Saturday, 12 September 2020

யாக்கை நிலையாமை

யாக்கை நிலையாமை

பண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம் திண்ணென் றிருந்தது தீவினைச் சேர்ந்தது

விண்ணின்று நீர்விழின் மீண்டுபண் ணானால்போல் எண்ணின்று மாந்தர் இறக்கின்ற வாறே

36.

(143)

ஒரே வகையான களிமண்ணால் ஆன பாத்திரங்கள் போன்றவையே ஆண் பெண் எனும் இருவகைப்பட்ட உடம்புகள். சூளையில் சுடாத இப்பாத்திரங்கள் திண்ணென வலிமை வாய்ந்தவையே. தீவினைகள் நிறைந்த பாத்திரங்களே ஆனால் வானிலிருந்து மழை நீர் அவை மீது பெய்தால் அவை மீண்டும் மண்ணாகி விடுவதைப்போலவே மாந்தர்கள் கணக்கின்றி மாண்டு போகின்றனர்

பண்டம்பெய் கூரை பழகிவிழுந் தக்கால் உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செல்லார்

கொண்ட விரதமும் ஞாளமும் அல்லது மண்டி அவருடன் வழிநட வாதே

(144)

பலப்பல வகைப்பட்ட இருவினைகளாம் பண்டங்கள் பெய்து வைத்துள்ள இந்தக் குடிசையாகிய வினைகளுடன் வாழ்நாளெல்லாம் பழகி ஆண்டு அனுபவித்து

உடல் அது இறந்து விட்ட காலத்திலே, நம்மிடை நம்மோடு நம் உழைப்பு உண்டு அனுபவித்த மனைவியும் மக்களும் நம் பின் வரமாட்டார்கள். நாம் நம் வாழ்நாளில் கை கொண்ட விரதங்களின் பயன்களும், நாம் அடைந்த ஞானமுமே நம்முடன் வரும். பிற எதுவும் அந்த பிரிந்த உயிரின் பின்னே நெருங்கிப் போவதில்லை

38. ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேசினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே

(145)

உயிர் நீங்கிய உடலின் மீது சுற்றத்தார் ஊராரெல்லாம் கூடி ஒலிக்க அழுது, உயிர் போகும்முன் சூட்டப்பட்டிருந்த உயிர் நீங்கிய உடலின்மீது சுற்றத்தார் ஊராரெல்லாம் கூடி ஒலிக்க அழுது, உயிர் போகுமுன் சூட்டப் பட்டிருந்த பேரைச் சொல்லாமல் "பிணத்தைத் தூக்குங்கள் எனப் பிணம் என்பதாகப் பெயர்ச்சூட்டி, சூரைமுட் புதர்கள் மண்டிக் கிடக்கும் சுடுகாட்டுக்குக் கொண்டு போய் சுட்டுவிட்டு, வரும் வழியிலேயே நீரினில் தலை மூழ்கி விட்டுச், செத்த அந்த உயிரின் நினைப்பை ஒழிந்தவராவார்கள் அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார் இடப்பக்க மேஇறை தொந்தது என்றார்

33

கிடக்கப் படுத்தார் கிடத்தொழிந்தாரே (148)

தன் மனைவி அடை என்னும் சிற்றுண்டியைச் செய்து வைத்தார். அந்த உணவினைக் கணவன் உண்டான். பிறகு சிலநேரம் தன் மனைவியுடன் இரகசிய உரையாடல் நடந்தது அப்பொழுது ஐயோ எனது இடது மார்பு ஏதோ சிறிது

நோவெடுக்கின்றதே என்றான். இப்படிச் சொன்ன கணவன் காலை நீட்டிப் படுத்தான். படுத்தபடியே இறந்து விட்டான்

மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது

மன்றத்தே நம்பி சிவிகைபெற் றேகினான்

மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான் சென்றத்தா என்னத் திரிந்திலன் தானே (149) ஊர் நடுவில் உள்ள மன்றத்திலே இறந்துவிட்ட இந்த நம்பி மாடிவீடு அமைத்தான். இந்த மன்றிலேதான் பல்லக்கு பெற்று அதில் அமர்ந்து ஏகினான். இந்த மன்றத்திடை நின்று அவன் முக்கோடி தானம் செய்தான். இப்போது இறந்த பின்

சென்று விட்ட 'அப்பா' என்று மகன் கூவியும் அவன் திரும்பி

வரவே இல்லை. போய்விட்டான் நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைவன் காட்டுச் சிவிகைஒன் றேறிக் கடைமுறை நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட தாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே

மேலே சொன்னபடி மாடம் எடுத்துப் பல்லக்கில் ஏறி முக்கோடி தானம் செய்த நம்பி, இந்த நாட்டுக்கே நாயகன் நம்முடைய ஊருக்கோ தலைவன். ஆனால் இப்பொழுது தன் கடைசி முறையாகக் காட்டு மரங்களால் செய்த சிவிகையாம் பாடையிலே ஏறி, நாட்டில் மக்கள் தன்னைப் பின் தொடர்ந்து வரவும், முன்னே பறைகொட்டவும் சுடுகாடு என்னும் நாட்டுக்கு அந்த நம்பி நடக்கின்றான்

. முப்பதும் முப்பதும் முப்பத்து அனைவரும் செப்ப மதிலுடைக் கோயிலுள் வாழ்பவர் செப்ப மதிலுடைக் கோயில் சிதைந்தபின் ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே மூன்று முப்பதும் ஆறும் சேர்ந்து 96. இந்தத்

(154)

தொண்ணுற்றாறு தத்துவங்களும் செப்பமான மதில் அமைந்த

இந்த உடலாகிய கோயிலுள்ளே வாழ்கின்றவராவர். இந்த

செப்பமுடைய, மதிலமைந்த, கோயில் அழிந்த பின்னர்,

ஒருங்கே இந்தத் தொண்ணூற்றாறு தத்துவங்களும் இந்தக் கூட்டை விட்டு ஓட்டம் பிடித்தார்கள் காக்கை கவரிலென்? கண்டார் பழிக்கிலென் பாற்றுவி பென்சிலின்? பல்லோர் பழிக்கிலென் தோற்பையுள் நின்று தொழிலுறச் செய்தூட்டும்

கத்தன் புறப்பட்டுப் போனஇக் கூட்டையே (167)

தோல்பை எனப்படும் இந்த உடம்புள்ளே நிலைத்து

நின்று, இரு வினைகளும் கெடும்படிச் செய்து வினைப் பயன்களை ஊட்டுவிக்கும் - திருக்கூத்தாடும் - எம்பிரான் புறப்பட்டுப் போய்விட்ட இந்த வெறும் கூட்டைக், காக்கைகள் கவர்ந்துண்டால்தான் என்ன பார்த்தவர்கள் பழித்துப் பேசினால்தான் என்ன? பால் துளி பெய்தால் என்ன? பலர் மெச்சிப் புகழ்ந்தால்தான் என்ன? ஒன்றுமே இல்லை

No comments:

Post a Comment