Tuesday, 4 August 2020

ஒரு தனிப்பட்ட அனுபவ பதிவு

திங்கள் கிழமை ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி ஆடி மாதம் பௌர்ணமி அன்று வழக்கம்போல அகத்தியருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நிறைவடைந்து பின்னர் வழக்கம்போல சீரடி சாயி பாபா அவர்களுக்கு பால் அபிஷேகம் செய்தோம்

இன்று அப்போது நான் சில யோசனைகளை கூறினேன் இவ்விதம் அபிஷேகம் செய்யலாம் என்று புதிதாக கூறினேன் குருஜி அவர்களும் ஏற்று கொண்டார் அப்போது மனதில் எழுந்த ஒரு எண்ணம் என்னவென்றால் சாயி பாபாவுக்கு அபிஷேகம் செய்யும் போது அற்புதமான கீர்த்தனைகளைப் பாட வேண்டும் என்பது என்னுடைய எண்ணமாக இருந்தது ஒவ்வொருமுறையும் இதைப்போல எண்ணுவது உண்டு ஒவ்வொரு முறையும் யூடியூப் சேனலில் சென்று அதிலே தேடி கிடைக்கும் சாயிபாபா கீர்த்தனைகளை பாடல்களை ஸ்பீக்கரில் போட்டு ஒலிக்க செய்வது உண்டு ஆனால் அந்த பாடல்கள் எனக்கு நிறைவாக இல்லை அதனால் போன பௌர்ணமியிலும் இந்த பௌர்ணமியிலும் கீர்த்தனைகள் இல்லாமல் நாங்களே கோஷம் போட்டுக்கொண்டு சாய் நாதர் போற்றி சச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ் கீ ஜெய் என்ற போதே ஓம் சாயி நமோ நமஹ ஸ்ரீ சாயி நமோ நமக ஜெய ஜெய சாயி நமோ நமஹ சத்குரு சாயி நமோ நமஹ என்று கோஷம் போட்டுக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்

இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கனவு கனவு போல் இல்லாமல் முழு நினைவுகளுடன் என்னால் அதனை கவனிக்க முடிந்தது ஒரு வயதான பெரியவர் அவர் அணிந்திருக்கும் உடை 100 வருடங்களுக்கு முன்னர் எவ்விதம் மக்கள் உடையணிந்து அவர்களும் அவ்விதம் இருந்தது அவர் அற்புதமான தெய்வீகமான சாயி கீர்த்தனைகளைப் பாடினார் அது என்ன மொழி என்று எனக்கு தெரியவில்லை அந்த பெரியவரின் முகம் மிகவும் தெய்வ கடாக்ஷம் ஆக இருந்தது எதிரே நிமிர்ந்து பார்க்கும் போது அங்கே காற்றில் ஒரு உருவம் மனித உருவம் ஆனால் அந்த உடல் மனிதனுடைய உடல் நல்ல காற்றில் மிதக்கும் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நிலையில் சீரடி சாய்பாபா கண்கள் மூடிய நிலையில் தெய்வீகமாக காட்சியளித்து அந்த கீர்த்தனைகளை கேட்டுக்கொண்டிருந்தார் ஒரு நான்கு வரி பாடி முடித்தவுடன் அந்த பெரியவர் என்னிடம் என்னை நோக்குகிறார் பிறகு என்னிடம் இந்த கீர்த்தனைகள்  உனக்கு புரிந்ததா என்று கேட்கிறார் பின்னர் அதற்குரிய தாளம் இதுதான் என்று தன் கைகளாலேயே தாளம் போட்டு எனக்கு காண்பிக்கிறார் அற்புதமான ஒரு கனவு கேட்க கேட்க அந்த இசை மிகுந்த ஆனந்தத்தை உருவாக்கியது சீரடி சாய் பாபாவின் தரிசனம் மிகுந்த ஆனந்தத்தை உருவாக்கியது இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்

No comments:

Post a Comment