Wednesday 13 December 2017

மாதங்களில் நான் மார்கழி

மார்கழி மாதம் பீடை மாதம் என்பது சரியா?

“பீடு நிறைந்த மாதம் = பெருமைகள் மிகுந்த அரியன செய்தற்குரிய மாதம்; வாழ்வியல் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் உகந்த மாதம். ‘பீட மாதம்’ = அருட்பீடம், குருபீடம், கருப்பீடம், கருமப்பீடம், திருப்பீடம்...... முதலிய பீடங்களை அமைப்பதற்குரிய குலவளர் மாதம் = அருளுலகுக்கு மிக மிக சிறந்த மாதம்.”

ஆண்டுக்குரிய 12 மாதங்களையும், வாரத்துக்குரிய ஏழு (7) நாட்களையும், அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆண்டுகளின் பெயர் துவக்கத்திலிருந்து மீண்டும் வரும் செயல் திட்டத்தையும் வகுத்தவர்கள் இம்மண்ணுலகின் இயற்கையின் விதிகளை ஆராய்ந்த பதினெண் சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும் ஆவார்கள். இவர்களின் கருத்துப்படி மாதங்களில் சிறந்தது மார்கழி மாதம்தான்.

எந்த நல்ல காரியம் துவக்க வேண்டுமென்றாலும் இந்த மார்கழியில்தான் துவக்க வேண்டும். அதாவது திருமணம், கால்கோள் விழா, குருகுலக் கல்வி, வழிபாட்டு நிலையப் பூசைகள்..... முதலிய அனைத்தும் மார்கழி மாதத்தில்தான் செய்ய வேண்டும் என்பது தெய்வீகச் செந்தமிழ் மொழி இந்துமதத்தில் சட்டபூர்வமான அதிகாரப் பூர்வமான விதியாகும்.

அனைத்து வகையான கலை வல்லார்களும் இந்த ஒரு திங்கட்குரிய முப்பது (30) நாட்களும் அதிகாலையில் தங்களுடைய கலைகளைப் பயிற்சி செய்தால் நல்லது. அவர்கள் ஆண்டு முழுதுமுள்ள 11 மாதங்களில் பயிற்சி செய்யாவிட்டாலும் பாதகமில்லை..... என்று இப்படிக் குருவாக்கு, குருவாக்கியம், குருவாசகம், குருபாரம்பரியம் முதலியவை தெளிவாகக் கூறுகின்றன.

இதனைப் புரிந்து இனிமேலாவது நம்மவர்கள் மார்கழி மாதத்தை சிறப்பாகக் பயன்படுத்த வேண்டும் .

ஞானாச்சாரியார், ஞாலகுரு சித்தர்,
அரசயோகிக் கருவூறார்
#‌ஸ்ரீராமஜயம்

No comments:

Post a Comment