சோமேசர் முதுமொழி வெண்பா (ஆசிரியர் : சிவஞான முனிவர்)
சோமேசர் முதுமொழி வெண்பா
(ஆசிரியர் : சிவஞான முனிவர்)
அதிகாரத்திற்கு ஒன்றாக 133 திருக்குறளை உள்ளீடுகொண்ட நீதி நூல்
காப்பு
மதுவளரும் பூஞ்சடில மல்குசோ மேசர்முதுமொழி வெண்பாவை மொழியப் - பொதுளும்மடம் பிடுங்கி அன்பர்க்கு வான்வீ டளிக்குங்கடம்பொழி முக்கட் களிறு.1. கடவுள் வாழ்த்துசீர்கொளிறை ஒன்றுண்டத் தெய்வநீ என்றொப்பாற்சோரவிலடை யாற்றௌிந் தோஞ் சோமேசா - ஓரில்அகர முதல எழுத்தெல்லா மாதிபகவன் முதற்றே உலகு2. வான்சிறப்புநேய புகழ்த்தணையார் நீராட்டுங் கைதளர்ந்துன்துயமுடி மேல்வீழ்ந்தார் சோமேசா - ஆயுங்கால்தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்வானம் வழங்கா தெனின்.3. நீத்தார் பெருமைஅத்திரவாக் காற்புத்தன் சென்னியறுத் தார்செண்பைச்சுத்தனார் தம்மன்பர் சோமேசா - நித்தம்நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்.4. அறன்வலியுறுத்தல்தக்கனார் வேள்வித் தவத்தைமேற் கொண்டிருந்துந்தொக்கவற மாயிற்றோ சோமேசா - மிக்கஅழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்ற தறம்.5. இல்வாழ்க்கைஇல்வாழ் தரும னியற்சந் திரசேனன்தொல்வார்த்தை கீழ்ப்படுத்தான் சோமேசா - நல்லஇயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாரு ளெல்லாந் தலை.6. வாழ்கைத்துணை நலம்மூவர் தடுப்பவுங்கொண் மூவைப் பணிகொண்டாள்தூய அனுசுயை சோமேசா - மேவுபிறதெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும் மழை.7. புதல்வரைபெறுதல்பாடினர்மூ வாண்டினிற்சம் பந்தரென யாவோருஞ்சூடுமகிழ்ச்சி மெய்யே சோமேசா - நாடியிடில்தம்மின்தம் மக்க ளறிவுடைமை மாநிலத்துமன்னுயிர்க் கெல்லா மினிது.8. அன்புடைமைதோன்றா வகைகரந்துந் தோன்றலைக்கண் டுண்ணமகிழ்ந்துதோன்றநின்றான் முன்புநளன் சோமேசா - தோன்று கின்றஅன்பிற்கும் உண்டோ அடைக்குந்தா ழார்வலர்புன்கணீர் பூசல் தரும்.9. விருந்தோம்பல்பொன்னனையா ளன்பருக்கே போனகமீந் துன்னருளாற்சொன்னமிகப் பெற்றாளே சோமேசா - பன்னில்வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கைபருவந்து பாழ்படுத லின்று.10. இனிவை கூறல்இன்சொ லிராம னியம்பவி ரேணுகைசேய்துன்பமொழி யே புகன்றான் சோமேசா - அன்புடையஇன்சொ லினிதீன்றல் காண்பா னெவன்கொலோவன்சொல் வழங்கு வது.11. செய்நன்றி அறிதல்பன்னும் அசதிநன்றி பாராட்டிக் கோவைநூல்சொன்னாளே ஔவை முன்பு சோமேசா - மன்னாத்தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாய்த்கொள்வர் பயன்தெரி வார்.12. நடுவு நிலைமைவேதிய னாளாமேஎன் றெள்ளாது வெண்ணைநல்லூர்ச்சோதிவழக் கேபுகழ்ந்தார் சோமேசா - ஓதிற்சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால்கோடாமை சான்றோர்க் கணி.13. அடக்கமுடைமைஎல்லா முணர்ந்தும் வியாத னியம்பியஅச்சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா - வல்லமையால்யாகாவா ராயிானம் நாகாக்க காவாக்கால்சொகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.14. ஓழுக்கமுடைமைதீயனவே சொல்லுஞ் சிசுபாலன் முன்புகண்ணன்துயதலாச் சொல்லுரையான் சோமேசா - ஆயின்ஓழுக்க முடையவர்க் கொல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்15. பிறனில் விழையாமைஆன்றஎழிற் சீதையைவேட் டைந்நான்கு திண்கரத்தான்தோன்றுபழி மாறிலனே சோமேசா - ஏன்றபகைபாவ மச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.16. பொறையுடைமைஓட்டலஞ்செய் தீமைக்கொ றாதுநம ரென்றுரைத்தார்சுட்டியசீர் மெய்ப்பொருளார் சோமேசா - முட்டஓறுத்தார்க் கொறுநாளை யின்பம் பொறுத்தார்க்குபொன்றுந் துணையும் புகழ்.17. அழுக்காறாமைஅன்பரைக் கண்டழுக்கா றாஞ்சமணர் தம்வாயாற்துன்பமுற்றார் வெங்கழுவிற் சோமேசா - வன்பாம்அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்வழுக்கியுங் கேடீன் பது.18. வெஃகாமைநின்னபிடே கப்பழத்தை நீள்மறையோர்க் கீந்தவிறைதுன்னுகுடி யோடழிந்தான் சோமேசா - பன்னில்நடுவின்றி நன்பொருள் வெஃகிற்குடி பொன்றிக்குற்றமு மாங்கே தரும்.19. புறங்கூறாமைகூனிஇரா மன்பிரிந்து போமாறே கூறினளேதூநறும்பூ கொன்றையணி சோமேசா - தானேபகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தோறா தவர்.20. பயனில சொல்லாமைசேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதெனவேதுக்கியுபதேசித்தார் சோமேசா - நோக்கிற்பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்மக்கட் பதடி யெனல்.21. தீவினையச்சம்குற்றொருவர்க் கூறைகொண்டு கொன்றதிம்மை யேகூடல்சொற்றதுகை கண்டோமே சோமேசா - அற்றான்மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.22. ஒப்புரவறிதல்பண்டைநிலை வெண்ணிநொந் தார்பாகஞ் செய்மாறராந்தொண்டர் மனைவியர் சோமேசா - கண்டோம்நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயுநீர்மைசெய்யா தமைகலா வாறு.23. ஈகைமீளென் றுரைப்பளவு மிக்குவகை பெற்றிலர்வன்தோளர் இயற்பகையார் சோமேசா - நீளுலகில்இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணு மளவு.24. புகழ்போதன் கவிஞருக்கே போதப் பரிந்தளித்துத்தூசிலாக் கீர்த்திகொண்டான் சோமேசா - ஆசையுடன்ஈத லிசைபட வாழ்த லதுவல்லதுஊதிய மில்லை யுயிர்க்கு.25. அருளுடைமைமூர்த்திபால் வன்கண்மை மூண்டவடுகரசன்சூர்த்திறந்தான் உய்ந்தானோ சோமேசா - கூர்த்தபொருளற்றார் பூப்பர் ஓருகால் அருளற்றார்அற்றார்மற் றாத லரிது.26. புலால் மறுத்தல்மச்சஞ் சுமந்துய்ப்ப வானோர் பணிகொண்டான்துச்சனாஞ் சூரபன்மன் சோமேசா - நிச்சயமேதன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுன்பான்எங்ஙனம் ஆளும் அருள்.27. தவம்ஏர்மணநல் லுர்ச்சுடருள் யாருமணு கச்சிலர்தாந்தூரநெறி நின்றயர்ந்தார் சோமேசா - ஓரில்தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனைஅஃதிலார் மேற்கொள் வது.28. கூடாவொழுக்கம்மாயனவ்வே டங்கொண்டே வன்சலந் தரன்கிழத்திதூயநலங் கவர்ந்தான் சோமேசா - ஆயின்வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று.29. கள்ளாமைநாய்வாற் களவினால் ஞாலமிக ழப்பட்டான்தூயனாங் காதிமகன் சோமேசா - வாயதனால்எள்ளாமை வேண்டுவா னென்பான் னெனைத்தொன்றுங்கள்ளமை காக்கதன் நெஞ்சு.30. வாய்மைபிள்ளையுட னுண்ணப் பேசியழைத் தாரன்புதுள்ளுசிறுத் தொண்டர் சோமேசா - உள்ளுங்காற்பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கு மெனின்.31. வெகுளாமைபல்லவர்கோன் வந்து பணியக் கருணைசெய்தார்தொல்லைநெறி வாகீசர் சோமேசா - கொல்லஇணரெரி தோய்வன்ன வின்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.32. இன்னா செய்யாமைபிள்ளையார் வைப்பினிற்றீப் பெய்வித்த மீனவன்றீத்துள்ளுவெப்பு நோயுழந்தான் சோமேசா - எள்ளிப்பிறக்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னாபிற்பகற் றாமே வரும்.33. கொல்லாமைவேந்துமகற் றேர்க்கால் விடலஞ்சி மந்திரிதான்சோர்ந்துதன தாவிவிட்டான் சோமேசா - ஆய்ந்துணர்ந்தோர்தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிதுஇன்னுயிர் நீங்கும் வினை.34.நிலையாமைஆக்கையு மாயிரத்தெட் டண்டங் களுநிலையாத்தூக்கியழிந் தான்சூரன் சோமேசா - நோக்கியிடில்நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்புல்லறி வாண்மை கடை.35. துறவுகோவணமொன் றிச்சிப்பக் கூடினவே பந்தமெல்லாந்தூவணஞ்சேர் மேனியாய் சோமேசா - மேவில்இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமைமயலாகு மற்றும் பெயர்த்து.36.மெய்யுணர்தல்காதிகையா ரைப்பொன்னைக் காட்டவுங்கா மாதிமும்மைச்சோர்விழந்துய்ந் தாரரசர் சோமேசா - ஓருங்காற்காமம் வெகுளி மயக்கம் இவைமுன்றன்நாமங் கெடக்கெடு நோய்.37. அவாவறுத்தல்தாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவதுதூயபிற வாமையொன்றே சோமேசா - வாயதனால்வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும்.38. ஊழ்முன்ன ரமண்மத்து மூண்டரசர் பிச்சைவந்துன்னியது மென்வியப்போ சோமேசா - உன்னுங்காற்பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூ ழுற்றக் கடை.39.இறைமாட்சிபார்சீதை சீலம் பழித்துரைத்துங் காகுத்தன்சோர்வுறமுன் சீறிலனே சோமேசா - தேரிற்செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ் தங்கு முலகு.40. கல்விசம்பந்தர் நாவரசர் பாற்கண்டோஞ் சார்ந்துவப்பதும்பிரிவி னுள்ளுவதுஞ் சோமேசா - நம்பிஉவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்அனைத்தே புலவர் தொழில்.41. கல்லாமைமெய்த்ததிரு வள்ளுவனார் வென்றுயர்ந்தார் கல்விநலந்துய்த்தசங்கத் தார்தாழ்ந்தார் சோமேசா - உய்த்தறியின்மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்கற்றா ரனைத்திலர் பாடு.42. கேள்விஊனுக்கூ னென்னு முரைகண் டுவந்தனரேதூநற்சீர்க் கண்ணப்பர் சோமேசா - ஆனதனாற்கற்றில னாயினுங் கேட்க அஃதொருவர்க்குஒற்கத்தி னூற்றாந் துணை.43. அறிவுடைமைஅன்றமணர் தீவைப்ப அஞ்சியதென் என்னன்மின்துன்றியசீர்ச் சம்பந்தர் சோமேசா - நன்றேயாம்அஞ்சுவ தஞ்சாமைபேதைமை யஞ்சுவதுஅஞ்ச லறிவார் தொழில்.44. குற்றங்கடிதல்ஈரைந் தலையான் அணுகியபின் ஏகலுற்றுச்சூரந் தொலைந்தானே சோமேசா - ஓரின்வருமுன்னார்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்வைத்தூறு போலக் கெடும்.45. பெரியோரைத் துணைகோடல்எத்திறமும் ஏயர்கோன் நட்பாமா றெண்ணணினரேசுத்தநெறி ஆரூரர் சோமேசா - வைத்தஅரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்பேணித் தமராக் கொளல்.46. சிற்றினஞ் சேராமைஅற்காவ மண்மொழி கேட்டல்லலுற்றான் மாறனில்லாள்சொற்கேட்டு நோய்தீர்ந்தான் சோமேசா - தற்காக்கும்நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்அல்லற் படுப்பதூஉ மில்.47.தெரிந்து செயல்வகைசானகியை யிச்சித்துத் தன்னுயிரும் போக்கினனேதூநீ ரிலங்கையர்கோன் சோமேசா - ஆனதனால்ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினைஊக்கா ரறிவுடை யார்.48. வலியறிதல்சக்கரத்தை யேற்பன் சலந்தரனா னென்றெடுத்துத்துக்கமுற்று வீடினனே சோமேசா - ஒக்கும்உடைத்தம் வலியறியா ரூக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்.49. காலமறிதல்வீமனவை முன்மனையை வேட்டானைக் கண்டுமொருதூமொழியே னும்புகலான் சோமேசா - ஆமென்றேஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்தாக்கற்குப் பேருந் தகைத்து.50. இடனறிதல்காட்டு முயலுங் கதக்கரியைக் கொல்லுமாற்தோட்டலர்நீர்க் கச்சியினுட் சோமேசா - நாட்டியிடின்ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கட் போற்றிச் செயின்.51. தெரிந்து தௌிதல்தோரருமா னந்தனைமுன் றேறிப் பழிபூண்டான்சூரியபன் மாவென்பான் சோமேசா - தாரணிமேல்தேரான் பிறனைத் தௌிந்தான் வழிமுறைதீரா விடும்பை தரும்.52. தெரிந்து வினையாடல்தேசிகனாக் கொண்ட சுரரிறைக்குத் தீங்கிழைத்தான்தூசார் துவட்டாச்சேய் சோமேசா - பேசில்எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகு மாந்தர் பலர்.53. சுற்றந்தழால்ஆர்வீ டணனோ டளவளா வாதரக்கன்சோர்விலா வாழ்விழந்தான் சோமேசா - நேரேஅளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்கோடின்றி நீர்நிறைந் தற்று.54. பொச்சாவாமைமுப்புரத்தோர் வேவ உடனிருந்த மூவரேதுப்பினாற் கண்டறிந்தார் சோமேசா - வெப்பால்இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.55. செங்கோன்மைமைந்தனெ னாமலச மஞ்சன் றனைவெறுத்தான்சுந்தரச்செங் கோற்சகரன் சோமேசா - முந்துங்குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்வடுவன்று வேந்தன் றொழில்.56. கொடுங்கோன்மைஏவரில் லாளழுத வன்றேகண் டேக்குற்றார்துய்யகங்கை சேய்முதலோர் சோமேசா - மெய்யேயாம்அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை.57. வெருவந்த செய்யாமைவெய்துரையா லக்கணமே வீந்தான் சிசுபாலன்தொய்யின் முலையுமைபாற் சோமேசா - உய்யாக்கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்நீடின்றி யாங்கே கெடும்.58. கண்ணேட்டம்மாலான் முதலிகழ்ந்த வானவர்தீங் கும்பொறுத்துத்தோலா விடமுண்டாய் சோமேசா - சாலஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.59. ஓற்றாடல்வேதனில்லாள் வீழ்ந்ததிற மீனவற்கு நீதெரித்தாய்சோதிபழி யஞ்சுஞ் சோமேசா - பூதலத்தின்எல்லார்க்கு மெல்லாம் நிகழ்பவை யெஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் றொழில்.60. ஊக்கமுடைமைவெங்கரியைப் பாகரைமுன் வீட்டினா ரேகராய்த்துங்க எறிபத்தர் சோமேசா - அங்கம்பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின்.61. மடியின்மைபொன்மலையின் வேங்கை பொறித்துமீண் டான்சென்னிதொன்மைவலி யாண்மையினாற் சோமேசா - பன்னின்மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தாஅய தெல்லாம் ஒருங்கு.62. ஆள்வினையுடைமைகூற்றுவர் மூவெந்தர் நிலமுங்கைக் கொண்டாரேதோற்றுதா ளாண்மையினாற் சோமேசா - சாற்றும்முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.63. இடுக்கண்ணழியாமைஎன்றுமொரு மீனேவந் தின்மைிக வுந்தளரார்துன்றேர் அதிபத்தர் சோமேசா - மன்றஅடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.64. அமைச்சுகால்சேய் கதிர்சேயை காத்தரசன் நட்புதவித்தூலமுடி சூட்டுவித்தான் சோமேசா - சாலப்பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்லதமைச்சு.65. சொல்வன்மைநித்தியத்து வங்கோட்பான் நித்திரையென் றேமயக்கந்துய்த்தனனாங் கும்பகன்னன் சோமேசா - எத்திறத்தும்ஆக்கமும் கேடு மதனால் வருதலாற்காத்தோம்பற் சொல்லின்கட் சோர்வு66. வினைத்தூய்மைதக்கனுனை யெள்ளிமகஞ் சாடும்போ தெண்ணியெண்ணித்துக்கமுற்றான் ஆவதென்னே சோமேசா - எக்காலும்எற்றென்னிரங்குவ செய்யற்க செய்வானேன்மற்றன்ன செய்யாமை நன்று67. வினைத்திட்பம்செவ்வேளைப் பாலனென எள்ளத் திறலழிந்தான்துவ்வாத வெஞ்சூரன் சோமேசா - அவ்வாறுஉருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்குஅச்சாணி யன்னாருடைத்து.68. வினைச்செயல்வகைவெள்ளிவெற்பை யெண்ணா தெடுப்பனெனவீறெய்தித்துள்ளியழிந் தானரக்கன் சோமேசா - மெள்ளமுடிவு மிடையூறுந் முற்றியாங் கெய்தும்படுபயனும் பார்த்துச் செயல்.69. தூதுதன்துயர் நோக்கான் தனைவிடுத்தோர்க் கேயுறுதிதுன்றமொழிந் தாநிடதன் சோமேசா - என்றும்இறுதி பயப்பினும் எஞ்சா திறைவர்க்குஉறுதி பயப்பதாம் தூது.70. மன்னரைச்சேர்ந்தொழுகல்மாமனா னென்னு மதத்தா லுனையிகழ்ந்துதோமுற்றார் தக்கனார் சோமேசா - வாமேபழைய மெனக்கருதிப் பண்பல்ல செய்யுங்கெழுதகைமை கேடு தரும்.71. குறிப்பறிதல்அப்பூதி யார்மறைத்தும் வாகீச ரக்கரவைத்துப்பானறிந்தனரே சோமேசா - இப்புவியில்ஐயப் படாஅ தகத்த துணர்வானைதெய்வத்தோ டொப்பக் கொளல்.72. அவையறிதல்ஓர்சங்கத் தார்கல்வி யூமைச்சேய்க் குங்காட்டிச்சோர்வுநலந் தேர்ந்தனரே சோமேசா - ஓருங்காற்கற்றறிந்தார்க் கல்வி விளக்குங் கசடறச்சொற்றெறிதல் வல்லா ரகத்து.73. அவையஞ்சாமைவாழ்வாத வூரர் வளவனவை முன்னெதிர்த்துச்சூழ்தே ரரைவென்றார் சோமேசா - தாழ்வகலஆற்றி னளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு.74. நாடுமேல்வளமெல் லாமமைந்தும் வீர மகேந்திரந்தான்தோல்வியுற்று மாய்ந்ததே சோமேசா - ஞாலமிசைஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடு.75. அரண்வல்லதிகன் றன்னரணம் வான்வளவன் சேனைசெலத்தொல்லைவலி மாண்டதே சோமேசா - நல்லஎனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்க ணில்லா தரண்.76. பொருள் செயல்வகைஉக்கிரனார் மேருவைவென் றொண்ணிதியம் பெற்றமையாற்றொக்ககுடி காத்தனர்காண் சோமேசா - மிக்குயர்ந்தகுன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்றுண்டாகச் செய்வான் வினை.77. படைமாட்சிநீநகைப்ப முப்புரமு மீறாகி மாய்ந்ததேதூநகையாள் பாலமருஞ் சோமேசா - வானின்ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகைநாக முயிர்ப்பக் கெடும்.78. படைசெருக்குமன்மதனின் னோடெதிர்த்து வீறழிந்து மாண்டாலுந்துன்னுபுக ழேபெற்றான் சோமேசா - புன்னெருங்குங்கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவே லேந்த லினிது.79. நட்புவாக்கரசர் பிள்ளா யெனவலித்து மாற்றலுற்றார்தூக்குபிள்ளை யார்செலவைச் சோமேசா - நோக்கிநகுதற் பொருட்டன்று நட்டலா மிகுதிக்கண்மேற்சென் றிடித்தற் பொருட்டு.80. நட்பாராய்தல்போற்றுஞ் சுசீலன் புயபெலனை நீத்தகன்றான்தோற்றிறைவி தும்மிடவுஞ் சோமேசா - ஏற்றதேஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்கேண்மை யொரீஇ விடல்.81. பழைமைஇல்லாளைப் பற்றிமூழ் கென்றிடவும் அன்புகுன்றார்தொல்லைநெறி நீலகண்டர் சோமேசா - ஒல்லாதுஅழிவந்த செய்யினும் அன்பறா ரன்பின்வழிவந்த கேண்மை யவர்.82. தீநட்புஆங்கா ரியந்தடுத்த அங்கனைசொற் கேட்டிறந்தான்தூங்காத் தசரதன்றான் சோமேசா - ஈங்கிதனால்ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மைசொல்லாடார் சோர விடல்.83.கூடாநட்புதாய்தீண்டத் தூசுடுத்துச் சாரெனுஞ்சொற் றீதென்றாள்தூய சுயோதனற்குச் சோமேசா - வாயதனால்நட்டார்போ னல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை யுணரப் படும்.84. பேதைமைவன்சமணர் தம்பிரிவால் வாகீசர்க் கின்பமின்றித்துன்பமென்ப தில்லையோ சோமேசா - நன்காம்பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்பீழை தருவதொன் றில்.85. புல்லறிவாண்மைஇல்லாள் மறுப்பவுஞ்சென் றேகிச் சலந்தரன்றான்தொல்வலிபோய் மாண்டனனே சோமேசா - வல்லமையால்ஏவவுஞ் செய்கலான் றான்றொறு னவ்வுயிர்போஒ மளவுமோர் நோய்.86. இகல்எத்திறத்துங் கெட்டா னிகலாற் சுயோதனன்சீர்துய்த்தனனட் பாற்றருமன் சோமேசா - மொய்த்தஇகலானா மின்னாத வெல்லா நகலானாநன்னை மென்னுஞ் செருக்கு.87. பகைமாட்சிஏனையார்பால் வெற்றிகொண்டா னின்னோ டெதிர்த்திறந்தான்தூநறும்பூ வாளியான் சோமேசா - மானவலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பாமெலியார் மென்மேக பகை.88. பகைதிறந்தௌிதல்நந்திக் கலம்பகத்தான் மாண்டகதை நாடறியுஞ்சுந்தரஞ்சேர் தென்குளத்தூர்ச் சோமேசா - சந்ததமும்வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்கசொல்லே ருழவர் பகை.89. உட்பகைமாற்றார் முடியும் வளமையுங்கொண் டேகநலந்தோற்றான் வழுதிமகன் சோமேசா - ஆற்றலிலாஎட்பக வன்ன சிறுமைத்தே யாயினும்உட்பகை யுள்ளதாங் கேடு.90. பெரியாரைப்பிழையாமைகொன்படைக ணீறாகக் கோசிகனார் சாபத்தால்துன்பமுற்றார் நால்வேந்தர் சோமேசா - இன்புதவும்ஏந்திய கொள்கையர் சீறினிடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும்.91. பெண்வழிச்சேரல்கற்பின்மை யில்லாள்பாற் கண்டுமய லுற்றழிந்தான்சொற்புண்ட ரீகாக்கன் சோமேசா - பொற்பெண்ணிஇல்லாள் கட்டாழ்ந்த இயல்பின்மை யெஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும்.92. வரைவின் மகளிர்வேண்டு முருப்பசியப் பார்த்தன் வெறுத்தனனேதூண்டு மறைப்பரியாய் சோமேசா - யாண்டும்பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர்.93. கள்ளுண்ணாமைதக்கன்பான் ஞானத் ததீசியுப தேசமெல்லாம்தொக்கதனா லானதென்னே சோமேசா - மிக்குக்களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ யற்று.94. சூதுமுற்பணயத் தாற்பின்னு மூண்டிழந்தார் சூதரொடுசொற்படுஞ்சூ தாடினோர் சோமேசா - அற்பமாம்ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கு முண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோ ராறு.95. மருந்துநல்ல திலகவதி யார்மொழியை நம்பிவெந்நோய்சொல்லரசர் தீர்ந்துய்ந்தார் சோமேசா - புல்லியநோய்நாடி நோய்முத னாடியது தணிக்கும்வாய்நாடி வாய்ப்பச் செயல்96. குடிமைமங்கலியம் விற்றும் வாழாதுபணி செய்துவந்தார்துங்கமறைதேர் கலயர் சோமேசா - அங்கண்வழங்குவதுள் வீழ்ந்த கண்ணும் பழங்குடிபண்பிற் றலைபிரித லின்று.97. மானம்அச்சுவத்த மாப்பட்டா னென்ன அமர்துறந்தான்துச்சி றுரோணனென்பான் சோமேசா - நச்சுமயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்உயிர் நீப்பர் மானம் வரின்.98. பெருமைதண்டி யடிகளிரு தாளிணைபே ணாதழிந்தார்தொண்டராம் பேய்ச் சமணர் சோமேசா - மிண்டுஞ்சிறியா ருணர்ச்சியு ளில்லைப் பெரியாரைப்பேணிக்கொள் வேமென்னும் நோக்கு.99. சான்றாண்மைவன்மைச் சுயோதனற்கும் வானோர் சிறைமீட்டான்தொன்மை நெறித்தருமன் சோமேசா - பன்முறையும்இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்ததோ சால்பு.100. பண்புடைமைஉன்பணிக்கென் றோதிநல்காச் செல்வ முத்தியுறத்துன்பமுற்றார் நால்வணிகர் சோமேசா - வன்புமிகும்பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பால்கலந்தீமை யாற்றிரிந் தற்று101. நன்றியில் செல்வம்எல்லா மறையவர்க்கீந் தேவறியன் போலானான்சொல்லாருங் கீர்த்திரகு சோமேசா - நல்லதேசீருடைச் செல்வர் சிறுதுனி மாரிவறங்கூர்ந் தனைய துடைத்து102.நாணுடைமைபுண்ணொடு உயிர்வாழ நாணியுயிர் போக்கினான்துண்னெனவே வாலிமுனஞ் சோமேசா - எண்ணியிடில்நாணா லுயிரைத் துரப்ப ருயிர்ப்பொருட்டால்நாண்டுறவார் நாணாள் பவர்103. குடிச்செயல்வகைமற்றிருத ராட்டிரன்சந் தானமெலா மாய்ந்ததேசுற்றுநீர் தென்குளத்தூர்ச் சோமேசா - பற்றும்இடுக்கண்கால் கொன்றிட வீழு மடுத்தூன்றும்நல்லா ளிலாத குடி104. உழவுவேள்வித் தொழிற்கு முழுதொழின் முன்வேண்டுமால்சூழிசூழ் தென்குளத்ததூர்ச் சோமேசா - வாழும்உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்விட்டேமென் பார்க்கு நிலை.105. நல்குரவுநற்றருமன் வெற்றியினை நாடி விராடனெதிர்சொற்றமொழி சோர்ந்ததே சோமேசா - கற்றறிவால்நற்பொரு ணன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும்.106. இரவுகஞ்சாறர் சோபனப்பெண் கூந்தல் கடிதளிக்கத்துஞ்சு மகிழ்சிகொண்டாய் சோமேசா - நெஞ்சின்இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்துள்ளம்உள்ளு ளுவப்ப துடைத்து.107. இரவச்சம்எண்ணெயிரப் பஞ்சியுட லேவருத்தித் தீபமிட்டார்துண்ணென் கணம்புல்லர் சோமேசா - கண்ணியிடில்ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்குஇரவி னிளிவந்த தில்.108. கயமைஏற்ற துரோணனையன் றெள்ளித் துருபதன்பின்தோற்று விசயர்க்களித்தான் சோமேசா - போற்றிடினும்ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்கூன்கைய ரல்லாத வர்க்கு.109. தகையணங்குறுத்தல்வாய்ந்ததம யந்தியுரு மாணலங்கண் டின்புற்றான்தோய்ந்தபுக ழாளுநளன் சோமேசா - ஆய்ந்துரைக்கின்உண்டார்க ணல்ல தடுநறாக் காம்போற்கண்டார் மகிழ்செய்த லின்று.110. குறிப்பறிதல்காங்கேயன் வேண்ட வெறுத்துரைத்தாள் கானவர்மின்தூங்கா வளக்குளத்தூர் சோமேசா - ஆங்கண்உறாஅ தவர் போல் சொல்லினுஞ் செறாஅர்சொல்ஒல்லை யுணரப்படும்.111. புணர்ச்சி மகிழ்தல்மெய்தவத்தைக் காசிபனும் விட்டொழிந்து மாயைபாற்சுத்தமனம் வைத்தானே சோமேசா - இத்தலத்தில்தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்தாமரைக் கண்ணானுலகு.112. நலம்புனைந்துரைத்தல்ஈன்றான் திலோத்தமையை யிச்சிக்கி லாங்கவள்மெய்தோன்றுமெழி லென்சொல்வேன் சோமேசா - ஆன்றமுறிமேனி முத்த முறுவல் வெறிநாற்றம்வேலுண்கண் வெய்த்தோ ளவட்கு.133. காதற்சிறப்புரைத்தல்கானடைந்துஞ் சீதைகலப் பாற்களித்தான் பின்னயர்ந்தான்தூநீ ரயோத்தியர்க்கோன் சோமேசா - ஆனதனால்வாழ்த லுயிர்கன்ன ளாயிழை சாதல்அதற்கன்ன ணீங்கு மிடத்து.114. நாணுத்துறவுரைத்தல்காம மிகவுழந்துற் தூதைக் கடிந்து விட்டாள்சோமநுதற் பரவை சோமேசா - ஆமேகடலென்ன காமமுழந்து மடலேறாப்பெண்ணிற் பெருந்தக்க தில்.115. அலரறிவுறுத்தல்ஓர்நா ளகலியையை வேட்டின்று மும்பரிறைசோரப் பழிபூண்டான் சோமேசா - ஆராயிற்கண்டது மன்னு மொருநாள லர்மன்னுந்திங்களைப் பாம்புகொண் டற்று.116. பிரிவாற்றாமைவாழ்விழந்த இன்னலினும் வாசவர்கோன் மிக்குநொந்தான்சூழ்ச்சியை முன்பிரிந்து சோமேசா - வீழ்வார்கட்குஇன்னா தினனில்லூர் வாழ்த லதனிலும்இன்னா தினியார்ப் பிரிவு.117. படர்மெலிந்திரங்கல்இன்பமுற்றான் மாயைதோள் தோய்ந்துபின் னெண்மடங்குதுன்பமுற்றான் காசிபன்தான் சோமேசா - அன்புடையார்க்குஇன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்காற்றுன்ப மதனிற் பெரிது.118. கண்விதுப்பழிதல்தாதையன்றித் தானேதுச்சந்தனைச்சேர்ந் தின்னலுற்றாள்சூதில் சகுந்தலைதான் சோமேசா - ஓதிற்கதுமெனத் தானோக்கித் தாமே கலுழும்இதுநகத் தக்க துடைத்து.119. பசப்புறு பருவல்கேழ்வரைச் சேடியர்கொல் கீழ்மைக் கியற்படுஞ்சொற்சூழ்பமின்னார் துன்பத்துஞ் சோமேசா - தாழ்வில்பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்நல்காமை துற்றா ரெனின்.120. தனிப்படர்மிகுதிபன்முநிவர் பன்னியர்கள் பண்டுன்னைக் காமமுறவுந்துன்னியருள் செய்திலையே சோமேசா - அன்னதேநாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாங்காதல் கொள்ளாக் கடை.121. நினைத்தவர் புலம்பல்தன்னையே யுன்னுந் தமயந்தி மாதைநளன்துன்னார்போல் நீத்திருந்தான் சோமேசா - அன்னதேதந்நெஞ்சத் தெம்மைக் கடிகெண்டார் நாணார்கொல்எந்நெஞ்சத் தோவா வரல்.122. கனவுநிலையுரைத்தல்அல்லமனை மாயை கனவி லணைந்ததனாற்சொல்லறிய இன்பமுற்றாள் சோமேசா - நல்லநனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்கண்ட பொழுதெ யினிது.123. பொழுதுகண்டிரங்கல்வானவர்கோன் காமநோய் மாலைவர மிக்கதேதூநீர்ப் புளினத்திற் சோமேசா - வானதேகாலையரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலருமிந் நோய்.124. உறுப்பு நலனழிதல்ஓதாநா ளோதுகலை ஒத்திளைத்தாள் சீதையென்றான்சூதரா வான்மீகி சோமேசா - கோதில்பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்தொல்கவின் வாடிய தோள்.125. நெஞ்சொடுகிளத்தல்அன்பன் துறப்பவு நாளா யினிதேடித்துன்பந் தலைக்கொண்டாள் சோமேசா - முன்பேஇருந்துள்ளி யென்ப ரிதனெஞ்சே பரிந்துள்ளல்பைதனோய் செய்தார்க ணில்.126. நிறையழிதல்கோற்றொடிவிற்பாய்போன்று கூடல் வணிகமின்னார்தோற்றுநிறை யழித்தாய் சோமேசா - சாற்றுங்காற்பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்பெண்மை யுடைக்கும் படை.127. அவர்வயின் விதும்பல்சந்திரசே னன்வரவு நோக்கியுயிர் தாங்கினளாற்சுந்தரச்சீ மந்தினிதான் சோமேசா - முந்தும்உரனசைஇ யுள்ளந் துணையாகச் சென்றார்வரனசைஇ யின்னு முளேன்.128. குறிப்பறிவுறுத்தல்சங்கிலிபாற் லாரூர ரூழிகணந் தானாகத்துங்கமிகும் அன்புவைத்தார் சோமேசா - பொங்கப்பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றிஅன்பின்மை சூழ்வ துடைத்து.129. புணர்ச்சிவிதும்பல்யோசனை கந்தியினைக் காண்டலும்பே ரோகைகொண்டான்தூசனையாச் சந்தனுத்தான் சோமேசா - நேசமுடன்உள்ளக் களித்தலுங் காண மகிழ்தலுங்கள்ளுக்கில் காமத்திற் குண்டு.130. நெஞ்சொடுபுலத்தல்விக்கிரமன் மற்றொருத்தி வேட்கையுற்றுந் தேடிநொந்தாள்தொக்க வுருப்பசிமின் சோமேசா - ஓக்கும்அவர்நெஞ் சவர்க்காதல் கண்டு மெவநெஞ்சேநீயெமக் காகா தது.131. புலவிகொண்ட பரவை கொடும்புலவி யெல்லாம்வன்றொண்டர்க்குப் பேரழகே சோமேசா - தண்டாநலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகைபூவன்ன கண்ணா ரகத்து.132. புலவிநுணுக்கம்சீவகன் மஞ்சரியைத் தாழ்ந்துரைப்பச் சீறினளேதூவாய்குணமாலை சோமேசா - ஆவகையேதன்னை யுணர்த்தினுங் காயும் பிறர்க்குநீர்இந்நீர ராகுதி ரென்று.133. ஊடலுவகைகாயும் புலவியில் வன்தொண்டர் கடைபட்டுத்தோயுமின்பின் மேலானார் சோமேசா - ஆயுங்கால்ஊடலிற் தோற்றவர்வென் றாரது மன்னுங்கூடலிற் காணப் படும்.