#படித்ததில்_பிடித்தது_பகிர்வதில்_மகிழ்ச்சி
#ஜபம்_என்றால்_என்ன_எப்படிச்_செய்வது?
மனத்தை ஒருமுகப்படுத்தி, மந்திரங்களை உருவேற்றுவதை #ஜபம் என்கிறோம். இது, [#ஜப் (அகற்றுதல் /களைதல் / நீக்குதல்) என்னும் வேர்ச்சொல்லில் இருந்து பெறப் பட்டதாகும்.]. ஆங்கிலத்தில் கூறுவதானால், "A meditation-practice that helps cut away all unnecessary thoughts from the practitioner's mind."
ஜபம் செய்வதில் பலவகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பலனைத் தருவதாகும். விளக்கமாகப் பார்க்கலாம்:
1. #வாசிக_ஜபம் : பிறர் கேட்கும் அளவு, மந்திரத்தை உரக்க (வாய்விட்டு) ஜபம் செய்வது வாசிகம்.
2. #உபாம்சு_ஜபம் : ஒலி எழுப்பாமல், உதடுகளும், நாக்கும் மட்டும் அசைய, மந்திரத்தை உச்சரிப்பது உபாம்சு.
3. #மானஸ_ஜபம் : மந்திரத்தை மனதிற்குள்ளேயே ஜபிப்பது மானஸம்.
[சாதாரண பூஜையைக் காட்டிலும் வாசிக ஜபம் பத்து மடங்கு உயர்ந்தது. அதைவிட உபாம்சு ஜபம் பத்து மடங்கு உயர்ந்தது. உபாம்சு ஜபத்தைக் காட்டிலும் மானஸ ஜபம் 10மடங்கு உயர்ந்தது - அதாவது அலங்கார பூஜையை விட மானஸ ஜபம் 1000 மடங்கு மேலானது என்பது பொருள். மானஸம் "அதி விரைவாகப் பலனைத் தரக்கூடியது" என்று #மனு_ஸம்ஹிதை கூறுகிறது.
4. #லிகித_ஜபம் : புனித மந்திரத்தை தினமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை எழுதி வருதல் லிகித ஜபம் எனப்படும் : சரவணபவ, ஓம் முருகா, ஶ்ரீ ராம ஜயம் (#ஜெயம்_அல்ல).......
5. #அகண்ட_ஜபம் : புனித மந்திரத்தைக் குறிப்பிட்ட நேரம் இடைவிடாமல் ஜபித்தல். #அ (without) கண்டம் (break) - that is non-stop; இதைக் #கூட்டு_வழிபாடாக நடத்தும்போது, #அகண்ட_நாம_பாராயணம் என்பர்.
6. #அஜபா_ஜபம் : இறைவன் திருநாமத்தை எந்நேரமும் ஒவ்வொரு மூச்சுடனும் (ஸ்வாஸ, நிஸ்வாஸத்துடனும்) இடைவிடாமல் ஓதி வருவதே அஜபா ஜபமாகும்.
[சாதாரணமாக, நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது #ஸோऽஹம் என்ற ஒலியும், மூச்சை வெளிவிடும் போது #ஹம்ஸ: என்ற ஒலியும் உள்ளார்ந்து ஒலிக்கும். இந்த ஒலிகளையே ஒரு மந்திரமாக்கி ஜபிப்பதை #அஜபா_காயத்ரி என்பர். (இது குண்டலியில் தோன்றும் சூட்சும ஒலியாகும்.) இதைத்தான் ஔவையாரின் #விநாயகர்_அகவல் கூறும் :
"குண்டலி அதனிற் கூடிய #அசபை
விண்டெழும் மந்திரம் வெளிப்பட உரைத்து"]
7. #ஆதார_சக்ர_ஜபம் : இம்முறையில் நமது உடலிலுள்ள மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம், விஶுத்தி, ஆக்ஞா ஆகிய ஆறு ஆதாரச் சக்ரங்களிலும், அவற்றைத் தாண்டி, ஸஹஸ்ராரத்திலுமாக, ஒவ்வொரு சக்ரத்திலும் மனத்தை நிலைநிறுத்தி ஜபமும், தியானமும் பழகப்படுகிறது. இதில் ஒவ்வொரு நிலையையும் படிப்படியாகக் கடந்து, ஸஹஸ்ராரம் எனப்படும் ஆயிரம் இதழ்த் தாமரையை அடைந்தவுடன் சாதகனானவன், மீண்டும், ஸஹஸ்ராரத்தில் தொடங்கி, ஒவ்வொரு ஆதாரமாக மனத்தை நிறுத்தி ஜபம் செய்து, மீண்டும் மூலாதாரத்தை வந்தடைவது ஒரு சாதனையாகும். இதுவே #புரஶ்சரணம் எனப்படும். [ இந்த வழிமுறைக்கு, சித்தர்கள் பரிபாஷையில் #ஏற்றடி_இறக்கடி என்பர்.]
ஒரு மந்திரத்தை உரிய குருவிடம் உபதேசம் பெறும்போது, அதை ஜபிக்க வேண்டிய முறையையும் நன்றாகக் கேட்டறிந்து, செய்வதே நன்மை பயக்கும். ஓம் தத் ஸத்!
(பகிர்ந்தவர்: பேராசிரியர் விஷ்வநாத் தாஸ்)
நன்றி; Karthik J

No comments:
Post a Comment