Monday, 4 December 2017

அகத்தியர் சொல்கிறார்

பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு தலையில் எண்ணைய் தேய்த்துவிட வேண்டும். (மிகவும் நல்ல மனம் படைத்தோர் கலியுலகில் கிடைப்பது அரிது.) பிறர்கைப்பட எண்ணெய் தேய்ப்பதால் அவர்களுடைய தீயெண்ணங்களால் தூக்கமின்மை, உடல்முறித்து அழுதல், தலைவலி, கீழே விழுந்து காயம்படுதல், அடிக்கடி சோர்வடைதல் போன்றவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள்..
பொதுவாகப் பிறருடைய நிந்தனைகள், வசவுகள், தீய எண்ணங்கள், அவதூறுகள் போன்றவற்றால் தான் தலைவலி ஏற்படுகிறது. நம்மை வெறுக்கின்றவர்களுடைய தீய எண்ணங்கள் குறைந்தால் தான் நம் தலைவலி தீரும். அதுவரையில் எவ்விதத் தலைவலி மருந்தும் வேலை செய்யாது. தலைவலி ஏற்படுகின்றபோது, ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொண்டு “ஸ்ரீகபால லகுலேஸ்வர்யை நம:” என்ற மந்திரத்தைத் துதித்தவாறே அப்பழத்தை நெற்றியைச் சுற்றி லேசாக உருட்ட வேண்டும். உடலின் ஒவ்வொரு அங்கத்திற்கும் பல தேவதைகள் உண்டு. தலைப் பகுதிக்குரித்தான தேவதைகளுள் ஸ்ரீலகுலேஸ்வரியே நெற்றிக் கபாலப் பகுதியை ரட்சிக்கின்றாள். இந்த தேவியின் நாமஸ்மரணம், தியானமும் நம்மைப்பற்றித் தீய திட்டம் தீட்டும் எதிரிகளின் எண்ணங்களை மாற்றி விடுவதால் அவர்களுடைய தீய நினைவுகளின் விளைவால் நமக்கு ஏற்பட்ட தலைவலி நீங்கிறது.
பிறருடைய தீய எண்ணங்கள் வலிமை பெற்றால் அவை பேன் உருவில் தலையைத் தாக்கும். பொறாமை, குரோதம், திருஷ்டி போன்றவற்றால் விளையும் தோஷங்களே பேன்களாக உருவெடுத்து எப்போதும் துன்பம் தருகின்றது. எனவே பேன்களை உடனுக்குடன் நீக்குவதற்கான வழிமுறைகளைக் காண வேண்டும். குழந்தைகளுடைய தலையில் பேன் நிறைந்தால், அது அவர்களுடைய தெய்வீகத் தன்மையை பாதிக்கின்றது. எனவே பேன்களை உடனடியாக ஒழிக்க வேண்டும். இல்லாவிடில் அவை எதிர்வினைகளாக (negative forces) உருவெடுத்து பலவகைத் துன்பங்களாகப் பெருகும்.
“ஸ்ரீலகுலேஸ்வர்யை நம :” என்ற நாமத்தைச் ஜெபித்து ஏதேனும் ஒரு தெய்வத்திற்கு தேங்காய் எண்ணெய் தைலக் காப்பிட்டு அதனை வழித்துத் தெய்வப் பிரசாதமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  இதனை அவ்வப்போது உபயோகத்திற்கான தேங்காய் எண்ணெயோடு சேர்த்துத் தினமும் காலையிலும், மாலையிலும் “ஸ்ரீலகுலேஸ்வர்யை நம:” என்ற நாமத்தை ஜபித்தவாறு தேங்காய் எண்ணெயை தலைக்குத் தடவி வாருதல் வேண்டும்நாரிகேள பூஜை
1. தினமும் காலையில் ஆணும் பெண்ணும் தம் தலையில் எண்ணையைத் தேய்த்துக் கொள்ளுதல் வேண்டும். எண்ணெயின்றி கேசத்தை வாருதல் கூடாது. “கலிதோஷ ஹராயை” என்ற தேவி, கேசத்தில் வசித்து அருள்பாலிப்பதால் தலையில் எண்ணெயிடுவது என்பது “கலிதோஷ ஹராயை” தேவதைக்குரித்தான அபிஷேகமாக, தைலக் காப்பாக அமைகிறது. தேங்காய் எண்ணெயை உபயோகித்தல் மிகவும் விசேஷமானதாகும். ஏனெனில் ஸ்ரீபரசுராமர், ஸ்ரீகலிதோஷ ஹராயை தேவதையை நாரிகேள அஞ்சனம் (தேங்காய் எண்ணைய்) கொண்டு அபிஷேகித்துத் தைலக்காப்பிட்டு தினமும் காலையில் தலைக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்திடுவோர்க்குப் பல கலிகால தோஷங்களை நிவர்த்தி செய்யுமாறு வேண்டி ஸ்ரீதேவியிடமிருந்துப் பல வரங்களை நமக்குப் பெற்றுத் தந்தார்.

குரு ஸ்ரீ வெங்கட ராம ஸ்வாமி க்கு ப்ரானாம் நன்றி.

1 comment: