#சதுரகிரி
பார்க்க வேண்டிய இடங்கள் :
1.தானிப் பாறை
2.ஆசிர்வாத விநாயகர்
3.கருப்பசாமி கோவில்
4.குதிரைகுத்தி
5.வழுக்குப் பாறை
6.அத்தி பூ/ஊத்து
7.கோணத்தலை வாசல்
8.கோரக்கர்குகை
9.பச்சரிசிப்பாறை
10.காலற்ற நாற்காலிப் பாறை
11.இரட்டைலிங்கம்
12.வற்றாத நாவலூற்று சுனை
13.பசுகடை / தீர்த்தம்
14.பிலாவடி கருப்பு
15.மூலிகைக்கிணறு
16.சுந்தரமகாலிங்கம் கோவில்
17.சந்தன மகாலிங்கம் கோவில் / ஓடை
18.ஆனந்தவல்லி
19.காளிகா பெரும்காடு / தீர்த்தம்
20.சந்திர தீர்த்தம்
21.தேடிக்கானல்
22.வனதுர்க்கை
23.தவசிக்குகை
24.நவகிரக மலை
25.நெல்லிவனம்
26.வெள்ளைப்பிள்ளையார்
27.அடுக்குப்பாறை
28.ஐஸ்பாறை
29.மூலிகைவனம்
30.வற்றாப்பொய்கை
31.பெரிய மகாலிங்கம்
32.பெரிய கல்திருவோடு
33.கோரக்கர் குண்டம்
34.மொட்டை பெருமாள் கோவில்/பெருமாள் பதி
35.மதிமயக்கி வனம்
36.அகஸ்தியர் குகை
37.மா ஊத்து
38.கும்பமலை குகை
39.முனிஸ்வரன் எல்லை
40.காற்றாடி மேடை
41.கொடைக்காரன் கல்
42.கங்கண ஆறு
43.குளிராட்டி பொய்கை
44.பூஞ்சோலை
45.உரோமரிசி வனம்
46.யுகிமுனி வனம்
47.கடுவெளி சித்தர் குகை
48.சுந்தரனரின் குகை
49.திருமஞ்சன பொய்கை
50.வட்டசுனை
51.கரும்பாறை
52.மஞ்சளாறு
53.சன்னாசி வனம்
54.சங்கிலி பாறை
55.காலங்கி குகை
56.தசவேதிஉதக குகை
57.கன்னிமார் கோவில்
58.பளிஞ்ர்கள் குடிசை / பாறை
59.நந்தீஸ்வரர் வனம்
60.திருக்கைப்பாறை
61.படிவெட்டிப்பாறை
62.கவுண்டிண்ய ஆறு
63.அத்திரி மகரிஷி பாறை
64.பசுமிதி பாதை
65.பாம்புக்கேணி
66.தைல கிணறு
67.ஆற்றுக்குள் பேச்சிப்பாறை
68.காளி கானல் / கருங்கானல்
69.மண்மலை / மேடு
70.ஏமபுர கானல்
71.வாத மேடு
72.எல்லைக்கல் குட்டம்
73.சதம்பு தறை (சஞ்சீவி மூலிகை)
74.தத்துவ ஞான சித்தர் குகை
75.அழுகண்ணி சித்தர் குகை
76.சிவவாக்கியர் சித்தர் குகை
77.சுரங்க வழி பாதை
78.சாயா விருட்சம்
79.ஜோதிமரம்
80.முகரை வீங்கி மரம்
81.கற்பகதரு விருட்சம்
கோரக்கர் அருளிய'கோரக்கர் பிரம்மகானதரிசனம்' மற்றும்
'#கோரக்கர்மலைவாகடம்' நூல்களில் உள்ள சதுரகிரி மலை பாதைகள்:
அகத்தியரின் கும்பமலையில் இருந்துஆரம்பித்தால் மேற்கே"முனீஸ்வரன் எல்லை" வந்துவிடும், இங்கிருந்து"படிவெட்டி பாறை" வழியாக நடக்க இரண்டுநிமிடத்தில் "காற்றாடிமேடை" வருமாம். இதனைதாண்டி கூப்பிடும்தூரத்தில்
"கொடைகாரன்கல்லும், முடங்கி வழியும், கங்கன ஆறும்" இருக்கிறது. ஆற்றில்இருந்து மிக அருகில்"குளிராட்டி பொய்கை" இருக்கிறது. இதன்தென்மேற்கு மூலையில்"போகரின் ஆசிரமம்" இருந்திருகிறதாம்.
அங்குஇருந்து தெற்கே போகும்பாதையில் அழகியபூன்சோலை உள்ளதுஅதன் மத்தியில்"புஜிண்டர் ஆசிரமம்" இருந்திருகிறதாம்.
அங்கிருந்து மேற்கே அரைநாளிகை நடக்க "எல்லைகுட்டமும், மண்மலைகாடும்" உள்ளது. அதன்வழியே சென்றால்"உரோமரிசி வானமும்ஆசிரமும்" அமைந்துஉள்ளதாம். அங்கிருந்துதெற்கே கூப்பிடும் தூரத்தில் "யூகிமுனிவானமும் ஆசிரமும்" அமைந்து உள்ளதாம்.
அங்கிருந்து வடக்கேஅறிய வகையான "சாயாவிருச்சம்" உள்ளது. சாயாவிருச்சம் நிழல் பூமியில் விழாது. ஆசிரமத்யிலிருந்து மேற்கே சென்றால்தெற்கே போகும்பாதையில் சென்றால்ஆறு ஒன்று வரும்
அதைகடந்தால் பளிங்கர்கள்குடிசையும் “சுந்தரலிங்கர்சந்நிதி” உள்ளது. இதன்தெற்கே இருக்கும்ஆற்றுக்கு மேல்“சுந்தரனாரின் குகை”உள்ளது.
அந்த மேட்டில்இருந்து தெற்கே செல்லும்பாதையில் “மகாலிங்கர்சந்நிதி” உள்ளது.
சந்நிதிக்கு பின்னல்"கற்பகதரு விருச்சம்" உள்ளது மற்ற பெயர்"பஞ்சுதரு விருச்சம்" .
இந்த மரத்திற்கு மேல்பக்கம் வட்ட சுனையும்அதன் மேல் பக்கம் ஒருஓடையும் அதன் மேல்பக்கம் ஒரு கானலும் கரும்பாறை இருக்கிறது.
அதன்வடக்கே அரை நாழிகைநடக்க செம்மண் தரைவரும். அங்கு "சஞ்சீவிமூலிகை" உள்ளது மற்றபெயர் "எமனைவென்றான்".
அங்கிருந்து மேற்கே'மஞ்சளூற்று" ஊற்றுக்குவடபக்கம் அம்பு விடும்தூரத்தில் சதம்பு தரைஉள்ளது அதன்கீழ்பகுதியில் கசிஉதரையில் அழகானந்தர்
ஆசிரம்மம் உள்ளதாம். அங்கிருந்து நேர் கிழக்கேவந்தால் மீண்டும்மகாலிங்கர் சந்நிதி வரும். அங்கிருந்து தெற்கே
சென்றால் "சன்னசிவனம்" வரும். அதன் தெற்கேபோகும் பாதையில்சென்றால் ஒரு ஓடையும்"சங்கிலி பாறையும்" வரும். அதனை கடந்துகூப்பிடும் தூரத்தில்மரங்கள் சூழ "பிரம்ம முனிஆசிரமம்" வரும். அதன்தெற்குபுற பாதையில்சென்று மலை ஏற அதன்சரிவில்
"காலங்கிநாதர்குகை" உள்ளது. அதன்சரிவில் அம்புவிடும்தூரத்தில் வற்றாத"தசவேதி உதகசுனை" இருக்கிறது.
காலங்கிநாதர் குகையில்இருந்து தெற்கு பக்கம்கூப்பிடும் துரத்தில் "தபசுகுகை" வரும்.
குகையில்இருந்து வடக்கு பக்கம்செல்லும் பாதையில்சென்றால் மீண்டும்மகாலிங்கர் சந்நிதி வரும். அனால் கிழக்கு பக்கம்சென்றால் அரை நாழிகைதுரத்தில் கன்னிமார்கோவிலும் பளிங்கர்கள்குடிசையும் வரும்.
அங்கிருந்து தெற்கே அரைநாழிகை துரத்தில்"நந்தீச்வர் வானமும்ஆசிரமும்" உள்ளது. ஆசிரமும் வடக்கில் உள்ளபாதையில் செல்லகிழக்கே ஒரு பாதை வந்துசேரும் அந்த
பாதைவழியே செல்ல பளிங்கர்பாறையும் அதன் தெற்கேசெல்ல செடி கொடிகள்சூழ "தன்வந்திரிஆசிரமும்" உள்ளது.
சதுரகிரி மலையின்மேற்கு பகுதியில்இருக்கும் ஒரு திட்டானபகுதியில் மறைவாக ஒருசுரங்கம் உள்ளது. அந்தசுரங்க வாசலில்ஆஞ்சநேயர் காவல்உள்ளது. அங்குகர்மகாண்டம் என்னும்ஒரு நூல் உள்ளதாம்.
காலங்கிநாதர் தனதுபாடலில் சதுரகிரி இன்மலை பாதைகளை பற்றிகூறியுள்ளார். சதுரகிரிதெற்கு பகுதியில் ஓர்ஓடை ஆற்றுடன்இணைகிறது அதன்பெயர் "தோணி பாறை" இப்போ கால போக்கில்
"தாணி பாறை" என பெயர்மாறியது. இது தான்நுழைவாயில் மற்ற மூன்றுபாதைகளும் மிக கடினம். தாணி பாறையின் வடக்குபாதையில் கருப்பணசாமிஇருக்கிறது.
இங்கிருந்துகூப்பிடும் தூரத்தில்"குதிரை குத்தி பாறையும்" அதன் வடக்கு பக்கம்கூப்பிடும் தூரத்தில்"படிவெட்டி பாறையும்" உள்ளது. அங்கிருந்துஅம்புவிடும் தூரத்தில்காட்டாறு ஒன்றுகாணலாம்.
அதன் வடக்குபக்கம் அரை நாழிகைதூரத்தில் "கவுண்டன்யஆறு" வரும். ஆற்றின்மேற்கு பக்கம் 10அடி தூரம்நடந்தால் "அத்தி ஊத்து" வரும்.
ஊற்றின் வடக்குபகுதியில் இருக்கும்பாறையில் தான் "அத்திரிமகரிஷி" தவம் செய்தார்.
அதன் மேற்கு பகுதியில்அவர் ஆசிரமம் உள்ளது. ஆசிரமதியில் இருந்துகிழக்கே உள்ள பாதையில்மேலேரி அரை நாழிகைநடந்தால்
"கோனவாசல்" பாதை வரும். அதை தண்டிமேடரி போனால் "பசுமிதி " பாறை வரும். அதன்கிழக்கே கணபதி உருவபாதை உள்ளது.
அதன்கிழக்கே உள்ள பாதையில்அரை நாழிகை நடந்தால்தெற்கு பக்கத்தில்அம்புவிழும் தூரத்தில்மச்சமுனி ஆசிரமம்உள்ளது.
ஆசிரமதியில்
இருந்து தெற்கு உள்ளபாதையில் மேலேரி அரைநாழிகை நடந்தால்"வெள்ளை புனல்முருங்கை" மரமும் அதன்இடப்பக்கம் சமதளபாறையை காணலாம்.
அந்த பாறையின் தெற்குபக்கம் இருக்கும் ஓடையைதாண்டினால் அம்புவிழும்தூரத்தில் காவி தெரியும்அதன் கீழ்பக்கம்பேய்சுரை கொடி உள்ளது.
அந்த கொடிக்கு தெற்குபக்கம் இருக்கும் நடந்தால்குருவரி கற்றாளைஇருக்கும். அதற்கு நேர்வடக்கு சென்றால்கூப்பிடும் தூரத்தில்கிழக்கே ஒரு பாதைதென்படும் அதிலிருந்துமேட்டில் ஏறினால் சமதளம்இருக்கும்
. அதில் அரைநாழிகை தூரம் நடந்துவந்து தெற்கு பக்கமாய்பார்த்தல் கோரக்கர்ஆசிரமம் உள்ளது.
ஆசிரமத்தின் நேர்வடக்கில் இருக்கும்ஆற்றில் இறங்கி தெற்குபக்கம் பார்த்தால் மலைசரிவில் "கோரக்கர் குகை" தெரியும். அதன் கிழக்கேஆற்றின்
நடுவில் "கஞ்சாகடைந்த குண்டா" இருக்கிறது அதன்கிழக்கே "வற்றாதபொய்கை" இருக்கிறது.
கோரக்கர் ஆசிரமத்தின்தெற்கு பக்கம் அம்புவிழும்தூரத்தில் "மஞ்சள்பூத்தவளை" மூலிகைஉள்ளது. அதன் மேற்குபக்கத்தில் உள்ளபாதையில் அம்புவிழும்தூரத்தில் கசிவு தரை
உள்ளது. இங்கிருந்துவடக்கு பக்கம் போனால்ஒரு மேடு அதனையொட்டிஒரு ஓடை அதற்க்குவடக்கே சமதள மண்தரைஅருகில் பாறையும் உள்ளது.
பாறைக்குவடக்கே ஒரு ஓடை அதற்குவடக்கே அம்புவிழும்தூரத்தில் "அமுதவல்லிசெடி" உள்ளது. செடிக்குநேர் வடக்கே சென்றால்கிழக்கு பக்கம் எதிர்வரும்மேட்டில்
இரட்டை லிங்கம்உள்ளது. லிங்கத்துக்குதென்கிழக்கு மூலையில்ஆற்றைஒட்டி "ராமதேவர்ஆசிரமம், ரோமவிருட்சமும், நாகபடகற்றாளையும்" உள்ளது.
ராமதேவர் ஆசிரமத்தில்இருந்து வடக்கே நடந்தால்வரும் சமதளம். அங்கிருந்து கிழக்கேபோனால் "பசுக்கிடை" வரும்.
அதை தாண்டினால்எக்காலத்திலும் வற்றாத"நாவலுற்று" சுனையும்பாறையும் உள்ளது. அதில்"பாம்புகேணியும்" இருக்கிறது. அங்கிருந்துகிழக்கே போனால்"வழுக்கை பாறையும்"
அதற்கு அப்பால் "பச்சரிசி" மேடு வரும் அதைகடந்தால் "தெக்கம்பண்ணைமலை" சாலைவரும். இந்த வழியேகிழக்கே போனால் "சின்னபசுகிடையும்","ஒப்பிலாசாயையும்" இருக்கிறது. இதனை தாண்டி கிழக்கேசெல்ல பலாமரமும்,
"கருபண்ண சாமி" கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்குபின்புறம் தான்இரசவாதம் செய்யபயன்படுத்த பட்ட"தைலக்கிணறு" இருக்கிறது.
இந்தகோவிலை கடந்துபோனால் ஆறு ஒன்றுவரும் அதற்குள்"பேச்சிபாறை" உள்ளது.
இதன் வடக்கு பக்கத்தில்மேடேறினால் "துர்வாசரிஷியின் ஆசிரமம்" இருக்கிறது. இதன்கிழக்கே அம்பு விழும்தூரத்தில் "வெள்ளைபாறையும்"
,"சந்தனமகாலிங்கம் கோவில்ஓடையும்" உள்ளது. அதைகடந்து கிழக்கே போனால்முச்சந்தியான பாதைவரும் இதில் தெற்கேபோகும் பாதையில்மேடேறினால் "சுந்தரர்கோவில்"
இருக்கிறது. அதன் தெற்கேஆற்றங்கரை ஓரமாய்கூப்பிடும் தூரத்தில்"மகாலிங்கம் கோவில்" இருக்கிறது.
இதன் வடக்கே கூப்பிடும்தூரத்தில் அடர்ந்தகாட்டுக்குள் அரைநாழிகை தூரம் நடக்கபெரிய சுரங்கவழி ஒன்றுஇருக்கும்
இதில் நுழைந்துஅரை நாழிகை தூரம்நடக்க "சந்தன மகாலிங்ககோவில்" வரும். கோவிலின் வடக்கே"காளிகாணல்" நீரோடைஇருக்கிறது. கோவிலின்தென்மேற்கு மூலையில்"சட்டைமுனி நாதரின்"
குகை ுகை உள்ளது. குகைக்குதெற்கே கூப்பிடும்தூரத்தில் "வெண்நாவல்" மரமும் அதன் இடப்புறம்மன்மலையும் தெற்கேசமதளத்தில்"வனபிரமி" மூலிகையும் உள்ளது. சட்டைமுனி
குகைக்கு நேர்கிழக்கே வரும் பாதையில்ஒரு நாழிகை தூரம்சென்றால் வடக்கே ஒருபாதை வரும் அதில் ஒருநாழிகை தூரம் நடக்க"கும்பமலை"
வரும் இதன்அருகில் உள்ள குகையில்தான் "அகத்தியர்" வாசம்செய்கிறார்.
தன்வந்த்ரியின்ஆசிரமத்தின் வடக்கேவந்தால் கிழக்கே ஒருபாதை வரும் அதன்தெற்கே உள்ள பாதையில்நடக்க வடக்கே "எமபுர" கானல் வரும்
அதன்தென்புறமாய் கிழக்கேபோகும் பாதையில்கூப்பிடும் தூரத்தில் நடக்க"வாதமேடும்" அதில்"வெள்ளை பிள்ளையார்" கோவில் இருக்கிறது.
இங்கிருந்து அம்புவிடும்தூரம் வரை சதும்பு தரைஅதற்கு தெற்கே வந்தால்குரு "ராஜரிஷி வானமும்ஆசிரமும்" இருக்கிறது. ஆசிரமத்தின் வடக்கேநடக்க கிழக்கே போகும்பாதையில் அரை நாழிகைதூரம் நடக்க
ஒருமண்மேடு வரும் அதன்அருகில் அழகியவனத்தின் நடுவில்"கொங்கணவரின்ஆசிரமம்" உள்ளது அதன்கிழக்கே போனால்"எல்லைக்கல்"
குட்டம்உள்ளது. இங்கிருந்துதெற்கே மூன்று நாழிகைநடக்க தபோவனம்எனப்படும் "மாஊற்று" வரும். அதன் வடக்கே"உதயகிரி சித்தர்" ஆசிரமும் இருக்கிறது.
இங்கிருந்து கிழ்பக்கமாய் இறங்க அரை நாழிகைதூரத்தில் மீண்டும்எல்லைகுட்டதிற்கு வந்துசேரும். இதன் வடக்கே"
பிருஞ்சக முனிவரின்ஆசிரமம்" இருக்கிறதுஅதன் வடகிழக்குமூலையில் உள்ள சதம்புதரையில் "சஞ்சீவிமூலிகை" உள்ளது.
சதம்பு தரையில் மேல்பக்கம் போகும் பாதையில்அம்பு விழும் தூரத்தில்யானை படுத்திருப்பதைபோல் ஒரு பெரிய பாறைஇருக்கும் அதன்தென்புறமாக அம்பு விழும்தூரத்தில் சரளை தரைஇருக்கிறது.
அதற்கு நேர்மேற்கில் கூப்பிடும்தூரத்தில் மலையோடைஇருக்கிறது. அந்தஓடையை கடந்து அம்புவிழும் தூரத்தில்"வெள்ளை பிள்ளையார்" இருக்கிறார். இங்கிருந்துமேற்கே ஒரு நாழிகைநடக்க "வாதமேடு"
வரும்இங்கு தான் பதினென்சித்தர்களும் "ரசவாதம்" செய்தார்கள் .வாதமேடுமேற்கே அம்பு விழும்தூரத்தில் "தத்துவ ஞானசித்தர் குகை" இருக்கிறது.
அதன் வடக்கே அரைநாழிகை நடந்தால் சிறியகுட்டம் வரும் அதன்மேற்கே செல்லும்பாதையில் சென்றால்"கன்னிமார் கோவில்" வரும் அதன் மேற்கேகூப்பிடும் தூரத்தில்
"மகாலிங்கம் சந்நிதி" வரும். சந்நிதியின் நேர்வடக்கே போகும்பாதையில் ஒரு ஆறுவரும் . ஆற்றின்தென்புறமாய் இரண்டுபாதைகள் பிரியும் அதில்மேற்கே போனால் நாம்கிளம்பிய இடம்தானிபாறை வரும்,
வடக்கே போகும்பாதையில் இரண்டு நாழிகை நடக்க"குளிப்பட்டி பொய்கை" இருக்கிறது. இதன்தெற்கே "எல்லை குட்டம்" இருக்கிறது. அதன்அருகில் "பால்பட்டை மரம்" இருக்கிறது.
அதிலிருந்துமேற்கே போகும்பாதையில் சென்றால்அம்பு விழும் தூரத்தில்"திருக்கை பாறை" இருக்கிறது. அதன்மேற்கே "யாகோபு சித்தர்ஆசிரமம்"
உள்ளது. ஆசிரமத்தின் மேற்கேபோகும் பாதையில்இரண்டு நாழிகை நடக்க"கடுவெளி சித்தர் குகை" இருக்கிறது.
இதனை தாண்டி நடந்தால்"கருங்கானல்" ஒன்றுவரும். அதில் நுழையாமல்மேலே ஏற அரைநாழிகையில் கசிஉ தரைவரும். இதன் வடபக்கம்இரண்டு நாழிகை நடந்தால்
"#தேடிக்கானல்" இருக்கிறது. அந்தகானலுக்கு கீழ்பக்கம்போகும் பாதையில்அம்புவிலும் தூரத்தில்"அழுக்காணி சித்தர்குகை"
No comments:
Post a Comment