Tuesday, 12 December 2017

ஊர்த்துவ தாண்டவம்

HISTORY OF VADA BADRAKALI AMMAN TEMPLE

ஒரு காலத்தில் அடர்ந்த ஆலங்காடாக இருந்த
இத்தலத்தில் கார்கோடகன் மற்றும் முஞ்சிகேசர்
என்ற இரு முனிவர்கள் ஐயனின் ஆனந்தத்
தாண்டவத்தைக் காண வேண்டி கடுமையான
தவம் செய்து வந்தனர். இவர்கள் தில்லையில்
ஐயனின் ஆனந்த தாண்டவம் கண்ட
பதஞ்சலி முனிவர் மற்றும் வியாக்ரபாதர்
என்பாரும் உண்டு. இவ்வாறு அவர்களும் மற்ற பல
ரிஷிகளும் தவம் செய்து கொண்டிருந்த
போது அக்காட்டில் இருந்த அசுரர்கள்
அவர்களுக்கு பெரும் துன்பம்
தந்து கொண்டிருந்தனர்.
அசுரர்களை அழிக்கவும் அதே சமயம்
முனிவர்களுக்கு அருளவும் திருவுள்ளம்
கொண்ட ஐயன் அம்மையின் அம்சமான
காளியை எட்டுக் கரங்களுடன்
திருக்கயிலாயத்திலிருந்து ஆலங்காட்டிற்க்கு
அனுப்பினார். காளியும் வந்து அசுரர்களுடன்
போர் புரிந்த போது ஒரு அசுரனின் இரத்த
துளியிலிருந்து மேலும் அசுரர்கள்
தோன்றிக்கொண்டிருந்தனர். அவனை அழிக்க
காளி கபாலத்தில் அரக்கனின் அசுரனுடைய
இரத்தம் பூமியில்
விழாதவாறு பிடித்து அப்படியே குடித்து
விட்டாள். அசுரர்கள் அனைவரும் அழிந்தனர்,
ஆனால் அசுர இரத்தத்தால் அம்மைக்கு ஆங்காரம்
அதிகமாகியது, காக்க வந்த அன்னையே தாக்கத்
தொடங்கினாள் ஆலங்காட்டில் உள்ளவர்களை .
எனவே முனிவர்கள் அனைவரும் ஐயனிடம்
சரணடைந்து தங்களைக் காக்க வேண்டினர்.
அனைவரையும் காக்க ஐயன் தன் வீரக்கழலணிந்த
திருப்பாதம் பூமியில் பட சுந்தரராக
இறங்கி வந்தார்.
ஐயனைக் கண்ட காளி ஐயனுடன்
போருக்கு வந்தாள். இது தன்னுடைய இடம்
எங்கிருந்தோ வந்த நீ சென்று விடு என்றாள்
காளி, இல்லை இது என்னுடைய இடம் என்றார்
ஐயன். இறுதியில் இருவருக்கும்
ஒரு போட்டி வைப்பது அதில்
வென்றவரே தலைவர் என்று முடிவானது.
நடனப் போட்டி நடத்த முடிவு செய்யபட்டது.
மிக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது.
முனிவர்கள் அனைவரும் கூடி நின்றனர் அற்புத
நடனப்போட்டியைக் காண, தேவர்கள் அனைவரும்
வானத்தில் குழுமினர். நடனப்
போட்டி ஆரம்பமானது. முதலில் மெல்ல
தொடங்கியது, ஐயனின்
ஒவ்வொரு அசைவையும்
அப்படியே பிரதிபலித்தாள்
காளி ஆக்ரோஷமாக. மெல்ல மெல்ல
சூடு பிடித்தது ஆட்டம். அனைவரும்
தம்மை மறந்து பார்க்க ஆரம்பித்தனர் போட்டியை.
"சபாஷ் சரியான போட்டி" என்று சிலாகித்தன்ர்.
மெள்ள மெள்ள வேகம் கூடியது பார்ப்பவர்கள்
இதயமும் வேகம் கூடியது.
உச்சத்தை நோக்கி நடன் வேகம் சென்ற நேரத்தில்
ஐயன் தன் இடது காதில் இருந்த
குண்டலததை விழ வைத்தார், குண்டலம்
நிலத்தைத் தொடுவதற்கு முன்
சர்ரென்று ஐயனின் கால்
கீழே இறங்கியது அடுத்த
க்ஷணமே மேலே உயர்ந்து ஐயனின்
காதை அடைந்தது.
அப்படியே அண்டத்தை அளப்பது போல ஐயனின்
திருப்பாதங்கள் செங்குத்தாக ஊர்த்தவ தாண்டவ
கோலத்தில் நின்றது.
அந்தக்கணமே அனைத்து அண்டங்களும்
அசையாமல் நின்றன, ஐயனின்
திருப்பாதத்தை உற்று நோக்கிய காளி தான்
தோற்றதை உணர்ந்தாள். அவ்ரைப் போல
காலை தூக்க முடியாமையால்
அப்படியே நின்றாள். நக்கீரர் ஐயன்
அவ்வாறு ஊர்த்துவத்தாண்டவ்ராய்
நின்று வென்ற அழகை இப்படிப் பாடுகின்றார்.
தாளொன்றால் பாதாளம் ஊடுருவி நீள்
விசும்பில்
தாளொன்றால் அண்டம் கடந்துருவி தோள்
ஒன்றால்
திக்கனைத்தும் பேரும் திறன் காளி காளத்தி
நக்கனைத்தான் கண்ட நடம்
அம்மையை கோபம் தணிந்து அங்கேயே வட பத்ர
காளியாய் கோவில் கொள்ள பணித்தார் ஐயன்
தானும் ஆலங்காட்டப்பராயாய்,
ஊர்த்துவதாண்டவேஸ்வரராய் மணியம்பலத்தில்
திருக்கோவில் கொண்டார்.

No comments:

Post a Comment