Sunday 29 August 2021

அபிராமி அந்தாதி பாடல் விளக்கம் மற்றும் பலன்கள் அந்தாதி பாடல் 96 எங்கும் பெருமை பெற

 

தினம் ஒரு அந்தாதி


அபிராமி அந்தாதி  பாடல் விளக்கம் மற்றும் பலன்கள்


அந்தாதி பாடல் 96


எங்கும் பெருமை பெற


கோமள வல்லியை அல்லியம் தாமரைக்கோயில் வைகும்

யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய

சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத் தம்மால்

ஆமளவும் தொழுவார் எழுபாருக்கும் ஆதிபரே.


பொருள்:


அன்னையாகிய அபிராமவல்லியை, இளமையும் அழகும் பொருந்தியவளும் கொடி போன்றவளுமான கோமளவல்லியை, அழகிய மென்மையான தாமரையைக் கோயிலாகக் கொண்டு வீற்றிருக்கும், குற்றமற்ற யாமளவல்லையை, ஓவியத்திலே எழுதவொண்ணாத எழில்மிக்க திருமேனியுடைய சாமளவல்லியை, சகல கலைகளுக்கும் தலைவியாய் விளங்கும் மயில் போன்றவளை, தம்மால் இயன்ற அளவு தொழும் அடியவர்கள் ஏழுலகங்களையும் ஆட்சி புரியக் கூடிய அதிபர்கள் எனத்தக்க அளவில் வளமான வாழ்வைப் பெறுவர்.



அபிராமி அந்தாதி பாடல்கள் ஒவ்வொன்றும் அளப்பரிய சக்தி கொண்டுள்ளது. உங்கள் பிரச்சனைக்குரிய பாடலை தினமும் பாடுவதன் மூலம் மிகப்பெரிய மாற்றங்களை நீங்கள் காணமுடியும்.


பூஜை அறையில் விளக்கேற்றி உங்களுக்கு தேவையான பாடலை 48 நாட்கள் காலையும், மாலையும் 9 முறை பாடி உங்கள் வேண்டுதலை அம்பிகையிடம் வைத்தால் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்


 இப்பாடலை பாட ஆரம்பித்த சில நாட்களிலேயே நம்பிக்கை இல்லாதவர்கள் கூட நம்பிக்கையுடன் பாட ஆரம்பித்து விடுவார்கள். இத்தகைய சக்தி வாய்ந்த அபிராமி அந்தாதி பாடலை பாடி பயன்பெறுங்கள்.



ஓம் அம்பிகையே போற்றி!!! 

நமது சிவசக்தி குரூப் & சேனலின் ஆன்மீக பயணம் மிண்டும்  தொடரும் நன்றி🙏

   

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment