பொருளடக்கம்
பக்கம் செல்க
அருணகிரிநாதர்
அருளிய திருப்புகழ்
பாடல்
1 -- விநாயகர் துதி
ராகம்
- நாட்டை; தாளம் - ஆதி
தத்தன
தனதன தத்தன தனதன
தத்தன
தனதன ...... தனதான
கைத்தல
நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய
கரிமுகன் ...... அடிபேணிக்
கற்றிடும்
அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம்
எனவினை ...... கடிதேகும்
மத்தமு
மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு
திரள்புய ...... மதயானை
மத்தள
வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ்
மலர்கொடு ...... பணிவேனே
முத்தமிழ்
அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட
எழுதிய ...... முதல்வோனே
முப்புரம்
எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது
பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய
ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன
மதனிடை ...... இபமாகி
அக்குற
மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண
மணமருள் ...... பெருமாளே.
பாடல்
2 விநாயகர் துதி
ராகம்
- நாட்டை / மோகனம்; தாளம் - ஆதி
தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன
தத்ததன ...... தனதான
பக்கரைவி
சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு
முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம
லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ
விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும
திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு
முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும்
வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ
னக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை
நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய
வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய
றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி
டிப்பல்வகை ...... தனமுலம்
மிக்கஅடி
சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச
மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி
லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம
ருப்புடைய ...... பெருமாளே.
பாடல்
3 விநாயகர்
ராகம்
- ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி; தாளம் - அங்கதாளம் (8)
தகதகிட-2
1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3
தந்ததனத்
தானதனத் ...... தனதான
உம்பர்தருத்
தேநுமணிக் ...... கசிவாகி
ஒண்கடலிற்
றேனமுதத் ...... துணர்வூறி
இன்பரசத்
தேபருகிப் ...... பலகாலும்
என்றனுயிர்க்
காதரவுற் ...... றருள்வாயே
தம்பிதனக்
காகவனத் ...... தணைவோனே
தந்தைவலத்
தாலருள்கைக் ...... கனியோனே
அன்பர்தமக்
கானநிலைப் ...... பொருளோனே
ஐந்துகரத்
தானைமுகப் ...... பெருமாளே.
பாடல்
4 விநாயகர்
ராகம்
- ஹம்ஸத்வனி; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1
1/2, தகதிமி-2, தகதிமி-2, தகஜனு-2
தனன
தனதன தத்தன தத்தன
தனன
தனதன த்ததன தத்தன
தனன
தனதன த்ததன தத்தன ...... தனதான
நினது
திருவடி சத்திம யிற்கொடி
நினைவு
கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய
அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்
நெடிய
வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில்
அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில்
இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்
மனது
மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர
சலநிதி வைத்தது திக்கர
வளரு
கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக
மருவு
மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை
குழைபிடி தொப்பண குட்டொடு
வனச
பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே
தெனன
தெனதென தெத்தென னப்பல
சிறிய
அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும்
உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறமுளை
செரும
உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய
அரவநி றைத்தக ளத்திடை
திமித
திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே
எனவெ
துகுதுகு துத்ததென ஒத்துகள்
துடிகள்
இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட
டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை
இகலி
அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண
பயிரவி சுற்றுந டித்திட
எதிரு
நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.
பாடல்
5 விநாயகர்
ராகம்
- கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை (7) / மிஸ்ரசாபு (3 1/2)
தனதனன
தான தனதனன தான
தனதனன
தான ...... தனதான
விடமடைசு
வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு
பாண ...... மெனவேதான்
விழியுமதி
பார விதமுமுடை மாதர்
வினையின்
விளை வேதும் ...... அறியாதே
கடியுலவு
பாயல் பகலிரவெ னாது
கலவிதனில்
மூழ்கி ...... வறிதாய
கயவனறி
வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள்
சேர ...... அருள்வாயே
இடையர்சிறு
பாலை திருடிகொடு போக
இறைவன்மகள்
வாய்மை ...... அறியாதே
இதயமிக
வாடி யுடையபிளை நாத
கணபதியெ
னாம ...... முறைகூற
அடையலவர்
ஆவி வெருவஅடி கூர
அசலுமறி
யாமல் ...... அவரோட
அகல்வதென
டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும்
ஆனை ...... முகவோனே.
பாடல்
6 (நூல்)
ராகம்
- கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை (7) / மிஸ்ரசாபு (3 1/2)
தத்தத்தன
தத்தத் தனதன
தத்தத்தன
தத்தத் தனதன
தத்தத்தன
தத்தத் தனதன ...... தனதான
முத்தைத்தரு
பத்தித் திருநகை
அத்திக்கிறை
சத்திச் சரவண
முத்திக்கொரு
வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர
மற்குச் சுருதியின்
முற்பட்டது
கற்பித் திருவரும்
முப்பத்துமு
வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை
தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி
மத்தைப் பொருதொரு
பட்டப்பகல்
வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர
தத்தைக் கடவிய
பச்சைப்புயல்
மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு
ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய
ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம்
வைத்துப் பயிரவி
திக்கொட்கந
டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி
அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு
தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு
ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை
கொட்டக் களமிசை
குக்குக்குகு
குக்குக் குகுகுகு
குத்திப்புதை
புக்குப் பிடியென ...... முதுகூகை
கோட்புற்றெழ
நட்பற் றவுணரை
வெட்டிப்பலி
யிட்டுக் குலகிரி
குத்துப்பட
ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
பாடல்
7 (திருப்பரங்குன்றம்)
ராகம்
- .....; தாளம் -
.........
தனத்த
தந்தன தனதன தனதன
தனத்த
தந்தன தனதன தனதன
தனத்த
தந்தன தனதன தனதன ...... தனதான
அருக்கு
மங்கையர் மலரடி வருடியெ
கருத்த
றிந்துபின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும்
அங்குள அரசிலை தடவியும் ...... இருதோளுற்
றணைத்தும்
அங்கையின் அடிதொறும் நகமெழ
உதட்டை
மென்றுபல் இடுகுறி களுமிட
அடிக்க
ளந்தனில் மயில்குயில் புறவென ...... மிகவாய்விட்
டுருக்கும்
அங்கியின் மெழுகென உருகிய
சிரத்தை
மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உறக்கை
யின்கனி நிகரென இலகிய ...... முலைமேல்வீழ்ந்
துருக்க
லங்கிமெய் உருகிட அமுதுகு
பெருத்த
உந்தியின் முழுகிமெ யுணர்வற
உழைத்தி
டுங்கன கலவியை மகிழ்வது ...... தவிர்வேனோ
இருக்கு
மந்திரம் எழுவகை முநிபெற
உரைத்த
சம்ப்ரம சரவண பவகுக
இதத்த
இங்கிதம் இலகிய அறுமுக ...... எழில்வேளென்
றிலக்க
ணங்களும் இயலிசை களுமிக
விரிக்கும்
அம்பல மதுரித கவிதனை
இயற்று
செந்தமிழ் விதமொடு புயமிசை ...... புனைவோனே
செருக்கும்
அம்பல மிசைதனில் அசைவுற
நடித்த
சங்கரர் வழிவழி அடியவர்
திருக்கு
ருந்தடி அருள்பெற அருளிய ...... குருநாதர்
திருக்கு
ழந்தையு மெனஅவர் வழிபடு
குருக்க
ளின்திற மெனவரு பெரியவ
திருப்ப
ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
பாடல்
8 (திருப்பரங்குன்றம்)
ராகம்
- ஸாவேரி; தாளம் - ஆதி
தனத்த
தந்தன தனதன தனதன
தனத்த
தந்தன தனதன தனதன
தனத்த
தந்தன தனதன தனதன ...... தனதான
உனைத்தி
னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி
லன்பல மலர்கொடுன் அடியிணை
உறைப்ப
ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா
உளத்து
ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ
டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ
டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெ
ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த
வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த
டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்கு
றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து
நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில்
என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத்த
லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு
டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த
குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த
பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி
குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த
சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தி
னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ
ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை
நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெ
னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட
அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப்
பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
பாடல்
9 (திருப்பரங்குன்றம்)
ராகம்
- ஹிந்தோளம் / வராளி; தாளம் - அங்கதாளம் (7) (திஸ்ரத்ருபுடை)
தகிட-1
1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2
தனனதந்த
தத்தத்த தந்த
தனனதந்த
தத்தத்த தந்த
தனனதந்த
தத்தத்த தந்த ...... தனதான
கருவடைந்து
பத்துற்ற திங்கள்
வயிறிருந்து
முற்றிப்ப யின்று
கடையில்வந்து
தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்
கழுவியங்கெ
டுத்துச்சு ரந்த
முலையருந்து
விக்கக்கி டந்து
கரறியங்கை
கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி
அரைவடங்கள்
கட்டிச்ச தங்கை
இடுகுதம்பை
பொற்சுட்டி தண்டை
அவையணிந்து
முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி
அரியபெண்கள்
நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று
சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு
பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
இரவிஇந்த்ரன்
வெற்றிக்கு ரங்கி
னரசரென்றும்
ஒப்பற்ற உந்தி
யிறைவன்எண்கி
னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்
எரியதென்றும்
ருத்ரற்சி றந்த
அநுமனென்றும்
ஒப்பற்ற அண்டர்
எவரும்இந்த
வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
அரியதன்ப
டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி
ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன்
மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
அயனையும்பு
டைத்துச்சி னந்து
உலகமும்ப
டைத்துப்ப ரிந்து
அருள்பரங்கி
ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.
பாடல்
10 (திருப்பரங்குன்றம்)
ராகம்
- ....; தாளம் -
.......
தனத்த
தந்தன தனதன தனதன
தனத்த
தந்தன தனதன தனதன
தனத்த
தந்தன தனதன தனதன ...... தனதான
கறுக்கும்
அஞ்சன விழியிணை அயில்கொடு
நெருக்கி
நெஞ்சற எறிதரு பொழுதொரு
கனிக்குள்
இன்சுவை அழுதுகும் ஒருசிறு ...... நகையாலே
களக்கொ
ழுங்கலி வலைகொடு விசிறியெ
மனைக்கெ
ழுந்திரும் எனமனம் உருகஒர்
கவற்சி
கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகி
நறைத்த
பஞ்சணை மிசையினில் மனமுற
அணைத்த
கந்தனில் இணைமுலை எதிர்பொர
நகத்த
ழுந்திட அமுதிதழ் பருகிய ...... மிடறுடே
நடித்தெ
ழுங்குரல் குமுகுமு குமுவென
இசைத்து
நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு
நஞ்சன சிறுமிகள் துயரற ...... அருள்வாயே
நிறைத்த
தெண்டிரை மொகுமொகு மொகுவென
உரத்த
கஞ்சுகி முடிநெறு நெறுவென
நிறைத்த
அண்டமு கடுகிடு கிடுவென ...... வரைபோலும்
நிவத்த
திண்திகழ் நிசிசர ருரமொடு
சிரக்கொ
டுங்குவை மலைபுரை தரஇரு
நிணக்கு
ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா
திறற்க
ருங்குழல் உமையவள் அருளுறு
புழைக்கை
தண்கட கயமுக மிகவுள
சிவக்கொ
ழுந்தன கணபதி யுடன்வரும் ...... இளையோனே
சினத்தொ
டுஞ்சமன் உதைபட நிறுவிய
பரற்கு
ளன்புறு புதல்வநன் மணியுகு
திருப்ப
ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
பாடல்
11 (திருப்பரங்குன்றம்)
ராகம்
- சங்கராபரணம் / நீலாம்பரி; தாளம் - திஸ்ரத்ருபுடை (7)
தனதந்தன
தந்தன தந்தன
தனதந்தன
தந்தன தந்தன
தனதந்தன
தந்தன தந்தன ...... தனதான
கனகந்திரள்
கின்றபெ ருங்கிரி
தனில்வந்துத
கன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய
செண்டைஎ றிந்திடு ...... கதியோனே
கடமிஞ்சி
அநந்தவி தம்புணர்
கவளந்தனை
உண்டுவ ளர்ந்திடு
கரியின்றுணை
என்றுபி றந்திடு ...... முருகோனே
பனகந்துயில்
கின்றதி றம்புனை
கடல்முன்புக
டைந்தப ரம்பரர்
படரும்புயல்
என்றவர் அன்புகொள் ...... மருகோனே
பலதுன்பம்உழன்றுக
லங்கிய
சிறியன்புலை
யன்கொலை யன்புரி
பவமின்றுக
ழிந்திட வந்தருள் ...... புரிவாயே
அனகன்பெயர்
நின்றுரு ளுந்திரி
புரமுந்திரி
வென்றிட இன்புடன்
அழலுந்தந
குந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே
அடல்வந்துமு
ழங்கியி டும்பறை
டுடுடுண்டுடு
டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட
அண்டநெ ரிந்திட ...... வருசூரர்
மனமுந்தழல்
சென்றிட அன்றவர்
உடலுங்குட
லுங்கிழி கொண்டிட
மயில்வென்றனில்
வந்தரு ளுங்கன ...... பெரியோனே
மதியுங்கதி
ருந்தட வும்படி
உயர்கின்றவ
னங்கள்பொ ருந்திய
வளமொன்றுப
ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
பாடல்
12 (திருப்பரங்குன்றம்)
ராகம்
- ....; தாளம் -
.......
தானன
தந்தன தந்தனந் தந்தன
தானன
தந்தன தந்தனந் தந்தன
தானன
தந்தன தந்தனந் தந்தன ...... தனதான
காதட
ருங்கயல் கொண்டிசைந் தைம்பொறி
வாளிம
யங்கம னம்பயந் தந்திருள்
கால்தர
விந்துவி சும்பிலங் கும்பொழு ...... தொருகோடி
காய்கதி
ரென்றொளிர் செஞ்சிலம் புங்கணை
யாழியு
டன்கட கந்துலங் கும்படி
காமனெ
டுஞ்சிலை கொண்டடர்ந் தும்பொரு ...... மயலாலே
வாதுபு
ரிந்தவர் செங்கைதந் திங்கித
மாகந
டந்தவர் பின்திரிந் துந்தன
மார்பில
ழுந்தஅ ணைந்திடுந் துன்பம ...... துழலாதே
வாசமி
குந்தக டம்பமென் கிண்கிணி
மாலைக
ரங்கொளும் அன்பர்வந் தன்பொடு
வாழநி
தம்புனை யும்பதந் தந்துன ...... தருள்தாராய்
போதிலு
றைந்தருள் கின்றவன் செஞ்சிர
மீதுத
டிந்துவி லங்கிடும் புங்கவ
போதவ
ளஞ்சிவ சங்கரன் கொண்டிட ...... மொழிவோனே
பூகமு
டன்திகழ் சங்கினங் கொண்டகி
ணவம
டந்தைபு ரந்தரன் தந்தருள்
பூவைக
ருங்குற மின்கலந் தங்குப ...... னிருதோளா
தீதக
மொன்றினர் வஞ்சகந் துஞ்சியி
டாதவர்
சங்கரர் தந்ததென் பும்பல
சேர்நிரு
தன்குலம் அஞ்சமுன் சென்றடு ...... திறலோனே
சீதள
முந்தும ணந்தயங் கும்பொழில்
சூழ்தர
விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி
தேவர்ப
ணிந்தெழு தென்பரங் குன்றுறை ...... பெருமாளே.
பாடல்
13 (திருப்பரங்குன்றம்)
ராகம்
- ஹிந்தோளம் ; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகதகிட-2
1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தந்தனந்
தத்தத் ...... தனதான
சந்ததம்
பந்தத் ...... தொடராலே
சஞ்சலந்
துஞ்சித் ...... திரியாதே
கந்தனென்
றென்றுற் ...... றுனைநாளும்
கண்டுகொண்
டன்புற் ...... றிடுவேனோ
தந்தியின்
கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன்
பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங்
கண்டிக் ...... கதிர்வேலா
தென்பரங்
குன்றிற் ...... பெருமாளே.
பாடல்
14 (திருப்பரங்குன்றம்)
ராகம்
- .....; தாளம் -
....
தனதந்தன
தந்தன தந்தன
தனதந்தன
தந்தன தந்தன
தனதந்தன
தந்தன தந்தன ...... தனதான
சருவும்படி
வந்தனன் இங்கித
மதனின்றிட
அம்புலி யுஞ்சுடு
தழல்கொண்டிட
மங்கையர் கண்களின் ...... வசமாகிச்
சயிலங்கொளு
மன்றல்பொ ருந்திய
பொழிலின்பயில்
தென்றலும் ஒன்றிய
தடவஞ்சுனை
துன்றியெ ழுந்திட ...... திறமாவே
இரவும்பகல்
அந்தியு நின்றிடு
குயில்வந்திசை
தெந்தன என்றிட
இருகண்கள்து
யின்றிட லின்றியும் ...... அயர்வாகி
இவணெஞ்சுப
தன்பதன் என்றிட
மயல்கொண்டுவ
ருந்திய வஞ்சகன்
இனியுன்
றன்ம லர்ந்தில கும்பதம் ...... அடைவேனோ
திருவொன்றிவி
ளங்கிய அண்டர்கள்
மனையின்தயிர்
உண்டவன் எண்டிசை
திகழும்புகழ்
கொண்டவன் வண்டமிழ் ...... பயில்வோர்பின்
திரிகின்றவன்
மஞ்சுநி றம்புனை
பவன்மிஞ்சுதி
றங்கொள வென்றடல்
செயதுங்கமு
குந்தன்ம கிழ்ந்தருள் ...... முருகோனே
மதியுங்கதி
ரும்புய லுந்தின
மறுகும்படி
அண்டம் இலங்கிட
வளர்கின்றப
ரங்கிரி வந்தருள் ...... பெருமாளே.
பாடல்
15 (திருப்பரங்குன்றம்)
ராகம்
- ஆனந்த பைரவி; தாளம் - ஸங்கீர்ண சாபு (4 1/2) (எடுப்பு - அதீதம்)
தக-1,
திமி-1, தகிட-1 1/2, தக-1
தனத்தத்
தந்தனந் தனத்தத் தந்தனந்
தனத்தத்
தந்தனந் ......தனதான
தடக்கைப்
பங்கயம் கொடைக்குக் கொண்டல்தண்
டமிழ்க்குத்
தஞ்சமென் ...... றுலகோரைத்
தவித்துச்
சென்றிரந் துளத்திற் புண்படுந்
தளர்ச்சிப்
பம்பரந் ...... தனையூசற்
கடத்தைத்
துன்பமண் சடத்தைத் துஞ்சிடுங்
கலத்தைப்
பஞ்சஇந் ...... த்ரியவாழ்வைக்
கணத்திற்
சென்றிடந் திருத்தித் தண்டையங்
கழற்குத்
தொண்டுகொண் ...... டருள்வாயே
படைக்கப்
பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக்
கஞ்சைமன் ...... பணியாகப்
பணித்துத்
தம்பயந் தணித்துச் சந்ததம்
பரத்தைக்
கொண்டிடுந் ...... தனிவேலா
குடக்குத்
தென்பரம் பொருப்பிற் றங்குமங்
குலத்திற்
கங்கைதன் ...... சிறியோனே
குறப்பொற்
கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
குவித்துக்
கும்பிடும் ...... பெருமாளே.
பாடல்
16 (திருப்பரங்குன்றம்)
ராகம்
- ......; தாளம் -
.........
தனத்ததந்
தந்தத் தத்தன தத்தந்
தனத்ததந்
தந்தத் தத்தன தத்தந்
தனத்ததந்
தந்தத் தத்தன தத்தந் ...... தனதான
பதித்தசெஞ்
சந்தப் பொற்குட நித்தம்
பருந்துயர்ந்
தண்டத் திற்றலை முட்டும்
பருப்பதந்
தந்தச் செப்பவை ஒக்குந் ...... தனபாரம்
படப்புயங்
கம்பற் கக்குக டுப்பண்
செருக்குவண்
டம்பப் பிற்கயல் ஒக்கும்
பருத்தகண்
கொண்டைக் கொக்குமி ருட்டென் ...... றிளைஞோர்கள்
துதித்துமுன்
கும்பிட் டுற்றது ரைத்தன்
புவக்கநெஞ்
சஞ்சச் சிற்றிடை சுற்றுந்
துகிற்களைந்
தின்பத் துர்க்கம் அளிக்கும் ...... கொடியார்பால்
துவக்குணும்
பங்கப் பித்தன வத்தன்
புவிக்குளென்
சிந்தைப் புத்திம யக்கந்
துறக்கநின்
தண்டைப் பத்மமெ னக்கென் ...... றருள்வாயே
குதித்துவெண்
சங்கத் தைச்சுற வெற்றுங்
கடற்கரந்
தஞ்சிப் புக்கஅ ரக்கன்
குடற்சரிந்
தெஞ்சக் குத்திவி திர்க்குங் ...... கதிர்வேலா
குலக்கரும்
பின்சொற் றத்தையி பப்பெண்
தனக்குவஞ்
சஞ்சொற் பொச்சையி டைக்குங்
குகுக்குகுங்
குங்குக் குக்குகு குக்குங் ...... குகுகூகூ
திதித்திதிந்
திந்தித் தித்தியெ னக்கொம்
பதிர்த்துவெண்
சண்டக் கட்கம்வி திர்த்துந்
திரட்குவிந்
தங்கட் பொட்டெழ வெட்டுங் ...... கொலைவேடர்
தினைப்புனஞ்
சென்றிச் சித்தபெ ணைக்கண்
டுருக்கரந்
தங்குக் கிட்டிய ணைத்தொண்
திருப்பரங்
குன்றிற் புக்குளி ருக்கும் ...... பெருமாளே.
பாடல்
17 (திருப்பரங்குன்றம்)
ராகம்
- ...... ; தாளம் -
தனத்தனந்
தந்தன தனத்தனந் தந்தன
தனத்தனந்
தந்தன ...... தந்ததான
பொருப்புறுங்
கொங்கையர் பொருட்கவர்ந் தொன்றிய
பிணக்கிடுஞ்
சண்டிகள் ...... வஞ்சமாதர்
புயற்குழன்
றங்கமழ் அறற்குலந் தங்கவிர்
முருக்குவண்
செந்துவர் ...... தந்துபோகும்
அருத்திடுஞ்
சிங்கியர் தருக்கிடுஞ் செங்கயல்
அறச்சிவந்
தங்கையில் ...... அன்புமேவும்
அவர்க்குழன்
றங்கமும் அறத்தளர்ந் தென்பயன்
அருட்பதம்
பங்கயம் ...... அன்புறாதோ
மிருத்தணும்
பங்கயன் அலர்க்கணன் சங்கரர்
விதித்தெணுங்
கும்பிடு ...... கந்தவேளே
மிகுத்திடும்
வன்சம ணரைப்பெருந் திண்கழு
மிசைக்கிடுஞ்
செந்தமிழ் ...... அங்கவாயா
பெருக்குதண்
சண்பக வனத்திடங் கொங்கொடு
திறற்செழுஞ்
சந்தகில் ...... துன்றிநீடு
தினைப்புனம்
பைங்கொடி தனத்துடன் சென்றணை
திருப்பரங்
குன்றுறை ...... தம்பிரானே.
பாடல்
18 (திருப்பரங்குன்றம்)
ராகம்
- ......; தாளம் -
.......
தந்தனந்
தந்ததன தந்தனந் தந்ததன
தந்தனந்
தந்ததன ...... தனதான
மன்றலங்
கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
வண்டினங்
கண்டுதொடர் ...... குழல்மாதர்
மண்டிடுந்
தொண்டையமு துண்டுகொண் டன்புமிக
வம்பிடுங்
கும்பகன ...... தனமார்பில்
ஒன்றஅம்
பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய
உந்தியென்
கின்றமடு ...... விழுவேனை
உன்சிலம்
புங்கனக தண்டையுங் கிண்கிணியும்
ஒண்டகம்
பும்புனையும் ...... அடிசேராய்
பன்றியங்
கொம்புகம டம்புயங் கஞ்சுரர்கள்
பண்டையென்
பங்கமணி ...... பவர்சேயே
பஞ்சரங்
கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர
பண்டிதன்
தம்பியெனும் ...... வயலுரா
சென்றுமுன்
குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
செண்பகம்
பைம்பொன்மலர் ...... செறிசோலை
திங்களுஞ்
செங்கதிரு மங்குலுந் தங்குமுயர்
தென்பரங்
குன்றிலுறை ...... பெருமாளே.
பாடல்
19 (திருப்பரங்குன்றம்)
ராகம்
- ...........; தாளம்
- .........
தனத்த
தந்தன தனதன தனதன
தனத்த
தந்தன தனதன தனதன
தனத்த
தந்தன தனதன தனதன ...... தனதான
வடத்தை
மிஞ்சிய புளகித வனமுலை
தனைத்த
றந்தெதிர் வருமிளை ஞர்களுயிர்
மயக்கி
ஐங்கணை மதனனை ஒருஅரு ...... மையினாலே
வருத்தி
வஞ்சக நினைவொடு மெலமெல
நகைத்து
நண்பொடு வருமிரும் எனஉரை
வழுத்தி
அங்கவ ரொடுசரு வியுமுடல் ...... தொடுபோதே
விடத்தை
வென்றிடு படைவிழி கொடுமுள
மருட்டி
வண்பொருள் கவர்பொழு தினில்மயல்
விருப்பெ
னும்படி மடிமிசை யினில்விழு ...... தொழில்தானே
விளைத்தி
டும்பல கணிகையர் தமதுபொய்
மனத்தை
நம்பிய சிறியனை வெறியனை
விரைப்ப
தந்தனில் அருள்பெற நினைகுவ ...... துளதோதான்
குடத்தை
வென்றிரு கிரியென எழில்தள
தளத்த
கொங்கைகள் மணிவடம் அணிசிறு
குறக்க
ரும்பின்மெய் துவள்புயன் எனவரு ...... வடிவேலா
குரைக்க
ருங்கடல் திருவணை எனமுனம்
அடைத்தி
லங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொ
டும்பட ஒருகணை விடுமரி ...... மருகோனே
திடத்தெ
திர்ந்திடும் அசுரர்கள் பொடிபட
அயிற்கொ
டும்படை விடுசர வணபவ
திறற்கு
கன்குரு பரனென வருமொரு ...... முருகோனே
செழித்த
தண்டலை தொறுமில கியகுட
வளைக்கு
லந்தரு தரளமு மிகுமுயர்
திருப்ப
ரங்கிரி வளநகர் மருவிய ...... பெருமாளே.
பாடல்
20 (திருப்பரங்குன்றம்)
ராகம்
- ..... ; தாளம் -
தனத்தனந்
தந்ததான தனத்தனந் தந்ததான
தனத்தனந்
தந்ததான ...... தனதான
வரைத்தடங்
கொங்கை யாலும்
வளைப்படுஞ்
செங்கை யாலும்
மதர்த்திடுங்
கெண்டையாலும் ...... அனைவோரும்
வடுப்படுந்
தொண்டை யாலும்
விரைத்திடுங்
கொண்டை யாலும்
மருட்டிடுஞ்
சிந்தை மாதர் ...... வசமாகி
எரிப்படும்
பஞ்சு போல
மிகக்கெடுந்
தொண்ட னேனும்
இனற்படுந்
தொந்த வாரி ...... கரையேற
இசைத்திடுஞ்
சந்த பேதம்
ஒலித்திடுந்
தண்டை சூழும்
இணைப்பதம்
புண்ட ணகம்
...... அருள்வாயே
சுரர்க்குவஞ்
சஞ்செய் சூரன்
இளக்ரவுஞ்
சந்த னோடு
துளக்கெழுந்
தண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தியன்
றிந்த்ர லோகம்
அழித்தவன்
பொன்று மாறு
சுடப்பருஞ்
சண்ட வேலை ...... விடுவோனே
செருக்கெழுந்
தும்பர் சேனை
துளக்கவென்
றண்ட மூடு
தெழித்திடுஞ்
சங்க பாணி ...... மருகோனே
தினைப்புனஞ்
சென்று லாவு
குறத்தியின்
பம்ப ராவு
திருப்பரங்
குன்ற மேவு ...... பெருமாளே.
பாடல்
21 (திருச்செந்தூர்)
ராகம்
- .........; தாளம் -
......
தந்த
தந்தன தானா தானா
தந்த
தந்தன தானா தானா
தந்த
தந்தன தானா தானா ...... தனதான
அங்கை
மென்குழ லாய்வார் போலே
சந்தி
நின்றய லோடே போவா
ரன்பு
கொண்டிட நீரோ போறீ ...... ரறியீரோ
அன்று
வந்தொரு நாள்நீர் போனீர்
பின்பு
கண்டறி யோநா மீதே
அன்று
மின்றுமொர் போதோ போகா ...... துயில்வாரா
எங்க
ளந்தரம் வேறா ரோர்வார்
பண்டு
தந்தது போதா தோமே
லின்று
தந்துற வோதா னீதே ...... னிதுபோதா
திங்கு
நின்றதென் வீடே வாண
ரென்றி
ணங்கிகள் மாயா லீலா
இன்ப
சிங்கியில் வீணே வீழா ...... தருள்வாயே
மங்கு
லின்புறு வானாய் வானு
டன்ற
ரும்பிய காலாய் நீள்கால்
மண்டு
றும்பகை நீறா வீறா ...... எரிதீயாய்
வந்தி
ரைந்தெழு நீராய் நீர்சூழ்
அம்ப
ரம்புனை பாராய் பாரேழ்
மண்ட
லம்புகழ் நீயாய் நானாய் ...... மலரோனாய்
உங்கள்
சங்கரர் தாமாய் நாமார்
அண்ட
பந்திகள் தாமாய் வானாய்
ஒன்றி
னுங்கடை தோயா மாயோன் ...... மருகோனே
ஒண்த
டம்பொழில் நநடுர் கேர்டுர்
செந்தி
லம்பதி வாழ்வே வாழ்வோர்
உண்ட
நெஞ்சறி தேனே வானோர் ...... பெருமாளே.
பாடல்
22 (திருச்செந்தூர்)
ராகம்
- ஹிந்தோளம்; தாளம் - அங்கதாளம் (7) (கண்ட ஜாதி ரூபகம்)
தக-1,
தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தக திமி-2
தந்தன
தனந்தனந் தனதனத்
தந்தன
தனந்தனந் தனதனத்
தந்தன
தனந்தனந் தனதனத் ...... தனதான
அந்தகன்
வருந்தினம் பிறகிடச்
சந்ததமும்
வந்துகண் டரிவையர்க்
கன்புருகு
சங்கதந் தவிரமுக் ...... குணமாள
அந்திபக
லென்றிரண் டையுமொழித்
திந்திரிய
சஞ்சலங் களையறுத்
தம்புய
பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச்
செந்திலை
யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை
யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெரு
குந்தடந் தெளிதரத் ...... தணியாத
சிந்தையு
மவிழ்ந்தழிந் துரையொழித்
தென்செய
லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவர
என்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ
கொந்தவிழ்
சரண்சரண் சரணெனக்
கும்பிடு
புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி
குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக்
குன்றிடிய
அம்பொனின் திருவரைக்
கிண்கிணி
கிணின்கிணின் கிணினெனக்
குண்டல
மசைந்திளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத்
தந்தன
தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு
சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள்
கலின்கலின் கலினெனத் ...... திருவான
சங்கரி
மனங்குழைந் துருகமுத்
தந்தர
வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி
சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே.
பாடல்
23 (திருச்செந்தூர்)
ராகம்
- கல்யாணி; தாளம் - அங்கதாளம் (9) (கண்ட ஜாதி த்ருபுடை)
தகதகிட-2
1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனதனன
தனதனன தந்தத் தந்தத்
தனதனன
தனதனன தந்தத் தந்தத்
தனதனன
தனதனன தந்தத் தந்தத் ...... தனதான
அமுதுததி
விடமுமிழு செங்கட் டிங்கட்
பகவினொளிர்
வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
தலையுமுடை
யவனரவ தண்டச் சண்டச் ...... சமனோலை
அதுவருகு
மளவிலுயி ரங்கிட் டிங்குப்
பறைதிமிலை
திமிர்தமிகு தம்பட் டம்பற்
கரையவுற
வினரலற உந்திச் சந்தித் ...... தெருவூடே
எமதுபொரு
ளெனுமருளை யின்றிக் குன்றிப்
பிளவளவு
தினையளவு பங்கிட் டுண்கைக்
கிளையுமுது
வசைதவிர இன்றைக் கன்றைக் ...... கெனநாடா
திடுக்கடி
தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்
டுடுடுடுடு
டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
டெனவகலு
நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் ...... பகிராதோ
குமுதபதி
வகிரமுது சிந்தச் சிந்தச்
சரணபரி
புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
குடிலசடை
பவுரிகொடு தொங்கப் பங்கிற் ...... கொடியாடக்
குலதடினி
அசையஇசை பொங்கப் பொங்கக்
கழலதிர
டெகுடெகுட டெங்கட் டெங்கத்
தொகுகுகுகு
தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ
திமிதமென
முழவொலிமு ழங்கச் செங்கைத்
தமருகம
ததிர்சதியொ டன்பர்க் கின்பத்
திறமுதவு
பரதகுரு வந்திக் குஞ்சற் ...... குருநாதா
திரளுமணி
தரளமுயர் தெங்கிற் றங்கிப்
புரளஎறி
திரைமகர சங்கத் துங்கத்
திமிரசல
நிதிதழுவு செந்திற் கந்தப் ...... பெருமாளே.
பாடல்
24 (திருச்செந்தூர்)
ராகம்
- .........; தாளம் -
......
தந்தத்
தனனத் தந்தத் தனனத்
தந்தத்
தனனத் ...... தனதானா
அம்பொத்
தவிழித் தந்தக் கலகத்
தஞ்சிக்
கமலக் ...... கணையாலே
அன்றிற்
குமனற் றென்றற் குமிளைத்
தந்திப்
பொழுதிற் ...... பிறையாலே
எம்பொற்
கொடிமற் றுன்பக் கலனற்
றின்பக்
கலவித் ...... துயரானாள்
என்பெற்
றுலகிற் பெண்பெற் றவருக்
கின்பப்
புலியுற் ...... றிடலாமோ
கொம்புக்
கரிபட் டஞ்சப் பதுமக்
கொங்கைக்
குறவிக் ...... கினியோனே
கொன்றைச்
சடையற் கொன்றைத் தெரியக்
கொஞ்சித்
தமிழைப் ...... பகர்வோனே
செம்பொற்
சிகரப் பைம்பொற் கிரியைச்
சிந்தக்
கறுவிப் ...... பொரும்வேலா
செஞ்சொற்
புலவர்க் கன்புற் றதிருச்
செந்திற்
குமரப் ...... பெருமாளே.
பாடல்
25 (திருச்செந்தூர்)
ராகம்
- புன்னாக வராளி; தாளம் - அங்கதாளம் (24)
தகதகிட-2
1/2, தகிடதகதிமி-3
1/2,
தகதகிட-2
1/2, தகிடதகதிமி-3
1/2,
தகதகிட-2
1/2, தகிடதகதிமி-3
1/2,
தகிட-1
1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதனன
தான தானன தனதனன தான தானன
தனதனன
தான தானன தந்தத் தந்தத் ...... தனதான
அருணமணி
மேவு பூஷித ம்ருகமத படீர லேபன
அபிநவ
விசால பூரண
அம்பொற்
கும்பத் ...... தனமோதி
அளிகுலவு
மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென
அறவுமுற
வாடி நீடிய
அங்கைக்
கொங்கைக் ...... கிதமாகி
இருணிறைய
மோதி மாலிகை சருவி யுறவான வேளையி
லிழைகலைய
மாத ரார்வழி
யின்புற்
றன்புற் ...... றழியாநீள்
இரவுபகல்
மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
இணையடிகள்
பாடி வாழஎ
னெஞ்சிற்
செஞ்சொற் ...... றருவாயே
தருணமணி
யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
சதுர்மறையி
னாதி யாகிய
சங்கத்
துங்கக் ...... குழையாளர்
தருமுருக
மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
தனைமுழுதும்
வாரி யேயமு
துண்டிட்
டண்டர்க் ...... கருள்கூரும்
செருமுதலி
மேவு மாவலி யதிமதக போல மாமலை
தெளிவினுடன்
மூல மேயென
முந்தச்
சிந்தித் ...... தருள்மாயன்
திருமருக
சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
ஜெயசரவ
ணாம னோகர
செந்திற்
கந்தப் ...... பெருமாளே.
பாடல்
26 (திருச்செந்தூர்)
ராகம்
- கமாஸ்; தாளம் - சதுஸ்ர ரூபகம் (6)
தனதன
தந்தாத் தந்தத்
தனதன
தந்தாத் தந்தத்
தனதன
தந்தாத் தந்தத் ...... தனதானா
அவனிபெ
றுந்தோட் டம்பொற்
குழையட
ரம்பாற் புண்பட்
டரிவையர்
தம்பாற் கொங்கைக் ...... கிடையேசென்
றணைதரு
பண்டாட் டங்கற்
றுருகிய
கொண்டாட் டம்பெற்
றழிதரு
திண்டாட் டஞ்சற் ...... றொழியாதே
பவமற
நெஞ்சாற் சிந்தித்
திலகுக
டம்பார்த் தண்டைப்
பதயுக
ளம்போற் றுங்கொற் ...... றமுநாளும்
பதறிய
அங்காப் பும்பத்
தியுமறி
வும்போய்ச் சங்கைப்
படுதுயர்
கண்பார்த் தன்புற் ...... றருளாயோ
தவநெறி
குன்றாப் பண்பிற்
றுறவின
ருந்தோற் றஞ்சத்
தனிமல
ரஞ்சார்ப் புங்கத் ...... தமராடி
தமிழினி
தென்காற் கன்றிற்
றிரிதரு
கஞ்சாக் கன்றைத்
தழலெழ
வென்றார்க் கன்றற் ...... புதமாகச்
சிவவடி
வங்காட் டுஞ்சற்
குருபர
தென்பாற் சங்கத்
திரள்மணி
சிந்தாச் சிந்துக் ...... கரைமோதும்
தினகர
திண்டேர்ச் சண்டப்
பரியிட
றுங்கோட் டிஞ்சித்
திருவளர்
செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.
பாடல்
27 (திருச்செந்தூர்)
தனன
தானன தந்தன தந்தன
தனன
தானன தந்தன தந்தன
தனன
தானன தந்தன தந்தன ...... தனதான
அளக
பாரம லைந்துகு லைந்திட
வதனம்
வேர்வுது லங்கிந லங்கிட
அவச
மோகம் விளைந்துத ளைந்திட ...... அணைமீதே
அருண
வாய்நகை சிந்திய சம்ப்ரம
அடர்ந
காநுதி பங்கவி தஞ்செய்து
அதர
பானம ருந்திம டுங்கிற ...... முலைமேல்வீழ்ந்
துளமும்
வேறுப டும்படி ஒன்றிடு
மகளிர்
தோதக இன்பின்மு யங்குதல்
ஒழியு
மாறுதெ ளிந்துளம் அன்பொடு ...... சிவயோகத்
துருகு
ஞானப ரம்பர தந்திர
அறிவி
னோர்கரு தங்கொள்சி லம்பணி
உபய
சீதள பங்கய மென்கழல் ...... தருவாயே
இளகி
டாவளர் சந்தன குங்கும
களப
பூரண கொங்கைந லம்புனை
இரதி
வேள்பணி தந்தையும் அந்தண ...... மறையோனும்
இனது
றாதெதிர் இந்திரன் அண்டரும்
ஹரஹ
ராசிவ சங்கர சங்கர
எனமி
காவரு நஞ்சினை யுண்டவர் ...... அருள்பாலா
வளர்நி
சாசரர் தங்கள்சி ரம்பொடி
படவி
ரோதமி டுங்குல சம்ப்ரமன்
மகர
வாரிக டைந்தநெ டும்புயல் ...... மருகோனே
வளரும்
வாழையு மஞ்சளும் இஞ்சியும்
இடைவி
டாதுநெ ருங்கிய மங்கல
மகிமை
மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.
பாடல்
28 (திருச்செந்தூர்)
ராகம்
- காம்போதி ; தாளம் - கண்டசாபு (2 1/2)
தனதனன
தனதனன தனதனன தனதனன
தனதனன
தனதனன ...... தனதானா
அறிவழிய
மயல்பெருக வுரையுமற விழிசுழல
அனலவிய
மலமொழுக ...... அகலாதே
அனையுமனை
யருகிலுற வெருவியழ வுறவுமழ
அழலினிகர்
மறலியெனை ...... யழையாதே
செறியுமிரு
வினைகரண மருவுபுல னொழியவுயர்
திருவடியி
லணுகவர ...... மருள்வாயே
சிவனைநிகர்
பொதியவரை முநிவனக மகிழஇரு
செவிகுளிர
இனியதமிழ் ...... பகர்வோனே
நெறிதவறி
யலரிமதி நடுவன்மக பதிமுளரி
நிருதிநிதி
பதிகரிய ...... வனமாலி
நிலவுமறை
யவனிவர்க ளலையஅர சுரிமைபுரி
நிருதனுர
மறஅயிலை ...... விடுவோனே
மறிபரசு
கரமிலகு பரமனுமை யிருவிழியு
மகிழமடி
மிசைவளரு ...... மிளையோனே
மதலைதவ
ழுததியிடை வருதரள மணிபுளின
மறையவுயர்
கரையிலுறை ...... பெருமாளே.
பாடல்
29 (திருச்செந்தூர்)
ராகம்
- காபி; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1
1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2, தகதிமி-2 1/2
தனத்தந்
தானன தானன தானன
தனத்தந்
தானன தானன தானன
தனத்தந்
தானன தானன தானன ...... தனதான
அனிச்சங்
கார்முகம் வீசிட மாசறு
துவட்பஞ்
சானத டாகம்வி டாமட
அனத்தின்
தூவிகு லாவிய சீறடி ...... மடமானார்
அருக்கன்
போலொளி வீசிய மாமர
கதப்பைம்
பூணணி வார்முலை மேல்முகம்
அழுத்தும்
பாவியை யாவி யிடேறிட ...... நெறிபாரா
வினைச்சண்
டாளனை வீணணை நீணிதி
தனைக்கண்
டானவ மானநிர் மூடனை
விடக்கன்
பாய்நுகர் பாழனை யோர்மொழி ...... பகராதே
விகற்பங்
கூறிடு மோகவி காரனை
அறத்தின்
பாலொழு காதமு தேவியை
விளித்துன்
பாதுகை நீதர நானருள் ...... பெறுவேனோ
முனைச்சங்
கோலிடு நீலம கோததி
அடைத்தஞ்
சாதஇ ராவண னீள்பல
முடிக்கன்
றோர்கணை யேவுமி ராகவன் ...... மருகோனே
முளைக்குஞ்
சீதநி லாவொட ராவிரி
திரைக்கங்
காநதி தாதகி கூவிள
முடிக்குஞ்
சேகரர் பேரரு ளால்வரு ...... முருகோனே
தினைச்செங்
கானக வேடுவ ரானவர்
திகைத்தந்
தோவென வேகணி யாகிய
திறற்கந்
தாவளி நாயகி காமுறும் ...... எழில்வேலா
சிறக்குந்
தாமரை யோடையில் மேடையில்
நிறக்குஞ்
சூல்வளை பால்மணி வீசிய
திருச்செந்
தூர்வரு சேவக னேசுரர் ...... பெருமாளே.
பாடல்
30 (திருச்செந்தூர்)
ராகம்
- மோகனம்; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2
1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தனதன
தனந்த தந்த தனதன தனந்த தந்த
தனதன
தனந்த தந்த ...... தனதான
அனைவரு
மருண்ட ருண்டு கடிதென வெகுண்டி யம்ப
அமரஅடி
பின்தொ டர்ந்து ...... பிணநாறும்
அழுகுபிணி
கொண்டு விண்டு புழுவுட னெலும்ப லம்பு
மவலவுட
லஞ்சு மந்து ...... தடுமாறி
மனைதொறு
மிதம்ப கர்ந்து வரவர விருந்த ருந்தி
மனவழி
திரிந்து மங்கும் ...... வசைதீர
மறைசதுர்
விதந்தெ ரிந்து வகைசிறு சதங்கை கொஞ்ச
மலரடி
வணங்க என்று ...... பெறுவேனோ
தினைமிசை
சுகங்க டிந்த புனமயி லிளங்கு ரும்பை
திகழிரு
தனம்பு ணர்ந்த ...... திருமார்பா
ஜெகமுழுது
முன்பு தும்பி முகவனொடு தந்தை முன்பு
திகிரிவலம்
வந்த செம்பொன் ...... மயில்வீரா
இனியகனி
மந்தி சிந்து மலைகிழவ செந்தில் வந்த
இறைவகுக
கந்த என்று ...... மிளையோனே
எழுகடலு
மெண்சி லம்பும் நிசிசரரும் அஞ்ச அஞ்சு
மிமையவரை
யஞ்ச லென்ற ...... பெருமாளே.
பாடல்
31 (திருச்செந்தூர்)
ராகம்
- ஹூஸேனி; தாளம் - அங்கதாளம் (9)
தகதகிட-2
1/2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமிதக-3
தனதனன
தனன தந்தத் ...... தனதான
இயலிசையி
லுசித வஞ்சிக் ...... கயர்வாகி
இரவுபகல்
மனது சிந்தித் ...... துழலாதே
உயர்கருணை
புரியு மின்பக் ...... கடல்மூழ்கி
உனையெனது
ளறியு மன்பைத் ...... தருவாயே
மயில்தகர்க
லிடைய ரந்தத் ...... தினைகாவல்
வனசகுற
மகளை வந்தித் ...... தணைவோனே
கயிலைமலை
யனைய செந்திற் ...... பதிவாழ்வே
கரிமுகவ
னிளைய கந்தப் ...... பெருமாளே.
பாடல்
32 (திருச்செந்தூர்)
ராகம்
- ....; தாளம் -
தனதன
தனந்த தந்தன தனதன தனந்த தந்தன
தனதன
தனந்த தந்தன ...... தனதான
இருகுழை
யெறிந்த கெண்டைகள் ஒருகுமி ழடர்ந்து வந்திட
இணைசிலைநெ
ரிந்தெ ழுந்திட ...... அணைமீதே
இருளளக
பந்தி வஞ்சியி லிருகலையு டன்கு லைந்திட
இதழமுத
ருந்த சிங்கியின் ...... மனமாய
முருகொடுக
லந்த சந்தனஅளருபடு குங்கு மங்கமழ்
முலைமுகடு
கொண்டெ ழுந்தொறு ...... முருகார
முழுமதிபு
ரிந்த சிந்துர அரிவையரு டன்க லந்திடு
முகடியுந
லம்பி றந்திட ...... அருள்வாயே
எரிவிடநி
மிர்ந்த குஞ்சியி னிலவொடு மெழுந்த கங்கையு
மிதழியொட
ணிந்த சங்கரர் ...... களிகூரும்
இமவரைத
ருங்க ருங்குயில் மரகதநி றந்த ருங்கிளி
யெனதுயிரெ
னுந்த்ரி யம்பகி ...... பெருவாழ்வே
அரைவட
மலம்பு கிண்கிணி பரிபுர நெருங்கு தண்டைக
ளணிமணிச
தங்கை கொஞ்சிட ...... மயில்மேலே
அகமகிழ்வு
கொண்டு சந்ததம் வருகுமர முன்றி லின்புறம்
அலைபொருத
செந்தில் தங்கிய ...... பெருமாளே.
பாடல்
33 (திருச்செந்தூர்)
ராகம்
- ....; தாளம் -
.........
தனதன
தனன தனத்தத் தாத்தன
தனதன
தனன தனத்தத் தாத்தன
தனதன
தனன தனத்தத் தாத்தன ...... தந்ததான
இருள்விரி
குழலை விரித்துத் தூற்றவு
மிறுகிய
துகிலை நெகிழ்த்துக் காட்டவு
மிருகடை
விழியு முறுக்கிப் பார்க்கவு ...... மைந்தரோடே
இலைபிள
வதனை நடித்துக் கேட்கவு
மறுமொழி
பலவு மிசைத்துச் சாற்றவு
மிடையிடை
சிறிது நகைத்துக் காட்டவு ...... மெங்கள்வீடே
வருகென
வொருசொ லுரைத்துப் பூட்டவும்
விரிமல
ரமளி யணைத்துச் சேர்க்கவும்
வருபொரு
ளளவி லுருக்கித் தேற்றவு ...... நிந்தையாலே
வனைமனை
புகுதி லடித்துப் போக்கவு
மொருதலை
மருவு புணர்ச்சித் தூர்த்தர்கள்
வசைவிட
நினது பதத்தைப் போற்றுவ ...... தெந்தநாளோ
குருமணி
வயிர மிழித்துக் கோட்டிய
கழைமட
வுருவு வெளுத்துத் தோற்றிய
குளிறிசை
யருவி கொழித்துத் தூற்றிய ...... மண்டுநநருர்
குழிபடு
கலுழி வயிற்றைத் தூர்த்தெழு
திடர்மண
லிறுகு துருத்திக் காப்பொதி
குளிர்நிழ
லருவி கலக்கிப் பூப்புனை ...... வண்டலாடா
முருகவிழ்
துணர்க ளுகுத்துக் காய்த்தினை
விளைநடு
விதணி லிருப்பைக் காட்டிய
முகிழ்முலை
யிளைய குறத்திக் காட்படு ...... செந்தில்வாழ்வே
முளையிள
மதியை யெடுத்துச் சாத்திய
சடைமுடி
யிறைவர் தமக்குச் சாத்திர
முறையருள்
முருக தவத்தைக் காப்பவர் ...... தம்பிரானே.
பாடல்
34 (திருச்செந்தூர்)
ராகம்
- கீரவாணி; தாளம் - அங்கதாளம் (6 1/2)
தகதகிட-2
1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1
தனதனன
தந்த தானதன
தனதனன
தந்த தானதன
தனதனன
தந்த தானதன ...... தந்ததான
உததியறல்
மொண்டு சூல்கொள்கரு
முகிலெனஇ
ருண்ட நீலமிக
வொளிதிகழு
மன்றல் ஓதிநரை ...... பஞ்சுபோலாய்
உதிரமெழு
துங்க வேலவிழி
மிடைகடையொ
துங்கு பீளைகளு
முடைதயிர்பி
திர்ந்த தோஇதென ...... வெம்புலாலாய்
மதகரட
தந்தி வாயினிடை
சொருகுபிறை
தந்த சூதுகளின்
வடிவுதரு
கும்ப மோதிவளர் ...... கொங்கைதோலாய்
வனமழியு
மங்கை மாதர்களின்
நிலைதனையு
ணர்ந்து தாளிலுறு
வழியடிமை
யன்பு கூருமது ...... சிந்தியேனோ
இதழ்பொதிய
விழ்ந்த தாமரையின்
மணவறைபு
குந்த நான்முகனும்
எறிதிரைய
லம்பு பாலுததி ...... நஞ்சராமேல்
இருவிழிது
யின்ற நாரணனும்
உமைமருவு
சந்த்ர சேகரனும்
இமையவர்வ
ணங்கு வாசவனும் ...... நின்றுதாழும்
முதல்வசுக
மைந்த பீடிகையில்
அகிலசக
அண்ட நாயகிதன்
மகிழ்முலைசு
ரந்த பாலமுத ...... முண்டவேளே
முளைமுருகு
சங்கு வீசியலை
முடுகிமைத
வழ்ந்த வாய்பெருகி
முதலிவரு
செந்தில் வாழ்வுதரு ...... தம்பிரானே.
பாடல்
35 (திருச்செந்தூர்)
ராகம்
- ......; தாளம் -
.........
தனத்தந்
தானன தானன தானன
தனத்தந்
தானன தானன தானன
தனத்தந்
தானன தானன தானன ...... தனதான
உருக்கம்
பேசிய நீலியர் காசுகள்
பறிக்குந்
தோஷிகள் மோகவி காரிகள்
உருட்டும்
பார்வையர் மாபழி காரிகள் ...... மதியாதே
உரைக்கும்
வீரிகள் கோளர வாமென
வுடற்றுந்
தாதியர் காசள வேமனம்
உறைக்குந்
தூரிகள் மீதினி லாசைகள் ...... புரிவேனோ
அருக்கன்
போலொளி வீசிய மாமுடி
யணைத்துந்
தானழ காய்நல மேதர
அருட்கண்
பார்வையி னாலடி யார்தமை ...... மகிழ்வோடே
அழைத்துஞ்
சேதிகள் பேசிய காரண
வடிப்பந்
தானென வேயெனை நாடொறும்
அதிக்கஞ்
சேர்தர வேயரு ளாலுட ...... னினிதாள்வாய்
இருக்குங்
காரண மீறிய வேதமும்
இசைக்குஞ்
சாரமு மேதொழு தேவர்கள்
இடுக்கண்
தீர்கன னேயடி யார்தவ ...... முடன்மேவி
இலக்கந்
தானென வேதொழ வேமகிழ்
விருப்பங்
கூர்தரு மாதியு மாயுல
கிறுக்குந்
தாதகி சூடிய வேணிய ...... னருள்பாலா
திருக்குந்
தாபதர் வேதிய ராதியர்
துதிக்குந்
தாளுடைய நாயக னாகிய
செகச்செஞ்
சோதியு மாகிய மாதவன் ...... மருகோனே
செழிக்குஞ்
சாலியு மேகம ளாவிய
கருப்பஞ்
சோலையும் வாழையு மேதிகழ்
திருச்செந்
தூர்தனில் மேவிய தேவர்கள் ...... பெருமாளே.
பாடல்
36 (திருச்செந்தூர்)
ராகம்
- வலஜி / பந்துவராளி; தாளம் - ஆதி
(எடுப்பு
- 3/4 இடம்)
தானன
தானன தானன தானன
தானன
தானன ...... தனதானா
ஏவினை
நேர்விழி மாதரை மேவிய
ஏதனை
மூடனை ...... நெறிபேணா
ஈனனை
வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை
மோழையை ...... அகலாநீள்
மாவினை
மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி
லாதனை ...... யிகழாதே
மாமணி
நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற
ஈவது ...... மொருநாளே
நாவலர்
பாடிய நூலிசை யால்வரு
நாரத
னார்புகல் ...... குறமாதை
நாடியெ
கானிடை கூடிய சேவக
நாயக
மாமயி ...... லுடையோனே
தேவிம
நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி
யாள்தரு ...... சிறியோனே
சேணுயர்
சோலையி னீழலி லேதிகழ்
சீரலை
வாய்வரு ...... பெருமாளே.
பாடல்
37 (திருச்செந்தூர்)
ராகம்
- பிலஹரி; தாளம் - ஆதி - 2 களை
தானா
தந்தத் தானா தந்தத்
தானா
தந்தத் ...... தனதானா
ஓரா
தொன்றைப் பாரா தந்தத்
தோடே
வந்திட் ...... டுயிர்சோர
ஊடா
நன்றற் றார்போல் நின்றெட்
டாமால்
தந்திட் ...... டுழல்மாதர்
கூரா
வன்பிற் சோரா நின்றக்
கோயா
நின்றுட் ...... குலையாதே
கோடார்
செம்பொற் றோளா நின்சொற்
கோடா
தென்கைக் ...... கருள்தாராய்
தோரா
வென்றிப் போரா மன்றற்
றோளா
குன்றைத் ...... தொளையாடீ
சூதா
யெண்டிக் கேயா வஞ்சச்
சூர்மா
அஞ்சப் ...... பொரும்வேலா
சீரார்
கொன்றைத் தார்மார் பொன்றச்
சேவா
றெந்தைக் ...... கினியோனே
தேனே
யன்பர்க் கேயா மின்சொற்
சேயே
செந்திற் ...... பெருமாளே.
பாடல்
38 (திருச்செந்தூர்)
ராகம்
- மனோலயம் (மத்யமஸ்ருதி); தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்ட நடை (35)
/4/4/4 0 - நடை
தக தகிட
தத்ததன
தத்தத் தனந்தந் தனந்ததன
தத்ததன
தத்தத் தனந்தந் தனந்ததன
தத்ததன
தத்தத் தனந்தந் தனந்ததன ...... தனதான
கட்டழகு
விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
இட்டபொறி
தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
கட்டணமெ
டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள் ...... முறையோடே
வெட்டவிட
வெட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
மக்களொரு
மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
விட்டுவரு
மித்தைத் தவிர்ந்துன் பதங்களுற ...... வுணர்வேனோ
பட்டுருவி
நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
முற்றுமலை
வற்றிக் குழம்புங் குழம்பமுனை
பட்டஅயில்
தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர் ...... முடிசாயத்
தட்டழிய
வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
நிர்த்தமிட
ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
சற்சமய
வித்தைப் பலன்கண்டு செந்திலுறை ...... பெருமாளே.
பாடல்
39 (திருச்செந்தூர்)
ராகம்
- காவடிச்சிந்து; தாளம் - அங்கதாளம் (5 1/2)
தகதகிட-2
1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தந்ததன
தந்த தந்த தந்ததன தந்த தந்த
தந்ததன
தந்த தந்த ...... தனதான
கண்டுமொழி
கொம்பு கொங்கை வஞ்சியிடை யம்பு நஞ்சு
கண்கள்குழல்
கொண்டல் என்று ...... பலகாலும்
கண்டுவளம்வ
ருந்தி நொந்து மங்கையர்வ சம்பு ரிந்து
கங்குல்பகல்
என்று நின்று ...... விதியாலே
பண்டைவினை
கொண்டு ழன்று வெந்துவிழு கின்றல் கண்டு
பங்கயப
தங்கள் தந்து ...... புகழோதும்
பண்புடைய
சிந்தை யன்பர் தங்களினு டன்க லந்து
பண்புபெற
அஞ்ச லஞ்ச ...... லெனவாராய்
வண்டுபடு
கின்ற தொங்கல் கொண்டறநெ ருங்கி யிண்டு
வம்பினைய
டைந்து சந்தின் ...... மிக்முழ்கி
வஞ்சியை
முனிந்த கொங்கை மென்குறம டந்தை செங்கை
வந்தழகு
டன்க லந்த ...... மணிமார்பா
திண்டிறல்பு
னைந்த அண்டர் தங்களப யங்கள் கண்டு
செஞ்சமர்பு
னைந்து துங்க ...... மயில்மீதே
சென்றசுரர்
அஞ்சவென்று குன்றிடை மணம்பு ணர்ந்து
செந்தில்நகர்
வந்த மர்ந்த ...... பெருமாளே.
பாடல்
40 (திருச்செந்தூர்)
ராகம்
- ஆனந்த பைரவி (மத்யம ஸ்ருதி); தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1
1/2, தாதக-2, தகதிமி-2, தகதிமி-2
தனன
தானன தந்தன தந்தன
தனன
தானன தந்தன தந்தன
தனன
தானன தந்தன தந்தன ...... தனதான
கமல
மாதுடன் இந்திரை யுஞ்சரி
சொலவொ
ணாதம டந்தையர் சந்தன
களப
சீதள கொங்கையில் அங்கையில் ...... இருபோதேய்
களவு
நூல்தெரி வஞ்சனை அஞ்சன
விழியின்
மோகித கந்தசு கந்தரு
கரிய
ஓதியில் இந்துமு கந்தனில் ...... மருளாதே
அமல
மாகிய சிந்தைய டைந்தகல்
தொலைவி
லாதஅ றம்பொருள் இன்பமும்
அடைய
ஓதியு ணர்ந்துத ணந்தபின் ...... அருள்தானே
அறியு
மாறுபெ றும்படி அன்பினின்
இனிய
நாதசி லம்புபு லம்பிடும்
அருண
ஆடக கிண்கிணி தங்கிய ...... அடிதாராய்
குமரி
காளிப யங்கரி சங்கரி
கவுரி
நீலிப ரம்பரை அம்பிகை
குடிலை
யோகினி சண்டினி குண்டலி ...... எமதாயி
குறைவி
லாள்உமை மந்தரி அந்தரி
வெகுவி
தாகம சுந்தரி தந்தருள்
குமர
மூஷிக முந்திய ஐங்கர ...... கணராயன்
மமவி
நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி
அணிக
ஜானன விம்பனொர் அம்புலி
மவுலி
யானுறு சிந்தையு கந்தருள் ...... இளையோனே
வளரும்
வாழையு மஞ்சளும் இஞ்சியும்
இடைவி
டாது நெருங்கிய மங்கல
மகிமை
மாநகர் செந்திலில் வந்துறை ...... பெருமாளே.
பாடல்
41 (திருச்செந்தூர்)
ராகம்
- ....; தாளம் -
தனத்தந்தம்
தனத்தந்தம்
தனத்தந்தம்
தனத்தந்தம்
தனத்தந்தம்
தனத்தந்தம் ...... தனதானா
கரிக்கொம்பந்
தனித்தங்கங்
குடத்தின்பந்
தனத்தின்கண்
கறுப்புந்தன்
சிவப்புஞ்செம் ......
பொறிதோள்சேர்
கணைக்கும்பண்
டுழைக்கும்பங்
களிக்கும்பண்
பொழிக்குங்கண்
கழுத்துஞ்சங்
கொளிக்கும்பொன்
...... குழையாடச்
சரக்குஞ்சம்
புடைக்கும்பொன்
றுகிற்றந்தந்
தரிக்குந்தன்
சடத்தும்பண்
பிலுக்குஞ்சம் ......
பளமாதர்
சலித்தும்பின்
சிரித்துங்கொண்
டழைத்துஞ்சண்
பசப்பும் பெண்
தனத்துன்பந்
தவிப்புண்டிங் ......
குழல்வேனோ
சுரர்ச்சங்கந்
துதித்தந்தஞ்
செழுத்தின்பங்
களித்துண்பண்
சுகத்துய்ந்தின்
பலர்ச்சிந்தங் ......
கசுராரைத்
துவைத்தும்பந்
தடித்துஞ்சங்
கொலித்துங்குன்
றிடித்தும்பண்
சுகித்துங்கண்
களிப்புங்கொண் ......
டிடும்வேலா
சிரப்பண்புங்
கரப்பண்புங்
கடப்பந்தொங்
கலிற்பண்புஞ்
சிவப்பண்புந்
தவப்பண்புந் ...... தருவோனே
தினைத்தொந்தங்
குறப்பெண்பண்
சசிப்பெண்கொங்
கையிற்றுஞ்சுஞ்
செழிக்குஞ்செந்
திலிற்றங்கும் ......
பெருமாளே.
பாடல்
42 (திருச்செந்தூர்)
ராகம்
- ..........; தாளம்
- .........
தனத்தந்தம்
தனத்தந்தம்
தனத்தந்தம்
தனத்தந்தம்
தனத்தந்தம்
தனத்தந்தம் ...... தனதானா
கருப்பந்தங்
கிரத்தம்பொங்
கரைப்புண்கொண்
டுருக்கும்பெண்
களைக்கண்டங்
கவர்ப்பின்சென்
...... றவரோடே
கலப்புண்டுஞ்
சிலுப்புண்டுந்
துவக்குண்டும்
பிணக்குண்டுங்
கலிப்புண்டுஞ்
சலிப்புண்டுந் ......
தடுமாறிச்
செருத்தண்டந்
தரித்தண்டம்
புகத்தண்டந்
தகற்கென்றுந்
திகைத்தந்திண்
செகத்தஞ்சுங் ...... கொடுமாயும்
தியக்கங்கண்
டுயக்கொண்டென்
பிறப்பங்கஞ்
சிறைப்பங்கஞ்
சிதைத்துன்றன்
பதத்தின்பந் ...... தருவாயே
அருக்கன்சஞ்
சரிக்குந்தெண்
டிரைக்கண்சென்
றரக்கன்பண்
பனைத்தும்பொன்
றிடக்கன்றுங் ...... கதிர்வேலா
அணிச்சங்கங்
கொழிக்குந்தண்
டலைப்பண்பெண்
டிசைக்குங்கொந்
தளிக்குஞ்செந்
திலிற்றங்குங் ......
குமரேசா
புரக்குஞ்சங்
கரிக்குஞ்சங்
கரர்க்குஞ்சங்
கரர்க்கின்பம்
புதுக்குங்கங்
கையட்குந்தஞ் ...... சுதனானாய்
புனைக்குன்றந்
திளைக்குஞ்செந்
தினைப்பைம்பொன்
குறக்கொம்பின்
புறத்தண்கொங்
கையிற்றுஞ்சும்
...... பெருமாளே.
பாடல்
43 (திருச்செந்தூர்)
ராகம்
- ......; தாளம் -
.........
தனன
தனதன தனதன தனதன
தனன
தனதன தனதன தனதன
தனன
தனதன தனதன தனதன ...... தனதான
களபம்
ஒழுகிய புளகித முலையினர்
கடுவும்
அமிர்தமும் விரவிய விழியினர்
கழுவு
சரிபுழு கொழுகிய குழலினர் ...... எவரோடுங்
கலகம்
இடுகயல் எறிகுழை விரகியர்
பொருளில்
இளைஞரை வழிகொடு மொழிகொடு
தளர
விடுபவர் தெருவினில் எவரையும் ...... நகையாடிப்
பிளவு
பெறிலதி லளவள வொழுகியர்
நடையில்
உடையினில் அழகொடு திரிபவர்
பெருகு
பொருள்பெறில் அமளியில் இதமொடு ...... குழைவோடே
பிணமும்
அணைபவர் வெறிதரு புனலுணும்
அவச
வனிதையர் முடுகொடும் அணைபவர்
பெருமை
யுடையவர் உறவினை விடஅருள் ...... புரிவாயே
அளையில்
உறைபுலி பெறுமக வயிறரு
பசுவின்
நிரைமுலை யமுதுண நிரைமகள்
வசவ
னொடுபுலி முலையுண மலையுடன் ...... உருகாநீள்
அடவி
தனிலுள உலவைகள் தளிர்விட
மருள
மதமொடு களிறுகள் பிடியுடன்
அகல
வெளியுயர் பறவைகள் நிலம்வர ...... விரல்சேரேழ்
தொளைகள்
விடுகழை விரல்முறை தடவிய
இசைகள்
பலபல தொனிதரு கருமுகில்
சுருதியுடையவன்
நெடியவன் மனமகிழ் ...... மருகோனே
துணைவ
குணதர சரவண பவநம
முருக
குருபர வளரறு முககுக
துறையில்
அலையெறி திருநகர் உறைதரு ...... பெருமாளே.
பாடல்
44 (திருச்செந்தூர்)
ராகம்
- ....; தாளம் -
......
தனந்த
தந்த தந்த தந்த தந்த தந்த தந்த தந்த
தந்த
தந்த தந்த தந்த ...... தனதான
கனங்கள்
கொண்ட குந்த ளங்க ளுங்கு லைந்த லைந்து விஞ்சு
கண்க
ளுஞ்சி வந்த யர்ந்து ...... களிகூரக்
கரங்க
ளுங்கு விந்து நெஞ்ச கங்க ளுங்க சிந்தி டுங்க
றங்கு
பெண்க ளும்பி றந்து ...... விலைகூறிப்
பொனின்கு
டங்க ளஞ்சு மென்த னங்க ளும்பு யங்க ளும்பொ
ருந்தி
யன்பு நண்பு பண்பு ...... முடனாகப்
புணர்ந்து
டன்பு லர்ந்து பின்க லந்த கங்கு ழைந்த வம்பு
ரிந்து
சந்த தந்தி ரிந்து ...... படுவேனோ
அனங்க
னெந்து நைந்து வெந்து குந்து சிந்த அன்று கண்தி
றந்தி
ருண்ட கண்டர் தந்த ...... அயில்வேலா
அடர்ந்த
டர்ந்தெ திர்ந்து வந்த வஞ்ச ரஞ்ச வெஞ்ச மம்பு
ரிந்த
அன்ப ரின்ப நண்ப ...... உரவோனே
சினங்கள்
கொண்டி லங்கை மன்சி ரங்கள் சித்த வெஞ்ச ரத்தெ
ரிந்த
வன்ப ரிந்த இன்ப ...... மருகோனே
சிவந்த
செஞ்ச தங்கை யுஞ்சி லம்பு தண்டை யும்பு னைந்து
செந்தில்
வந்த கந்த எங்கள் ...... பெருமாளே.
பாடல்
45 (திருச்செந்தூர்)
ராகம்
- .....; தாளம் -
......
தந்ததன
தான தந்ததன தான
தந்ததன
தான ...... தனதான
கன்றிலுறு
மானை வென்றவிழி யாலே
கஞ்சமுகை
மேவு ...... முலையநலே
கங்குல்செறி
கேச மங்குல்குலை யாமை
கந்தமலர்
சூடு ...... மதனாலே
நன்றுபொருள்
தீர வென்றுவிலை பேசி
நம்பவிடு
மாத ...... ருடனாடி
நஞ்சுபுசி
தேரை யங்கமது வாக
நைந்துவிடு
வேனை ...... யருள்பாராய்
குன்றிமணி
போல்வ செங்கண்வரி போகி
கொண்டபடம்
வீசு ...... மணிகூர்வாய்
கொண்ட
மயிலேறி அன்றசுரர் சேனை
கொன்றகும
ரேச ...... குருநாதா
மன்றல்கமழ்
பூக தெங்குதிரள் சோலை
வண்டுபடு
வாவி ...... புடைசூழ
மந்திநட
மாடு செந்தினகர் மேவு
மைந்தஅம
ரேசர் ...... பெருமாளே.
பாடல்
46 (திருச்செந்தூர்)
ராகம்
- ஸஹானா / திலங்; தாளம் - ஆதி கண்டநடை (20)
தானனா
தந்தனம் தானனா தந்தனம்
தானனா
தந்தனம் ...... தனதான
காலனார்
வெங்கொடுந் தூதர்பா சங்கொடென்
காலினார்
தந்துடன் ...... கொடுபோகக்
காதலார்
மைந்தருந் தாயரா ருஞ்சுடுங்
கானமே
பின்தொடர்ந் ...... தலறாமுன்
சூலம்வாள்
தண்டுசெஞ் சேவல்கோ தண்டமுஞ்
சூடுதோ
ளுந்தடந் ...... திருமார்பும்
தூயதாள்
தண்டையுங் காணஆர் வஞ்செயுந்
தோகைமேல்
கொண்டுமுன் ...... வரவேணும்
ஆலகா
லம்பரன் பாலதா கஞ்சிடுந்
தேவர்வா
ழன்றுகந் ...... தமுதீயும்
ஆரவா
ரஞ்செயும் வேலைமேல் கண்வளர்ந்
தாதிமா
யன்றனன் ...... மருகோனே
சாலிசேர்
சங்கினம் வாவிசூழ் பங்கயஞ்
சாரலார்
செந்திலம் ...... பதிவாழ்வே
தாவுசூ
ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந்
தாரைவே
லுந்திடும் ...... பெருமாளே.
பாடல்
47 (திருச்செந்தூர்)
ராகம்
- ....; தாளம் -
......
தனன
தானனத் தனதன தனனாத்
தந்தத்
தந்தத் ...... தனதான
குகர
மேவுமெய்த் துறவினின் மறவாக்
கும்பிட்
டுந்தித் ...... தட்முழ்கிக்
குமுத
வாயின்முற் றமுதினை நுகராக்
கொண்டற்
கொண்டைக் ...... குழலாரோ
டகரு
தூளிகர்ப் புரதன இருகோட்
டன்புற்
றின்பக் ...... கடலுடே
அமிழு
வேனைமெத் தெனவொரு கரைசேர்த்
தம்பொற்
றண்டைக் ...... கழல்தாராய்
ககன
கோளகைக் கணவிரு மளவாக்
கங்கைத்
துங்கப் ...... புனலாடும்
கமல
வாதனற் களவிட முடியாக்
கம்பர்க்
கொன்றைப் ...... புகல்வோனே
சிகர
கோபுரத் தினுமதி ளினுமேற்
செம்பொற்
கம்பத் ...... தளமீதும்
தெருவி
லேயுநித் திலமெறி யலைவாய்ச்
செந்திற்
கந்தப் ...... பெருமாளே.
பாடல்
48 (திருச்செந்தூர்)
ராகம்
- குந்தல வராளி ; தாளம் - அங்கதாளம் (14 1/2)
தகதிமி-2,
தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2,
தகதிமி-2,
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2
தனதன
தந்த தனதன தந்த
தனதன
தந்த ...... தானாந்தனனா
குடர்நிண
மென்பு சலமல மண்டு
குருதிந
ரம்பு ...... சீயூன் பொதிதோல்
குலவு
குரம்பை முருடு சுமந்து
குனகிம
கிழ்ந்து ...... நாயேன் தளரா
அடர்மத
னம்பை யனையக ருங்க
ணரிவையர்
தங்கள் ...... தோடோ ய்ந் தயரா
அறிவழி
கின்ற குணமற வுன்றன்
அடியிணை
தந்து ...... நீயாண் டருள்வாய்
தடவியல்
செந்தில் இறையவ நண்பு
தருகுற
மங்கை ...... வாழ்வாம் புயனே
சரவண
கந்த முருகக டம்ப
தனிமயில்
கொண்டு ...... பார்சூழ்ந் தவனே
சுடர்படர்
குன்று தொளைபட அண்டர்
தொழவொரு
செங்கை ...... வேல்வாங் கியவா
துரிதப
தங்க இரதப்ர சண்ட
சொரிகடல்
நின்ற ...... சூராந் தகனே.
பாடல்
49 (திருச்செந்தூர்)
ராகம்
- ....; தாளம் -
......
தனத்தந்தம்
தனத்தந்தம்
தனத்தந்தம்
தனத்தந்தம்
தனத்தந்தம்
தனத்தந்தம் ...... தனதானா
குழைக்குஞ்சந்
தனச்செங்குங்
குமத்தின்சந்
தநற்குன்றங்
குலுக்கும்பைங்
கொடிக்கென்றிங்
...... கியலாலே
குழைக்குங்குண்
குமிழ்க்குஞ்சென்
றுரைக்குஞ்செங்
கயற்கண்கொண்
டழைக்கும்பண்
தழைக்குஞ்சிங் ......
கியராலே
உழைக்குஞ்செங்
கடத்துன்பன்
சுகப்பண்டஞ்
சுகித்துண்டுண்
டுடற்பிண்டம்
பருத்தின்றிங் ......
குழலாதே
உதிக்குஞ்செங்
கதிர்ச்சிந்தும்
ப்ரபைக்கொன்றுஞ்
சிவக்குந்தண்
டுயர்க்குங்கிண்
கிணிச்செம்பஞ் ......
சடிசேராய்
தழைக்குங்கொன்
றையைச்செம்பொன்
சடைக்கண்டங்
கியைத்தங்குந்
தரத்தஞ்செம்
புயத்தொன்றும் ......
பெருமானார்
தனிப்பங்கின்
புறத்தின்செம்
பரத்தின்பங்
கயத்தின்சஞ்
சரிக்குஞ்சங்
கரிக்கென்றும் ......
பெருவாழ்வே
கழைக்குங்குஞ்
சரக்கொம்புங்
கலைக்கொம்புங்
கதித்தென்றுங்
கயற்கண்பண்
பளிக்குந்திண் ......
புயவேளே
கறுக்குங்கொண்
டலிற்பொங்குங்
கடற்சங்கங்
கொழிக்குஞ்செந்
திலிற்கொண்டன்
பினிற்றங்கும் ......
பெருமாளே.
பாடல்
50 (திருச்செந்தூர்)
ராகம்
- .....; தாளம் -
தந்ததன
தந்ததன தந்ததன தந்ததன
தந்ததன
தந்ததன ...... தந்ததான
கொங்கைகள்கு
லுங்கவளை செங்கையில்வி ளங்கஇருள்
கொண்டலைய
டைந்தகுழல் ...... வண்டுபாடக்
கொஞ்சியவ
னங்குயில்கள் பஞ்சநல்வ னங்கிளிகள்
கொஞ்சியதெ
னுங்குரல்கள் ...... கெந்துபாயும்
வெங்கயல்மி
ரண்டவிழி அம்புலிய டைந்தநுதல்
விஞ்சையர்கள்
தங்கள்மயல் ...... கொண்டுமேலாய்
வெம்பிணியு
ழன்றபவ சிந்தனைநி னைந்துனது
மின்சரண
பைங்கழலொ ...... டண்டஆளாய்
சங்கமுர
சந்திமிலை துந்தமித தும்பவளை
தந்தனத
னந்தவென ...... வந்தசூரர்
சங்கைகெட
மண்டிதிகை யெங்கிலும டிந்துவிழ
தண்கடல்கொ
ளுந்தநகை ...... கொண்டவேலா
சங்கரனு
கந்தபரி வின்குருவெ னுஞ்சுருதி
தங்களின்ம
கிழ்ந்துருகு ...... மெங்கள்கோவே
சந்திரமு
கஞ்செயல்கொள் சுந்தரகு றம்பெணொடு
சம்புபுகழ்
செந்தில்மகிழ் ......
தம்பிரானே.
பாடல்
51 (திருச்செந்தூர்)
ராகம்
- .....; தாளம் -
......
தந்தத்
தனனத் தந்தத் தனனத்
தந்தத்
தனனத் ...... தனதானா
கொங்கைப்
பணையிற் செம்பொற் செறிவிற்
கொண்டற்
குழலிற் ...... கொடிதான
கொன்றைக்
கணையொப் பந்தக் கயலிற்
கொஞ்சுக்
கிளியுற் ...... றுறவான
சங்கத்
தொனியிற் சென்றிற் கடையிற்
சந்திப்
பவரைச் ...... சருவாதே
சந்தப்
படியுற் றென்றற் றலையிற்
சந்தப்
பதம்வைத் ...... தருள்வாயே
அங்கப்
படைவிட் டன்றைப் படுகைக்
கந்திக்
கடலிற் ...... கடிதோடா
அந்தப்
பொழிலிற் சந்துத் தலையுற்
றஞ்சப்
பொருதுற் ...... றொழியாதே
செங்கைக்
கதிருற் றொன்றக் கடலிற்
சென்றுற்
றவர்தற் ...... பொருளானாய்
சிந்தைக்
கனிவைத் தந்தப் பொழிலிற்
செந்திற்
குமரப் ...... பெருமாளே.
பாடல்
52 (திருச்செந்தூர்)
ராகம்
- .....; தாளம் -
.......
தனதனன
தனதனன தந்தனந் தந்தனம்
தனதனன
தனதனன தந்தனந் தந்தனம்
தனதனன
தனதனன தந்தனந் தந்தனம் ...... தந்ததானா
கொடியனைய
இடைதுவள அங்கமும் பொங்கஅங்
குமுதஅமு
திதழ்பருகி யின்புறுஞ் சங்கையன்
குலவியணை
முகிலளக முஞ்சரிந் தன்பினின் ...... பண்புலாவக்
கொடியவிரல்
நகநுதியில் புண்படுஞ் சஞ்சலன்
குனகியவ
ருடனினிது சம்ப்ரமங் கொண்டுளங்
குரலழிய
அவசமுறு குங்குணன் கொங்கவிழ்ந் ...... தொன்றுபாய்மேல்
விடமனைய
விழிமகளிர் கொங்கையின் பன்புறும்
வினையனியல்
பரவுமுயிர் வெந்தழிந் தங்கமும்
மிதமொழிய
அறிவில்நெறி பண்பிலண் டுஞ்சகன் ...... செஞ்செநீடும்
வெகுகனக
வொளிகுலவும் அந்தமன் செந்திலென்
றவிழவுள
முருகிவரும் அன்பிலன் தந்திலன்
விரவுமிரு
சிறுகமல பங்கயந் தந்துகந் ...... தன்புறாதோ
படமிலகும்
அரவினுடல் அங்கமும் பங்கிடந்
துதறுமொரு
கலபிமிசை வந்தெழுந் தண்டர்தம்
பகையசுர
ரனைவருடல் சந்துசந் துங்கதஞ் ...... சிந்தும்வேலா
படியவரும்
இமையவரும் நின்றிறைஞ் செண்குணன்
பழையஇறை
யுருவமிலி அன்பர்பங் கன்பெரும்
பருவரல்செய்
புரமெரிய விண்டிடுஞ் செங்கணண் ...... கங்கைமான்வாழ்
சடிலமிசை
அழகுபுனை கொன்றையும் பண்புறுந்
தருணமதி
யினகுறைசெய் துண்டமுஞ் செங்கையொண்
சகலபுவ
னமுமொழிக தங்குறங் கங்கியும் ...... பொங்கிநீடும்
சடமருவு
விடையரவர் துங்கஅம் பங்கினின்
றுலகுதரு
கவுரியுமை கொங்கைதந் தன்புறுந்
தமிழ்விரக
உயர்பரம சங்கரன் கும்பிடுந் ...... தம்பிரானே.
பாடல்
53 (திருச்செந்தூர்)
ராகம்
- கரஹரப்ரியா; தாளம் - சதுஸ்ர ரூபகம் (6) (ஏடுப்பு 3/4 இடம்)
தந்தன
தானான தானன
தந்தன
தானான தானன
தந்தன
தானான தானன ...... தனதான
கொம்பனை
யார்காது மோதிரு
கண்களி
லாமோத சீதள
குங்கும
பாடீர பூஷண ...... நகமேவு
கொங்கையி
னீராவி மேல்வளர்
செங்கழு
நீர்மாலை சூடிய
கொண்டையி
லாதார சோபையில் ...... மருளாதே
உம்பர்கள்
ஸ்வாமி நமோநம
எம்பெரு
மானே நமோநம
ஒண்டொடி
மோகா நமோநம ...... எனநாளும்
உன்புக
ழேபாடி நானினி
அன்புட
னாசார பூசைசெய்
துய்ந்திட
வீணாள்ப டாதருள் ...... புரிவாயே
பம்பர
மேபோல ஆடிய
சங்கரி
வேதாள நாயகி
பங்கய
சீபாத நூபுரி ...... கரசூலி
பங்கமி
லாநீலி மோடிப
யங்கரி
மாகாளி யோகினி
பண்டுசு
ராபான சூரனொ ...... டெதிர்போர்கண்
டெம்புதல்
வாவாழி வாழியெ
னும்படி
வீறான வேல்தர
என்றுமு
ளானேம நோகர ...... வயலுரா
இன்சொல்வி
சாகாக்ரு பாகர
செந்திலில்
வாழ்வாகி யேயடி
யென்றனை
யீடேற வாழ்வருள் ...... பெருமாளே.
பாடல்
54 (திருச்செந்தூர்)
ராகம்
- ....; தாளம் -
......
தனதன
தனதன தனதன தன
தந்தத்
...... தனதானா
கொலைமத
கரியன ம்ருகமத தனகிரி
கும்பத்
...... தனமானார்
குமுதஅ
முதஇதழ் பருகியு ருகிமயல்
கொண்டுற்
...... றிடுநாயேன்
நிலையழி
கவலைகள் கெடவுன தருள்விழி
நின்றுற்
...... றிடவேதான்
நினதிரு
வடிமல ரிணைமன தினிலுற
நின்பற்
...... றடைவேனோ
சிலையென
வடமலை யுடையவர் அருளிய
செஞ்சொற்
...... சிறுபாலா
திரைகட
லிடைவரும் அசுரனை வதைசெய்த
செந்திற்
...... பதிவேலா
விலைநிகர்
நுதலிப மயில்குற மகளும்வி
ரும்பிப்
...... புணர்வோனே
விருதணி
மரகத மயில்வரு குமரவி
டங்கப்
...... பெருமாளே.
பாடல்
55 (திருச்செந்தூர்)
ராகம்
- .....;தாளம் -
......
தந்தனா
தந்தனத் தந்தனா தந்தனத்
தந்தனா
தந்தனத் ...... தனதான
சங்குபோல்
மென்கழுத் தந்தவாய் தந்தபற்
சந்தமோ
கின்பமுத் ...... தெனவானிற்
றங்குகார்
பைங்குழற் கொங்கைநீள் தண்பொருப்
பென்றுதாழ்
வொன்றறுத் ...... துலகோரைத்
துங்கவேள்
செங்கைபொற் கொண்டல்நீ யென்றுசொற்
கொண்டுதாய்
நின்றுரைத் ...... துழலாதே
துன்பநோய்
சிந்தநற் கந்தவே ளென்றுனைத்
தொண்டினா
லொன்றுரைக் ...... கருள்வாயே
வெங்கண்வ்யா
ளங்கொதித் தெங்கும்வெ மென்றெடுத்
துண்டுமே
லண்டருக் ...... கமுதாக
விண்டநா
தன்திருக் கொண்டல்பா கன்செருக்
குண்டுபே
ரம்பலத் ...... தினிலாடி
செங்கண்மால்
பங்கயக் கண்பெறா தந்தரத்
தின்கணா
டுந்திறற் ...... கதிராழித்
திங்கள்வா
ழுஞ்சடைத் தம்பிரா னன்புறச்
செந்தில்வாழ்
செந்தமிழ்ப் ...... பெருமாளே.
பாடல்
56 (திருச்செந்தூர்)
ராகம்
- ......; தாளம் -
.......
தந்தனா
தந்தனா தந்தனா தந்தனா
தந்தனா
...... தந்ததான
சங்கைதா
னொன்றுதா னின்றியே நெஞ்சிலே
சஞ்சலா
...... ரம்பமாயன்
சந்தொடே
குங்குமா லங்க்ருதா டம்பரா
சம்ப்ரமா
...... நந்தமாயன்
மங்கைமார்
கொங்கைசே ரங்கமோ கங்களால்
வம்பிலே
...... துன்புறாமே
வண்குகா
நின்செர்ரு பம்ப்ரகா சங்கொடே
வந்துநீ
...... யன்பிலாள்வாய்
கங்கைசூ
டும்பிரான் மைந்தனே அந்தனே
கந்தனே
...... விஞ்சையூரா
கம்பியா
திந்த்ரலோ கங்கள்கா வென்றவா
கண்டலே
...... சன்சொல்வீரா
செங்கைவேல்
வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
சென்றுமோ
...... தும்ப்ரதாபா
செங்கண்மால்
பங்கஜா னன்தொழா நந்தவேள்
செந்தில்வாழ்
...... தம்பிரானே.
பாடல்
57 (திருச்செந்தூர்)
ராகம்
- ....; தாளம் -
......
தத்ததன
தானதன தத்தான
தத்ததன
தானதன தத்தான
தத்ததன
தானதன தத்தான ...... தனதான
சத்தமிகு
மேழுகட லைத்தேனை
யுற்றமது
தோடுகணை யைப்போர்கொள்
சத்திதனை
மாவின்வடு வைக்காவி ...... தனைமீறு
தக்கமணம்
வீசுகம லப்பூவை
மிக்கவிளை
வானகடு வைச்சீறு
தத்துகளும்
வாளையடு மைப்பாவு ...... விழிமாதர்
மத்தகிரி
போலுமொளிர் வித்தார
முத்துவட
மேவுமெழில் மிக்கான
வச்சிரகி
ணடநிகர்
செப்பான ...... தனமீதே
வைத்தகொடி
தானமயல் விட்டான
பத்திசெய
ஏழையடி மைக்காக
வஜ்ரமயில்
மீதிலினி யெப்போது ...... வருவாயே
சித்ரவடி
வேல்பனிரு கைக்கார
பத்திபுரி
வோர்கள்பனு வற்கார
திக்கினுந
டாவுபுர விக்கார ...... குறமாது
சித்தஅநு
ராககல விக்கார
துட்டஅசு
ரேசர்கல கக்கார
சிட்டர்பரி
பாலலளி தக்கார ...... அடியார்கள்
முத்திபெற
வேசொல்வச னக்கார
தத்தைநிகர்
தூயவநி தைக்கார
முச்சகர்ப
ராவுசர ணக்கார ...... இனிதான
முத்தமிழை
யாயும்வரி சைக்கார
பச்சைமுகில்
தாவுபுரி சைக்கார
முத்துலவு
வேலைநகர் முத்தேவர் ...... பெருமாளே.
பாடல்
58 (திருச்செந்தூர்)
ராகம்
- .....; தாளம் -
......
தந்ததன
தானதன தத்தான
தந்ததன
தானதன தத்தான
தந்ததன
தானதன தத்தான ...... தனதான
சந்தனச
வாதுநிறை கற்பூர
குங்குமப
டீரவிரை கத்தூரி
தண்புழுக
ளாவுகள பச்சீத ...... வெகுவாச
சண்பகக
லாரவகு ளத்தாம
வம்புதுகி
லாரவயி ரக்கோவை
தங்கியக
டோ ரதர வித்தார ...... பரிதான
மந்த்ரம
தானதன மிக்காசை
கொண்டுபொருள்
தேடுமதி நிட்டூர
வஞ்சகவி
சாரஇத யப்பூவை ...... யனையார்கள்
வந்தியிடு
மாயவிர கப்பார்வை
அம்பிலுளம்
வாடுமறி வற்றேனை
வந்தடிமை
யாளஇனி யெப்போது ...... நினைவாயே
இந்த்ரபுரி
காவல்முதன் மைக்கார
சம்ப்ரமம
யூரதுர கக்கார
என்றுமக
லாதஇள மைக்கார ...... குறமாதின்
இன்பஅநு
போகசர சக்கார
வந்தஅசு
ரேசர்கல கக்கார
எங்களுமை
சேயெனரு மைக்கார ...... மிகுபாவின்
செந்தமிழ்சொல்
நாலுகவி தைக்கார
குன்றெறியும்
வேலின்வலி மைக்கார
செஞ்சொலடி
யார்களெளி மைக்கார ...... எழில்மேவும்
திங்கள்முடி
நாதர்சம யக்கார
மந்த்ரவுப
தேசமகி மைக்கார
செந்தினகர்
வாழுமரு மைத்தேவர் ...... பெருமாளே.
பாடல்
59 (திருச்செந்தூர்)
ராகம்
- சுருட்டி; தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)
தகிட-1
1/2, தகதிமி-2
தானத்
தானன தானத் தானன
தானத்
தானன ...... தந்ததான
சேமக்
கோமள பாதத் தாமரை
சேர்தற்
கோதும ...... நந்தவேதா
தீதத்
தேயவி ரோதத் தேகுண
சீலத்
தேமிக ...... அன்புறாதே
காமக்
ரோதவு லோபப் பூதவி
காரத்
தேயழி ...... கின்றமாயா
காயத்
தேபசு பாசத் தேசிலர்
காமுற்
றேயும ...... தென்கொலோதான்
நேமிச்
சூரொடு மேருத் தூளெழ
நீளக்
காளபு ...... யங்ககால
நீலக்
ணபக
லாபத் தேர்விடு
நீபச்
சேவக ...... செந்தில்வாழ்வே
ஓமத்
தீவழு வார்கட் கூர்சிவ
லோகத்
தேதரு ...... மங்கைபாலா
யோகத்
தாறுப தேசத் தேசிக
வூமைத்
தேவர்கள் ...... தம்பிரானே.
பாடல்
60 (திருச்செந்தூர்)
ராகம்
- ....; தாளம் -
.......
தனதனன
தாந்த தந்தத்
தனதனன
தாந்த தந்தத்
தனதனன
தாந்த தந்தத் ...... தனதான
தகரநறை
பூண்ட விந்தைக்
குழலியர்கள்
தேய்ந்த இன்பத்
தளருமிடை
யேந்து தங்கத் ...... தனமானார்
தமைமனதில்
வாஞ்சை பொங்கக்
கலவியொடு
சேர்ந்து மந்த்ரச்
சமயஜெப
நீங்கி யிந்தப் ...... படிநாளும்
புகலரிய
தாந்த்ரி சங்கத்
தமிழ்பனுவ
லாய்ந்து கொஞ்சிப்
புவியதனில்
வாழ்ந்து வஞ்சித் ...... துழல்மூடர்
புநிதமிலி
மாந்தர் தங்கட்
புகழ்பகர்தல்
நீங்கி நின்பொற்
புளகமலர்
பூண்டு வந்தித் ...... திடுவேனோ
தகுடதகு
தாந்த தந்தத்
திகுடதிகு
தீந்த மிந்தித்
தகுகணக
தாங்க ணங்கத் ...... தனதான
தனனதன
தாந்த னந்தத்
தெனநடன
மார்ந்த துங்கத்
தனிமயிலை
யூர்ந்த சந்தத் ...... திருமார்பா
திசையசுரர்
மாண்ட ழுந்தத்
திறலயிலை
வாங்கு செங்கைச்
சிமையவரை
யீன்ற மங்கைக் ...... கொருபாலா
திகழ்வயிர
மேந்து கொங்கைக்
குறவனிதை
காந்த சந்த்ரச்
சிகரமுகி
லோங்கு செந்திற் ...... பெருமாளே.
பாடல்
61 (திருச்செந்தூர்)
ராகம்
- பீம்பளாஸ்; தாளம் - ஆதி - திஸ்ர நடை (12)
(எடுப்பு
- அதீதம்)
தந்தா
தந்தா தந்தா தந்தா
தந்தா
தந்தத் ...... தனதான
தண்டே
னுண்டே வண்டார் வஞ்சேர்
தண்டார்
மஞ்சுக் ...... குழல்மானார்
தம்பா
லன்பார் நெஞ்சே கொண்டே
சம்பா
வஞ்சொற் ...... றடிநாயேன்
மண்டோ
யந்தீ மென்கால் விண்டோ ய்
வண்கா
யம்பொய்க் ...... குடில்வேறாய்
வன்கா
னம்போ யண்டா முன்பே
வந்தே
நின்பொற் ...... கழல்தாராய்
கொண்டா
டும்பேர் கொண்டா டுஞ்சூர்
கொன்றாய்
வென்றிக் ...... குமரேசா
கொங்கார்
வண்டார் பண்பா டுஞ்சீர்
குன்றா
மன்றற் ...... கிரியோனே
கண்டா
கும்பா லுண்டா யண்டார்
கண்டா
கந்தப் ...... புயவேளே
கந்தா
மைந்தா ரந்தோள் மைந்தா
கந்தா
செந்திற் ...... பெருமாளே.
பாடல்
62 (திருச்செந்தூர்)
ராகம்
- ஸிம்மேந்திர மத்யமம் / தந்யாஸி
தாளம்
- கண்டசாபு (2 1/2)
தந்ததன
தந்தனந் தந்ததன தந்தனந்
தந்ததன
தந்தனந் ...... தந்ததானா
தண்டையணி
வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி
லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை
முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம
ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக
டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர்
செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு
கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர
என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர்
அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ
வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ
னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர்
தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட
னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட
னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற
மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி
கும்பிடுந் ...... தம்பிரானே.
பாடல்
63 (திருச்செந்தூர்)
ராகம்
- ஆரபி; தாளம் - ஆதி
தந்த
தனதனன தந்த தனதனன
தந்த
தனதனன ...... தனதானா
தந்த
பசிதனைய றிந்து முலையமுது
தந்து
முதுகுதட ...... வியதாயார்
தம்பி
பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை
மருகருயி ...... ரெனவேசார்
மைந்தர்
மனைவியர்க டும்பு கடனுதவு
மந்த
வரிசைமொழி ...... பகர்கோடா
வந்து
தலைநவிர விழ்ந்து தரைபுகம
யங்க
வொருமகிட ...... மிசையேறி
அந்த
கனுமெனைய டர்ந்து வருகையினி
லஞ்ச
லெனவலிய ...... மயில்மேல்நீ
அந்த
மறலியொடு கந்த மனிதனம
தன்ப
னெனமொழிய ...... வருவாயே
சிந்தை
மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து
பயமயிலு ...... மயில்வீரா
திங்க
ளரவுநதி துன்று சடிலரருள்
செந்தி
னகரிலுறை ...... பெருமாளே.
பாடல்
64 (திருச்செந்தூர்)
ராகம்
- ஆபோகி; தாளம் - சதுஸ்ர ஏகம் - மிஸ்ர நடை (14)
(எடுப்பு
- அதீதம்)
தனத்தந்தன
தனத்தந்தன
தனத்தந்தன
...... தனதானத்
தரிக்குங்கலை
நெகிழ்க்கும்பர
தவிக்குங்கொடி
...... மதனேவிற்
றகைக்குந்தனி
திகைக்குஞ்சிறு
தமிழ்த்தென்றலி
...... னுடனேநின்
றெரிக்கும்பிறை
யெனப்புண்படு
மெனப்புன்கவி
...... சிலபாடி
இருக்குஞ்சிலர்
திருச்செந்திலை
யுரைத்துய்ந்திட
...... அறியாரே
அரிக்குஞ்சதுர்
மறைக்கும்பிர
மனுக்குந்தெரி
...... வரிதான
அடிச்செஞ்சடை
முடிக்கொண்டிடு
மரற்கும்புரி
...... தவபாரக்
கிரிக்கும்பநன்
முநிக்குங்க்ருபை
வரிக்குங்குரு
...... பரவாழ்வே
கிளைக்குந்திற
லரக்கன்கிளை
கெடக்கன்றிய
...... பெருமாளே.
பாடல்
65 (திருச்செந்தூர்)
ராகம்
- பைரவி; தாளம் - திஸ்ர த்ருபுடை (7)
தந்தந்தந்
தந்தன தந்தன
தந்தந்தந்
தந்தன தந்தன
தந்தந்தந்
தந்தன தந்தன ...... தனதான
துன்பங்கொண்
டங்க மெலிந்தற
நொந்தன்பும்
பண்பு மறந்தொளி
துஞ்சும்பெண்
சஞ்சல மென்பதி ...... லணுகாதே
இன்பந்தந்
தும்பர் தொழும்பத
கஞ்சந்தந்
தஞ்ச மெனும்படி
யென்றென்றுந்
தொண்டு செயும்படி ...... யருள்வாயே
நின்பங்கொன்
றுங்குற மின்சர
ணங்கண்டுந்
தஞ்ச மெனும்படி
நின்றன்பின்
றன்படி கும்பிடு ...... மிளையோனே
பைம்பொன்சிந்
தின்றுறை தங்கிய
குன்றெங்குஞ்
சங்கு வலம்புரி
பம்புந்தென்
செந்திலில் வந்தருள் ...... பெருமாளே.
பாடல்
66 (திருச்செந்தூர்)
ராகம்
- ....; தாளம் -
......
தனத்த
தத்தத் தனத்தனா
தனத்த
தத்தத் தனத்தனா
தனத்த
தத்தத் தனத்தனா ...... தந்ததானா தனனா
தெருப்பு
றத்துத் துவக்கியாய்
முலைக்கு
வட்டைக் குலுக்கியாய்
சிரித்து
ருக்கித் தருக்கியே ...... பண்டைகூள மெனவாழ்
சிறுக்கி
ரட்சைக் கிதக்கியாய்
மனத்தை
வைத்துக் கனத்தபேர்
தியக்க
முற்றுத் தவிக்கவே ...... கண்டுபேசி யுடனே
இருப்ப
கத்துத் தளத்துமேல்
விளக்கெ
டுத்துப் படுத்துமே
லிருத்தி
வைத்துப் பசப்பியே ...... கொண்டுகாசு தணியா
திதுக்க
துக்குக் கடப்படா
மெனக்கை
கக்கக் கழற்றியே
இளைக்க
விட்டுத் துரத்துவார் ...... தங்கள்சேர்வை தவிராய்
பொருப்பை
யொக்கப் பணைத்ததோ
ரிரட்டி
பத்துப் புயத்தினால்
பொறுத்த
பத்துச் சிரத்தினால் ...... மண்டுகோப முடனே
பொரப்பொ
ருப்பிற் கதித்தபோ
ரரக்கர்
பட்டுப் பதைக்கவே
புடைத்து
முட்டத் துணித்தமா ...... லன்புகூரு மருகா
வரப்பை
யெட்டி குதித்துமே
லிடத்தில்
வட்டத் தளத்திலே
மதர்த்த
முத்தைக் குவட்டியே ...... நின்றுசேலி னினம்வாழ்
வயற்பு
றத்துப் புவிக்குள்நீள்
திருத்த
ணிக்குட் சிறப்பில்வாழ்
வயத்த
நித்தத் துவத்தனே ...... செந்தில்மேவு குகனே.
பாடல்
67 (திருச்செந்தூர்)
ராகம்
- .....; தாளம் -
.......
தனதன
தந்தாத் தந்தத்
தனதன
தந்தாத் தந்தத்
தனதன
தந்தாத் தந்தத் ...... தனதான
தொடரிய
மன்போற் றுங்கப்
படையைவ
ளைந்தோட் டுந்துட்
டரையிள
குந்தோட் கொங்கைக் ...... கிடுமாயத்
துகில்விழ
வுஞ்சேர்த் தங்கத்
துளைவிர
குஞ்சூழ்த் தண்டித்
துயர்விளை
யுஞ்சூட் டின்பத் ...... தொடுபாயற்
கிடைகொடு
சென்றீட் டும்பொற்
பணியரை
மென்றேற் றங்கற்
றனையென
இன்றோட் டென்றற் ...... கிடுமாதர்க்
கினிமையி
லொன்றாய்ச் சென்றுட்
படுமன
முன்றாட் கன்புற்
றியலிசை
கொண்டேத் தென்றுட் ...... டருவாயே
நெடிதுத
வங்கூர்க் குஞ்சற்
புருடரும்
நைந்தேக் கம்பெற்
றயர்வுற
நின்றார்த் தங்கட் ...... கணையேவும்
நிகரில்ம
தன்தேர்க் குன்றற்
றெரியில்வி
ழுந்தேர்ப் பொன்றச்
சிறிதுநி
னைந்தாட் டங்கற் ...... றிடுவார்முன்
திடமுறு
அன்பாற் சிந்தைக்
கறிவிட
முஞ்சேர்த் தும்பர்க்
கிடர்களை
யும்போர்ச் செங்கைத் ...... திறல்வேலா
தினவரி
வண்டார்த் தின்புற்
றிசைகொடு
வந்தேத் திஞ்சித்
திருவளர்
செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே.
பாடல்
68 (திருச்செந்தூர்)
ராகம்
- தோடி/அடாணா
தாளம்
- அங்தாளம் (7 1/2) (ஆதி தாளத்திலும் பாடுவதுண்டு)
தகிட-1
1/2, தகிட-1 1/2, தகதா-2,
தகிடதக-2
1/2
தந்த
தனன தனனா தனனதன
தந்த
தனன தனனா தனனதன
தந்த
தனன தனனா தனனதன ...... தனதான
தொந்தி
சரிய மயிரே வெளிறநிரை
தந்த
மசைய முதுகே வளையஇதழ்
தொங்க
வொருகை தடிமேல் வரமகளிர் ...... நகையாடி
தொண்டு
கிழவ னிவனா ரெனஇருமல்
கிண்கி
ணெனமு னுரையே குழறவிழி
துஞ்சு
குருடு படவே செவிடுபடு ...... செவியாகி
வந்த
பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி
தனுமெ யுறுவே தனையுமிள
மைந்த
ருடைமை கடனே தெனமுடுக ...... துயர்மேவி
மங்கை
யழுது விழவே யமபடர்கள்
நின்று
சருவ மலமே யொழுகவுயிர்
மங்கு
பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும்
எந்தை
வருக ரகுநா யகவருக
மைந்த
வருக மகனே யினிவருக
என்கண்
வருக எனதா ருயிர்வருக ...... அபிராம
இங்கு
வருக அரசே வருகமுலை
யுண்க
வருக மலர்சூ டிடவருக
என்று
பரிவி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்
சிந்தை
மகிழு மருகா குறவரிள
வஞ்சி
மருவு மழகா அமரர்சிறை
சிந்த
அசுரர் கிளைவே ரொடுமடிய ...... அடுதீரா
திங்க
ளரவு நதிசூ டியபரமர்
தந்த
குமர அலையே கரைபொருத
செந்தி
னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே.