நமது பொகளூர் அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடத்துக்கு அபிஷேக பீடம் ஒன்று, அனைத்து சிலைகளையும் வைத்து அழகாக அபிஷேகம் செய்யும் அளவில் செய்து கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டு, சதுர ஆவுடையார் வடிவில் 3.5kg கனத்தில் யாழி முக வேலைப்பாட்டுடன் அனுப்பர்ப்பாளையம் மாரிமுத்து ஸ்தபதி அவர்களால் செய்து தர ஒப்புக்கொள்ளப்பட்டு நேற்று பௌர்ணமி தினம் குருஜி அனுமதியுடன் ஸ்தபதியிடம் பேசி உறுதி செய்யப்பட்டது. நேற்று பௌர்ணமி நாள் ஆனதால் நேற்றே யாழி முகம் செய்யும் வேலையை துவக்கி விடுவதாக ஸ்தபதி அவர்கள் கூறினார். முன்னதாக நான் எனது இல்லத்து உபயோகத்துக்காக செய்த பித்தளை அபிஷேக மேடை பீடத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டது. அனைவருக்கும் இந்த புதிய அமைப்பு வசதியாகவும் நன்றாகவும் இருந்ததால், புதிய அபிஷேக மேடை செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதன் பொருட்செலவு சுமார் Rs.7500 ஆகும். இன்று Rs.4000 முன்பணமாக ஸ்தபதி அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
நேற்று 03.08.2020 எனக்கு ஜீவ நாடி வாசித்த போது, ஜீவ நாடியில் ஆலய *கைங்கர்யம்* செய் என்று வாக்கியம் வந்தது. குருஜி அவர்களுக்கு கைங்கர்யம் என்ற வார்த்தை என்ன என்று தெரியவில்லை. நான் வாட்ஸ் அப் குழு *அகத்தியம் ஆலய கைங்கர்யம்* என்று ஆரம்பித்து ஆலய பணிகளை அந்த குழுவில் கலந்தாலோசித்து வருகிறேன் என்பது குறிப்பிடத்தக்கது. இது நாள் வரை இந்த வார்த்தை நாடியில் வந்ததில்லை. இப்போது அகத்தியர் இவ்வார்த்தயை உபயோக படுத்தி உள்ளார்.

No comments:
Post a Comment