Monday 17 August 2020

இந்த மாதம் ஆவணி மாத பிறப்பு 17/09/2020 தானம் செய்ய போகும் விவரங்கள் விவரங்கள்



இந்த மாதம் ஆவணி மாத பிறப்பு 17/09/2020 தானம்  செய்ய போகும் விவரங்கள் விவரங்கள்


அகத்தியர் பீடத்தில் த்யானம் செய் தானம் செய் என்று எப்போதுமே அகத்தியர் அனைவருக்குமே உரைக்கிறார்


அவ்வழியில் மாதா மாதம் தமிழ் மாதப்பிறப்பு அன்று நான் மட்டும் தனியாக தானம் செய்து வந்தேன்.


அப்போது நண்பர்களிடம் செய்தி தெரிவித்து, நான் இவ்வகையில் தானம் செய்து வருகிறேன். என்னுடன் இனைந்து தானம் செய்ய விரும்புவார்கள் இனைந்து கொள்ளலாம். ஒரு குழுவாக சேர்ந்து மாதம் முழுவதும் கலந்தாலோசித்து பல வகையான தான தருமங்களை செய்யலாம் என்று ஒரு நல்ல எண்ணத்தில் குழுவை உருவாக்கினேன். குழுவில் அன்பர்கள் தாமாகவே முன்வந்து இனைந்து கொண்டார்கள். ஒருவரை கூட குழுவில் இனைந்து  கொள்ளுங்கள் என்று நாம் கேட்டது இல்லை. அதே போல எந்த குழு உறுப்பினரையும் தானம் ஏன் அளிக்கவில்லை என்றும் கேட்டது இல்லை. அவரவர் வசதிக்கேற்ப சூழ்நிலைக்கேற்ப ஒரு சிறு தொகை மாதா மாதம் ஒதுக்கி நல்ல அற பணிகளுக்கு பயனாகும் வகையில் செயல்பாடுகள் நடந்து கொண்டு வருகின்றது.


அவ்வகையில் வருகின்ற ஆவணி மாதம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தான தருமங்களை செய்ய எத்தனித்துள்ளோம்


  1.  சங்கு  ஊதும் தாசர்களுக்கு  உதவி


சங்கு ஊதும் தாசர்கள் என்பவர்கள் பெருமாள் ஆலயத்தில் இருப்பார்கள். இவர்கள் எப்போதும்  மஞ்சள் ஆடை அணிந்து கொண்டு இருந்து பெருமாள்  நாமம் ஜெபித்து கொண்டு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்து அவர்களிடம் யாசகம் வாங்கி கொண்டு தமது வாழ்க்கையை வாழ்வார்கள். பெருமாள் ஆலயத்தில் நடக்கும் பூஜைகள் திருவிழாக்கள் ஆகியவற்றில் பெரும் தொண்டு ஆற்றுவார்கள். அகத்தியர் ஜீவ நாடியில் சில பரிகாரம் கூறும் பொது இவர்களை உரைத்து இவர்களுக்கு ஆடை தானம் போன்றவற்றை செய்ய சொல்வது உண்டு. இவர்கள் சங்கு சக்கரம் முத்திரை இரும்பில் காய்ச்சி இரு தோள்களிலும் குத்தி இருப்பார்கள். அசார சீலர்கள்   அந்த வகையில் இவர்களுக்கு இந்த மாதம் தானமாக Rs.1000 ருபாய் 100, தலா 10 பேருக்கு கொடுக்கலாம் என்று திட்டமிட்டு நமது குழுவினை சேர்ந்த கிரிதரன் அய்யா மூலமாக நேரில் சென்று அவர்களுக்கு இந்த உதவியை செய்வோம்.


  1. துப்புரவு பணியாளர்களுக்கு சிறு உதவி


இந்த கொடுமையான நோய் காலத்திலும் பெரும் உதவியாக இந்த துப்புரவு பணியாளர்கள் தமது பணியை செவ்வனே செய்து வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சிறு உதவியாக Rs.1000 ருபாய் 100, தலா 10 பேருக்கு கொடுக்கலாம் என்று திட்டமிட்டு நமது குழுவினை சேர்ந்த கிரிதரன் அய்யா மூலமாக நேரில் சென்று அவர்களுக்கு இந்த உதவியை செய்வோம்


  1. திருநங்கைகளுக்கு சிறு உதவி -


இவர்கள் பல கடைகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் ஏறி இறங்கி பல ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி யாசகம் பெற்று வாழ்வு நடத்துகிறார்கள், இவர்களுக்கு சமுதாயத்தில் எந்த அங்கீகாரமும் இல்லை. அவர்களுக்கு ஒரு சிறு உதவியாகருபாய் 100, தலா 10 பேருக்கு கொடுக்கலாம் என்று திட்டமிட்டு நமது குழுவினை சேர்ந்த கிரிதரன் அய்யா மூலமாக நேரில் சென்று அவர்களுக்கு இந்த உதவியை செய்வோம்


குருஜி அவர்களின் ஆலோசனை பெயரில் திருநங்கைகளுக்கு இந்த தொகையான ரூபாய் 1000 துக்கு ஈடாக, ஒரு குழுவாக ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் திருநங்கைகளுக்கு மளிகை பொருளாக வாங்கி கொடுக்கலாம்- இவர்கள் கையில் பணமாக கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளதால் மளிகை பொருட்களாகவே வாங்கி கொடுத்து விடுவோம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.


  1. எய்ட்ஸ் பாதித்த குழந்தைகளுக்கான காப்பகம் - சென்னை ரெட் ஹில்ஸ் பகுதி


நமது குழுவை சேர்ந்த அன்பர் திரு பாலசுப்ரமணியம் அவர்கள் இந்த ட்ரஸ்ட் ஐ நடத்தும் திரு சாலமன் அவர்களிடம் உரையாடி உறுதி  செய்து இருக்கிறார். இது ஒரு தனியார் ட்ரஸ்ட். நன்கொடை வாங்கி எய்ட்ஸ் பாதித்த சிறுவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தாங்கும் இடம் உணவு, படிப்பு ஆகியவை அளித்து பாதுகாத்து வருகின்றனர். எய்ட்ஸ் பாதித்த சிறுவர்களுக்கு மிக குறைந்த அளவிலேயே காப்பகங்கள் உள்ளன. அவர்களும் இந்த உலகில் வாழ வகை செய்யும் நல்ல உள்ளம் கொண்டோர் இந்த அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர். இந்த மாதம் இவர்களுக்கே கொடுக்க உத்தரவு வந்துள்ளது. ஷெல்டர் ட்ரஸ்ட் பார் சில்றன் 09444455275, எண் 165, ரேவதி நகர் விளங்காடுப்பாக்கம் ரெட் ஹில்ஸ் சென்னை 600052.- இந்த மாத தானம் Rs. 2501


  1. ஹோம்  பார் த பிளைண்ட் பீப்பிள்  - கண் பார்வை அற்றோர் வாழும் இல்லம்


இந்த காப்பகத்தில் கண் பார்வையற்றோர் ஒரு கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் கைவினை பொருட்களை விற்று வரும் பணத்தில் உணவு தயாரித்து இந்த காப்பகத்தில் ஒன்றாக வாழ்கின்றனர் - பெருந்துறை - ஈரோடு அருகில் இந்த காப்பகம் உள்ளது. நமது குழுவாயோ சேர்ந்த திரு சத்தியமூர்த்தி அய்யா அவர்கள் இவர்களை 20 வருடங்களுக்கு மேலாக பார்த்து வருகிறார். அவரால் இயன்ற போது தானம் செய்தும் வருகிறார். அவர் மூலமாக இந்த பார்வை இழந்தவர்களுக்கு நேரிடையாக நமது குழுவின் மூலம் இந்த மாதம் ருபாய் 2501 நன்கொடையாக வழங்குகிறோம். அவர்களுக்கு பணமாக கொடுக்காமல் மளிகை பொருட்களாக அரிசி பருப்பு எண்ணெய் போன்றவை 2501 ரூபாய்க்கு பொருளாக வாங்கி கொடுக்கிறோம்



  1. மேட்டுப்பாளையம் உதகை சாலையில் உள்ள கல்லாறு கிராமத்தில் உள்ள ஒரு ஏழ்மையில் வாடும் குடும்பம்


நமது குழுவை சேர்ந்த கிரிதரன் மூலமாக நேரில் சென்று பார்த்து இந்த குடும்பத்தின் நிலைமையை கண்டு அறிந்து அவர்களின் ஏழ்மையை கண்டு உணர்ந்து நமது குழுவை தொடர்பு கொண்டு உதவி கேட்டார்கள். இவர்களுக்கு சரியான வேலை இல்லை. மேலும் குடும்ப உறுப்பினர் ஒருவர் வினோத நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். அதனால் மருத்துவ செலவுக்கும் உணவிற்கும் கஷ்டப்படுகிறார்கள். இதன் குடும்பத்துக்கு நமது செலவில் Rs.2001 இந்த மாதம் அளிக்கிறோம் - பணமாக கொடுக்காமல் பொருளாக திரு கிரிதரன் அய்யா வின் மூலமாக அவர்கள் இல்லம் தேடி சென்று மளிகை பொருட்களை அளித்து விடுவோம்


  1. பொகளூர்  அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம் -


நமது பீடத்தில் தினமும் அன்னதானம் தொண்டர்களுக்கும் அகத்திய அடியவர்களுக்கு தாராளமாக நடந்து  வருகிறது. இங்கேயும் இப்போது போதுமான நன்கொடையாளர்கள் இல்லாததால் அரிசி குறைவாக உள்ளது என்று கூறு உள்ளனர். எனவே நமது குழுவின் சார்பில் இரண்டு 25 கிலோ மூட்டை- 50Kg  நல்ல உயர் தரமான அரிசி வழங்க எண்ணியுள்ளோம். இது மாத பிறப்பு அன்று என் கையால் வாங்கப்பட்டு என் இல்லத்தில் வைக்கப்படும். நான் அகத்தியர் பீடம் செல்லும் போது அங்கே சென்று கொடுக்கப்படும். இதன் விலை Rs. 3200



  1. ஸ்வயம்பு முருகர் ஆலயம் - ஆதி பழனியாண்டவர் கோவில் - பஞ்ச பாண்டவர்கள் மற்றும் த்ரௌபதி தாயார் தவம் செய்த இடம் - பொகளூர்


பஞ்ச பாண்டவர்கள் தவம் செய்த இடம் அவர்களது அஞ்ஞான வாசத்தில் மறைந்து வாழ்ந்த ஒரு இடம், இந்த இடத்தில இருக்கும் பொது மக்கள் துயர் துடைக்க பீமன் அவர்கள் இங்கே இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்போதுள்ள பத்ரகாளியம்மன் ஆலயம் அருகில் பகாசூரனை வதைத்த நிகழ்வு. அருமையான இடம். பஞ்ச பாண்டவர்களும் திரௌபதியும் - ஆறு பெரும் சாஷ்டாங்கமாக பெருமாள் லட்சுமி தேவி அவர்களை தரிசனம் கண்டு விழுந்து வணங்கிய இடம். தருமம் செய்பவர்கள் தருமராஜரை நினைவில் கொள்ளவும் பெருமாள் ஆசீர்வாதம் கிடைக்கவும், தருமங்கள் மேலும் பெருகவும் பிரார்த்தணைஆயகி  இந்த மாதம் ஒரு சிறு தொகை ஒதுக்கி அங்கே உள்ள ஸ்வாம்பு முருகர் ஆலயத்துக்கு 5 லிட்டர் எண்ணெய். மேலும் அங்கே உள்ள தரும மகாராஜா ஸ்தூபி க்கு ஒரு சிறிய பூஜை, பன்னீர் அபிஷேகம் சந்தன காப்பு, ஒரு சிறு நெய்வேதிய படையல் ஆகியவை செய்து நமது குழு உறுப்பினர்கள் நல்லபடியாக செல்வா செழிப்புடன் இருந்து மேலும் மேலும் தரும காரியங்கள் செய்ய வேண்டும் என்று வேண்டி சிறு பூஜை நமது பீடத்தை சேர்ந்த திரு கிரிதரன் ஐயாவால்  நடத்தப்படும் . இதற்க்கு ஒதுக்கி உள்ள தொகை Rs.1001 ; Rs .500, 5 லிட்டர் எண்ணெய்க்கு, Rs .501 பூஜை சாமான்களுக்கு


  1. ஜோலார்பேட்டை அன்னதானம்


நாம் ஏற்கனவே ஜோலார்பேட்டையில் 150 கிலோ அரிசி வாங்கி கொடுத்து அன்னதானம் செய்து கொண்டு உள்ளோம். அவர்கள் மேலும் அன்னதானம் கேட்பதால் இந்த மாதமும் ஒரு சிறு உதவியாக ஒரு மூட்டை அரிசி மற்றும் மளிகை பொருட்கள்  நமது குழுவின் திரு நவீன் காமராஜ் அவர்கள் மூலமாக பொருளாக வாங்கி கொடுக்கப்படும். இதற்குண்டான தொகை - Rs .1500


  1. பெருமாள் ஆலய திருப்பணி
    ஆலய திருப்பணி பல பல நன்மைகளை நமக்கும் நமது சந்ததியினருக்கும் கொடுக்கும். அவ்வகையில் திருவண்ணாமலை மாவட்டம் , போளூர் வட்டம், செம்மியமங்கலம் கிராமதில் அருள் பாலித்து வரும் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு மூலவருக்கு வெள்ளி காப்பு தயாராகி கொண்டு இருக்கிறது. அதில், இந்த கொரோனாவால் பலர் வேலை இழந்து தானம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் நிதி வசூல் செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு உண்டான ஒரு சிறு பொருள் உதவியாக ருபாய் 1001 நமது குழுவின் சார்பில் தருமமாக தந்து உதவுவோம். அந்த தடைகள் எல்லாம் நீங்கி பெருமாள் ஆலயம் புது பொலிவுடன் நன்றாக அமையட்டும்  என்று நாம் சங்கல்பம் செய்து பல நல்ல உள்ளங்களின் கைங்கர்யமாக கொடுக்கும் இந்த சிறு தொகை நிச்சயம் தரும ராஜர் ஆசியுடன் பெருகி நல்ல முறையில் பலன்களை கொடுக்கும் என்று வேண்டி இந்த சிறு பொருள் உதவியை செய்கிறோம்


  1. இளமையில் சிறு குழந்தைகளுடன் எதிர்பாராத விதமாக விதவையான ஒரு பெண் - அவர்களுக்கு உதவி
    பிராமண சமூகத்தை சேர்ந்த ஒருவர், நன்கு வேதம் கற்ற ஒருவர், நமது நம்பர்களுக்கு நன்றாக அறிமுகமான ஒரு பிராமணர் திரு நாகராஜன் அவர்கள் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 27. அவர் மனைவிக்கு 25 வயது. பையனுக்கு 4 வயது. மேலும் 4 மாத பெண் குழந்தை உள்ளது. நாகராஜன் அவர்களின் வயதான தாயாரும்  அவரது குடும்பத்தினரும் இந்த வைதீகத்தின் மூலம் வரும் வருமானத்தை நம்பி உள்ளனர். இவர் இளமையில் இறந்த சோகம் ஒருபுறம் எப்படி இனி இந்த உலகத்தில் குடும்பத்தை காப்பாற்றுவது என்பது மறுபுறம். இவர்களுக்கு உதவியாக இதை மாதம் ஒரு சிறு தொகையாக Rs .2501 அளித்து அந்த குடும்பத்துக்கு சிறிது நம்பிக்கையை ஊட்டலாம் என்று எண்ணி இந்த மாதம் கொடுக்கப்பட்டுள்ளது. நமது நண்பர் கார்த்திகேயன் அவர்கள் இந்த பணத்தை நம்மிடம் வாங்கி அந்த குடும்பத்தினரிடம் கொடுத்து விடுவார்
  2.  ராஜாஜி முதியோர் இல்லம் - மதுரை விஸ்வநாதபுரம்
    இங்கே சுமார் 15 முதியோர்கள் பராமரிக்க படுகின்றார்கள் . இவர்களுக்கு நன்கொடை ரூபாய் 2501 இந்த மாதம் நன்கொடையாக கொடுக்க உள்ளோம். நமது குழுவை சேர்ந்த திரு விக்னேஷ் அவர்கள் இந்த முதியோர் இல்லத்தில் பேசி அவர்களது தேவையை கேட்டு அறிந்து நமக்கு பரிந்துரை செய்து உள்ளார்.


மேலும் கடைசி நிமிடத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண் அரிசி வேண்டும் என்று கேட்டதால் ரூபாய் 715 ஒதுக்கப்பட்டு, அவருக்கு என் கையால் அரிசி வாங்கப்பட்டு, பொருளாக தானம் வழங்கப்படும்

இந்த மாதம் மேலே கூறப்பட்டு 12 வகையான பயனாளிகளுக்கு நிறைவாக தானம் செய்யப்படும்


சிறப்பு தானம்


இதை தவிர மிக சிறப்பான ஒரு நிலையாக - இந்த மாதம் வசூலான நிதியில் இருந்து ரூபாய் 17000 கோ தானத்துக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பசு மாடும் கன்றும் சேர்ந்து 40000 ரூபாய் செலவுக்குள் வாங்கி, தானம் அளித்த நமது அன்பர்கள் பெயர்கள் அனைத்தையும் சங்கல்பம் செய்து அகத்தியர் ஜீவ நாடியில் அனைவரின் பெயரையும் கூறி அகத்தியரிடம் ஆசி பெற்று உத்தரவு வாங்கி முறைப்படி நமது பொகளூர் அகத்தியர் பீடத்துக்கு தானமாக அளிப்போம் என்று எண்ணம் செய்து உள்ளேன். வாங்குபவர் அகத்தியதில் நன்கு ஊரும் ஒரு குருஜி, நாம் எப்போதும் சென்று வரும் இடம், பால் உபயோகம் அகத்தியருக்கு, விநாயகர் ஆலயத்துக்கு, குப்பை சித்தர் ஜீவ சமாதிக்கு. நாம் சென்று வரும் பொது எல்லாம் மாட்டு தீவனம் வாங்கி கொடுத்து மாடுகளை நன்றாக பராமரிக்க உதவ முடியும். மேலும் இந்த அகத்தியர் பீடத்தில் கோதானம் அளிப்பவர்களுக்கு இறந்த பின் கருட புராணத்தில் கூறப்பட்டுள்ள வைதரணி நதி யை சுலபமாக கடக்க மோக்ஷம் பெற கோதான புண்ணிய பலன் நிச்சயம் வரும் என்பது அகத்தியர் ஜீவ நாடியில் அருளி உள்ள வாக்கு. எனவே அனைவரும் பயன் பெற்று நல்ல செல்வ செழிப்புடன் நமது பிறவி நோக்கம் முடிந்த நிலையில் மோக்ஷத்துக்கு சென்று அடைய ஏதுவாக அமையும் என்பது சத்தியம். இந்த மாதம் இந்த பணம் எடுத்து வைத்து போல அடுத்த மாதமும் அதற்கு அடுத்த மாதமும், மூன்று மாதம் எடுத்து வைத்தால் கோதானம் செய்வதற்கு போதுமான தொகை கிடைத்து விடும். ஒவ்வொருவரும் தனி தனியே தானம் செய்ய வேண்டுமானால் சுமார் 30 பேருக்கு 40000 வீதம் 12 லட்சம் செலவாகும். ஆனால் இங்கே சில நூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் தானத்தில் அனைவரின் பெயர்களும் சங்கல்ப்பிக்கப்பட்டு அனைவருக்கும் ஒரே தானத்தில் புண்ணியம் கிடைக்கும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். நன்கொடை கொடுத்த அனைவருக்கும் முழு அளவு புண்ணியம் கிடைக்கும். ஜீவ நாடி வாசித்து உறுதி செய்யப்படும். எந்த ஐயமும் கொள்ள வேண்டாம்.
















*நமது பீடத்தை சேர்ந்த திரு கிரிதரன் அய்யா, பஞ்ச பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் இருந்த இடத்தில் ஒரு சிறு பூஜை செய்வதற்காக சென்று உள்ளார். அப்போது, கிருஷ்ண பரமாத்மா சிலா ரூப ஸ்வயம்பு மூர்த்தம் எங்கே உள்ளது என்று தெரியாமல் அங்கே நின்று கொண்டு என்னை தொலை பேசியில் அழைத்தார். நாம் பேசி கொண்டு இருக்கும்போதே ஒரு கிருஷ்ண பருந்து வந்து , பகவான் உள்ள இடத்தை பறந்து காட்டி உள்ளது.*

பரிபூரண தெய்வ அனுக்கிரகம் நம் அனைவருக்கும்.

பொதுவாக நான் பல முறை அங்கே சென்றது உண்டு. இது வரை மயில்கள் தான் நிறைய பார்த்து உள்ளேன். ஒரு முறை கூட பருந்து பார்த்ததே இல்லை.

இறைவனின் நல்லாசி 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

*மேலும் நமது பீடத்தை சேர்ந்த கிரிதரன் அய்யா பூஜை செய்து படையல் இட்டு வணங்கும் போது, ஆசீர்வாதமாக அந்த ஸ்வயம்பு மூர்த்தத்தின் மேல் சாற்றிய துணி, யாரோ தூக்கி வீசி எறிந்தது போல தூக்கி. வீசப்பட்டு விழுந்துள்ளது.  அங்கே அந்த நேரத்தில் எந்த காற்றும் இல்லை.*















ஐந்து முகங்கள் தெரியும் போல இருக்கிறது. நேரில் சென்று ஆராய்ந்தால் புரியும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏




ஸ்வயம்பு முருகர் ஆலயம், ஆதி பழனியாண்டவர் கோவில் , 5 லிட்டர் எண்ணெய் தானம் செய்யப்பட்டது.





ஸ்ரீ செல்லாண்டி அம்மன் துணை
     ஓதிமலை ஆண்டவர்    துணை


சந்தானம் அண்ணா விழி இழந்தோர் சங்கம் பெருந்துறை அவர்களுக்கு நமது தர்ம மகாராஜா குழுவின் மூலம் ஆவணி மாதத்தின் தர்மத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது அண்ணா...... மிக்க மகிழ்ச்சி அண்ணா நன்றி வணக்கம்.... ஓம் அகத்தீசாய நமக🙏🙏🙏






ஜோலார்பேட்டையில் திரு நவீன் காமராஜ் அவர்கள் மூலம் அன்னதானத்துக்கு உதவி செய்யப்பட்டது





சீரடி சாயீ சேவை சங்கத்துக்கு - ஆதரவற்ற முதியோர் அன்னதான செலவுக்கு ரூபாய் 1001 அளிக்கப்பட்டது.    Savings No XXXXXXXX31 debited with INR 1001.00 towards TO ONL DHARMAM:: SB 500101011339331:00560 on 17-AUG-2020.





*சிங்கப்பூர் பார்த்தசாரதி அய்யா அவர்கள் கோ தானத்துக்கு தனி நிதியாக ரூபாய் 5000 அனுப்பி உள்ளார். அந்த பணம் கோதான நிதிக்காக ஒதுக்கி வைக்கப்படுகிறது.*


*இந்த மாதம் கோதான நிதி 17000, மேலே கூறிய பணம் 5000, மொத்தம் 22000 கோ தானத்துக்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது*

இந்த மாத மொத்த கணக்கு கீழே உள்ள படத்தில். 🙏🙏🙏🙏🙏🙏🙏




இந்த மாத தானம் முடிந்தவுடன் 2 நாட்களுக்கு நமது அடுத்த மாத தானத்துக்கு இணைவதற்கு க்ரூப் சாட் இன்வைட் திறநது வைக்கப்படும். குழுவில் சேர விரும்புபவர்கள் சேர்ந்து கொள்ளலாம். 2 நாட்களுக்கு பிறகு அந்த நுழைவு தடை செய்யப்படும் - புதிதாக சேர இருப்பவர்கள் என்னை தொடர்பு கொண்டு பின்னர் தான் சேர முடியும். நன்றி வணக்கம் .

என்றும் அகத்தியம் தானம் பணியில்


தி. இரா. சந்தானம்

அகத்தியர் ஜீவ அருள் நாடி பீடம்

பொகளூர், மேட்டுப்பாளையம் வட்டம். கோவை மாவட்டம்

91760 12104

2 comments:

  1. துணி துணி பறந்தது எந்த இடம் சாமி

    ReplyDelete
    Replies
    1. பொகளூர் ஆதி பழனியாண்டவர் கோவில் அருகே பஞ்ச பாண்டவர்கள் தவம் செய்த இடம்.

      Delete