Friday 20 August 2021

மகாபாரதத்தில் குறிப்பிடும் கௌரவர்கள் என்பது மனிதனுடைய *அதிகபட்ச அவகுணங்கள்

 *யார் அந்த 100 கௌரவர்கள்* ?


மகாபாரதத்தில் குறிப்பிடும் கௌரவர்கள் என்பது மனிதனுடைய *அதிகபட்ச அவகுணங்கள்*.


அவகுணங்களையே கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 100 கௌரவர்கள் என்னும் அவகுணங்களை *பட்டியலாக* கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பொருமையாக படிக்கவும்.


001. சஞ்சலம்

002. தேச துரோகம்

003. கைவிடுதல்

004. கோழைத்தனம்

005. எதிர்வாதம்

006. கபடம்

007. தான்தோன்றித்தனம்

008. கருத்து வேற்றுமை

009. அஞ்ஞானம்

010. கருணையின்மை

011. இரக்கமற்ற தன்மை

012. சோம்பேரித்தனம்

013. அக்கறையின்மை

014. ஓரவஞ்சனை

015. கொச்சைத்தனம்

016. ஹிம்சை

017. விரோதம்

018. வெறுப்பு

019. ஆர்வமின்மை

020. பிடிவாதம்

021. இறுக்கமான மனம்

022. முட்டாள்தனம்

023. விதி மீறுதல்

024. கல்லாமை

025. அர்த்தமின்மை

026. பிறர் துன்பத்தை இரசிப்பது

027. தீமை செய்ய விருப்பம்

028. குற்றம் புரிதல்

029. அபகரித்தல்

030. பழக்கதோஷம்

031. தன்னிலை மறத்தல்

032. பேராசை

033. ஞாபக மறதி

034. பழி உணர்வு

035. வாக்கு தவறுவது

036. வரட்டு கவுரவம்

037. அடிமைத்தனம்

038. பிரித்தாளுதல்

039. பொறுப்பற்ற தன்மை

040. வேற்றுமை பாராட்டுதல்

041. கஞ்சத்தனம்

042. கடுமை

043. தன்நலம்

044. அசுத்தம்

045. சாபம்

046. பற்றுதல்

047. சார்ந்த தன்மை

048. உரிமையின்மை

049. அவகுணத்தை பார்த்தல்

050. காம இச்சை

051. பொய்மை

052. ஸ்திரமின்மை

053. ஒழுக்கமின்மை

054. சமநிலை இழத்தல்

055. பாரபட்சம்

056. மன கசப்பு

057. ஆவேசம்

058. அநியாயம்

059. நடுநிலையின்மை

060. சந்தர்ப்பவாதம்

061. நெறிதவறுதல்

062. நேர்மையின்மை

063. கவனமின்மை

064. அறியாமை

065. எச்சரிக்கையின்மை

066. தெளிவற்ற சிந்தனை

067. பகுத்தறிவின்மை

068. பின்புத்தி

069. மூடநம்பிக்கை

070. சிந்தனையற்ற

071. அலட்சியம்

072. மந்த புத்தி

073. லட்சியமின்மை

074. குழப்பம்

075. விரக்தி

076. நம்பகமற்ற தன்மை

077. முயற்ச்சியின்மை

078. பலவீனம்

079. சந்தேகித்தல்

080. உற்சாகமின்மை

081. ஊக்கமின்மை

082. கண்ணியமின்மை

083. முரட்டுத்தனம்

084. அகங்காரம்

085. அமைதியின்மை

086. அராஜகம்

087. வீண் பழக்கம்

088. கூச்சலிடுவது

089. அவசரம்

090. கருமி

091. அபிமானம்

092. அதிருப்தி

093. அவமரியாதை

094. மதிப்பற்ற

095. கட்டுப்பாடற்ற

096. ஏட்டிக்கு போட்டியாக

097. நிந்தனை

098. புலன் இச்சை

099. எதிர்மறை சிந்தனை

100. சுயமரியாதையற்ற நிலை

100 கௌரவர்களுக்கு ஒரே ஒரு சகோதரி அதாவது இவை அனைத்தும் சீரழிய தேவையான ஒரே ஒரு அவகுணம் அதுவே.....


*உள் உணர்விழத்தல்*


*உள் ஒளியை இழந்து விட்டால் ஒரு மனிதன் 100 மடங்கு துன்பப்படுவான் என்பதே அதன் பொருள்*


!!🤚ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து 🤚!!

No comments:

Post a Comment