கோவை -பச்சாபாளையத்தில் ஜீவசமாதி கொண்டுள்ள பெருஞ்சித்தர்.தன்னாசியப்பர்.வரலாறு
...
*அஉம்...* கொங்குவளத் திருநாட்டின் மேற்கெல்லையாக யுகம்யுகமாக மலைமகளின் செல்வபுரியாக நிமிர்ந்து நிற்கும் நமது *"வெள்ளியங்கிரி "* -மலையோடு அனேக சித்தர்கள் தொடர்பில் இருந்துள்ளதை அறிவோம்... *அலுக்குச் சித்தர், சத்குரு பரப்பிரம்மா, வெள்ளிங்கிரி சுவாமிகள் ,அகோரிபாபா* என ஏராளம் ஏராளமானோர் வெள்ளியங்கிரி மலையில் தவம்செய்தவர்களே...
ஆனால் *"பதினென்"-சித்தர்களில் ஒருவராகக் கருதப்படும் பெருஞ்சித்தர். "தன்னாசியப்பர்" எனும் -பிண்ணாக்கீசர் 400-ஆண்டுகளுக்கு முன்* தவம்செய்த புண்ணிய மலையே நம் *வெள்ளியங்கிரி மலை...*
வெள்ளியங்கிரிமலையை பின்புலமாகக் கொண்டு , சித்தனுக்குச் சித்தனாக , குருவின் குருவாக திகழ்ந்த பெருஞ்சித்தர்."தன்னாசியப்பர்" கோவைமாவட்டம்,அன்னூர்வட்டம், *பச்சாபாளையத்தில்* மகாஜீவசமாதியில் ஐக்கியமாகி இன்றளவும் பேரற்புதங்களை நிகழ்த்தி வருவது உலகில் எவராலும் மறுக்கமுடியாத பேருண்மையாகும் ... இனி அவரின் மெய்சிலிர்க்கச் செய்யும் வரலாற்றை ஆய்வுசெய்வோம்...வாருங்கள்
தன்னாசியய்யன் யார்?-- ஒரு வரலாற்றுப் பார்வை...
*பதிவு மற்றும் ஆய்வு :-
சித்தஜோதி ஊடகம்*
கோவைமாவட்டம், அன்னூர்வட்டம், பச்சாபாளையத்தின் ஆதிப்பெயர்கள் பச்சாதிமண்ணம்,குட்டிப்பட்டி என்றெல்லாம் உண்டு..இவ்வூரில் உதித்தவரே தன்னாசியப்பர்.. உள்ளூர்மக்களுக்கே வரலாறு தெரியாமல் உள்ளது... இதனை தெளிவுபடுத்தவேண்டியது நமதுகடமை...தன்னாசியப்பர் பச்சாபாளையத்தில் ஒருமாலைப்பொழுதில் தமது தோட்டத்தில் அமர்ந்திருந்தபோது வெள்ளியங்கிரி ஆண்டவர் பெருமானே வெள்ளைக்குதிரையில் வந்து, தென்கயிலையாகிய வெள்ளியங்கிரி மலைக்கே அழைத்துச்சென்று,, அங்குள்ள இரகசியகுகையில் ஞானஉபதேசங்கள்- தீட்சை முதலியவை வழங்கி தானே மெய்குருநாதராக நின்று ஆட்கொண்டார்... சிலநாட்கள் வெள்ளியங்கிரி மலையில் தவம்செய்தபின் தன்னாசியப்பர் தீத்திபாளையம் அருகமைந்த "அய்யாசாமி" - மலையில் உள்ள ஒருகுகையில் சிலகாலம் தவம்செய்துவிட்டு திரும்பினார்...
ஊருக்கு திரும்பியபின் தன்னாசியிடம் அனேகஅனேக மாற்றங்கள் தென்பட்டன.. உடை நடை பாவனை வாக்கு மொழி செய்கை -அனைத்திலும் மாற்றம் தென்பட ,,,
பட்டாடை கதம்பமாலையுடன் ஒருநாள் அமர்ந்திருந்தார்...இதனை கண்ட ஊரார் தன்னாசியப்பன் திருமணம் செய்துகொண்டார் போலும் என எண்ணினர்... ஆனால் பற்றுநீங்கி பரிபூரணம் கண்ட தன்னாசியப்பர் தன்னை வெளிப்படுத்தாமல் பல்வேறு இடங்களுக்கும் சென்றும் தவமியற்றி வந்தார்...
இப்படியே காலம்கழிந்து வருகையில் மகா தவசித்தியடைந்து சித்தாடப்புறப்பட்டு திருச்செங்கோடு எனும் ஊருக்குப் புறப்பட்டார் ... அங்கே திருவிழாவில் தலைவெட்டுப்பட்டு இறந்த மனித உடலைக் கண்ட தன்னாசியப்பர் தலையை பொருத்தி சிவபஞ்சாட்சரம் கூறி திருநீற்றைத் தூவினார்..மறுகணமே வெட்டுபட்டத்தலை முண்டத்தில் பொருந்தி, உடலில் உயிரோட்டம் உண்டாகி, செத்தவன் உடல் துடித்து எழுந்துநிற்க ,-- அவ்வூர் மக்கள் வியந்து போய் தன்னாசியப்பரை மாதவசி என உணர்ந்து வணங்கினார்கள்...
அதன் பின் தன்னாசியப்பர் காரமடைபட்டினம் சென்றார்.. அங்கே சாதுக்கள் திரண்டு தன்னாசியை ஏளனம்செய்ததோடு நில்லாமல், ஓராயிரம் சிறுதுண்டங்களாய் அரிந்த "அரசாணிக்காயை"" --தன்னாசிமுன் வைத்து நீ உண்மையான சித்தனென்றால் இதை முன்போல் முழுக்காயாக மாறச்செய் பார்க்கலாம்..!! -- என்றுசொல்லி நகைப்புடன் காத்திருந்தனர்...சற்றும் சினம்கொள்ளாத தன்னாசியப்பன் தன்மேல்துண்டை எடுத்து துண்டங்களின் மீதுபோர்த்தி சிவபஞ்சாட்சிரத்தை தியானித்து விபூதியை தூவினார்...
அவ்வளவுதான் ஆயிரந்துண்டங்களாய் அரிந்த அரசாணிக்காய் அரைநொடியில் முழுக்காயாக மாறிப்போனது.. இதுகண்ட காரமடைசாதுக்கள் மிரண்டுபோய் இவர் சாதாரண சந்நியாசி அல்ல --மாதவசி என்பதை உணர்ந்து வணங்கி காவியுடை முதலான அனேகபொருட்கள் வழங்கி உபசரணைகள் செய்து இவர் மாசித்தன் என போற்றினர்..
அதன்பின் அவினாசியூருக்கு புறப்பட்டு சென்றார்...அங்கே கோவில் திருவிழாவில் ஊர்கூடி தேர்இழுத்து வந்தனர் பொதுமக்கள்..
அதை கண்ணுற்ற தன்னாசியப்பர், தேர் செல்லச்செல்ல அதன்மீதேறி தேரின் உச்சியில் கூரியசல்லையின் நுனியில் ஒற்றைகால் பெருவிரல் நுனிவைத்து அசையாமல் நின்றார்... தேர் செல்லச் செல்ல இப்படி செய்தார்... இவரை கண்ட *அவினாசியூர்* மக்கள் இவர் வெற்றுசந்நியாசி அல்ல.... மாபெரும் சித்தனென்பதை உணர்ந்து வணங்கினர்...
அதன்பின் அரசூருக்கு வருகைதந்த போது, தன்னாசியை பற்றி கேள்விப்பட்ட "துலுக்குராஜன்" (-மன்னன்) என்பவன் அவரைப் பிடித்துவர கட்டளையிட்டு ஏவலாட்களை அனுப்பினான்.. அவர்கள் பிடித்துக்கொண்டுபோய் துலுக்கராஜனிடம் முன்னிருத்த, ,தன்னாசியை போலி சித்துவித்தைக்காரன் எனக்கருதி , அவரைதண்டிக்க ஒருஅறையிலிட்டு காய்ந்த வற்றல் மிளகாய்களை குவியலாக மலைபோல தலைமேல் பெருமளவில் கொட்டி தீவைத்துவிட்டார்கள்....
அவ்வளவுதான், அந்தப்பட்டினமே மகாகலக்கமடைந்து பிரளயம் ஏற்பட்டது போலானது... மிளகாய்வற்றல்கள் முற்றும் எரிந்துசாம்பலான பின் அறையைத் திறந்துபார்த்தார்கள்..அவர்கள் அங்கே கண்டகாட்சியில் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றார்கள்...
ஆம்..நமது தன்னாசியப்பர் யாதொரு கேடும் சூழாமல் நெருப்புபட்ட அடையாளமே கடுகுசிறுத்தளவும் இன்றியும் எழில்மேனியோடு மகாநிஷ்டை கூடியிருந்தார்கள்... அதைக்கண்ட ""துலுக்கராஜன்"" - அக்கணமே பேரச்சம் உண்டானவனாய் உயிர்ப்பயம் உண்டாகி, செய்வதறியாது திகைத்து நடுநடுங்கி நின்றான்... அவன் தன்னாசிமுன் மண்டியிட்டு சிரம்தாழ்ந்து வணங்கி, தாங்கள் யாரென்று அறியாமல் பெரும்பிழை செய்துவிட்டேன் எனக்கூறி - செய்தபிழையை பொறுத்தருள வேண்டியதோடு தாங்கள் இருக்கும் கோவிலுக்கு பொன்னாலும் செம்பாலும் மதில்கட்டித்தருவதாய் சொன்னான்..
*தன்னாசியய்யன்* அதைமறுத்து நாடுண்டு,குளமுண்டு,நீருண்டு எனச்சொல்லி நீங்கிச்சென்றார்... இப்படி அனேக சித்துகள் நிகழ்த்திவந்தார் பெருஞ்சித்தர்.தன்னாசியப்பர்.இவர் வாழ்ந்தகாலத்தில் அவரை நினைந்து சிவபஞ்சாட்சரம் சொல்லி விபூதி பூசினாலே கடிவிசங்கள் யாவும் காணாமல் போகும்..
இத்தகைய அதிசயங்கள் செய்த *தன்னாசியய்யன்* தான் மகாஜீவஐக்கியமடையப் போவதாகச் சொல்ல,, பச்சாதிமக்கள் பெருங்கவலைகொண்டு வருந்தினார்கள்..மக்கள் அழுதுபுரண்டார்கள்.. இனி கடிவிசத்திற்கும் கொடிய பேய்களுக்கும் பலியானால் யார்காப்பாற்றுவார்கள்???இவர் போன்ற மாதவசியை இனி
கனவிலும் காணமுடியாதே எனமிகவருந்தினர்...
இதையறிந்த பெருஞ்சித்தர் தன்னாசியப்பர் , தான் ஜீவசமாதியில் நிலைத்தப்பின் முன்பை விட ஆயிரம்மடங்கு பேராற்றலுடன் விளங்கப்போவதாகவும், தன்னுடைய நாமத்தைஉச்சரித்தாலே ஆடாதபேயும் ஆடுமென்றும், ஓடாதபேய்கள் ஓடுமென்றும்,,என்ஜீவசமாதியில் ""கொள்ளளவு நீரெடுத்தால் கோடிவிசம் கக்கடிப்பேன்..கடுகளவு நீரெடுத்தால் கணத்தவிசம் கக்கடிப்பேன்"' --என மெய்வாக்கு சொல்லி நான்எப்போதும் போல் உங்கள் அனைவருக்கும் எக்காலத்திலும்,நித்திய சிரஞ்சீவியாய், பாதுகாவலாக இருப்பதாக வாக்குகள் பலசொல்லி, முன்புறம் சிறுமேடை அமைத்து அதன்மேல் நின்றவாறு , குகைவெட்டச் சொல்லி அதனை பார்வையிடலானார்...
மக்கள் அனைவரும் கூடிநின்று பலமாக அழுது-- கண்ணீர் சொறிந்து, விற்கிப் புலம்பிநிற்க, உலகை உய்விக்கத் தோன்றிய மகான். நமது "அய்யன்சுவாமிகள்" நல்வாக்குகள் பலவும் சொல்லி மகா ஜீவசமாதியில் உயிரோட்டமுடன் அமர்ந்தார்கள்... பச்சாதி மக்களும் பக்தகோடிகளும் " ஓம்நமசிவாய "- எனும் சிவபஞ்சாட்சிரத்தை உரக்க முழங்கினர்... அம்முழக்கத்தால் பச்சாதி வானமே அதிர்ந்து அடங்கியது... மக்கள் ஜீவசமாதியின் மீது பூச்சொறிந்து உணர்வு கலங்கி சென்றனர்...
அதன்பின் குகையை மூடினார்கள்..மறுநாள் குகையின் மேற்புறத்தில் ஒரு லிங்கம் திடுமென தோன்றிஎழுந்தது...அதை அப்போதே உடனடியாக மூடும்படி அசரீரீ (வான்குரல்)உத்தரவு இடவே சுண்ணச்சாந்து கொண்டு உடனடியாக மூடிமறைத்தார்கள்... வரலாறு தொடரும்.....காத்திருங்கள்.. ...
சித்தஜோதி ஊடகம் - அலைபேசி :- 9626669371.
"தன்னாசிசித்தர் வரலாறு தொடர்ச்சி" ... (இரண்டாம் பாகம்)
*அதன்பின் தன்னாசியின் பெயரால் கோவை, கள்ளிப்பாளையத்தை சேர்ந்த அன்பர் ஒருவர் அனேக நற்தொண்டுகளை மக்களுக்கு செய்துவந்தார்... அவ்வாறு செய்துவருங்காலத்தில் ஒருநாள் அவர் வரும்போது கள்அருந்தி போதையுற்ற நாலுபேர் அவரை இடைமறித்து செத்துப்போன ஆடு ஒன்றினை காட்டி, நீ வணங்கும் தன்னாசியய்யனின் மகிமை உண்மைதான் என்றால் இந்தசெத்த ஆட்டினை உயிரோடு மீள எழுந்து ஓடச்செய்...பார்க்கலாம்... என்று தர்க்கம்செய்து சண்டையிட்டார்கள்.
உடனே அவ்வன்பர் தனது குருநாதர்.மகான்.தன்னாசியய்யன் திருவடிகளை பஞ்சாட்சரம் சொல்லி நினைந்து வணங்கவே, செத்தஆடு திடுமென உயிர்பெற்று மீளஎழுந்து ஓடியது...நால்வரும் திடுக்கிட்டுத் திகைத்துப் போய் அந்த ஆட்டினைப் பிடிப்பதற்கு நாலாபக்கமும் பாய்ந்து ஓடினார்கள்... அவர்கள் எவ்வளவோ ஓடிமுயன்றும் அந்தஆட்டினை பிடிக்கமுடியவில்லை...அந்தஆடும் சிறிதுதூரத்தில் சென்று திடுமென மறைந்துபோனது... இதை கண்ட நால்வரும் அஞ்சி தன்னாசிபக்தரிடம் மன்னிப்புகோரி தரையில்விழுந்து வணங்கினார்கள்...
இதைப்போலவே இறந்த மாட்டினையும் உயிர்ப்பித்து ஓடச்செய்துள்ளார்..தன்னாசியப்பர்...
கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்காலத்தில் இவர்வாழ்ந்துவந்ததாக தெரிகிறது...ஏரத்தாள 400-ஆண்டுகளுக்கு முன் தன்னாசியப்பர் காலமாக கருதப்படுகிறது...எனினும் பச்சாபாளையம் தன்னாசியப்பர் ஜீவசமாதி இன்றும் உயிர்ப்புடன் அதீத சக்தியோட்டத்துடன் திகழ்ந்து வருவதன் மூலம் ,,இன்றும் மக்களின் நோய்கள் குறைகள் தீர்ந்துவருவதன் மூலம் தன்னாசிசித்தர் அன்றைக்கு கொடுத்தவாக்கு இன்றைக்கும் செயலில் இருப்பது தெளிவாகிறது...
சித்தர்சமாதிகளில் சிலவற்றை "சூனியசமாதிகள்""-என பெரியோர்கள் வகைப்படுத்தி சொல்கிறார்கள்.. (சூனியம்--மறைந்திருப்பது) காரணம் அச்சித்தர் தன்னுடைய மெய் வரலாற்றை ,,மகிமையை மறைந்திருக்கும்படி செய்திருக்கலாம்...தம்மை வெளிப்படுத்திட உரியகாலம் எதிர்நோக்கி மறைப்பில் இருக்கலாம்.. இத்தகையோரின் ஜீவசமாதிகள் பலவும் இன்றும் தமிழகத்தில் வெளிப்படாமல் உள்ளது... அதில் ஒன்றுதான் தன்னாசியப்பர் ஜீவசமாதி... இவர் சமாதியை "சூனியசமாதி"- எனச்சொல்லக்காரணம் இவர் வரலாறு எந்தசித்தர்பீட முகவரி நூலிலும் பெரும்பாலும் இடம்பெறவில்லை...
மேலும் ஈரோடு சென்னிமலையில் உள்ள பிண்ணாக்கீசர் ஜீவசமாதி தன்னாசியப்பர் என்றபெயரிலேயே இன்றும் உள்ளது..இதுதான் சித்தவியல் ஆய்வாளர்களை வழுவாய் சிந்திக்க வைக்கிறது....மேலும் தன்னாசிசித்தர் செய்துள்ள அரும்பெரும் சித்தாடல் விளையாட்டுகளும் அவர் சாதாரணமானவர் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது...
எனவே தன்னாசியப்பர் பெயரில் உள்ளது பதினெண்சித்தர்களில் ஒருவரான ""பிண்ணாகீசரே"" - என்று கருத முழுவாய்ப்பிருக்கிறது.... இதற்கு சிறியநிகழ்வு ஒன்றும் சான்றாக உள்ளது....
ஆம்..கோவை,பச்சாபாளையம் ஜீவசமாதியில் ஒரு சித்தர்தொடர்பாளர்,கடந்த 50-ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட ஒருநோய்க்கு தீர்வை நாடி பச்சாபாளையம் வந்துள்ளார்... தன்னாசிசித்தர் அசரீரி வடிவில் அவரிடம் உரையாடல் நிகழ்த்தி சென்னிமலையில் குறிப்பிட்ட இடத்தை அடையாளம் சொல்லி அங்கு உன்நோய்க்கு தீர்வாகும் மருந்து இருக்கிறது..என சொல்லவே அவ்வன்பரும் அவ்வண்ணமே செய்து நோய்நீங்கப்பட்ட வரலாற்றை இன்றும் பச்சாபாளையம் ஜீவசமாதி பூசாரியிடம் யாரும் கேட்டுப்பெறமுடியும்....எனவே பச்சாபாளையத்தில் ஜீவஐக்கியமுற்றுள்ள மகான்ஒருவர் சென்னிமலையை குறிப்பாய் சுட்டிக்காட்டியது ஏன்??? என சிந்தித்தால் மர்மம் கொஞ்சம் அவிழ்வதை உணரலாம்...ஆம் சென்னிமலை,பச்சாபாளையம் இரண்டிலும் சமாதி வீற்றிருக்கும் சித்தருக்கு ஒரே நாமம் ""தன்னாசியப்பர் """--என உள்ளது...
பச்சாபாளையத்துறையும் சித்தர் தன்பெயர் நாமம் கொண்டுள்ள,, ஜீவசமாதியையுடைய சென்னிமலைக்கு தன்னைநாடிவந்த அன்பரை அனுப்பிவைக்கிறார். என்பதை வைத்து சிந்தித்து பார்க்கும்போது-- சென்னிமலையோடு தன்னாசிசித்தர் ஒருவித தொடர்பில் இருப்பதால் தானே அங்கு அனுப்பியிருக்கமுடியும்....?
அப்படி சென்னிமலையோடு தொடர்பில் உள்ள சித்தரின் நாமம் சென்னிமலை- பச்சாபாளையம் இருஇடத்திலும் ஒன்றாக இருக்கும்போது அவர்வேறு -- இவர்வேறு என்று எப்படி கருதமுடியும் ?---எனவே தமிழகத்தின் வரலாற்றுப்பெருமை கொண்ட "" பதினெண் சித்தர்களில் ஒருவரான "பிண்ணாக்கீசர்"- எனும் தன்னாசியப்பர்தான்"" -- பச்சாபாளையத்தில் இரண்டாம்முறையாக மகாஜீவ சமாதியடைந்திருக்க வேண்டுமென தெரிகிறது...
போகர்சித்தர் பழனியில் ஜீவசமாதியடைவதைப்போல அங்குள்ள சித்தர்களுக்கு போக்கு காட்டிவிட்டு-- இலங்கை திரிகோணமலையில் ஜீவசமாதியடைந்ததாகவும், அவ்வண்ணமே கோரக்கசித்தரையும் பொய்கைநல்லூரில் சமாதியடைவதாக காட்டிவிட்டு- நீயும் என்னுடன் வந்துவிடு என போகர் தன்னிடம் சொன்னதாக சித்தர்.கோரக்கரே தனது நூலில் தெரிவித்துள்ளார்....
ஆக அந்த அடிப்படையில் பார்க்கையில், சித்தர்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் தோன்றிவளர்ந்து , ஜீவசமாதி யடையும் தன்மையுடையவர்கள்தான் என்பதை வரலாற்றில் மிகவும் நன்கறியலாம்...எனவே பதினெண்சித்தர்களில் ஒருவரான ""பிண்ணாக்கீசர்தான்"" தான்- என்பதை வெளிப்படுத்தாமல் பச்சாபாளையத்தில் "தன்னாசி சித்தர்"- இரகசியமாக ஐக்கிய முற்றிருப்பதால் அது "சூனியசமாதி"- என்றே கருதவேண்டியுள்ளது...
நாம் தமிழகத்தின் பெருஞ்சித்தர்கள் பதினென்மரில் ஒருவரான, "பிண்ணாக்கீசரின்" ஜீவ சமாதியில் உள்ளோம் என்பதாகவே கருதி பச்சாபாளையத்தை சென்றடைந்து "தன்னாசிசித்தரை" தரிசிப்போம்...தன்னாசி என்பவர் "பிண்ணாக்கீசராகவே"- இருக்க வேண்டும் என கருதுகிறோம்...அப்படியானால் பச்சாபாளையம் இன்னும் ஆயிரம்மடங்கு புண்ணியம் செய்த பூமியாகத்தான் இருக்கவேண்டும்...
ஞானவாள் ஏந்துவோம்...அஞ்சுவது யாதொன்றும் இல்லை...எல்லாம் நன்மைக்கே...சூழ்க சித்தர்நெறி....நன்றி...
-சித்தஜோதி ஊடகம்
*கோவைமாவட்டம் அரசூரை அடுத்துள்ள பச்சாபாளையத்தில் பெருஞ்சித்தர்.தன்னாசியப்பர்.ஜீவசமாதி ஐக்கியத்தில் இன்றும் உயிரோட்டமுடன், நோய்தீர்த்தவாறு, நித்திய சிரஞ்சீவியாய் அமர்ந்துள்ளார்... இன்றும் நோய்நொடிகள்,துன்பங்களை தீர்த்து தனது அருளாட்சியை மிகத்துல்லியமாக செலுத்திவருகிறார்..இது இம்மண்ணுலகில் யாராலும் மறுத்துரைக்க முடியாத, கோடி மடங்கு-- பொதுமக்கள் அனுபவ உண்மையாகும்...
உண்மை தெளிவிக்கும் களத்தில் ,அன்புடன் *சித்தஜோதி ஊடகம்* -9626669371.
தன்னாசி பேர்சொல்லி பெரிய முத்திநீறு
தனையெ டுத்து கடிவாயில் பூசினாக்கால்
முன்னிருந்த பேய்கள்தான் மாரண மாகும் முக்கியமாய் கடிவிசங்கள் காணா தோடும்
பின்னந்த நீற்றை போற்றித் தொழுதிட்டால்
பேர்பெரிய சித்திகளுமுன் வசம தாகி
உன்னுடையே நாமமே வெல்லக் காண்பாய்
உருவறிந்து கூடிற்றால் உத்தம னாவாய்...!!!
No comments:
Post a Comment