சுந்தரர் -சிவனின் அற்புதங்கள்:
---------------------------------------------
உலகெலாம் இருப்பவர்களுக்கு தந்தையாக
காட்சி கொடு்ப்பது ஈசன். அவரின் இடம்
இமயமலை. அந்த மலையோ விபூதி
பூசியது போல் வெண்மையாக இருக்கும்.
பிரம்மன் அன்ன வாகனத்தில் வந்து
இறைவனை தரிசித்துவிட்டு வெளியே வந்து
பார்த்தால், அந்த வெண்மையான கையிலாய
மலையில் தன் வாகனமான அன்னபறவை
எங்கு இருக்கிறது என்று தேடி அழைத்து
செல்வதே வாடிக்கையாக கொண்டு இருந்தார்
பிரம்மன். ஈசனின் மனம் போல் வெண்மையாக
இருக்கும் இமயமலை. சிவபெருமானின் பரம
பக்தனாகவும் பணியாலராகவும் இருந்தவர்
ஆலாலசுந்தரம். தாயும்மானவருக்கு திறுநீறு
பூசி பூக்களால் அலங்கரிப்பார் ஆலால
சுந்தரம். ஒருநாள் சிவனுக்காக பூக்களை
பறித்து கொண்டு இருக்கையில், அங்கே
பார்வதிதேவியின் இரு தோழிகளும், தேவிக்காக
பூக்களை பறித்து கொண்டு இருந்தார்கள்.
அந்த இரண்டு பெண்களையும் ஆலால்சுந்தரர்
பார்த்து, “அடடா… என்ன ஆழகு…!, என்ன
நளினம்…!“ என்று வர்ணித்தார். இதை கேட்ட
அக்கன்னி பெண்கள் வெட்கப்பட்டு அந்த
இடத்தை விட்டு ஒடிவிட்டார்கள். சுந்தரரும்
சில பூக்களை மட்டும் பறித்து கொண்டு
சிவபெருமானுக்கு மலர்களால் அர்ச்சனை
செய்ய சென்றார். சுந்தரர் தன் அருகில்
வந்தவுடன். அவரின் மனதில் ஒடி கொண்டு
இருக்கும் எண்ணத்தை புரிந்த கொண்ட
சிவபெருமான், “ சுந்தரா… நீ இப்போது சராசரி
மனிதர்களின் உணர்வை பெற்று விட்டாய். இனி
நீ இங்கு இருக்க வேண்டும் என்று கட்டாயம்
இல்லை. நீ உன் மனத்திற்கு பிடித்தது போல்
பூலோகத்தில் வாழ்ந்து பின் எம்மிடம்
வருவாயாக..!“ என்றார் அகிலாண்டேஸ்வரர்.
“அய்யனே…என்னை மன்னிக்க வேண்டும். நான்
பெரிய பாபம் செய்து விட்டேன். அதனால்
தங்கள் கோபத்திற்கு ஆளாகி நின்று
இச்சாபத்தை பெற்றேன். பெற்ற சாபத்தை
திரும்ப பெற முடியாது என்பதை நான்
அறிவேன். பெண்களின் மேல் கொண்ட துஷ்ட
மோகத்தால்தான், தங்களை விட்டு பிரிய
நேர்ந்ததே….“ என்று கவலை கொண்டார்
சுந்தரர். “சுந்தரா… கவலை வேண்டாம் தக்க
சமயத்தில் உன்னை ஆட்கொள்வோம். சென்று
வா…” என்று அருளாசி தந்தார் சிவபெருமான்.
திருநாவலூரில் சைவ அந்தணர் குலத்தில்
சடையனார் என்பவருக்கு இசைஞானியார்
என்ற நற்குணம் படைத்த மனைவி
அமைந்திருந்தாள். இவர்களுக்கு அழகான ஆண்
குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு
“நம்பியாரூரன்“ என்று திரு பெயர் சூட்டினர்.
நம்பியாரூரனின் முகம் தெய்வீக கலையாக
இருந்ததால் பெற்றோர்கள் உள்பட
சுற்றத்தாரும் பாராட்டி சீராட்டி வளர்த்தார்கள்.
ஒருநாள், குழந்தையை நன்கு அலங்கரித்து
இசைஞானியார் தன் குழந்தையின் கையில்
தேர் கொடுத்து விளையாட அனுப்பி
வைத்தாள். விளையாட சென்ற தம் திருமகன்
அடு்த்த நிமிடமே தத்து பிள்ளையாக
வேறோரு இடம் போவான் என்று கனவிலும்
நினைத்து இருக்க மாட்டாள் இசைஞானியார்..
விதி விளையாட்டின் ரூபத்திலேயே வந்தது.
நம்பியாரூரர் தெருவில் விளையாடி
கொண்டிருக்கையில் அந்த வழியாக வந்து
கொண்டு இருந்த அரசர் நரசிங்க
முனையரையர், சற்று நின்று குழந்தையின்
மழலை சிரிப்பில் மயங்கி நம்பியாரூரன்
பெற்றோர்களிடம், “நீங்கள் பெற்றது
பிள்ளையல்ல… அப்பழுக்கற்ற வைரம். அந்த
ஜொலிப்பான முகம் எந்த நாடடின்
பிள்ளைக்கும் இருக்காது. இவன் இந்திரனோ…
இல்லை தேவலோக மன்மதனோ… இப்பிள்ளை
தெருவில் விளையாடும் பிள்ளையல்ல…
அரண்மனையில் விளையாட வேண்டிய
பிள்ளை. இந்த நாட்டின் சிம்மாசனத்தை
அலங்கரிக்க வேண்டிய பிள்ளை. உங்கள்
குழந்தையை எனக்கு தத்து கொடுக்க
வேண்டும்.“ என்று கேட்டார் அரசர். தாம்
பெற்ற குழந்தை வரும் காலத்தில் நாடாள்வான்
என்ற மகிழ்ச்சியில் மனநிறைவுடன் அரசருக்கு
தத்து கொடுக்க சம்மதித்தார்கள் நம்பியாரூரன்
பெற்றோர்கள். நம்பியாரூரை தன் பிள்ளை
போல் பாசத்துடன் வளர்த்து வந்தார்கள்
அரசரும் – அரசியும். தத்து எடுத்தாலும்
நம்பியாரூராரை அந்தண குலமுறைப்படியே
வளர்தது வந்தார்கள். நம்பியாரூரனுக்க
ு திருமண வயது வந்ததால் தங்கள்
அந்தஸ்துக்கும் வசதிக்கும் இணையான
மருமகளை தேடினார்கள். சடங்கலிச்சிவாசா
ரியார் என்ற மறையவருக்கு அழகான மகள்
இருக்கிறாள் என்று கேள்விப்பட்டு, அந்த
பெண்ணையே தன் மகனுக்கு திருமணம்
செய்ய சம்மதித்தார் அரசர். திருமணத்திற்கான
ஏற்பாடுகள் விமர்சையாக நடந்தது. இன்னும்
சில மணி நேரத்தில் திருமணம்.
நம்பியாரூரரும் மற்றவர்களும் மகிழ்ச்சியில்
இருந்தார்கள். மண மேடையில் மணமகன்
நம்பியாரூரார் நெருக்கத்தில் மணமகள்.
முகூர்த்த நேரம் நெருங்கியது. அந்தணர்களின்
திருமண மந்திரம் கம்பீரமாக ஒலித்தது.
திருமாங்கல்யத்தை கையில் எடுத்தார்
நம்பியாரூரர். கெட்டிமேள சப்தம் விண்ணை
தொட்டது. மணபெண்ணின் கழுத்தில்
திருமாங்கள்யம் நெருங்கும் நேரத்தில் கெட்டிமேள சப்தத்தையும் மீறி, “நிறுத்துங்கள்…“
என்று அந்த சமயத்தில் கேட்கக் கூடாத
வார்த்தை ஒலித்தது. குரல் வந்த திசை
நோக்கி அனைவரின் விழிகளும் திரும்பியது.
அங்கே ஒரு வயதான பெரியவர். அவர் கையில்
ஒரு ஓலை சுவடி. “நிறுத்துங்கள்
திருமணத்தை. எனக்கு நியாயத்தை சொல்லி
பிறகு நடத்துங்கள் உங்கள் நாடகத்தை.“
என்றார் பெரியவர். “நாடகமா…? கிழவரே…
என்ன உளறுகிறீர். நடப்பது இந்நாட்டின் அரசர்
இல்ல திருமணம்.“ என்றார் ஒருவர். “ஓ….
அரசர் இல்ல திருமணம் என்றால் அநியாயம்
செய்யலாமோ?“ என்றார் பெரியவர். அதை
கேட்டு அரசர், மேடை இறங்கி பெரியவரின்
முன்பாக வந்து நின்றார். “பெரியவரே… என்ன
அநியாயம் கண்டீர்கள்..?“ என்றார் அரசர். “என்
அடிமையை நீங்கள் சொந்தம்
கொண்டாடுகிறீர்களே…. அதுதான் அநியாயம்.“
அரசர், “உங்கள் அடிமையா…. யாரது…?“
“அதோ அவன்தான்!“ – பெரியவர்,
மணமேடையில் அமர்ந்திருந்த மணமகன்
நம்பியாரூரரை கைக் காட்டினார். அதிர்ந்தே
போனார்கள் அனைவரும். நம்பியாரூரர்
திடுகிட்டு எழுந்து பெரியவரின் அருகில்
கோபமாக வந்தார். “பித்தனே… எங்கே வந்து
என்ன பிதற்றுகிறாய்..?. யார் யாருக்கு
அடிமை..?“ “நீ…. நீதானடா எனக்கடிமை!“
“அரசர் வீட்டு பிள்ளை உமக்கு அடிமையா..?“
என்றார் ஒருவர். “அரசர் வீட்டு பிள்ளையா….?
இவன் அரசருக்கு தத்து பிள்ளை. அதற்கு
முன்னரே இவன் அடிமை பிள்ளை.“ “சரி…
எதுவாக இருந்தாலும் திருமணம் நடக்கட்டும்.
பிறகு பேசலாம்“ என்றார் அரசர். “ எனக்கு
தேவை என் அடிமை மட்டும்தான். இவனை
மட்டுமே நான் அழைத்துச் செல்வேன்.“
“மறுபடி மறுபடியும் என்னை அடிமை
அடிமை என்கிறீரே… அதற்கு என்ன ஆதாரம்”
என்றார் நம்பியாரூரர். “ஆதாரம் இல்லாமல்
வழக்கு தொடர்வேனா..? இதோ எமது
ஆதாரம்.“ என்று பெரியவர் தன் கையில்
இருந்த ஓலை ஒன்றை நீட்டினார். “என்ன
ஓலை இது“ – நம்பியாரூரர். “நீ எமக்கு
அடிமையெனும் ஆதாரம்” – பெரியவர். “எவன்
எழுதி தந்தது..?“ “எழுதி தந்தவன் உன்
பாட்டன். அதனால் மரியாதையாக பேசு“ “என்
பாட்டனா..? பித்தனே மரியாதையாக
போய்விடு.“ “போகலாம். வா என்னுடன்“
“சரி… ஓலையை காட்டு“ “தாராளமாக. இந்தா
பிடி. நன்றாக படி“ நம்பியாரூரர், அந்த
ஓலையை வாங்கி படித்த உடனே கிழித்து
போட்டார். “இது மோசடி ஓலை.“ என்றார்
நம்பியாரூரர். “நீ இப்படிதான் செய்வாய் என
எமக்கு தெரியும். நீ கிழித்தது நகல். அசல்
ஓலை பத்திரமாக இருக்கிறது.“ “இதில்
இருப்பது என் பாட்டனாரின் கையெழுத்து
அல்ல“ என்றார் ஆரூரர். பலமாக சிரித்தார்
பெரியவர். “உன் பாட்டனையே நீ பார்த்திருக்க
மாட்டாய். அவர் கையெழுத்தா உனக்கு தெரிய
போகிறது?” என்றார் பெரியவர். “பெரியவரே…
இந்த கையேழுத்து ஆரூரரின் பாட்டன்
கையெழுத்து என்பதற்கு என்ன ஆதாரம்.“
கேட்டார் அரசர். “அதை நான் வழக்கு
மன்றத்தில் நிரூபிப்பேன்.“ “இப்போதே வழக்கு
மன்றத்தை கூட்டுங்கள். இந்த பித்தனின்
ஆதாரத்தையும் பார்ப்போம்“ என்றார் ஆரூரர்.
“உன் மீது வழக்கை உன் ஊரிலேயே
நடத்தினால் தீர்ப்பு உனக்கு சாதகமாகதான்
வரும். என் ஊரில்தான் வழக்கு நடக்க
வேண்டும்.” “ உன் ஊர் எது..?“ “
திருவெண்ணெய் நல்லூர்..!. புனிதமான
வேதங்களை ஓதும் வேதியர்கள் வசிக்கும் ஊர்.
அறநெறியாளர்கள் முன்னிலையில் நியாயம்
கேட்டு வழக்காடி, நீ என் அடிமை என்று
நிரூபிப்பேன்.“ என்றபடி பெரியவர் திரும்பி
செல்ல, காந்தம் இரும்பை இழுத்துச்
செல்வதை போன்று பெரியவரின் பின்னே
சென்ற ஆரூரரும் மற்றோரும் திருவெண்ணெய்
நல்லூர் அடைந்தனர் “சபையோரே… நான்
இந்த ஆரூராரை பற்றி முறையிட
வந்துள்ளேன். இவன் என் அடிமை. நான்
காட்டிய அடிமை ஒலையை கிழித்து
விட்டான். ஆனாலும் அவன் கிழித்தது
நகல்தான். என்னிடம் அசல் மூல ஒலை
இருக்கிறது. ஆகவே என் வழக்கை விசாரித்து
நியாயம் வழங்கி இந்த அடிமையை என்னிடம்
அனுப்பி வையுங்கள்.“ என்றார் பெரியவர்.
“மனிதனுக்கு மனிதன் அடிமையா…? என்ன
அநியாயம். இதை ஒப்புக் கொள்ள முடியாது.
அதுவும் ஆரூரர் பாட்டன் கையெழுத்திட்டது
என்பதை எப்படி ஏற்பது.?“ என்றனர் நியாய
சபையினர். “ஆனாலும் நீங்கள் வைத்திருக்கும்
ஒலை உண்மையான ஓலைதானா என்பதை
ஆராய்ந்த பின்னரே தீர்ப்பு தர இயலும். அசல்
மூல ஓலையை காட்டுங்கள்.“ என்றனர் நீதி
சபையினர். அதற்கு பெரியவர்,
“சபையோரையும் கூடி இருக்கும்
மக்களையும் நம்பிதான் மூல ஒலையை
தருகிறேன். இதை ஆரூரன் கிழித்து
போட்டுவிட்டால் நீங்கள்தான் பொறுப்பு.“
என்று சொல்லி, பெரியவர் தன் கையில் இருந்த
ஒலையை சபையோரிடம் தந்தார். ஆரூரர்
பாட்டனாரின் உண்மையான கையெழுத்தை
ஆராய ஒரு விசாரனை அதிகாரியை
நம்பியாரூரரின் சொந்த ஊருக்கு அனுப்பியது
நீதி சபை. நம்பியாரூரரின் பாட்டன்
கையெழுத்து அடங்கிய ஆதாரங்கள்,
திருவெண்ணெய் நல்லூர் நீதிமன்ற சபைக்குகொண்டு வரப்பட்டு, பெரியவரின் ஓலையில்
உள்ள கையெழுத்து உண்மையானதா? என்று
ஆராய்ந்தார்கள். எல்லாம் சரியாகவே
இருந்தது. நம்பியாரூரர் அதிர்ச்சி அடைந்தார்.
பெரியவர் மகிழ்ந்தார். அதை தொடர்ந்து
அதிசயங்கள் நடந்தது.
நீதி சபை முன் நடக்க போவதை எதிர்பார்த்து
மௌனமாக நின்றிருந்தார் நம்பியாரூரர்.
“நம்பியாரூரரே எங்களை மன்னிக்கவும். இந்த
ஒலையில் இருக்கும் கையெழுத்தும் உங்கள்
பாட்டன் கையெழுத்தும் ஒன்றாகவே
இருக்கிறது. சொல்வதற்கு வருத்தமாக
இருந்தாலும் நியாயப்படி இந்த பெரியவர்
பேச்சை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும்.
அதுதான் தர்மம்.“ என்றார்கள் சபையோர்கள்.
“சரி… நான் இந்த கிழவனுடன் செல்கிறேன்.
ஆனால் இந்த திருவெண்ணெய் நல்லூரில் என்
முன்னோர் வாழ்ந்ததாக சொல்லும் இடங்களை
காட்டட்டும். பிறகு பார்க்கலாம்.“ என்றார்.
நம்பியாரூரர். “அதற்கென்ன தாராளமாக…. என்
வீட்டையும் உன் பரம்பரையினர் வீட்டையும்
காட்டுகிறேன் வா என் பின்னே.“ என்று கூறி
திருவருட்டுறை என்ற திருவெண்ணெய்
நல்லூர் கோவிலுக்கு சென்றார்கள். அந்த
திருக்கோயிலை சுற்றி நம்பியாரூரரும்
மற்றவர்களும் கூடினார்கள். கருவறைக்குள்
அந்த கிழவன் சென்றதும் அங்கேயே
மறைந்தார். நம்பியாரூரரும் மற்றவர்களும்
அதிர்ச்சியடைந்தார்கள். கிழவன் வேடத்தில்
வந்தது இறைவன் சிவபெருமானே என்று
நம்பியாரூரர் உணர்ந்து திகைத்தார். அடுத்த
நிமிடம் கண்களை கூசும் ஒளி மின்னியது.
அந்த ஒளியில் ரிஷப வாகனத்தில் சிவ – சக்தி
சொரூபமாக காட்சி தந்தார் இறைவன்.
“நம்பியாரூரரே… நீ நமது கைலாய மலையில்
எனக்கு நண்பனாக இருந்தாய். அப்போது
மங்கையரை பார்த்தவுடன் உன் மனம்
சஞ்சலப்பட்டது. அதன் பயனாக நீ மனித பிறவி
எடுத்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாய். இந்த
மனித பிறவிலும் யாம் பெண்ணாசை
கொண்டால் எம்மை வந்து தடுத்தாட்கொள்ள
வேண்டும் என்பதே நீ பெற்ற வரம். அதன்
படியே எல்லாம் நடக்கிறது.“ என்றார்
இறைவன். சூரியனை பார்த்த மகிழ்ச்சியில்
தாமரை மலர்வது போல் சோமேஸ்வரரின்
குரலை கேட்டு மகிழ்ந்தார் சுந்தரர்.
“இறைவா… எம்மை தடுத்தாட்கொண்ட
சிவபெருமானே… மறுபடியும் இப்பிறவியில்
பெண் ஆசையில் விழ நினைத்த எம்மை
தடுத்தென்னை காத்த தங்களை பித்தன்
என்றேனே.. நானே பித்தன். அடியேனை காத்த
பரம் பொருளே… நான் என்றும் உன்னை
மறவாமல் இருக்க அருள் புரிய வேண்டும்.
என்னை உம்முடன் அழைத்து செல்ல
வேண்டும். இதுவே எம் விருப்பம்.“ என்றார்
நம்பியாரூரர். “உன்னை அழைத்து செல்ல
நான் வரவில்லை. உன் புகழ் பல்லாயிர
தலைமுறைக்கும் தெரிய வேண்டும் தமிழ்
புலமையில் நீ சிறந்தவன். உனக்கு இங்கே
கடமைகள் இருக்கிறது. எமது அடியார்களின்
சிறப்புகளை உன் மூலமாக தெரியப்படுத்த
போகிறேன். தாய் தமிழில் உன் எம்மை பற்றி
பாடல் இயற்று.“ “எம் அய்யனே… நான்
காண்பது கனவா நினைவா? நடப்பதெல்லாம்
உண்மைதானா.? நான் எவ்வாறு பாட
தொடங்குவேன்.? சிவபெருமானே நீ எம்மை
வழி நடத்து“ “சுந்தரா… எம்மை பித்தன் என்று
அழைத்தாயே… அச்சொல் எம்மை கவர்ந்தது.
அதனையே முதல் வரியாக அமைத்து பாடு“
“பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா…
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்
மனதுன்னை… வைத்தாய் பெண்ணை தென்பால்
வெண்ணேய் நல்லூர் அருட்டுதுறையுள்
அத்தா உன்னை ஆளாய் இனி அல்லேன்
எனலாமே…. என்று பாட தொடங்கினார்
சுந்தரர். சுந்தரருடன் திருமணம கனவில்
இருந்து, அது கனவாகவே போனாலும்
ஆரூராரை கணவனாகவே நினைத்து வேறு
யாரையும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து
மறைந்தார் சடங்கவிராயர் மகள். இனிப்பு
எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம்
எறும்பு போவது போல், சிவன் எங்கெல்லாம்
இருக்கிறாரோ அதுவெல்லாம் என் இடமே
என்று கூறி கொண்டே திருவெண்ணெய்நல்
லூரை விடடு திருநாவலூரை அடைந்தார்
நம்பியாரூரர். இப்படியே ஒவ்வொரு ஊராக
சென்று சிவனை நினைத்து பல பாடல்களை
பாடி கொண்டே சென்றார். ஒரு நாள் சுந்தரர்
சிதம்பரத்திற்கு செல்ல வேண்டும் என்று
நினைத்து தன் பாதயாத்திரையை தொடர்ந்தார்
வீரட்டானம் என்ற திருத்தலத்தின் பக்கம்
வந்தார். கிழக்கில் இருந்த சூரியன் மேற்கை
நெருங்கி கொண்டு இருந்தது. இருட்டியதால்
இனி செல்வதை விட இங்கேயே தங்கிவிட்டு
விடிந்ததும் செல்லலாம் என்று நினைத்து
அங்கே உள்ள மடத்தில் தங்கினார் சுந்தரர்.
சுந்தரர், படுத்து உறங்கி கொண்டு
இருக்கும்போது அவர் தலைமுடியை ஒரு
கிழவர் தன் பாதத்தால் தடவி கொடுத்து
கொண்டு இருந்தார். யாரோ ஒருவர் தலையை
தடவி கொடுக்கிறாரே என்று நினைத்து
எழுந்து பார்த்தார். பார்த்தவுடன் கடும் கோபம்
கொண்டார். “வயதில் பெரியவராக
இருக்கிறீர்கள். இபபடி உங்கள் கால் பாதத்தால்
என் தலைமுடியை தேய்க்கலாமா.“ என்றார்
சுந்தரர். “என் கால் பாதத்தின் கீழே நீ
படுத்திருந்தால் என் கால்படத்தான் செய்யும்.“என்று நக்கலாக பதில் கூறினார் கிழவர்.
சுந்தரர், அதற்கு மேல் பேசாமல் வேறு
பக்கமாக உறங்க சென்றார். சில நிமிடம்
கழித்து மறுபடியும் அந்த கிழவர் ஆரூராரின்
தலைமுடியை கால்களால் தடவி கொடுத்து
கொண்டு இருந்தார். கடும் கோபம் கொண்ட
சுந்தரர், “ஏய் கிழவா… நீ வேண்டும் என்றே
என்னை சீண்டி பார்க்கிறாயா? யார் நீ…?“ என்று
ஆவேசமாகவும் அதிகாரமாகவும் பேசினார்
சுந்தரர். “என்னுடைய கால் பாதம் பட்டதற்கே
இப்படி கோபமாக பேசுகிறாயே… என்
தலைமேல் உட்கார்ந்து இருக்கிறாலே கங்கை
தேவி. அவளை எப்படி வசைப்பாடுவது,
கோபப்படுவது?“ என்றார் கிழவர். கிழவர் பேசி
முடித்ததும் அடுத்த நிமிடமே அந்த இடத்தை
விட்டு மறைந்தார். “ஈசனின் பாதத்தை பார்க்க
விஷ்ணு பகவான் பாதால லோகத்திற்கு கூட
சென்றும் பார்க்க முடியாமல் போனது.
ஆனால் நான் என்ன பாக்கியம் செய்தேனோ…?
சர்வேஸ்வரரின் பாதம் என் சிரஸின் மேல்
இருந்தது.“ என கூறி மகிழ்ச்சியடைந்தார்
சுந்தரர். “தம்மானை அறியாத சாதியார் உளரே“
என்று துவங்கும் ஒரு திருப்பதிகத்தை
பாடினார். உயிர் இருந்தால்தான் உடல்
ஆசையும். ஆனால் அந்த உயிரையே அசைய
வைத்தது இறைவனின் கால்பட்டதால்… என்று
நினைத்து கொண்டே தூங்காமல் விழித்து
கொண்டு இருந்தார். காலை பொழுது
விடிந்தது. திருவதிகைத் தலத்தை தென்திசை
கங்கை என அழைப்பர். அந்த தீர்த்தத்தில்
நீராடினார் நம்பியாரூரர். பிறகு
திருமாணிக்குழி என்ற சிவத்தலத்திற்கு
சென்றார். திருமாணிக்குழி ஊரின் சிறப்பு
என்னவென்றால், மாவலிச் சக்கரவர்த்தியிடம்
விஷ்ணுபகவான் வாமன அவதாரமெடுத்து
மூன்று அடி மண் தானம் கேட்டார். இந்த
சம்பவத்திற்கு பிறகு விஷ்ணுவே இந்த
திருமாணிக்குழி ஆலயத்திற்கு சென்று ஈசனை
வணங்கினார். இப்படி சிறப்பு வாய்ந்த ஊருக்கு
சென்று சுந்தரர் சுந்தேஸ்வரரை பற்றி பாடல்
மூலமாக வர்ணித்தார். இப்படியே பாத
யாத்திரையாக ஒவ்வோரு ஊராக சென்றார்.
சென்ற ஊரில் எல்லாம் இருக்கும்
சிவதலங்களில் பதிகங்களை பாடினார்.
ஒருநாள் திருவாரூரில் வாழும் அந்நாட்டின்
அரசரின் கனவில் சிவன் தோன்றி. “எம்மை
பார்க்க சுந்தரர் வருகிறார். அவரை தக்க
மரியாதையுடன் அழைத்து வாருங்கள்.“ என்று
கட்டளையிட்டார். தான் கண்ட கனவை
மற்றவர்களிடம் கூறி, உடனே எல்லா கலை
நிகழ்ச்சியும், மேளதாளத்துடனும் சுந்தரரை
வரவேற்றார் அரசர். நம்பியாரூரர் தனக்கு
கிடைத்த மரியாதையை நினைத்து மகிழ்ந்தார்.
என்னை கௌரவிக்க சொன்ன ஈசனுக்கு நன்றி
என்பதை பாடல் மூலமாக பாடினார்.
நம்பியாரூரரின் பாடலை கேட்டு மகிழ்ந்து
திருநீலகண்டன் நேரில் காட்சி கொடுத்தார்.
“உன்னை திருமண கோலத்தில் அழைத்து
வந்ததால், நீ என்றும் மாப்பிள்ளை
அலங்காரத்திலேயே இருக்க வேண்டும்.“
என்று அன்பு கட்டளையிட்டார். அத்துடன், “நீ
எம் தோழனாக இருப்பதால் அரசருக்கு
இணையான அழகுடன் காட்சி தருவாய்.“
என்று ஆசி வழங்கி மறைந்தார். சந்தனமும்,
ஜவ்வாதும் மனக்க விபூதி, ருத்திராச்சத்தை
யும் அணிந்து பட்டாடை உடுத்தி, அரசரை
விட அதிக அழகுடன் ஜொலித்தார் சுந்தரர்.
முன்பு திருகைலாய மலையில் பார்வதியின்
தோழி கமலி என்ற பெண்ணின் மேல்
ஆசைபட்டதால் மண்ணுலகில் பிறந்தார்
சுந்தரர். அதுபோல் கமலியும் பூலோகத்தில்
பிறந்தார்.
கமலினி திருவாரூரில் வந்து அவதரித்தார்.
பதியிலார் குலத்தில் பிறந்தார். அதாவது
சிவனை தவிர வேறு யாரையும் நினைக்காமல்
சிவதொண்டே உயர்ந்த தொண்டு என்று
நினைக்கும் குலத்தில் பிறந்தாள். கமலினி
பிறந்து சில நாட்கள் ஆனது. குழந்தைக்கு
பெயர் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்
திருவாதிரை என்ற நல்ல நாளில் பரவையார்
என்று திருநாமம் சூட்டினார்கள். பார்க்கும்
போதே தூக்கி கொஞ்ச வேண்டும் போல்
இருக்கும் தோற்றமளிக்கும் கலையான
முகத்துடன் துருதுருவென இருந்தாள். காலம்
நகர்ந்தது. குழந்தை பருவத்தை விட்டு பருவ
வயதை அடைந்தாள். சிவசக்தியை நினைத்து
தினமும் கோயிலில் பாடுவதை வழக்கமாக
கொண்டிருந்தாள். அறிவு, திறமை, அழகு,
நிதானம், குரல் இனிமை இத்தனையும்
கொண்டவள்தான் பரவையார் என்று பெண்களே
பரவையாரின் திறமையையும் அழகையும்
புகழ்ந்தார்கள். நம்பியாரூரர் ஈசனை
தரிசித்துவிட்டு ஆலயத்தை விட்டு
வெளியேறி வந்து கொண்டு இருக்கையில்
அப்போது பரவையார் கோயிலுக்குள் சென்று
கொண்டு இருந்தாள். நம்பியாரூரரும்
பரவையாரும் எதிர்எதிரே சந்தித்து
கொண்டார்கள். “இவள் தேவலோக கன்னியா..?
அப்பப்பா என்ன அழகு“ என்று தன் மனதினுள்
வர்ணித்தார் நம்பியாரூரர். நம்பியாரூரரை
கண்டவுடன் அவளுக்கும் அதே உணர்வு.
தன்னையே மறந்தாள் பரவையார். இருந்தாலும்
சிவனை வணங்கி அவன் நினைவாகவே வாழ
பிறந்தவர்கள் நாம் என்ற உணர்வு மனதில்
எழுந்தது. அதனால் சட்டென்று
சுயநினைவுக்கு திரும்பி, தான் வந்தநோக்கத்தை புரிந்து கொண்டு கோயிலுக்குள்
சென்றாள். இரும்பை காந்தம் இழுப்பது போல்
பரவையரரை பின் தொடர்ந்தார் சுந்தரர்.
சுந்தரர் திருக்கோயிலுக்குள் வரும் முன்பே
பரவையார் இறைவனை தரிசித்துவிட்டு பின்
வாசல் வழியாக சென்றுவிட்டாள்.
பரவையாரும் சுந்தரரும் வார்த்தைகளால்
காதலை சொல்லாமலே ஒருவருக்கு ஒருவர்
மனதளவில் காதலை வளர்த்தார்கள். ஒருநாள்
சிவபெருமானே தன் அடியார்களின் கனவில்
தோன்றி, “சுந்தரருக்கும் பரவையாருக்கு
திருமணம் செய்து வையுங்கள்.“ என்றார்.
அதேபோல் சுந்தரரின் கனவிலும் பரவையார்
கனவிலும் ஈசன் தோன்றி, “நீங்கள் இருவம்
திருமணம் செய்து கொண்டு வாழ்வீர்கள்.“
என்று கூறி ஆசி வழங்கினார் இறைவன்..
பரவையாருக்கும் சுந்தரருக்கும் திருமணம்
நடந்தது. திருமணத்திற்கு பிறகும்
இறைவனின் மேல் உள்ள பக்தியும் பற்றும்
போகாமல் இருவரும் இருந்தார்கள். ஒருநாள்
வழக்கம் போல் சிவபெருமானை தரிசிக்க
கோயிலுக்கு சென்றார் சுந்தரர். ஈசனை
போற்றி வணங்கினார். அப்போது அவர் முன்
தாயுமானவர் தோன்றி, “சுந்தர… நீ என்
சிவதொண்டர்களின் வரிசையில்
சேர்ந்துள்ளாய். நீயும் பிறப்பு இறப்பு
என்பதை கடந்து வாழ்வாய். என் அடியார்களை
பற்றி செந்தமிழில் ஒரு பாமாலையை இயற்றி
பாடு.“ என்றார் இறைவன். “அய்யனே..அடியார
்களின் வரலாறுகள் யாம் அறியாதது. அவ்வாரு
இருக்க, யாம் எப்படி பாடல் இயற்றுவது.?“
என வினவினார் சுந்தரர். “தில்லை வாழ்
அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்”
என்பதையே உன் பாடலின் முதல்அடியென
கொண்டு இயற்று.“ என்ற பாமாலையின்
முதல் வரியை சொல்லி தந்து மறைந்தார்
சிவன். பெரும் மகிழ்ச்சியுடன் இறைவன்
அருளிச் செய்த முதல் வரியை இயற்றி
திருப்பதிகத்தை பாடினார் சுந்தரர்.
குண்டையூர் என்ற ஊரில் வேளாள மரபை
சேர்ந்தவர் குண்டையூர்க் கிழார். இவர் சுந்தர
நாயனார் மீது அதிகமான அன்பு கொண்டவர்.
அதனால் சுந்தரர் குடும்பத்திற்கு மாத மாதம்
மளிகை பொருட்களை அனுப்பி கொண்டு
இருந்தார். சில மாதங்களாக ஊருக்கு போதிய
மழை வராததால் அந்த ஊரில் நெல்
விளைச்சல் அடியோடு பாதிப்படைந்தது.
இதனால் வியபாரத்தில் நஷ்டமும் பண
கஷ்டமும் ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட
கஷ்டத்தை விட நம்மை நம்பி கொண்டு
இருக்கும் சுந்தரரின் குடும்பத்திற்கு எவ்வாறு
விளைச்சல் இன்றி நெல் அனுப்புவது?“ என்ற
கவலையில் இருந்தார் குண்டையூர்க் கிழார்.
உயர்ந்த உள்ளம் படைத்தவர்கள் எப்போதும்
அவர்கள்படும் இன்னல்களை விட
அடுத்தவர்கள் படும் சிரமத்திற்குதான்
கவலையும் வேதனையும் அடைவர்.
குண்டயூர் கிழாரும் அவ்வாரே எண்ணி
நொந்தார். சிவ பெருமான் குண்டயூர் கிழாரின்
கனவில் தோன்றி, “கவலைப்படாதே நான்
இப்போதே குபேரனை அனுப்புகிறேன். குபேரர்
உனக்கு போதிய நெல்மணிகளை கொடுப்பார்.“
என்று கூறினார். திடுக்கிட்டு எழுந்தார் கிழார்.
எழுந்து பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்தார்.
வானம் தொடும் அளவு நெல்லை குவித்து
வைத்திருக்கிறார் குபேரர். மறுநாள், சுந்தரரை
சென்று கண்டு இந்த செய்தியை கூற
வேண்டும் என்ற ஆவலில் திருவாரூருக்கு
சென்றார். “உன்னை காண எம் அடியேன்
குண்டையூர் கிழார் வந்து கொண்டு
இருக்கிறார். நீ அவரை வரவேற்று அழைத்து
வா.“ என்று இறைவன் சுந்தரரின் கனவில்
தோன்றி சொன்னார். கிழாரும் சுந்தரரும்
எதிர்எதிரே சந்தித்து கொண்டார்கள். இருவரும்
குண்டையூர் சென்றார்கள். குண்டையூரை
அடைந்ததும் சுந்தரர் அதிர்ச்சியடைந்தார்.
அந்த அளவுக்கு நெல்மணி வானத்தை
தொடும் அளவில் குவிந்து கிடந்தது.
“நண்பரே… தங்களுக்காக ஈசன் கொடுத்தது
இவை. நீங்கள்தான் இந்த அனைத்து
நெல்லையும் எடுத்து செல்ல வேண்டும்.
இது உமக்கே உரியவை.“ குண்டையூர் கிழார்.
“இந்த நெல்மணிகளை மூட்டை கட்டுவதற்கே
பல மாதங்கள் ஆகும் போல இருக்கிறதே.?
இதை எவ்வாறு எடுத்து கொண்டு
செல்வது.? இறைவன் ஒருவனுக்கு
கஷ்டத்தை தர வேண்டும் என்றால் தாங்க
இயலாதபடி தருகிறார். அதுவே நல்லவற்றை
கொடுக்க ஆரம்பித்தால் நம் நிம்மதி இழுந்து
விடும் அளவு அள்ளி அள்ளி தருகிறார்.“
என்றார் சுந்தரர். பிறகு தாயுமானவரை
வணங்கினார் சுந்தரர். ஆகாயத்தில்
சிவபெருமான் தோன்றி, “கவலை வேண்டாம்.
எமது பூதகணங்கள் நெல்மணிகளை உன்
ஊரில் சேர்த்து விடுவார்கள்.“ என்றார். சிவன்
அருளியது போல் சுந்தரர் தம் ஊருக்க
வருவதற்கு முன்பே, நெல்மணிகள் சுந்தரரின்
இல்லத்தையே முடிய அளவுக்கு
நெல்குவிந்து இருந்தது. இதை கண்ட
பரவையாரும் ஊர்மக்களும் அதிர்ச்சியடைந்த
ார்கள். “இந்த நெல்குவியலை நீங்களும்
உங்கள் வீட்டுக்கு தேவையான அளவு அள்ளி
செல்லுங்கள்.“ என்றார் ஊர் மக்களிடம்
சுந்தரர். மக்களும் மகிழ்ச்சியுடன் தங்களால்
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நெல்லை
அவரவர் வீட்டுக்கு அள்ளி சென்றார்கள்.அப்படி இருந்தும் அப்படியேதான் இருந்தது.
சுந்தரர் இறைவனின் திருவிளையாட்டை
எண்ணி மகிழ்ந்தார். கோட்புலியார் என்பவர்
சுந்தரரை தன் ஊரான திருநாட்டியத்தா
ன்குடிக்கு வர வேண்டும் என்று அன்பு
கட்டளை இட்டார். சுந்தரரும் அவர்
அன்புகட்டளைக்கு இணங்கி திருநாட்டியத்தா
ன்குடிக்கு சென்றார். சுந்தரர் தன் ஊருக்கு
வருவதை கேட்டு மகிழ்ச்சியடைந்து,
தன்னுடைய சேனாதிபதி பதவியை
பயன்படுத்தி ஊரையே திருவிழா போல்
செய்தார் கோட்புலியார். அரூரருக்கு
அரசருக்கு இணையான கௌரவத்தை
கொடுத்தார். தன் இல்லத்திற்கு அழைத்து
சென்றார். தன் மகள்களை சுந்தரருக்கு
அறிமுகம் செய்து வைத்தார். “இரு
பெண்களையும் என் புத்திரிகளாக
பார்க்கிறேன்.“ என்று கூறி அந்த இரு
மங்கைகளுக்கும் ஆசி வழங்கினார் சுந்தரர்.
பிறகு திருநாட்டியத்தான்குடியைவிட்டு
பறப்பட்டு, திருவலிவலம் சென்று சிவனை
தரிசித்து, ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
ஆகியோரின் புகழை பாடல்களாக பாடி
மீண்டும் தன் ஊரான திருவாரூக்கு
திரும்பினார். திருவாரூரில் திருப்பங்குனி
உத்திரத் திருவிழா வந்தது. அந்த விழாவிற்கு
சிவதொண்டர்களுக்கு திருத்தொண்டு செய்ய
பொருள் தேவைப்பட்டது. இதனால் தன்
கணவரான சுந்தரரிடம் வேண்டினாள்
பரவையார். திருப்புகழுருக்கு சென்று
சிவபெருமானை வணங்கி திருப்பதிகம் பாடி,
தன் வேண்டுதலை கூறினார் சுந்தரர். இரவு
ஜாமம். இனி ஊருக்கு செல்ல முடியாது என்ற
எண்ணத்தில் அந்த கோயில் அருகே இருந்த
செங்கல்லையே தலையனையாக அடுக்கி
வைத்து உறங்கினார். விடிந்தது. இருள்
மறைந்து வெளிச்சத்தை கொடுத்தது. தூக்கம்
கலைந்து எழுந்து பார்த்த சுந்தரர் வியந்து
நின்றார். காரணம்
நம்பியாரூரர் விழித்து பார்த்த போது
தலைக்கு வைத்து படுத்திருந்த செங்கல்
தங்ககல்லாக மாறி ஜொலித்தது. இதை கண்டு,
“எம் இன்னலை தீர்த்த இறைவனே..!“ என்று
போற்றி மகிழ்ந்தார். திருப்புகலூர் ஈசனால்
கிடைத்தது இது. “தம்மையே புகழ்ந்து“
என்று தொடங்கும் திருபதிகத்தை பாடினார்.
தன் ஊரான திருவாரூர் சென்று அங்கு
இருக்கும் சிவனை வணங்கி தன் இல்லத்திற்கு
சென்றார். திருவிழாவை சிறப்பாக செய்து
முடித்தார். சில நாட்கள் கழித்து
திருநன்னிலத்தில் உள்ள திருகோவிலுக்கு
சென்று “தண்ணியல் வெம்மையினன்“ என்ற
சிவனை நினைத்து பதிகம் பாடிவிட்டு
சென்றார். இப்படியே பல திருதலங்களுக்கு
சென்று பல பதிகங்களை பாடினார். சில
மாதங்களுக்கு பிறகு தன் மனைவியை பார்க்க
வேண்டும் என்ற ஆவலில் திருவாரூக்கு
திரும்பினார். தன் கணவர் பல மாதம் கழித்து
வந்திருக்கிறார் என்பதை கண்டு
மகிழ்ச்சியடைந்தாள் பரவையார். எண்ணற்ற
திருக்கோயில்களுக்கு சென்று வந்த
அனுபவத்தை தன் மனைவி பரவையாரிடம்
பகிர்ந்து கொண்டார் சுந்தரர். அப்போது பரவை
தன் கணவரிடம், “திருமுதுகுன்றப் பெருமான்
கொடுத்த பொன்னை திருமணிமுத்தாற்றில்
குளிக்கும் போது தவறவிட்டேன்“ என்றாள்.
“அதனால் என்ன…? திருமணிமுத்தாற்றில்
தவறவிட்டதை நம் ஊரில் இருக்கும்
கமலாயத்திருக்குளத்திலேயே எடுத்து
விடலாம்.“ என்றார் சுந்தரர். “உங்களுக்கு
என்ன ஆனது…? எங்கோ தொலைத்ததை
இங்கே தேடினால் எப்படி கிடைக்கும்.?“
என்றாள் பரவை. “ஏன் கிடைக்காது.?
இறைவன் மனம் வைத்தால் எந்த இடத்திலும்
கிடைக்கும் வா என்னுடன்“ என்று கூறி
குளத்தின் அருகே சென்று சிவபெருமானை
வணங்கி குளத்தில் இறங்கினார் சுந்தரர்.
குளத்தில் தொலைந்து போன பொன்னை
தேடினார். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை
சுந்தரருக்கு. “எங்கோ விட்டதை இங்கே
தேடினால் எப்படி கிடைக்கும்.? ஆற்றில்
விட்டதை குளத்தில் தேடினால்
கிடைக்குமா.?“ என்று நகைத்தாள் பரவை.
“சிவபெருமானே…நீயே கதி என்று இருக்கும்
எம்மை இந்த அவமானத்தில் இருந்து
காப்பாற்று.“ என்று வேண்டி, “பொன் செய்த
மேனியினீர்” என்ற பதிகத்தை பாடினார்
சுந்தரர். இந்த குளத்தில்தான் தொலைந்த
பொன் கிடைக்கும் என்று முன்பை விட தீவிர
நம்பிக்கையை கொண்டார் சுந்தரர். “ஏத்தா
திருத்தளியேன்“ என்ற பதிகத்தையும்
பாடியவுடன் பல மணிநேரம் போராடி
கிடைக்காத பொன்னகை, ஆச்சரியமாக எங்கோ
இருந்து, பந்து தணணீர் மேல் மிதந்து வருவது
போல் ஒரு பொன்னகையும் மிதந்து வந்து
சுந்தரரின் அருகே வந்து நின்றது. ஆனால்,
“இந்த நகை என்னுடையதில்லை.“ என்று
மறுத்தாள் பரவை. அதனால் மேலும் சில
பதிகங்களை பாடினார் நம்பியாரூரர். பிறகு
பரவைக்கு சொந்தமான நகை திரும்ப
கிடைத்தது. பழைய நகையுடன் இறைவன்
அருளால் புதிய நகையும் கிடைத்தது என்ற
இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தாள் பரவை. ஒரு
பொன் நகைக்காக ஏன் இத்தனை பதிகம் பாட
வேண்டும்.? ஒரு பதிகத்திலேயே
சிவபெருமான் ஏன் அருளவில்லை? என கேள்வி
எழலாம். ஆனால் சிவபெருமான்
தமிழ்மொழியின் இனிமையை விரும்புகிறவர்.சுந்தரர் மற்றும் சிவஅடியார்களின் –
தொண்டர்களின் தமிழ் புலமையை மேலும்
மேலும் கேட்டு மகிழவே இவ்வாறு நேரம்
எடுத்துக்கொள்வார் என்பதே உண்மை.
ஒருவேளை நம்மை போல பதிகம் பாட
தெரியாமல் பாடினால், “போதுமடா சாமீ“
என்று முதல் வரியை தொடங்கும் முன்பே
நமக்கு உடனடியாக பலன் கிடைக்கலாம்.
ஒருசமயம், பாதயாத்திரையாக
சிவதலங்களுக்கு சென்று வர வேண்டும்
என்று சுந்தரரின் மனம் விரும்பியது. தன்
விருப்பத்தின்படி பாதயாத்திரை புறப்பட்டு
ஒவ்வொரு சிவதலங்களாக
சென்றுகொண்டிருந்தார். ஒருநாள் அவ்வாறு
யாத்திரையில் இருக்கும்போது, பசி கண்களை
மறைத்தது. இன்னும் சில நிமிடத்தில்
ஏதேனும் உணவு கிடைத்து சாப்பிடாவிட்டால்
உயிர் போய்விடும் என்ற நிலைக்கே
வந்துவிட்டார் நம்பியாரூரர் என்கிற சுந்தரர்.
சுந்தரர் சற்று மயக்கத்துடன் நடக்க
முடியாமல் நடந்தார். தன் பிள்ளை படும்
கஷ்டத்தை கண்டு எந்த தாய் – தந்தைதான்
பொறுப்பார்கள்?. நல்ல நண்பனின் துயர்
கண்டு யார்தான் கலங்காமல் இருப்பார்கள்?.
நம் சிவபெருமான், சுந்தரின் நிலைகண்டு
வருந்தினார். தாயுமானவர் எனும் தாய்
உள்ளம் படைத்த சிவன், தண்ணீர் பந்தலை
உடனே அமைத்து தன் நண்பன் சுந்தரர் வரும்
வழியில் காத்து கொண்டு நின்றார். “நடக்க
பாதை கூட சரியாக இல்லாத காடு போன்ற
இப்பகுதியில், யாரோ ஒருவர் – புண்ணிய
ஆத்மா தண்ணீர் பந்தல் அமைத்து
இருக்கிறார்.“ என்ற மகிழ்ச்சியில் அவர் அருகே
சென்று, “இது எம் ஈசனின் கருனையே.“ என்று
கூறி கொண்டே தணணீரை குடித்தார்
நம்பியாரூரர். “என்னப்பா… நெடும்
பயணமோ?. உன் பசி உன் கண்களில்
தெரிகிறது. என்னிடம் உணவு இருக்கிறது.
இந்தா சாப்பிடு.“ என்று தன் அருகில் இருந்த
உணவு பொட்டலத்தை சுந்தரரிடம் தந்தார்,
யாரோ ஒரு புண்ணியவன் வடிவில் நிற்கும்
சிவபெருமான். “அய்யா… இருப்பதை எனக்கு
தந்துவிட்டால் உங்களுக்கு உணவு.?“ என்றார்
சுந்தரர். “அடேங்கப்பா… நீயாவது கேட்டாயே.
என் பணியாளர்கள் என்ன செய்வார்கள்
தெரியுமா?. நான் குளித்து தயாராக
இருப்பேன். பெரிய பாத்திரத்தில் எதையோ
மூடிக்கொண்டு வந்து, “உங்களுக்கு இன்று
இதுதான் உணவு“ என்று சரியாக திறந்துகூட
காட்டாமல் உடனே வேகமாக ஓடிவிடுவார்கள்.
பாவம் அவர்களுக்கு என்ன பசியோ? என்று
நானும் கண்டுகொள்வதில்லை. நீயாவது
கேட்டாயே பரவாயில்லை.“ சுந்தரர்
சாப்பிட்டார். “அய்யா உணவு அற்புதம்.
நீங்களும் கொஞ்சம் சாப்பிட்டு பாருங்கள்“
என்றார் சுந்தரர். “இருக்காதா என்ன? என்
மனைவி பெரிய சமையல்காரி. எத்தனை பேர்
வந்தாலும் அத்தனை பேருக்கும் ருசியாக
சமைத்து போட்டு எனக்கும் வைத்திருப்பாள்.
நான் அவள் கையால் சாப்பிட்டால்தான்
அவளுக்கும் பிடிக்கும். அதனால் நீ இதை
சாப்பிடு பரவாயில்லை.” என்றார் இறைவன்.
உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு
என்பது போல சுந்தரர், சாப்பிட்ட பிறகு
ஒரமாக சற்று ஓய்வு எடுத்து உறங்கினார்.
சுந்தரர் ஆனந்தமாக தூங்கி விழித்தார். தனக்கு
உணவும் தண்ணீரும் தந்தவரை தேடினார்.
சுற்றி சுற்றி பார்த்தார். பார்க்கும்
இடமெல்லாம் செடிகொடிகளும் மரங்களும்
புதருமாகத்தான் காட்சி தந்தது. தான்
இருக்கும் இடம் ஒரு காடு என்பதை
உணர்ந்தார். குடிதண்ணீர் பந்தலோ அந்த
மனிதரோ அங்கு இல்லை. பிறகுதான்
உணர்ந்தார். தனக்கு தணணீரும் உணவும்
கொடுத்து உபசரித்தது சிவபெருமானே என்று
மகிழ்ந்து போனார். சிவபெருமானின்
கருணையை எண்ணி ஆனந்தத்தில்
திளைத்தார். தன் பயணத்தை தொடர்ந்தார்.
திருக்குருகாவூர் வெள்ளடை என்ற சிவன்
கோவிலுக்கு சென்று வணங்கிய பிறகு பல
ஊர்களில் இருக்கும் சிவதலங்களுக்கு
சென்றார். கற்றவர்களுக்கு செல்லும்
இடமெல்லாம் சிறப்பு என்பது போல்,
சிவதொண்டரான நம்பியாரூரர் செல்லும்
ஊர்களில் எல்லாம் நல்ல வரவேற்பை
பெற்றார். இப்படியே பல ஊர்களில் இருக்கும்
சிவன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்.
முன்னொரு சமயம், கயிலாயமலையில்
ஸ்ரீபார்வதி தேவிக்கு தோழியாக இருந்தவர்கள்
கமலினி, அனிந்ததை என்ற இருவர். அதில்
கமலினி பூலோகத்தில் பிறந்து சுந்தரருக்கு
மனைவியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்.
அனிந்ததை, சங்கிலியார் என்ற பெயரில்
பூலோகத்தில் ஞாயிறு என்ற ஊரில்
ஞாயிறுகிழார் என்பவருக்கு மகளாக பிறந்து
வளர்ந்து பருவ வயதை அடைந்தாள். “நல்
அறிவு, பொறுமை, திறமை இப்படி எல்லாம்
நம் மகளிடம் இருக்கிறது. அவளை திருமணம்
செய்பவன் பாக்கியம பெற்றவனாக இருக்க
வேண்டும்.“ என்று தன் மகளை பற்றி
உயர்வாக தன் மனைவியிடம் சொல்லி
வருவார் ஞாயிறுகிழார். சங்கிலியாருக்கு ஏற்ற
நல்ல மணமகனை தேட வேண்டும் என்ற தீவிர
முயற்சி எடுத்தார் தந்தை. சங்கிலியாரை
பெண் பார்த்து விட்டு சென்றாலே மாப்பிள்ளை
வீட்டாருக்கு ஏதாவது ஒரு பிரச்சனை
ஏற்படும். சில சமயத்தில் உயிர் பலி கூடநடந்துவிடும். இதனால் சங்கிலியார்
இராசியில்லாதவள் என்று ஊர் மக்கள் பேச
ஆரம்பித்தார்கள். “எல்லாம் நல்லதுக்குதான்.
இந்த நிலையும் மாறும்” என்ற ஒரே
நம்பிக்கையுடன் சிவபெருமானின் மேல்
பாரத்தை போட்டு வாழ்ந்தார் ஞாயிறுகிழார்.
ஒருநாள், உறவினர்களின் ஒருவர் ஞாயிறு
கிழாரை சந்தித்தார்.
“நீங்கள் திருவெற்றியூர் சென்று ஈசனை
வணங்கி வாருங்கள். இறைவன் அருளால் நல்ல
திருப்பம் ஏற்படும்“ என்றார். மனித உருவத்தில்
தெய்வமே நேரில் வந்து சொல்வது போல்
இருந்தது சங்கிலியாரின் தந்தைக்கு. தன்
மகளின் எதிர்கால வாழ்க்கைக்கு ஓர் ஓளி
தெரிகிறது என மகிழ்ந்தார்.மகளை அழைத்து
கொண்டு திருவெற்றியூர் வந்தார். ஒரு
கன்னிமடம் அமைத்து சகல வசதியோடும்
சகல பாதுகாப்புடனும் தங்க வைத்துவிட்டு,
“நீ இங்கேயே தங்கி சிவபெருமானை வணங்கி
வா. உனக்கு நல்ல நேரம் பிறக்கும்.“ எனச்
சொல்லி, தன் சொந்த ஊருக்கு புறப்பட்டு
சென்றார் ஞாயிறு கிழார். சங்கிலியார் ஏதோ
கடமைக்கென்று சிவனுக்கு சேவை
செய்யாமல் உண்மையான பக்தியோடு சேவை
செய்தார். தினமும் மலர்களை பறித்து
பூமாலையாக்கி அதை திருவெற்றியூர்
தியாகராஜப்பெருமானுக்கு சமர்பிக்கும்
வழக்கத்தை வைத்திருந்தார். அத்துடன்
திருக்கோயிலை சுத்தம் செய்வது என்று பல
திருப்பணிகளையும் மகிழ்ச்சியுடன் சிவனை
நினைத்து சேவை செய்து கொண்டு இருந்தார்.
ஒருநாள் – திருவெற்றியூர் வந்த சுந்தரர்,
இறைவனை தரிசிப்பதற்காக கோவிலுக்குள்
சென்றார். சிவனை வணங்கி பதிகம் பாடினார்.
அந்த நேரத்தில் சங்கிலியார் இறைவனுக்கு
பூமாலையை எடுத்து வந்தார். சங்கிலியாரை
கண்டதும் நம்பியாரூரர் காதல் கொண்டார்.
இது முன்ஜென்ம தொடர்போ என மகிழ்ந்தார்.
சங்கிலியாரை திருமணம் செய்ய வேண்டும்
என்ற முடிவுக்கு வந்தார். இதனால்
சங்கிலியை பற்றி விசாரித்து
தெரிந்துக்கொண்ட சுந்தரர், ஒரு நண்பனிடம்
சொல்வதை போன்று திருவெற்றியூர்
இறைவனிடம் தன் காதல் எண்ணத்தை
சொல்லி வேண்டினார். சிவபெருமானும் தன்
நண்பனுக்காக சங்கிலியார் கனவில் தோன்றி
சுந்தரரின் விருப்பத்தை சொன்னார். அதற்கு
சங்கிலியார் சுந்தரரை திருமணம் செய்ய
சங்கிலியார் சம்மதித்தார். ஆனால்
தன்னைவிட்டு எப்போதும் சுந்தரர்
பிரியக்கூடாது என்றும் திருவெற்றியூரைவ
ிட்டு அவர் போக கூடாது என்றும்
சிவபெருமானிடம் கனவில் வேண்டினார்.
“அப்படியே ஆகட்டும்“ என்றார் சிவபெருமான்.
கனவில் இருந்து விழித்த சங்கிலியார்,
இறைவனே தன் தந்தையாக இருந்து
தன்னுடைய திருமண விஷயத்தை
கவனிப்பதை எண்ணி ஆனந்தம் அடைந்தார்.
சுந்தரரின் கனவில் தோன்றிய இறைவன்,
சங்கிலியின் சம்மதத்தையும்,
திருவெற்றியூரைவிட்டு சுந்தரர் செல்லக்
கூடாது என்கிற நிபந்தனையையும்
சொன்னார். சங்கிலி, தனக்கு மனைவியாக
கிடைத்தால் போதும் என்ற காதல் மயக்கத்தில்
இருந்த சுந்தரர், யோசிக்காமல் இறைவனின்
நிபந்தனையை ஏற்றார். அதற்கு இறைவன் –
“நீ அவளின் நிபந்தனைக்கு சரி என்று
வார்த்தையில் சொன்னால் நம்ப மாட்டாள்.
அவளுக்கு சத்தியம் செய்து தா“ என்றார்
இறைவன். “சரி… சத்தியம் செய்து தருகிறேன்.
ஆனால் எனக்கு நீங்கள் ஒரு உதவியை செய்ய
வேண்டும். நான் சத்தியம் செய்ய சங்கிலி
என்னை திருக்கோயில் கருவறைக்கு
அழைத்துச் செல்வாள். ஆனால் அந்த நேரம்
நீங்கள் கருவறையில் இருக்காமல்
கோயிலுக்குள் இருக்கும் மகிழமரத்தில்
இருக்க வேண்டும்.“ என்றார் சுந்தரர். “இவன்
நம்மிடமே விளையாடுகிறான்.“ என்று
கோபப்பட்ட இறைவன், இவன் வழிக்கே சென்று
இவனுக்கு நாம் வேடிக்கை காட்டுவோம்“
என்று முடிவுடன், “உன் விருப்பப்படியே
செய்கிறேன்” என்றார் திருவெற்றியூர்
தியாகராஜப் பெருமான். உடனே சங்கிலியின்
கனவில் தோன்றி,“உன் நிபந்தனையை சுந்தரர்
ஏற்றான். நாளை அவன் உன்னிடம் பேசும்
போது உன் நிபந்தனைக்கு சத்தியம் செய்து
தரச்சொல். அவன் அதற்கு சம்மதித்து எம்
கருவறைக்கு உன்னை அழைத்து சென்று
சத்தியம் செய்து தர சம்மதிப்பான். ஆனால் நீ
அவனை நம் கோயிலில் இருக்கும்
மகிழமரத்தின் அருகில் அழைத்து வந்து , இந்த
மகிழமர சாட்சியாக உன் நிபந்தனைக்கு
சத்தியம் கேள். அவன் அப்படியே செய்வான்.“
என்றார் இறைவன். மறுநாள் சங்கிலியார்
பூமாலை தொடுத்து இறைவனுக்கு
சமர்பிக்கச் சென்றாள். அவளை சந்தித்த
சுந்தரர் தன் காதலை சொல்லி அவள்
சம்மதத்தை கேட்டார். சங்கிலி சம்மதி்தாள்.
தன் நிபந்தனையை சொன்னாள். அதனை ஏற்று
சத்தியம் செய்து தந்தால் திருமணத்திற்கு
சம்மதிப்பதாக சொன்னாள். ஒப்புக்கொண்ட
சுந்தரர், “இறைவன் முன்னபாகவே உனக்கு
சத்தியம் செய்து தருகிறேன் போதுமா.“
என்றார். “அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம்.
நான் இந்த திருக்கோயிலில் இருக்கும்
மகிழமரத்தின் மீது அன்பு வைத்திருக்கிறேன்.
எனக்கு அந்த மரமும் இறைவன்தான். நீங்கள்அந்த மகிழமரத்தின் முன்பாக சத்தியம்
செய்தால் எனக்கு அதுவே போதும். அதுதான்
என் ஒரே விருப்பம்.“ என்றாள். “அதிர்ச்சி
அடைந்த சுந்தரர், வேறு வழி இல்லாமல்
சங்கிலியுடன் சென்று மகிழமரத்தின் முன்பாக
சத்தியம் செய்து தந்தார். பிறகு மிக நன்றாக
உறவினர்கள் நண்பர்கள் ஆசியுடன் சுந்தரர் –
சங்கிலி திருமணம் இனிதாக நடந்து
முடிந்தது. மகிழ்ச்சியாக குடும்ப வாழக்கை
சென்றுக் கொண்டிருந்தது. இறைவன் தன்
திருவிளையாட்டை தொடங்கினார்.
சுந்தரருக்கு தன் முதல் மனைவியின் ஞாபகம்
வந்தது. அதனால் அவர் செய்த ஒரு செயலால்
சுந்தரரின் கண் பார்வை பறிபோனது. அப்படி
என்ன செய்தார் சுந்தரர்? – ஏன் அவர் கண்
பார்வை பறிபோனது…
சுந்தரமூர்த்தி நாயனார் என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்[1][2].இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார்.[3] பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் என சைவர்கள் கூறுகிறார்கள். இவர், இறைவன் மீது, பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களை 'திருப்பாட்டு' என்று அழைக்கின்றனர்.[3] திருப்பாட்டினை, 'சுந்தரர் தேவாரம்' என்றும் அழைப்பர்.[3] திருமணத்தினை தடுத்து, சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே, பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் திருமணம் செய்துவைத்தார்.[3]
இவர் வாழ்ந்தது கி. பி. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.[4] இவர் பாடிய தேவாரங்கள், 7 ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.[4] இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே, சேக்கிழார் பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தர மூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 எனக் கையாண்டார்.
சுந்தரர் தேவாரம்
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை 'சுந்தரர் தேவாரம்' என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை 'திருப்பாட்டு' என்றும் அழைப்பது வழக்கம்.இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.
இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன. தேவாரங்களில், 'செந்துருத்திப் பண்' கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.
சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம்; அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101
சுந்தரர் வரலாறு
சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும் நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.[4]
சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார்.[4]
தடுத்தாட்கொள்ளல்
மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி".. என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனை தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று, தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்".. என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை, தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.திருமணங்கள்
திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். அவர் பதியிலார் குலத்தினைச் சேர்ந்தவர். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு, 'ஞாயிறு' என்ற ஊரில் வேளாளர் ஒருவரின் மகளான 'சங்கிலியார்' எனும் அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். சுந்தரரின் நண்பனான சிவபெருமான் அவருக்காகத் தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்தார்.
சிவபெருமான் செயல்
அரசரான சேரமான் பெருமாள், இவருக்கு நண்பராயிருந்தார்.
இறைவனும், இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை. சேரமான் பெருமானை இவர் சந்தித்துத் திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான், சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை, இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
முக்தி
சுந்தரர் தனது 18 ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையை, சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர்.
அற்புதங்கள்
முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டல். கோவை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மரச் சிற்பம்
செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது
சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.
காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.
அவிநாசியில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.
வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.
குருபூஜை
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், குருபூசை சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது.
No comments:
Post a Comment