Wednesday 13 December 2017

காமாட்சி விளக்கு

காமாட்சி விளக்கு
அனைவரும் அறிந்த ஓர் விளக்கு,
அனைவரின் வீட்டிலும் இருக்கும். இதில் கஜலட்சுமியின் உருவமே பொறிக்கப்பட்டிருக்கும்.
ஏன் இந்த தீபத்தை காமாட்சி தீபம் என்கின்றனர் ??
காமாட்சி
உலகத்தின் தாயான காமாட்சி தவம் செய்த பொழுது அனைத்து இறைசக்திகளும் காமாட்சியினுள் அடங்கியது,
அதனால் காமாட்சியை ஒருவர் வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிட்டும்.
பல கோவில்களில் நாம் சென்று பழங்கால கல்வெட்டுகளை பார்க்கும் பொழுது காம கோட்டத்து நாச்சியார் என்றே அந்த தலத்தின் இறைவி அடைமொழியுடன் குறிப்பிட்டுள்ளனர்.
பலரும் காமாட்சி தீபத்தை குல தெய்வ விளக்காக கருதுகின்றனர்.
முன்னர் பழங்காலத்தில் தெய்வங்களை புகைப்படம் எடுக்கும் வழக்கமில்லை, அதனால் வீட்டில் ஓர் தீபத்தை குலதெய்வமாக நினைத்து அதை ஏற்றி அதில் குலதெய்வத்தை வழிபடுவர்.
குல தெய்வம் தெரியாதவர் காமாட்சியினுள் ஸகல தெய்வமும் அடக்கம் என்பதால் அதில் அன்னை காமாட்சியை நினைத்து என் குல தெய்வம் தெரியவில்லை, நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை காப்பாற்று என வேண்டுவர்,
இதனால் அதற்கு காமாட்சி தீபம் என பெயர் ஏற்பட்டது.
பலர் வீட்டில் கிரஹ ப்ரவேச சமயத்திலும் திருமனம் ஆகி புகுந்த வீட்டில் பெண் நுழையும் போதும் நிறைநாழியில் ( நாழி - நெல் அளக்கும் படி, அது நிறைய நெல் வைத்தா அது நிறைநாழி) காமாட்சி தீபம் வைத்து செல்வர்,
பல இடங்களில் புதுபெண் முதலில்
காமாட்சி தீபத்தை ஏற்றுவர்,
காரணம் நான் புகுந்த என் வம்சத்தை வாழையடி வாழையாக நீ வளர்க்க வேண்டுமென குல தெய்வத்தை வணங்குவர்.
நாமும் காமாட்சி தீபம் ஏற்றி உலகத்தோர் சிறக்க வேண்டுமெண வழிபடுவோம்

No comments:

Post a Comment