Tuesday, 12 December 2017

தைப்பூச நாளில் 60 ஆண்டுகளுக்கு பின்.. சந்திர கிரகணம்!

*தைப்பூச நாளில்  60 ஆண்டுகளுக்கு பின்..  சந்திர கிரகணம்!

🕉 *ஓம் நம சிவாய!* 🔔

*அருள்மிகு  பழநி:*
*தைப்பூச திருநாளில்..!*

*60 ஆண்டுகளுக்கு பின், தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் வருவதால், பழநி கோவில் நடை, மாலையில் அடைக்கப்படுவதால், தேரோட்டம் காலையில் நடக்கிறது.*

*பழநி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா, 2018ம் ஆண்டு ஜன., 25ல் துவங்கி, பிப்., 3 வரை நடக்கிறது.*

*முக்கிய நிகழ்ச்சியாக,*
*ஜன., 30ல், திருக்கல்யாணமும்,*
*ஜன., 31ல் தைப்பூசத்தன்று*
*தேரோட்டமும் நடக்கிறது.*

*இந்தாண்டு தைப்பூசம் பவுர்ணமி அன்று, சந்திர கிரகணம் மாலை, 6:22 முதல் இரவு, 8:41 வரை நிகழ்கிறது. இதனால், தேரோட்டம் பகல், 11:00 மணிக்கு நடக்கிறது.*

*கோவிலில், மாலை, 5:30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம், 2:45 மணிக்கு துவங்கி, 3:45 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது.*

*ஏறத்தாழ, 60 ஆண்டுகளுக்கு முன், தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் வந்து, பகலில் தைப்பூச தேரோட்டம் நடந்துள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது!*

No comments:

Post a Comment