Saturday 15 August 2020

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா லீலைகள் - ராமதாசர்

🚩🚩🚩   *துவாரகா #ராமதாசர்.*

🚩🚩🚩  துவாரகைக்கு அருகே உள்ள டாஙகேர் என்னும் கிராமத்தில் வாழ்ந்தவர்
ராமதாசர்.

சிறந்த #கிருஷ்ண #பக்தர்.

காலை முதல் இரவு வரை இவர் துவாரகை கண்ணனை பிராத்தித்து வந்ததால் இவரை துவாரகா ராமதாசர் என்றழைத்தனர்.

ஒவ்வொரு ஏகாதசி அன்றும் துவாரகை சென்று விரதமிருந்து அன்று முழுவதும் கண்ணனையே பாடி பஜனை செய்வார்..

மறுநாள் #துவாதசி அன்று ஏழைகளுக்கு தன்னால் இயன்ற அளவு உணவு தந்து பின்னர் இவர் உணவு உட்கொள்வார் .

காலம் சென்றது.

ராமதாசர் தள்ளாத வயதாகி போனது, .

முதுமையை எட்டிய பிறகு, அவரது உடல்நிலை தளர்ந்தது. இருந்தாலும், மனம் தளராமல் தள்ளாடியபடியே துவாரகை சென்றார்.

அந்த நிலையிலும்
ஒவ்வொரு #ஏகாதசி அன்றும் தனது விரதத்தை விடாது கடைப்பிடித்து வ்ந்தார்.

ஒருமுறை அவர் தளர்ந்தவாறு கோயிலுக்குள் அமர்ந்திருந்தார்.

அவர் மனத்துக்குள்
ஸ்ரீ கிருஷ்ணன் புன்னகை புரிந்தவாறு நின்றிருந்தான்.

மானசீகமாக அவருடன் பேசினார் ராமதாசர்.

"கண்ணா, என் உடல் மிகவும் தளர்ந்து விட்டது. அடுத்த ஏகாதசிக்கு என்னால் இங்கு வந்து உன்னைத் தரிசிக்க இயலுமோ இயலாதோ தெரியாது. ஆனால் கண்ணா, என்னால் இயலாவிடில் நீ வந்து எனக்கு தரிசனம் தரவேண்டும்.
ஒரு போதும் தவறக்கூடாது கண்ணா,"என்றவாறு இறைவனின் காலடியில் விழுந்து விம்மி விம்மி அழுதார்.

இறைவனின் நெஞ்சம் உருகியது

"தாஸ, அஞ்சாதே. என்னை உங்கள் ஊருக்கு அழைத்துச் செல்" கண்ணனின் இந்த மொழியைக் கேட்ட ராமதாசர் திகைத்தார்.

"என்னால் எப்படி உன்னை அழைத்துச் செல்ல இயலும்."

இன்று இரவு கோமதி நதிக்கரையோரம் வந்துவிடு. இருவரும் தேரில் சென்று விடுவோம், என்று சொல்லி மறைந்து விட்டார்.

துவாராகாநாதன்  நாமசங்கீர்த்தனம் பாடியபடியே, கோமதி நதிக்கரைக்குச் சென்ற தாசர், ஒரு தேரைக் கண்டார். துவாரகாநாதன் அதில் தங்கச்சிலை வடிவில் அமர்ந்திருந்தான். ராமதாசரும் அதில் ஏறிக்கொள்ள, தேர் தானாகவே டாங்கேர் வந்தடைந்தது.

கண்ணனை நடுக் கூடத்தில் இறக்கிவிட்டுத தேர் மறைந்து போனது.

மறுநாள் பொழுது புலர்ந்ததும், துவாரகாநாதரின் மூலவரின் தங்கச்சிலை காணவில்லை என்ற செய்தி ஊரெங்கும் பரவியது.

அர்ச்சகர்களும், அதிகாரிகளும் பதைபதைப்புடன் ஆலோசித்தனர்.

இரவு பூஜைக்குப் பிறகும் சந்நிதியில் நின்றிருந்த ராமதாசர் மீது சந்தேகம் எழுந்தது.

உடனடியாக, அனைவரும் டாங்கேருக்கு புறப்பட்டனர்.

அதிகாரிகள் வருவதை கண்ட ராமதாசர் சிலையை கிணற்றில் வாளியில் வைத்த இறக்கி விடுகிறார்.

ஆனால் கிருஷ்ணரோ நீரில் மூழ்காமல் வெளியே தெரிந்த வண்ணம் இருந்தார்.

அதிகாரிகளும் அர்ச்சகர்களும் வீடு முழுவதும் தேடிய பின்
கிணற்றில் பார்த்த போது அங்கே உள்ள கிருஷ்ணரை வெளியே எடுத்தனர்.

அழுகையும் ஆத்திமுமாக முதியவரான ராமதாசர் கண்ணா என்ன சோதனை கண்ணா....
ஏன் என்னை விட்டு பிரிகிறாய்
என வேண்டியவுடன்,

கண்ணன்
"தாஸ, என் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்." அவர்கள் என்னை இங்கேயே விட்டுச் செல்வார்கள்."என்றான் புன்னகைத்தபடியே. ஆசையுடன் தாசர் அர்ச்சகர்களிடம் கேட்டார்.
"இறைவனின் எடைக்கு எடை பொன் தந்தால் இந்த இறைவனை எனக்குக் கொடுப்பீர்களா?"

அர்ச்சகர்கள் சிரித்தனர்."நீங்களோ ஒன்றும் இல்லாதவர் தினமும் உணவிற்காக பிச்சை எடுத்து உண்பவர்.
இந்த இறைவனின் எடைக்கு எடை துலாபாரமாகப் பொன் தருவீர்களா? என்று கேலி பேசினர்.

அதற்குள் ஊர் மக்கள் அங்குக் கூடிவிட்டனர்.

விக்ரகத்தின் எடைக்கு எடை பொன் தருகிறாராம் தாசர், என்று மக்கள் பேசிக் கொண்டே நின்று வேடிக்கை பார்த்தனர்.

அர்ச்சகர்களும் தாசரின் பேச்சைக் கேட்டு சிரித்தபடியே சம்மதித்தனர்.

தாசரால் இயலாத காரியம் கண்ணனின் எடைக்குப் பொன் தருவது என நம்பினர்.

அவரின் விருப்பப்படியே தராசு நிறுத்தப்பட்டது.

ஒரு தட்டில் கிருஷ்ண விக்ரகம் வைக்கப்பட்டது.'

ராமதாசர் வீட்டினுள் நுழைந்தார்.

தன் மனைவியுடன் வெளியே வந்தவர் கையில் ஒரு மூக்குத்தி இருந்தது.

தாசரின் கையில் ஒன்றும் இல்லாதது கண்டு அர்ச்சகர்" தாசரே, எங்கே பொன்? என்று கேட்டனர்."

இதோ இருக்கிறது என்று தன் கையிலிருந்த மூக்குத்தியைக் காட்டினார்.

பின் அதை இறைவனை எண்ணித் தராசில் இட்டார்.

அனைவரும் வியக்கும் வண்ணம்
ஒரு மூக்குத்தியின் எடைக்குச் சமமாகக் கண்ணனின் எடை நின்றது.

மக்கள் ஆரவாரம் செய்தனர்.

என்னே தாசரின் பக்தி.

அவரது பக்திக்குக் கண்ணனே திருவுள்ளம் இரங்கியுள்ளான்.

இவரே பரம பக்தர் என அனைவரும் அவரை வணங்கினர்.

அதிகாரிகளும்
அர்ச்சகரும் வாயடைத்து நின்றனர்."

தாசரே, இறைவனுக்கே இங்கே இருக்கத்தான் விருப்பம்போலும் .நீங்கள் பெரும் பாக்யசாலி. உமது பக்தி உலகினருக்கு ஒரு படிப்பினையாகும்
என்று சொல்லி
கண்ணனுடன் சேர்த்து தாசரையும் வணங்கினார்.                                                                              🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

No comments:

Post a Comment