☸️ *கணக்கற்ற சிவ வடிவங்கள்* . *புஜங்க லலித மூர்த்தி*. *புயங்கப் பெருமான்.* நடராஜரின் *ஆயிரம் தோள் ஆயிரம் திருவடி நடனம்*.
புஜங்கம் – தோள். இது தமிழில் புயங்கம் எனப்படும். லலித மூர்த்தி – அழகிய மூர்த்தி
ஆயிரம் முகம், ஆயிரம் தோள், ஆயிரம் திருவடி உடைய *ஆயிர நாதரை*
🌷 ஆயிரம் தாமரை போலும் *ஆயிரம் சேவடியானும்*
ஆயிரம் பொன் வரை போலும் *ஆயிரம் தோள் உடையானும்*
ஆயிரம் ஞாயிறு போலும் *ஆயிரம் நீள் முடியானும்*
ஆயிரம் பேர் உகந்தானும் *ஆரூர் அமர்ந்த அம்மானே*
என்று திருநாவுக்கரசர் துதிக்கிறார். திருவாரூர் தியாக ராஜர் கோயிலில் அக் கோயில் கட்டிய *முசுகுந்தச் சோழச் சக்கரவர்த்திக்காக ஆயிரம் தோள்களும் ஆயிரம் திருவடிகளும் கொண்டு நாட்டியம் ஆடிக் காட்சி அருளிய அழகர்* புஜங்க லலித மூர்த்தி. இரண்டு திருவடியையே காண முடியாமல் பிரம்மனும் விஷ்ணுவும் வருந்தி நின்ற போது *ஆயிரம் திருவடிகள் நடனம் ஆடும் அற்புதக் காட்சி முசுகுந்தருக்கு* அருளியவர் புஜங்க லலித மூர்த்தி. *ஆயிரம் திருவடிகளும் எடுத்து ஆடிய* மிக அரிய அதி அற்புதமான *ஆயிர ஆடலை முடித்து ஆயிரம் திருவடிகளையும் வைத்தருளிய* கருணையை
🔯 *ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய* அசைவு தீர *ஆயிரம் அடியும் வைத்த* அடிகள் *அரூரனாரே* (அசைவு தீர --– ஆடலை முடிக்க )
என்று திருநாவுக்கரசர் போற்றுகிறார். *சிவ லோகம் சேர்க்கும்* திருவாசகத்தின் *யாத்திரைப் பதிகம் புயங்க மூர்த்தியைப்* போற்றுகிறது . *ஆயிர லிங்கப் பரம்பொருள்* பல திருக் கோயில்களில் தனிச் சந்நிதியில் சிறப்புறுகிறது. அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. அனைத்து உலகங்களையும் படைத்து இயக்கும் ஊழி முதல்வன் ஓசை யொலிப் பெருமான் ஆடல் அழகன் அன்பர்களுக்காக ஆடும் நடனம் பல வகைப்பட்டது. *மதுரை சுயம்பு லிங்கச் சொக்க நாதர் கோயிலில்* *வைத்த திருவடியை எடுத்தும் எடுத்த திருவடியை வைத்தும்* பாண்டியனுக்காகத் *திருவடி மாறி ஆடியவர்* வெள்ளியம்பலச் சொக்கத் தாண்டவர். *திரு இடைச்சுரத்தில் பரசு ராமருக்காக மழு ஏந்தி ஆடியவர்* இடைச்சுர நாதர். இவ்வாறு இன்னும் பல அடியார்கள் பல தலங்கள். சிவப்பிரியா
No comments:
Post a Comment