*_⌥❍ச᭄த்தர்⌖பூம᭄⎋_*
🟨🟥🟨🟥🟨🟥🟨🟥
🕉️தேசியமும் தெய்வீகமும்*
*எனது இருகண்கள்*🙏
*சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்🇮🇳*
ஓம் நமசிவாய 🌻🌴🔥
தவம் எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்?
தவம் கைகூடியதற்கான அறிகுறி என்ன?
தவம் என்பதை எடுத்தவுடன் செய்ய முடியாது.செய்தாலும் தேவையான பலன் கிடைக்காது.ஆன்மீக முயற்சிகளில் நான்காவது படிநிலையே தவம் ஆகும்.
1.பக்தியுடன் சிவ பூஜை
2.பக்தியுடன் மானச மந்திர ஜெபம்.
3.விரும்பும் வெற்றிக்கான தியானம்
4.விடுதலை பெற வேண்டிச் செய்யும் தவம்
சிவபூஜையை நாள்தோறும் காலையிலும் மாலையிலும் செய்வது சிறப்பு.மந்திர ஜெபத்தை முடிந்த நேரத்திலெல்லாம் செய்யலாம். அதற்கு நேரம் காலம் கிடையாது.இவை இரண்டும் செய்தால் மனம் ஒருமைப்படும்.தியானம் தவம் செய்வதற்கு மனம் பக்குவப்படும்.
விரும்பும் வெற்றிகளைப் பெற வேண்டி தேவதைகளுக்கும் மகான்களுக்கும் ஏக இறைவனுக்கும் மானச பூஜை செய்து வழிபடுவதே தியானம் ஆகும்.அதைக் குறைந்தபட்சம் 24 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை செய்யலாம்.
#தவம் என்பதே ஆன்மீக முயற்சியில் மிக உயர்ந்த நிலை.தவத்தின் ஒரே இலட்சியம் ஏக இறைவனின் தரிசனம். அதன் வழியாக முக்தி,மோட்சம் என்னும் விடுதலை என்பதாக மட்டுமே இருக்க வேண்டும்.
தவத்தை அதிகாலையிலும் நள்ளிரவிலும் அதாவது சுற்றிலும் உள்ளவர்கள் ஓய்ந்து...அடங்கி...உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் செய்வதே உத்தமம். உலக மக்களுடன் தொடர்பு இல்லாமல் தனிஅறை...குகை...காட்டின் நடுவே தவக்குடில்...என அமைத்துக் கொண்டால் எந்த நேரத்திலும் செய்யலாம்.
24 நிமிடம் என்பது ஒரு நாழிகை.
மூன்றே முக்கால் நாழிகை என்பது ஒரு முகூர்த்தம்.அதாவது ஒரு மணி 30 நிமிடம். 7 1/2 நாழிகை என்பது ஒரு ஜாமம்.அதாவது 3 மணி நேரம்.
தவத்தைத் தொடக்கத்தில் 24 நிமிடம் அதாவது 1 நாழிகை பொழுதுக்கு அலாரம் வைத்துத் தொடங்க வேண்டும்.
ஒரு நாழிகைப் பொழுது எளிதாய்ச் செய்ய முடியும் என்ற சூழ்நிலை வந்தவுடன் 1 மணிநேரம் எனத் தவநேரத்தை அதிகப்படுத்த வேண்டும்.
தவம் நன்கு கைகூடி காலத்தை உணராத அளவுக்கு வளரும் பட்சத்தில் 1 முகூர்த்தம் 1 1/2 மணிநேரம் மற்றும் ஒரு ஜாமம் அதாவது 3 மணிநேரம் என விரிவுபடுத்திக்கொள்ளலாம்.
தவம் கைகூடியதற்கான அடையாளம் உட்கார்ந்த நிலையில் உடலை உணர முடியாத வண்ணம் அறிதுயில் என்னும் யோகநித்திரை கைகூடுவதே. சுத்த தேகமும் ஜீவகாருண்யம் என்னும் உயிர்கள் பால் இரக்கமும் தானதர்மம் செய்யும் மனோநிலையும் வாய்த்தால் மட்டுமே தவம் எளிதில் கைவரும். மாயைத்திரைகள் ஒவ்வொன்றாய் விலகும். அதை வள்ளலார் வாக்கிலே சொல்வதானால்...நமது ஆன்ம அறிவை வளர்க்கும் விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்த திரைகளில் அழுத்தமாய் இருக்கக் கூடியது பச்சைத் திரைதான். இந்த பச்சைத்திரை ராகாதிகள் எனப்படும் செயற்கை குணங்களாகிய காமம்,குரோதம்,லோபம், மோகம்,மதம்,மாச்சரியம் என்பதாகும்.
இம்முறையே ஆசை,கோபம்,பேராசை (கருமித்தனம்) ,காம மயக்கம், செருக்கு,பொறாமை என்று பொருள்படும்.இந்த ராகாதிகளைப் பர விசாரத்தினால் உண்டாகும் அதி உஷ்ணத்தால் அல்லாது மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது. அந்த உஷ்ணம் ஒரு யோகியினுடைய அனுபவத்தில் தெரியும்.
அதை மனுஷ்ய தரத்தில் உண்டு பண்ணுதற்கு தெரியாது.இதுபோல் யோகத்தினால் வருகின்ற உஷ்ணத்தைக் காட்டிலும் ஆண்டவரின் பெருமையை புகழ்ந்து துதிப்பதிலும் நினைத்து வழிபடுவதிலும் இதைவிடக் கோடி, பத்துக் கோடிப் பங்கு அதிகமான உஷ்ணம் உண்டுபண்ணிக் கொள்ளலாம்.
எவ்வாறு எனில், ஒரு ஜாமநேரம் அதாவது ஏழரை நாழிகை (3 மணிநேரம்)
மனத்தில் எந்தவித இகவிசாரமுமின்றி பரவிசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வ சிந்தனையொன்றே மனதில் வைத்து,மற்ற விஷய எண்ணங்கள் இல்லாமல் இறைவனைப் புகழ்ந்து ஸ்தோத்தரித்தோ அல்லது நினைத்துக் கொண்டோ இருந்தால் நாம் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு வள்ளல் பெருமான் விளக்கியபடி 24 நிமிடத்தில் தவத்தை தொடங்கி 3 மணிநேரம் வரை விரிவுபடுத்தி காலத்தை வெல்லும் அதீத நிலையை எய்த வேண்டும். அப்போது தான் துரியாதீதம் என்னும் பேருறக்க நிலை வாய்க்கும். கனவு போல் பல காட்சிகளும் வண்ணங்களும் பல்வேறு உலகங்களும் தோற்றமளிக்கும். #இறைவனும் தரிசனம் தருவார்.
ஓம் நமசிவாய 🌻🌴🔥👑👑👑
No comments:
Post a Comment