பிண்டம் முதல் அண்டம் வரை!
அரை மூடி உயிர் நீரால் ;
அடித்து பிடித்து முன்னேறி!!
அணு அளவு உள் சென்று ;
அடிவயிற்றில் பிண்டமாகி !
ஆன்மாவோடு சேர்ந்ததினால்;
பிண்டம் மறைந்து உருவுமாகி !
புவி உலகை க்காண்பதற்கே ;
பச்சை மண்ணாய் பூமி வந்து !
புழுவாய் நெளிந்து.: பூனையாய் மாறி :
நல் விலங்காய் மாறி !
பின்னே !!
முன்கால் இரண்டும் கைகளாய் மாறி !
நிமிர்ந்து நடக்குங் காலந் தனில் !!
அறிவுங் கொஞ்சம் சேர்ந்து விட:
நல்விலங்கும் நகர்ந்து விட ;
புது ரத்தம் உடலில் ஊறி !
நாடி நரம்பும் முறுக்கேற !
பொறுப்பும் ஏற !!
வாழ்க்கை எனும் மேடைதனில் :
வேடம் பலவும் ஏற்றுக்கொண்டு !
பலவிதமாய் நடிப்பும் கூட !
கைதட்டல் : கடுஞ் சொற்கள் !!
பல பல அதிகரிக்க !
முறுக்கேறிய நரம்பும் அது:
முனைப்பாய் இப்போ வேலை செய்ய !
ஊருக்குள்ளும் பெரும்புள்ளி ஆகிவிட:
படிகள் பல மேலேறி :
உச்சி தனை அடைகின்றோம் !!
ஆட்டம் பல அதிகரித்து :
கொக்கரித்து கூச்சலிட !!
மனிதம் மறைந்து மிருகம் தோன்றி ;
அழிவின் பாதை ஆரம்பிக்க !!
அங்கிருந்து பார்க்கையிலே ;
ஏறிவந்த படிகள் எல்லாம் :
எறும்பாய்த் தோன்றி மறைந்து விட!
ஏறி வந்த படிகளையே !
இடித்துத் தள்ளி துகளாய் மாற்ற !
காலச்சக்கரம் மெதுவாய் சுழல ;
பயணம் அதில் சிறப்பாய்த் தொடர !
பெரும் புள்ளி சிறுபுள்ளியாய் மாற;
ஆடும் ஆட்டம் அடங்கத் தொடங்க !
புலன் ஐந்தில் ஒன்று ஒடுங்க !
காலனையும் வேண்டி த்தொழுக !
கிழிந்த நாராய் கீழ் கிடக்க !
மேன் மேலும் மீதம் ஒடுங்க !
கடைசிக் காற்றும் காலம் கடக்க!!
காத்திருக்கும் வேளையில் !
அஃது !!
மீண்டும் உடல் எடுக்கு(மோ)மா ??
அண்டத்திலே கலக்கு(மோ) மா ??
அரை மூடி உயிர் நீரால் ;
அடித்து பிடித்து முன்னேறி!!
அணு அளவு உள் சென்று ;
அடிவயிற்றில் பிண்டமாகி !
ஆன்மாவோடு சேர்ந்ததினால்;
பிண்டம் மறைந்து உருவுமாகி !
புவி உலகை க்காண்பதற்கே ;
பச்சை மண்ணாய் பூமி வந்து !
புழுவாய் நெளிந்து.: பூனையாய் மாறி :
நல் விலங்காய் மாறி !
பின்னே !!
முன்கால் இரண்டும் கைகளாய் மாறி !
நிமிர்ந்து நடக்குங் காலந் தனில் !!
அறிவுங் கொஞ்சம் சேர்ந்து விட:
நல்விலங்கும் நகர்ந்து விட ;
புது ரத்தம் உடலில் ஊறி !
நாடி நரம்பும் முறுக்கேற !
பொறுப்பும் ஏற !!
வாழ்க்கை எனும் மேடைதனில் :
வேடம் பலவும் ஏற்றுக்கொண்டு !
பலவிதமாய் நடிப்பும் கூட !
கைதட்டல் : கடுஞ் சொற்கள் !!
பல பல அதிகரிக்க !
முறுக்கேறிய நரம்பும் அது:
முனைப்பாய் இப்போ வேலை செய்ய !
ஊருக்குள்ளும் பெரும்புள்ளி ஆகிவிட:
படிகள் பல மேலேறி :
உச்சி தனை அடைகின்றோம் !!
ஆட்டம் பல அதிகரித்து :
கொக்கரித்து கூச்சலிட !!
மனிதம் மறைந்து மிருகம் தோன்றி ;
அழிவின் பாதை ஆரம்பிக்க !!
அங்கிருந்து பார்க்கையிலே ;
ஏறிவந்த படிகள் எல்லாம் :
எறும்பாய்த் தோன்றி மறைந்து விட!
ஏறி வந்த படிகளையே !
இடித்துத் தள்ளி துகளாய் மாற்ற !
காலச்சக்கரம் மெதுவாய் சுழல ;
பயணம் அதில் சிறப்பாய்த் தொடர !
பெரும் புள்ளி சிறுபுள்ளியாய் மாற;
ஆடும் ஆட்டம் அடங்கத் தொடங்க !
புலன் ஐந்தில் ஒன்று ஒடுங்க !
காலனையும் வேண்டி த்தொழுக !
கிழிந்த நாராய் கீழ் கிடக்க !
மேன் மேலும் மீதம் ஒடுங்க !
கடைசிக் காற்றும் காலம் கடக்க!!
காத்திருக்கும் வேளையில் !
அஃது !!
மீண்டும் உடல் எடுக்கு(மோ)மா ??
அண்டத்திலே கலக்கு(மோ) மா ??