உலகினை வசப்படுத்துவதற்கு
ஓத வேண்டிய அபிராமி அந்தாதி பாடல் 42.
அபிராமி அந்தாதியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் அமையப் பெற்றுள்ளது.
முதலில் 101வது பாடலாக வரும் நூல் பயன் பாடலை அபிராமி அன்னையை மனதார வேண்டி மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.
பின்னர் என்ன காரிய சித்தி வேண்டுமோ அந்த காரிய சித்திக்கான அபிராமி அந்தாதி பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.
அபிராமி அந்தாதி நூற்பயன் 101 வது
பாடல்:
ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக் காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே.
அபிராமி அந்தாதி
101வது பாடல் பொருள்:
எங்கள் தாயானவளை, அபிராமி வல்லியை, எல்லா உலகங்களையும் பெற்றவளை, மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை, எல்லா உலகங்களையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு காப்பவளை, திருக்கரங்களில் மலர் அம்புகள் ஐந்தையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை,
மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் நேராது, எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வர்.
உலகினை வசப்படுத்த உதவும் அபிராமி அந்தாதி பாடல் 42ஐ பார்க்கலாம்.
உலகினை வசப்படுத்த
உதவும் அபிராமி அந்தாதி பாடல் எண் 42வரிகள் மற்றும் விளக்க உரையுடன்
:
*இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடங்கொண்ட கொங்கை-மலைகொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி, நல் அரவின்
வடம் கொண்ட அல்குல் பணிமொழி--வேதப் பரிபுரையே*
விளக்க உரை:
அம்மையே! ஒளிவீசும் முத்துமாலை உன்னுடைய தனங்களில் புரள்கின்றது.
உம்முடைய தனங்களோ ஒன்றுக்கொன்று இடமின்றி பருத்து மதர்த்திருக்கின்றது.
இந்தக் கொங்கையாகிய மலை சிவபெருமானின் வலிமை பொருந்திய மனத்தை ஆட்டுவிக்கின்றது.
அபிராமி சுந்தரியே! நல்ல பாம்பின் படம் போன்ற அல்குலை உடையவளே!
குளிர்ச்சியான மொழிகளையுடையவளே!
வேதச் சிலம்புகளைத் திருவடிகளில் அணிந்து கொண்டவளே! தாயே!
இவளே என் தாயுமாவாள்.
இவளே என்னை
பெற்ற தாயுமாவாள்.
துணையுமாவாள்
அபிராமி அந்தாதியின் இந்த 42வது பாடலை அமாவாசை பௌர்ணமி அன்று தவறாமல் துதிக்கவும்.
தேவியின் அருள் கிடைக்கும்.
உங்கள் கோரிக்கைகளை தேவி அபிராமி நிறைவேற்றுவாள்.
அபிராமி அந்தாதியின் இந்த 42வது பாடலை எஸ்.ஜே.ஜனனி அவர்களின் இனிய குரலில் கேட்டு மகிழ காணொளிக்காட்சி கீழே!👇👇
No comments:
Post a Comment