ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583 THIS SITE IS BEST VIEWED IN GOOGLE CHROME BROWSER. இந்த வலைத்தளம் கூகிள் குரோம் என்ற சாதனத்தில் சிறப்பாக இயங்கும்.
Saturday, 26 September 2020
நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான். அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது.
நவராத்திரி ஸ்பெஷல்
#நவராத்திரி_வழிபாடும்_சிறப்பும்!
#உயிரைக்_காக்கும்_நவராத்திரி
நவராத்திரி விழாவை கொண்டாடுவது ஏன் என்று ஜனமேஜயன் என்ற மகாராஜா, வியாச முனிவரிடம் கேட்டான்.
அதற்கு அவர் அளித்த பதில் ஆச்சரியத்தைத் தருவதாக
உள்ளது.
அரசனே! நவராத்திரி விரத காலம் சரத்ருது (புரட்டாசி, ஐப்பசி), வசந்தருது (சித்திரை) காலங்களில் அனுஷ்டிக்கப்பட வேண்டும்.
இந்த மாதங்களைக் குறிப்பிடுவதற்கு காரணம் உண்டு.
இவை எமனின் கோரைப்பற்கள் ஆகும்.
இந்த மாதங்களில் உயிரினங்களுக்கு கடுமையான நோய் ஏற்படும்.
அவை உயிரைப் பலி வாங்கும் அளவு வலிமையுடையவாய் இருக்கும்.
இதில் இருந்து மீள வேண்டுமானால் சண்டிகை பூஜை செய்ய வேண்டும் என்றார்.
இதனால் தான் பதினெட்டு கைகளையுடையவளாகவும், ஆயுதம் தரித்தவளாகவும் அம்பாளை அலங்கரித்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.
வடமாநிலங்களில் துர்கா பூஜையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
நான்கு வகையான வசதிகளை விரும்புபவர்கள், நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டுமென்கிறார் வியாச மகரிஷி.
கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள்,
எந்தச் செயலிலும் வெற்றி பெற விரும்புபவர்கள்,
சுகமான வாழ்வு வேண்டுபவர்களுக்கு நவராத்திரி பூஜை உகந்தது.
இவர்கள் தங்கள் இல்லங்களில் சக்திதேவி சிலை அல்லது படத்துக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் மலர் மாலைகள் அணிவித்து, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்யம் படைத்து வணங்க வேண்டும்.
மேலும், இவர்கள் ஏழைகளுக்கு தானமும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர்கள் நினைப்பது நடக்கும் என்பது ஐதீகம்.
#தேவியரின்_வாகனம்
#இந்திராணி_யானை
#வைஷ்ணவி_கருடன்
#மகேஸ்வரி_ரிஷபம்
#கவுமாரி_மயில்
#வராகி_எருமை
#அபிராமி_அன்னம்
#நரசிம்மி_சிங்கம்
#சாமுண்டி_பூதம்
அம்பாளை வணங்குவதன் பலன்
அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.
இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன.
இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
#ஜெய்காளி-
எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும்
#ஜெய்சண்டிகாதேவி-
செல்வம் சேரும்
#ஜெய்சாம்பவி-
அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும்.
#ஜெய்துர்க்கா-
ஏழ்மை அகலும், துன்பம் விலகும், போரில் வெற்றி கிடைக்கும்,
மறுபிறவியிலும் நல்லதே நடக்கும்.
#ஜெய்சுபத்ரா-
விருப்பங்கள் நிறைவேறும்
#ஜெய்ரோகிணி-
நோய் தீரும்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் முதல் மூன்று மந்திரங்களையும்,
அடுத்த நான்கு நாட்கள் ஜெய் துர்க்கா என்ற மந்திரத்தையும் சொல்ல வேண்டும்.
கடைசி இரண்டு நாட்களில் ஜெய் சுபத்ரா, ஜெய் ரோகிணி ஆகிய மந்திரங்களைச் சொல்லவும்.
#பெண்கள்_பண்டிகையா?
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
நிஜத்தில், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதமே.
ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங்களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.
#பிராஹ்மணி (#அபிராமி) -
#பிரம்மா
#மகேஸ்வரி -
#சிவன்
#கவுமாரி -
#குமரன்
#முருகன்
#வைஷ்ணவி -
#விஷ்ணு
#வராஹி -
#ஹரி (#வராக #அவதாரம்)
#நரசிம்மி -
#நரசிம்மர்
#இந்திராணி -
#இந்திரன்.
இதிலிருந்து, நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.
நவராத்திரி விரதம் பிரதமையில் துவங்கி நவமியில் முடியும்.
இதில் குறிப்பாக அஷ்டமி
(நவராத்திரியின் எட்டாம் நாள்)
நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை.
மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது.
பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர்.
திருடர்களால் பயமில்லை. நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் ஓடிப்போய்விடும்.
நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை நீங்கள் வாசிக்கலாம்.
#மூன்று_மூன்றாக_பிரித்தது_ஏன்?
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் லட்சுமிக்கும்,
அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும்,
கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக தமிழகத்தில் விழா எடுக்கிறோம். இதற்கு காரணம் உண்டு.
வாழ்க்கைக்கு தேவை பணம் பிற வசதிகள். இதைப் பெறுவதற்கு லட்சுமியை முதலில் துதிக்கிறோம்.
பணமிருந்தால் போதுமா? அதைப் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமே! அதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி இன்னும் பிற காவல் தெய்வங்களை வணங்குகிறோம்.
பாதுகாப்புடன் கூடிய செல்வம் மட்டும் போதுமா! அதை என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிய வேண்டுமே! அதற்குத்தான் கல்வி.
ஆக, காரண காரியங்களுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை.
#புரட்டாசியில்
#கொண்டாடுவது
#ஏன்?
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிடரீதியான காரணமும் உண்டு.
நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை கோள்சாரம் என்று குறிப்பிடுவர்.
இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு.
இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னிராசியில் சஞ்சரிப்பார்.
புதன் கல்வி, கலைகளுக்குரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்புநலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.
அதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலைமகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம்.
இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்குகிறார்கள்.
புரட்டாசியில் வரும் இந்நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று அக்காலத்தில் அழைத்தனர்.
(சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு)
கல்வி மட்டுமல்லாமல் செல்வம், தைரியமும் மனிதனுக்கு அவசியம்.
அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புரட்டாசியில் தேவியை
#கலைமகள்,
#அலைமகள்,
#மலைமகள்
என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.
தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment