💐💐💐சனி பகவான் 💐💐💐
சனிபகவான் பீடை விலக வழி பத்மபுராணம் நூலில் இருந்து பொறுமையாக படிக்க வேண்டிய பகவான் ஈஸ்வரரே உபதேசித்த அற்புத விஷயம்
நாரதர் சிவபெருமானைப் பார்த்து பகவானே என்ன செய்தால் சனிபகவானால் உண்டாகும் துன்பங்கள் விலகும் , இதை தங்கள் வாயிலாக கேட்டறிய விரும்புகிறேன் .என்று கேட்டார் பரமேஸ்வரன் கூ றினார் .
நாரதரே நான் சொல்லப் போகும் விஷயத்தைக் கவனமாக கேளுங்கள் .ஏனென்றால் பக்தியுடன் இதைக் கேட்பவர்கள் கூட துன்பங்களிலிருந்து விடுதலை பெறமுடியும் .சனிபகவான் சாதாரணமான தென்று எண்ணக் கூடாது .சகல கிரகங்களுக்கும் அரசனைப் போன்றவர் சனீஸ்வரன்.சூரிய பகவானுடைய மகன் கறுத்ததேகம்உடையவன். அவனால் உண்டாகும் துன்பத்தைவென்ற அரசனுடைய கதையைக் கூ றுகிறேன் கேள் என்றார்..
ரகு குலத்தில் பிறந்த அரசன் தசரதன் மிகவும் பிரபலமானவன் .மகா பராக்கிரமசாலியானவன். ஏழு கண்டங்களுக்கும் அதிபதி .அந்த மன்னன் ஆண்டு வரும் காலத்தில் சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலம் வந்தது .சனிபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் மிகக் கொடிய பஞ்சம் தோன்றி பனிரெண்டு ஆண்டுகள் வரையில் பூலோகத்தில் கொடிய துன்பத்தில் ஆழ்த்துவதாகும்.
அதை நினைத்து தேவர்கள் ,அசுரர்கள் எல்லோருமே பயந்து நடுங்குக் கொண்டிருந்தார்கள் .அதைப் பற்றி குல குருவான வசிஷ்டர் முதலான ரிஷிகளையும் தான் மந்திரிகளையும் கூட்டி பூலோகத்தில் துன்பம் நேராமல் தடுப்பதற்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் என்று கேட்டார் .அதற்கு வசிஷ்டர் இது பிரஜைகள் துன்பப்பட வேண்டிய காலம். இதைத் தடுப்பது என்பது பிரம்மவாலும் முடியாத காரியம் என்று கூறினார்.
ஆனால் தசரதன் சும்மா இருக்கவில்லை .எப்படியாயுனும் பூலோகத்திற்கு சனிபகவானால் ஏற்படக் கூடிய துன்பம் நேராமல் பாதுகாக்க வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டவனாக வஜ்ஜிரக்கவசம் தரித்து தன் வில்லையும் ,அநேகவிதமான பானங்களையும் எடுத்துக் கொண்டு நட்சத்திர மண்டலத்தில் பிரவேசித்தான் .
சூரிய மண்டலத்திற்கப்பால் வெகு துரத்தில் பிரகாசித்த ரோகிணி நட்சத்திரற்குப் பின் பாகத்தில் தன்னுடைய ரதத்தில் அமர்ந்தபடி அந்நட்சத்தையே பின் தொடர்ந்து செல்லத் தொடங்கினர் ..
அன்னப் பறவைகளைப்போல் தூய வெண்ணிறமான புரவிகளோடு கூடிய அந்த ரதம் ஒளிவிட்டுப் பிரகாசித்தது .அதன்மேல் அசைந்தாடிய கொடி எதிரிகளை விலகிச் செல்லும்படியாக எச்சரித்தது .தசரதன் ஆகாயத்தில் இன்னொரு சூரியபகவான் போல் ரோகிணி நட்சத்திரத்தை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார் .வில்லை வளைத்து காதுவரை இழுத்து நாணில் தொடுத்த பயங்கரமான அஸ்திரத்துடன் தசரதன் சென்று கொண்டிருந்தார்.
தேவர்கள்,அசுரர்கள் அனைவரையும் பயந்து நடுங்கும்படிச் செய்பவனான சனிபகவான் தசரதனைப் பார்த்தான் .
சனிபகவான் புன்னைகை புரிந்தபடி ராஜராஜனே ,உன்னுடைய வீரம் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.தேவர்,அசுரர்,மனிதர்களில்லோ,சித்தர்,வித்யாதரர்,கந்தர்வர்களிலோ,யட்சர்கள்,ராட்சஸர்கள்,நாகர்களிலோ யாருமே என்னை எதிர்க்கத் துணிந்தவர்கள் கிடையாது .. என் பார்வை பட்டவுடன் அவர்கள் சாம்பலாகப் போய்விடுவார்கள் .
ஏ ராஜேந்திரா ,நீ மகா தவங்களைச் செய்தவனும்,அதிகமான புண்ணிய பலம் பெற்றவனும் ஆகையாலேயே என் பார்வை பட்டும் கம்பீரமாக நிற்கிறாய் .உனக்கு வேண்டிய வரத்தைக் கேள் .நீ எதைக் கேட்டாலும் தருகிறேன் என்று சனிபகவான் கூறினார்..
தசரதன் சனிபகவானைப் பார்த்து ஏ செளரி தங்கள் எக்காலத்திலும் ரோகிணி நட்சத்திரத்தைப் பின்னம் செய்யக் கூடாது .சூரியர் சந்திரர் உள்ளவரையும் இனி எக்காலத்திலும் அது நடக்கக்கூடாது .முதலாவதாக அந்த வரத்தையே தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன் என்று கூறினார்.அவ்வாறே ஆகுக என்று கூறி சனிபகவான் ஆயினும் உனக்கு வேண்டிய வரம் எதுவாயினும் கேள் .உனக்கென்று எதையும் கொடுக்காமல் செல்ல மாட்டேன் அதனால் உனக்கு வேண்டியதைக் கேள் என்றுகூறினார்...
தசரதன் சனிபகவானைப் பார்த்து ஆதவன் மைந்தனே ரோகிணி நட்சத்திர மண்டலத்தை தங்கள் பின்னம் செய்வதால் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கக் கூடிய கொடிய பஞ்சம் ஏற்படுமென்று கேள்விப்பட்டிருக்கிறேன் .அப்படிப்பட்ட நீண்ட பஞ்சக்காலமும் ஏற்படக்கூடாது அதையே நான் தங்களிடமிருந்து முக்கிய வரமாகப் பெற விரும்புகிறேன் என்று தசரதன் மீண்டும் கூறினார்....
சனிபகவான் தசரதனை பார்த்து சொன்னர் அதைத்தான் முன்பே கொடுத்து விட்டேனே ,என்னிடமிருந்து இந்த வரம் பெற்றதால் உன்னுடைய கீர்த்தி உலகம் உள்ளவரைக்கும் நிலைத்திருக்கும் ..மூவுலகிலும் உன் பெருமை பேசப்படும் .உன்னிடம் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கிறேன் .வேறு என்ன வரம் வேண்டும் கேள் என்றான் சனிபகவான்..
தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..!!!
நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச
நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம
நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச
நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே
நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம
நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே
நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே
நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே
நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே
சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச
அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே
நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே
தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய
நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம
ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே
துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்...!!!
இதன் பொருள் விளக்கம் : --
கரியவனே, நீல நிறம் படைத்தவனே , நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவம் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும்மீண்டும் வணங்குகிறேன்.
மாமிசம் இல்லாத உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே ,உன்னை வணங்குகிறேன். பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன் .
புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன்.
சூரிய புத்திரனே ,சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக்கூடிய வனே ,மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தாகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞானக்கண் உடையவனே, கச்யப் குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன்.
சனிபகவானே ,நீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறன்.யானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான்.அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளாபவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான்.
ஏ சனிபகவானே,தேவர்,அசுரர்,மனிதர்,ஆயினும், சித்தர்,வித்யாதரர்,உரகர் ஆயினும் அவர்கள் எதிலுமே அல்லர் ஆயினும் அவர்கள் மேல் உன் பார்வை பட்டுவிட்டால் அவர்கள் வேரோடு அழிந்து போகிறார்கள் .ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும்.
உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.
மஹா பகவானும் ,பயங்கரமனவனும்,கிரகங்களுக்கு அரசனுமான சனிபகவான் இந்த ஸ்தோத்திரத்தைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக ,
"ஏ ராஜேந்திரா ,உன்னிடம் நான் மிகவும் பிரியமுள்ளவனாகி விட்டேன் .உன்னுடைய ஸ்தோத்திரம் எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சியளிக்கிறது .உனக்கு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்றார் .
அதைக் கேட்ட தசரதன் , "ஏ செளரி இன்றுமுதல் யாருக்கும் துன்பம் அளிக்கக்கூடாது. தேவர்,அசுரர்,மனிதரானாலும்,பறவைகள்,விலங்குகள்,ஊர்ந்து செல்லும் ஜந்துக்களானாலும் எவர்க்கும் தீங்கு செய்யலாகாது என்றார் .
அதைக் கேட்ட சனிபகவான் ,ஏ ராஜனே ,நீ கேட்ட வரம் சரியானதுதான் .ஆனால் ஒரு நிபந்தனை நீ இப்போது கூறிய ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாரானாலும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தடவையேனும் பாராயணம் செய்து வருபவர் எவரானாலும் அவர் அக்கணமே என்னால் உண்டாகும் பீடைகளிளிருந்து விடுபடுவார்.
உளுந்து,எள்ளு முதலானவற்றை உரிய தட்சணையோடு தானம் செய்பவர்கள் கரிய நிறப் பசுவை தானமாகக் கொடுப்பவர் என்னுடைய நாளான சனிக்கிழமைகளில் நீ கூறிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி பூஜை செய்தபிறகும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவர்,ஜெபித்தபடி என்னை நமஸ்காரம் செய்பவர்களை நான் ஒரு நாளும் துன்புருத்தமாட்டேன் .
கோசாரத்தின் படியாகவும்,ஜென்ம இலக்னத்தின்படி வரும் அந்தர திசைகளிலும் கூட என்னால் துன்பம் தேராமல் ரட்சிப்பேன்.ஏ ரகுநந்தனா ,உனக்கு நான் இந்த வரத்தை அளிக்கிறேன் என்று கூறினார்..
தசரதன் அதன் பிறகு சனிபகவானை வணங்கி விடை பெற்றுத் தன்னுடைய ரதத்தில் ஏறி நாடு திரும்பினான்.அன்றுமுதல் சனிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து பின் சிரத்தையோடு இந்த ஸ்தோத்திரத்தைப் படிப்பவர் சகல துன்பங்களிலிருந்தும் விடுபட்டு நரக வேதனை அடையாமல் மோக்ஷலோகத்தை அடைவார்கள்.
இந்த ஸ்தோத்திரமும் நீண்ட ஆயுளும் நல்ல புத்தியும் அளிப்பதோடு சகல கிரக தோஷங்களிலிருந்தும் விடுதலை அளிக்கக்கூடியது மாகும்.இதைப் போன்ற புனிதமான ஸ்தோத்திரம் பூலோகத்தில் வேறு எதுவும் கிடையாது...
சனிபகவானே போற்றி போற்றி போற்றி