இன்சொல்லன் றாழ்நடைய னாயினுமொன் றில்லானேல் வன்சொல்லி னல்லது வாய்திறவா - என்சொலினும் கைத்துடையான் காற்கீ ழொதுங்குங் கடன்ஞாலம் பித்துடைய வல்ல பிற. |
10
|
இவறன்மை கண்டு முடையாரை யாரும் குறையிரந்துங் குற்றேவல் செய்ப பெரிதுந்தாம் முற்பக னோலாதார் நோற்றாரைப் பின்செல்லல் கற்பன்றே கல்லாமை யன்று. |
11
|
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால் மற்றோ ரணிகலம் வேண்டாவாம் - முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக் கழகுசெய் வார். |
12
|
முற்று முணர்ந்தவ ரில்லை முழுவதூஉம் கற்றன மென்று களியற்க - சிற்றுளியாற் கல்லுந் தகருந் தகரா கனங்குழாய் கொல்லுலைக் கூடத்தி னால். |
13
|
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும் கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம் எற்றே யிவர்க்குநா மென்று. |
14
|
கல்வி யுடைமை பொருளுடைமை யென்றிரண்டு செல்வமுஞ் செல்வ மெனப்படும் - இல்லார் குறையிரந்து தம்முன்னர் நிற்பபோற் றாமும் தலைவணங்கித் தாழப் பெறின். |
15
|
ஆக்கம் பெரியார் சிறியா ரிடைப்பட்ட மீச்செலவு காணி னனிதாழ்ப - தூக்கின் மெலியது மேன்மே லெழச்செல்லச் செல்ல வலிதன்றே தாழுந் துலைக்கு. |
16
|
விலக்கிய வோம்பி விதித்தனவே செய்யும் நலத்தகையார் நல்வினையுந் தீதே - புலப்பகையை வென்றன நல்லொழுக்கி னின்றேம் பிறவென்று தம்பாடு தம்மிற் கொளின். |
17
|
தன்னை வியப்பிப்பான் றற்புகழ்த றீச்சுடர் நன்னீர் சொரிந்து வளர்த்தற்றாற் - றன்னை வியவாமை யன்றே வியப்பாவ தின்பம் நயவாமை யன்றே நலம். |
18
|
பிறராற் பெருஞ்சுட்டு வேண்டுவான் யாண்டும் மறவாமே நோற்பதொன் றுண்டு - பிறர்பிறர் சீரெல்லாந் தூற்றிச் சிறுமை புறங்காத்து யார்யார்க்குந் தாழ்ச்சி சொலல். |
19
|
கற்றுப் பிறர்க்குரைத்துத் தாநில்லார் வாய்ப்படூஉம் வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை - சொற்றநீர் நில்லாத தென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன் சொல்லாமே சூழ்ந்து சொலல். |
20
|
பிறர்க்குப் பயன்படத் தாங்கற்ற விற்பார் தமக்குப் பயன்வே றுடையார் திறப்படூஉம் தீவினை யஞ்சா விறல்கொண்டு தென்புலத்தார் கோவினை வேலை கொளல். |
21
|
கற்பன வூழற்றார் கல்விக் கழகத்தாங் கொற்கமின் றூத்தைவா யங்காத்தல் - மற்றுத்தம் வல்லுறு வஞ்சன்மி னென்பவே மாபறவை புல்லுறு வஞ்சுவ போல். |
22
|
போக்கறு கல்வி புலமிக்கார் பாலன்றி மீக்கொ ணகையினார் வாய்ச்சேரா - தாக்கணங்கும் ஆணவாம் பெண்மை யுடைத்தெனினும் பெண்ணலம் பேடு கொளப்படுவ தில். |
23
|
கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம் குற்றந் தமதே பிறிதன்று முற்றுணர்ந்தும் தாமவர் தன்மை யுணராதார் தம்முணரா ஏதிலரை நோவ தெவன். |
24
|
வேத்தவை காவார் மிகன்மக்கள் வேறுசிலர் காத்தது கொண்டாங் குகப்பெய்தார் - மாத்தகைய அந்தப் புரத்தது பூஞை புறங்கடைய கந்துகொல் பூட்கைக் களிறு. |
25
|
குலமகட்குத் தெய்வங் கொழுநனே மன்ற புதல்வர்க்குத் தந்தையுந் தாயும் - அறவோர்க் கடிகளே தெய்வ மனைவோர்க்குந் தெய்வம் இலைமுகப் பைம்பூ ணிறை. |
26
|
கண்ணிற் சொலிச்செவியி னோக்கு மிறைமாட்சி புண்ணியத்தின் பாலதே யாயினும் - தண்ணளியால் மன்பதை யோம்பாதார்க் கென்னாம் வயப்படைமற் றென்பயக்கு மாணல் லவர்க்கு. |
27
|
குடிகொன் றிறைகொள்ளுங் கோமகற்குக் கற்றா மடிகொன்று பால்கொளலு மாண்பே - குடியோம்பிக் கொள்ளுமா கொள்வோற்குக் காண்டுமே மாநிதியம் வெள்ளத்தின் மேலும் பல. |
28
|
இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான் நின்று குறையிரப்ப நேர்படான் - சென்றொருவன் ஆவன கூறி னெயிறலைப்பா னாறலைக்கும் வேடலன் வேந்து மலன். |
29
|
முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி உடுப்ப வுடுத்துண்ப வுண்ணா - இடித்திடித்துக் கட்டுரை கூறிற் செவிக்கொளா கண்விழியா நெட்டுயிர்ப்போ டுற்ற பிணம். |
30
|
ஒற்றிற் றெரியாச் சிறைப்புறத் தோர்துமெனப் பொற்றோ டுணையாத் தெரிதந்தும் - குற்றம் அறிவரிதென் றஞ்சுவதே செங்கோன்மை சென்று முறையிடினுங் கேளாமை யன்று. |
31
|
ஏதிலார் யாதும் புகல விறைமகன் கோதொரீஇக் கொள்கை முதுக்குறைவு நேர்நின்று காக்கை வௌிதென்பா ரென்சொலார் தாய்க்கொலை சால்புடைத் தென்பாரு முண்டு. |
32
|
கண்கூடாப் பட்டது கேடெனினுங் கீழ்மக்கட் குண்டோ வுணர்ச்சிமற் றில்லாகும் - மண்டெரி தான்வாய் மடுப்பினு மாசுணங் கண்டுயில்வ பேரா பெருமூச் செறிந்து. |
33
|
நட்புப் பிரித்தல் பகைநட்ட லொற்றிகழ்தல் பக்கத்தார் யாரையு மையுறுதல் - தக்கார் நெடுமொழி கோறல் குணம்பிறி தாதல் கெடுவது காட்டுங் குறி. |
34
|
பணியப் படுவார் புறங்கடைய ராகத் தணிவில் களிப்பினாற் றாழ்வார்க் - கணிய திளையாண் முயக்கெனினுஞ் சேய்த்தன்றே மூத்தாள் புணர்முலைப் போகங் கொளல். |
35
|
கண்ணோக் கரும்பா நகைமுகமே நாண்மலரா இன்மொழியின் வாய்மையே தீங்காயா - வண்மை பலமா நலங்கனிந்த பண்புடையா ரன்றே சலியாத கற்ப தரு. |
36
|
வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பிற் றூங்குங் களிறோ துயருறா - ஆங்கதுகொண் டூரு மெறும்பிங் கொருகோடி யுய்யுமால் ஆருங் கிளையோ டயின்று. |
37
|
மாகஞ் சிறுகக் குவித்து நிதிக்குவை ஈகையி னேக்கழுத்த மிக்குடைய - மாகொல் பகைமுகத்த வென்வேலான் பார்வையிற் றீட்டும் நகைமுகத்த நன்கு மதிப்பு. |
38
|
களைகணாத் தம்மடைந்தார்க் குற்றுழியு மற்றோர் விளைவுன்னி வெற்றுடம்பு தாங்கார் - தளர்நடைய தூனுடம் பென்று புகழுடம் போம்புதற்கே தானுடம் பட்டார்க டாம். |
39
|
தம்முடை யாற்றலு மானமுந் தோற்றுத்தம் இன்னுயி ரோம்பினு மோம்புக - பின்னர்ச் சிறுவரை யாயினு மன்ற தமக்காங் கிறுவரை யில்லை யெனின். |
40
|
கலனழிந்த கற்புடைப் பெண்டிரு மைந்து புலனொருங்கப் பொய்கடிந் தாரும் - கொலைஞாட்பின் மொய்ம்புடை வீரரு மஞ்சார் முரண்மறலி தும்பை முடிச்சூ டினும். |
41
|
புழுநௌிந்து புண்ணழுகி யோசனை நாறும் கழுமுடை நாற்றத்த வேனும் - விழலர் விளிவுன்னி வெய்துயிர்ப்பர் மெய்ப்பயன் கொண்டார் சுளியார் சுமைபோடு தற்கு. |
42
|
இகழி னிகழ்ந்தாங் கிறைமக னொன்று புகழினு மொக்கப் புகழ்ப - இகன்மன்னன் சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செய்யும் நீர்வழிப் பட்ட புணை. |
43
|
செவிசுடச் சென்றாங் கிடித்தறிவு மூட்டி வெகுளினும் வாய்வெரீஇப் பேரா கவுண்மதத்த கைம்மா வயத்ததோ பாகுமற் றெத்திறத்தும் அம்மாண் பினவே யமைச்சு. |
44
|
கைவரும் வேந்த னமக்கென்று காதலித்த செவ்வி தெரியா துரையற்க - ஒவ்வொருகால் எண்மைய னேனு மரியன் பெரிதம்மா கண்ணில னுள்வெயர்ப்பி னான். |
45
|
பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார் கிழமை பிறிதொன்றுங் கொள்ளார் வெகுளின்மற் காதன்மை யுண்டே யிறைமாண்டார்க் கேதிலரும் ஆர்வலரு மில்லை யவர்க்கு. |
46
|
மன்னர் புறங்கடை காத்து வறிதேயாம் எந்நலங் காண்டுமென் றெள்ளற்க - பன்னெடுநாட் காத்தவை யெல்லாங் கடைமுறைபோய்க் கைகொடுத்து வேத்தவையின் மிக்குச் செயும். |
47
|
உறுதி பயப்ப கடைபோகா வேனும் இறுவரை காறு முயல்ப - இறுமுயிர்க்கும் ஆயுண் மருந்தொழுக்க றீதன்றா லல்லனபோல் ஆவனவு முண்டு சில. |
48
|
முயலாது வைத்து முயற்றின்மை யாலே உயலாகா வூழ்த்திறத்த வென்னார் - மயலாயும் ஊற்ற மிறுவிளக்க மூழுண்மை காண்டுமென் றேற்றா ரெறிகான் முகத்து. |
49
|
உலையா முயற்சி களைகணா வூழின் வலிசிந்தும் வன்மையு முண்டே - உலகறியப் பான்முளை தின்று மறலி யுயிர்குடித்த கான்முளையே போலுங் கரி. |
50
|
கால மறிந்தாங் கிடமறிந்து செய்வினையின் மூல மறிந்து விளைவறிந்து - மேலுந்தாம் சூழ்வன் சூழ்ந்து துணைமை வலிதெரிந் தாள்வினை யாளப் படும். |
51
|
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார் எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார். |
52
|
சிறிய பகையெனினு மோம்புத றேற்றார் பெரிதும் பிழைபா டுடையர் - நிறைகயத் தாழ்நீர் மடுவிற் றவளை குதிப்பினும் யானை நிழல்காண் பரிது. |
53
|
புறப்பகை கோடியின் மிக்குறினு மஞ்சார் அகப்பகை யொன்றஞ்சிக் காப்ப வனைத்துலகும் சொல்லொன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவே பல்காலுங் காமப் பகை. |
54
|
புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை வௌியிட்டு வேறாதல் வேண்டுங் - கழிபெருங் கண்ணோட்டஞ் செய்யார் கருவியிட் டாற்றுவார் புண்வைத்து மூடார் பொதிந்து. |
55
|
நட்பிடைக் குய்யம்வைத் தெய்யா வினைசூழ்ந்து வட்கார் திறத்தராய் நின்றார்க்குத் - திட்பமா நாளுலந்த தன்றே நடுவ னடுவின்மை வாளா கிடப்பன் மறந்து. |
56
|
மனத்த கறுப்பெனி னல்ல செயினும் அனைத்தெவையுந் தீயவே யாகும் - எனைத்துணையும் தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே மாசின் மனத்தி னவர். |
57
|
இனியவ ரென்சொலினு மின்சொல்லே யின்னார் கனியு மொழியுங் கடுவே - அனல்கொளுந்தும் வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கு மெய்பொடிப்பச் சிங்கிக் குளிர்ந்துங் கொலும். |
58
|
பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும் எய்தாமை சொல்லின் வழுக்காத்து - மெய்யிற் புலமைந்துங் காத்து மனமா சகற்றும் நலமன்றே நல்லா றெனல். |
59
|
நல்லா றொழுக்கின் றலைநின்றார் நல்கூர்ந்தும் அல்லன செய்தற் கொருப்படார் - பல்பொறிய செங்கட் புலியே றறப்பசித்துந் தின்னாவாம் பைங்கட் புனத்தபைங் கூழ். |
60
|
குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மை நலம்விற்றுக் கொள்ளுந் திருவுந் தவம்விற்றாங் கூனோம்பும் வாழ்வு முரிமைவிற் றுண்பதூஉம் தானோம்பிக் காத்த றலை. |
61
|
இடைதெரிந் தச்சுறுத்து வஞ்சித் தௌியார் உடைமைகொண் டேமாப்பார் செல்வம் - மடநல்லார் பொம்மன் முலைபோற் பருத்திடினு மற்றவர் நுண்ணிடைபோற் றேய்ந்து விடும். |
62
|
பெற்ற சிறுகப் பெறாத பெரிதுள்ளும் சிற்றுயிர்க் காக்க மரிதம்மா - முற்றும் வரவர வாய்மடுத்து வல்விராய் மாய எரிதழன் மாயா திரா. |
63
|
தத்த நிலைக்குங் குடிமைக்குந் தப்பாமே ஒத்த கடப்பாட்டிற் றாளூன்றி -எய்த்தும் அறங்கடையிற் செல்லார் பிறன்பொருளும் வெஃகார் புறங்கடைய தாகும் பொருள். |
64
|
பொதுமகளே போல்வ தலையாயார் செல்வம் குலமகளே யேனையோர் செல்வம் - கலனழிந்த கைம்மையார் பெண்மை நலம்போற் கடையாயார் செல்வம் பயன்படுவ தில். |
65
|
வள்ளன்மை யில்லா தான் செல்வத்தின் மற்றையோன் நல்குரவே போலு நனிநல்ல கொன்னே அருளில னன்பிலன் கண்ணறைய னென்று பலரா லிகழப் படான். |
66
|
ஈகை யரிதெனினு மின்சொலினு நல்கூர்தல் ஓஒ கொடிது கொடிதம்மா - நாகொன்று தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட் டிடப்படின்மற் றாவா விவரென்செய் வார். |
67
|
சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல் நல்வினை கோறலின் வேறல்ல - வல்லைத்தம் ஆக்கங் கெடுவ துளதெனினு மஞ்சுபவோ வாக்கின் பயன்கொள் பவர். |
68
|
சிறுமுயற்சி செய்தாங் குறுபயன் கொள்ளப் பெறுமெனிற் றாழ்வரோ தாழார் - அறனல்ல எண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும் ஒண்மையிற் றீர்ந்தொழுக லார். |
69
|
செயக்கடவ வல்லனவுஞ் செய்துமன் னென்பார் நயத்தகு நாகரிக மென்னாம் - செயிர்த்துரைப்பின் நெஞ்சுநோ மென்று தலைதுமிப்பான் றண்ணளிபோல் எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று. |
70
|
அல்லன செய்யினு மாகுலங் கூழாக்கொண் டொல்லாதார் வாய்விட் டுலம்புப - வல்லார் பிறர்பிறர் செய்பபோற் செய்தக்க செய்தாங் கறிமடம் பூண்டுநிற் பார். |
71
|
பகையின்று பல்லார் பழியெடுத் தோதி நகையொன்றே நன்பயனாக் கொள்வான் பயமின்று மெய்விதிர்ப்புக் காண்பான் கொடிறுடைத்துக் கொல்வான்போற் கைவிதிர்த் தஞ்சப் படும். |
72
|
தெய்வ முளதென்பார் தீய செயப்புகிற் றெய்வமே கண்ணின்று நின்றொறுக்கும் - தெய்வம் இலதென்பார்க் கில்லைத்த மின்புதல்வர்க் கன்றே பலகாலுஞ் சொல்வார் பயன். |
73
|
தீய செயற்செய்வா ராக்கம் பெருகினும் தீயன தீயனவே வேறல்ல - தீயன நல்லன வாகாவா நாவின் புறநக்கிக் கொல்லுங் கவயமாப் போல். |
74
|
நன்மக்கள் செந்நாத் தழும்பிருக்க நாள்வாயும் செந்நெறிச் செல்வாரிற் கீழல்லர் - முன்னைத்தம் ஊழ்வலி யுன்னிப் பழிநாணி யுள்ளுடைவார் தீய செயினுஞ் சில. |
75
|
பிறன்வரை நின்றாள் கடைத்தலைச் சேறல் அறனன்றே யாயினு மாக - சிறுவரையும் நன்னலத்த தாயினுங் கொள்க நலமன்றே மெய்ந்நடுங்க வுண்ணடுங்கு நோய். |
76
|
கருமஞ் சிதையாமே கல்வி கெடாமே தருமமுந் தாழ்வு படாமே - பெரிதுந்தம் இன்னலமுங் குன்றாமே யேரிளங் கொம்பன்னார் நன்னலந் துய்த்த னலம். |
77
|
கொலையஞ்சார் பொய்ந்நாணார் மானமு மோம்பார் களவொன்றோ வேனையவுஞ் செய்வார் - பழியோடு பாவமிஃதென்னார் பிறிதுமற் றென்செய்யார் காமங் கதுவப்பட் டார். |
78
|
திருவினு நல்லாண் மனைக்கிழத்தி யேனும் பிறன்மனைக்கே பீடழிந்து நிற்பர் - நறுவிய வாயின வேனு முமிழ்ந்து கடுத்தின்னும் தீய விலங்கிற் சிலர். |
79
|
கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்ப்பூசி நற்குண நற்செய்கை பூண்டாட்கு - மக்கட்பே றென்பதோ ராக்கமு முண்டாயி னில்லன்றே கொண்டாற்குச் செய்தவம் வேறு. |
80
|
ஏந்தெழின் மிக்கா னிளையா னிசைவல்லான் காந்தையர் கண்கவர் நோக்கத்தான் - வாய்ந்த நயனுடை யின்சொல்லான் கேளெனினு மாதர்க் கயலார்மே லாகு மனம். |
81
|
கற்பின் மகளி னலம்விற் றுணவுகொளும் பொற்றொடி நல்லார் நனிநல்லர் - மற்றுத்தம் கேள்வற்கு மேதிலர்க்குந் தங்கட்குந் தங்கிளைஞர் யாவர்க்குங் கேடுசூ ழார். |
82
|
முறையுங் குடிமையும் பான்மையு நோக்கார் நிறையு நெடுநாணும் பேணார் - பிறிதுமொரு பெற்றிமை பேதைமைக் குண்டே பெரும்பாவம் கற்பின் மகளிர் பிறப்பு. |
83
|
பெண்மை வியவார் பெயரு மெடுத்தோதார் கண்ணோடு நெஞ்சுறைப்ப நோக்குறார் - பண்ணோடு பாடல் செவிமடார் பண்பல்ல பாராட்டார் வீடில் புலப்பகையி னார். |
84
|
துயிற்சுவையுந் தூநல்லார் தோட்சுவையு மெல்லாம் அயிற்சுவையி னாகுவவென் றெண்ணி - அயிற்சுவையும் பித்துணாக் கொள்பபோற் கொள்ப பிறர்சிலர்போல் மொத்துணா மொய்ம்பி னவர். |
85
|
அன்பொ டருளுடைய ரேனு முயிர்நிலைமற் றென்பியக்கங் கண்டும் புறந்தரார் - புன்புலாற் பொய்க்குடி லோம்புவரோ போதத்தாற் றாம்வேய்ந்த புக்கில் குடிபுகுது வார். |
86
|
சிற்றின்பஞ் சின்னீர தாயினு மஃதுற்றார் மற்றின்பம் யாவையுங் கைவிடுப - முற்றுந்தாம் பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ பாரின்பப் பாழ்ங்கும்பி யில். |
87
|
எவ்வினைய ரேனு மிணைவிழைச் சொன்றிலரேற் றெவ்வுந் திசைநோக்கிக் கைதொழூஉம் - அவ்வினை காத்த லிலரே லெனைத்துணைய ராயினும் தூர்த்தருந் தூர்ப்பா ரலர். |
88
|
பரபரப்பி னோடே பலபல செய்தாங் கிரவுபகல் பாழுக் கிறைப்ப - ஒருவாற்றான் நல்லாற்றி னூக்கிற் பதறிக் குலைகுலைப எவ்வாற்றா னுய்வா ரிவர். |
89
|
இளய முதுதவ மாற்றுது நோற்றென் றுளைவின்று கண்பாடு மூழே - விளிவின்று வாழ்நாள் வரம்புடைமை காண்பரேற் காண்பாரும் தாழாமே நோற்பார் தவம். |
90
|
நல்லவை செய்யத் தொடங்கினு நோனாமே அல்லன வல்லவற்றிற் கொண்டுய்க்கும் - எல்லி வியனெறிச் செல்வாரை யாறலைத் துண்பார் செலவு பிழைத்துய்ப்ப போல். |
91
|
நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப்போர்வை கஞ்சுக மன்று பிறிதொன்றே - கஞ்சுகம் எப்புலமுங் காவாமே மெய்ப்புலங் காக்குமற் றிப்புலமுங் காவா திது. |
92
|
வஞ்சித் தொழுகு மதியிலிகாள் யாவரையும் வஞ்சித்தே மென்று மகிழன்மின் - வஞ்சித்த எங்கு முளனொருவன் காணுங்கொ லென்றஞ்சி அங்கங் குலைவ தறிவு. |
93
|
மறைவழிப் பட்ட பழமொழி தெய்வம் பறையறைந்தாங் கோடிப் பரக்குங் கழிமுடைப் புன்புலா னாற்றம் புறம்பொதிந்து மூடினும் சென்றுதைக்குஞ் சேயார் முகத்து. |
94
|
மெலியார் விழினு மொருவாற்றா னுய்ப வலியார்மற் றொன்றானு முய்யார் - நிலைதப்பி நொய்ய சழக்கென வீழாவாம் வீழினும் உய்யுமா லுய்யா பிற. |
95
|
இசையாத போலினு மேலையோர் செய்கை வசையாகா மற்றையோர்க் கல்லாற் - பசுவேட்டுத் தீயோம்பி வான்வழக்கங் காண்பாரை யொப்பவே ஊனோம்பி யூன்றின் பவர். |
96
|
எவரெவ ரெத்திறத்த ரத்திறத்த ராய்நின் றவரவர்க் காவன கூறி - எவரெவர்க்கும் உப்பாலாய் நிற்பமற் றெம்முடையார் தம்முடையான் எப்பாலு நிற்ப தென. |
97
|
மெய்யுணர்ந்தார் பொய்ம்மேற் புலம்போக்கார் மெய்யுணர்ச்சி கைவருதல் கண்ணாப் புலங்காப்பார் - மெய்யுணர்ந்தார் காப்பே நிலையாப் பழிநாண னீள்கதவாச் சேப்பார் நிறைத்தாழ் செறித்து. |
98
|
கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள் பெற்றுக் கொடுத்த தலைமகன்போல் - முற்றத் துறந்தார்க்கு மெய்யுணர்விற் றோன்றுவதே யின்பம் இறந்தவெலாந் துன்பமலா தில். |
99
|
கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப் பெற்றது கொண்டு மனந்திருந்திப் - பற்றுவதே பற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்து நிற்பாரே நீணெறிச்சென் றார். |
100
|
ஐயந் திரிபின் றளந்துத் தியிற்றௌிந்து மெய்யுணர்ச்சிக் கண்விழிப்பத் தூங்குவார் தம்முளே காண்பதே காட்சி கனவு நனவாகப் பூண்பதே தீர்ந்த பொருள். |
101
|
நீதிநெறி விளக்கம் முற்றிற்று.