Friday, 4 September 2020

ஸ்ரீ உலோபா முத்திரை 108 போற்றி அர்ச்சனை

ஸ்ரீ உலோபா முத்திரை 108 போற்றி அர்ச்சனை

ஓம் அங்கையற்கண் அம்மையே போற்றி

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

ஓம் அருமறையின் வரம்பே போற்றி

ஓம் அறம்வளர்க்கும் அம்மையே போற்றி

ஓம் அருந்தவச் செல்வியே போற்றி

ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி

ஓம் அகஸ்தியன் தேவியே போற்றி

ஓம் அருள்நிறை அம்மையே போற்றி

ஓம் ஆதியின் பாதியே போற்றி

ஓம் ஆனந்த நாயகியே போற்றி

ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி

ஓம் உயிர் ஓவியமே போற்றி

ஓம் உலக நாயகியே போற்றி

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

ஓம் ஏகனின்துணைவி போற்றி

ஓம் ஐயந்தீர்ப்பாய் போற்றி

ஓம் ஒப்பிலா அமுதே போற்றி

ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி

ஓம் கற்றறோர்க்கினியோய் போற்றி

ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி

ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி

ஓம் கனகமணிக்குன்றே போற்றி

ஓம் கற்பின் அரசியே போற்றி

ஓம் கனகாம்பிகையே போற்றி

ஓம் கதிரொளிச்சுடரே போற்றி

ஓம் கற்பனை கடந்தாய் போற்றி

ஓம் காதார் குழலீ போற்றி

ஓம் குடமுனி நாயகீ போற்றி

ஓம் குற்றம்பொறுப்பாய் போற்றி

ஓம் கூடற்கலாய மயிலே போற்றி

ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி

ஓம் சக்தியின் வடிவே போற்றி

ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி

ஓம் சங்கரிக் கொப்பாய் போற்றி

ஓம் செங்கமலத்தாயே போற்றி

ஓம் செண்டு கைகொண்டாய் போற்றி

ஓம் செண்பக வல்லியே போற்றி

ஓம் செல்வ நாயகியே போற்றி

ஓம் செந்தமிழ் தாயே போற்றி

ஓம் செல்வம் தருவாய் போற்றி

ஓம் ஜோதியே போற்றி

ஓம் சுடரே போற்றி

ஓம் சிங்கார வல்லியே போற்றி

ஓம் சிவகாம சுந்தரியே போற்றி

ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

ஓம் சிவானந்த வல்லியே போற்றி

ஓம் சூழா மணியே போற்றி

ஓம் ஞானாம்பிகையே போற்றி

ஓம் ஞானத்தின் வடிவே போற்றி

ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி

ஓம் தவமுனி நாயகியே போற்றி திருவே போற்றி

ஓம் திருவின் துணைவி போற்றி

ஓம் திருவுடையம்மையே போற்றி

ஓம் திருநிலை நாயகியே போற்றி

ஓம் தீந்தமிழ் தந்தாய் போற்றி

ஓம் தீவினை தீர்ப்பாய் போற்றி

ஓம் துயரம் துடைப்பாய் போற்றி

ஓம் குரு பத்தினியே போற்றி

ஓம் தெவிட்டாத அமுதே போற்றி

ஓம் தென்னவன் தேவியே போற்றி

ஓம் தேன்மொழியம்மையே போற்றி

ஓம் தோன்றா துணைவி போற்றி

ஓம் தையல் நாயகியே போற்றி

ஓம் இல்லற துறவி போற்றி

ஓம் இன்பம் அளிப்பாய் போற்றி

ஓம் நல்லருங் கொழுந்தே போற்றி

ஓம் நல்லவர்க்கினியோய் போற்றி

ஓம் நாடுவார்க்கருள்வாய் போற்றி

ஓம் நீலாம்பிகையே போற்றி

ஓம் நோயினை தவிர்ப்பாய் போற்றி

ஓம் பசுபதி நாயகியே போற்றி

ஓம் பல்லுயிரின் தாயே போற்றி

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி

ஓம் பவளக் கொடியே போற்றி

ஓம் பக்தனை காப்பாய் போற்றி

ஓம் பழமறையின் குருத்தே போற்றி

ஓம் பரமானந்த வல்லியே போற்றி

ஓம் பண்ணின் மணியே போற்றி

ஓம் பாகம் பிரியாள் போற்றி

ஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி

ஓம் பொதிகையில் அமர்ந்தாய் போற்றி

ஓம் பொருநையின் தாயே போற்றி

ஓம் பொற்கொடியே போற்றி

ஓம் பெரியநாயகியே போற்றி

ஓம் பேரின்ப பெருக்கே போற்றி

ஓம் பேரருட்கடலே போற்றி

ஓம் மக்களைக் காப்பாய் போற்றி

ஓம் மங்கள நாயகி போற்றி

ஓம் மழலைக்கிளியே போற்றி

ஓம் மனோன்மணியே போற்றி

ஓம் மாணிக்கவல்லியே போற்றி

ஓம் முக்கட்சுடரே போற்றி

ஓம் முக்தியைத் தருவாய் போற்றி

ஓம் முழுமுதல் பொருளே போற்றி

ஓம் முனிவரின் துணைவி போற்றி

ஓம் முத்தமிழ்ச் செல்வி போற்றி

ஓம் முன்வினை தீர்ப்பாய் போற்றி

ஓம் வேதவல்லியே போற்றி

ஓம் வேதவிழுப் பொருளே போற்றி

ஓம் வித்தகச் செல்வீ போற்றி

ஓம் விமல நாயகி போற்றி

ஓம் வையகம் காப்பாய் போற்றி

ஓம் வாழ்வினை அளிப்பாய் போற்றி

ஓம் விண்ணோர் மகிழும் விமலி போற்றி

 ஓம் வேண்டமுழுதும் தருவாய் போற்றி

ஓம் உலோகபாமுத்திரை அம்மையே போற்றி

 திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment