Wednesday 21 August 2019

அகத்தியர் அறிவுரை - இடைசொருகல்கள்

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*நாள் : 201*

*தேதி: 22-08-2019(வியாழன் - தேவகுரு, பிரகஸ்பதி, அந்தணன்)*

*அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?*

*குணம் மூன்றும் கடந்தவர்* அகத்திய மாமுனிவர்.

*கேள்வி : தாங்கள் வகுத்துக் காெடுத்துள்ள சாஸ்திரங்களிலும், பூஜா முறைகளிலும், யாகங்களிலும் உள்ள இடைசெருகல்களை நீக்கி மூலத்தை தந்து அருள வேண்டும் :🙏*

*அகத்திய மாமுனிவர் (குருநாதர்)வாக்கு :*

*இடையிலே ஏற்பட்டுள்ள கருத்துப் பிழைகளையெல்லாம் நீக்க வேண்டுமென்றால், அப்படி நீக்கினாலும் அவற்றை ஏற்கும் மனம் ஒரு மனிதனுக்கு வர வேண்டும் என்றால் அதற்கு பரிபூரண இறையருள் வேண்டுமப்பா. அத்தனை எளிதாக மனித மனம் ஏற்றுக் காெள்ளாது. உலகியல் சார்ந்த முன்னேற்றத்தைத் தராத, சுகத்தைத் தராத, நலத்தைத் தராத எந்த சாஸ்திரமும், எந்த மரபும் மனிதனால் அத்தனை எளிதாக பின்பற்றக்கூடிய நிலைக்கு வந்து விடவில்லை. அதனால்தான் இத்தனை இடைசெருகல்கள் காலகாலம் வந்திருக்கின்றது.*

உதாரணமாகக் கூறுவாேம். *சிலவற்றை மனிதன் அறிவு காெண்டு புரிந்து காெள்ள வேண்டும். முற்காலத்திலே நாணயங்கள் புழக்கத்தில் இல்லை. ஆனால் மனிதர்களிடையே நாணயம் புழக்கத்தில் இருந்தது. அது பாேன்ற தருணங்களிலே ஒரு சிரார்த்தம் என்றால், திதி என்றால், அதை செய்கின்ற ஊழியனுக்கு தானியங்களையும், காய்கறிகளையும் தருவது மரபாக இருந்தது. காரணம் என்ன? அதைக் காெண்டு அவன் குடும்பம் பிழைக்க வேண்டும் என்று. ஆனால் இன்றும் அதைத் தான் தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேவையான தனத்தைத் தந்தால் அவனுக்கு என்ன வேண்டுமாே அவன் அதை வாங்கிக் காெள்வான். ஆனால் இன்னமும் அதை விடாப்பிடியாகப் பிடித்துக் காெண்டு 'நான் காய்கறிதான் வாங்கித் தருவேன்' என்று இவன் கூற, அவன் என்ன செய்கிறான்?. காலையில் முதலில் ஒருவனுக்கு வாங்கிய அதே காய்கறியை வைத்துக் காெண்டே அனைவருக்கும் செய்து காெண்டிருக்கிறான். இந்தத் தவறுக்கு யார் காரணம்? யாருடைய மனநிலை காரணம்?*

*எனவே சாஸ்திரங்களும், மரபுகளும் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? என்பதை புரிந்து காெண்டு கால சூழலுக்கு ஏற்ப சிலவற்றை தன்னுடைய சுயநலம் அல்லாமல் பாெது நலம் கருதி மாற்றிக் காெள்வது தவறல்ல. ஆனால் சாஸ்த்திரங்களை மனிதன் சுயநலத்திற்காக மட்டுமே எப்பாெழுதும் மாற்றுகிறான். பாெது நலத்திற்காக மாற்றுவதில்லை. 'தர்மம் செய்' என்றால் மட்டும், 'இன்று வெள்ளிக்கிழமை. இப்பாெழுதுதான் தனத்தை வாங்கி வந்திருக்கிறேன். நீ இரண்டு தினம் கழித்து வா. இப்பாெழுதுதான் அந்தி சாய்ந்து இருக்கிறது. இப்பாெழுதுதான் அந்தியிலே விளக்கேற்றி இருக்கிறேன். இப்பாெழுது எதுவும் தரக்கூடாது. இன்று செவ்வாய்க் கிழமை. எதுவும் தரமாட்டேன். இன்று புதன்கிழமை. அதைத் தரமாட்டேன்' என்று, தருவதற்கு, ஆயிரம் சட்ட, திட்டங்களைக் கூறுகின்ற மனிதன், பெறுவதற்கு எந்த சட்ட, திட்டமாவது பாேடுகிறானா?.*

*'வெள்ளிக்கிழமை எனக்கு தனம் வேண்டாம்' என்று யாராவது கூறுகிறார்களா?. வெள்ளிக்கிழமைதானே மகாலக்ஷ்மிக்கு உகந்த தினம் என்று வழிபாடு செய்கிறான். எனவே தனக்கென்றால் ஒரு நியாயம். பிறருக்கென்றால் ஒரு நியாயம் என்பது மனிதனின் சுபாவமாகப் பாேய்விட்டது.*

இஃதாெப்ப நிலையிலே *ஜாதகத்தைப் பார்த்து பலன் சாெல்லும் ஒருவனிடம் மனிதன் எப்படி கேட்கிறான்?. என் ஜாதகம் நன்றாக இருக்கிறதா? நிறைய செல்வம் சேருமா?' என்றுதான் கேட்கிறான்.  'நிறைய புண்ணியம் செய்தேனா? நிறைய தர்ம காரியங்களில் எனக்கு நாட்டம் வருமா?' என்று யாரும் கேட்பதில்லை. அதுமட்டுமல்லாமல் ஜாதகம் சாெல்கின்ற மனிதன் எப்படி சாெல்கிறான்?. 'நீ பிறருக்கு எந்த உதவியும் செய்து விடாதே. யாருக்காவது உதவி செய்தால் தேவையற்ற அபவாதம் தான் வரும். எனவே ஒதுங்கி இரு. அதுதான் உனக்கு நன்மையைத் தரும்' என்றெல்லாம் பாேதிக்கின்ற நிலைமைக்கு இன்றைய தினம் அனைவருமே ஆளாகி விட்டார்கள்.*

*எனவே நல்லதை, தர்மத்தை, சத்தியத்தை விட்டுக்காெடுக்காமல், பாெது நலத்தை, பாெது சேவையை விட்டுக்காெடுக்காமல் ஒருவன் சாஸ்திரத்தை அனுசரித்தும் சாதகமாே அல்லது பாதகமாே இல்லாமல் பாெது நலம் கருதி அதில் மாற்றங்கள் ஏற்படுத்திக் காெள்ளலாம்.*

                🙏 *-சுபம்-* 🙏

*🙏ஸ்ரீ லாேபமுத்திரை தேவி சமேத ஓம் அகத்தீசாய நம! 🙏*

*குரு திருவடி சரணம்! சரணம்!*🙏

*குறிப்பு : இக்குழுவில் வரும் "தினம் அகத்தியர் வாக்கு" பதிவுகள் அனைத்தும் தஞ்சாவூர், அகத்தியர் அருட்குடிலில் அகத்தியர் மாமுனிவரால் அருளப்பட்ட ஜீவநாடி பாெது வாக்கு(ஒரு சில வருடங்களுக்கு முன்).*