Saturday 29 August 2020

தருமம் சம்மந்தப்பட்ட கருத்துகள்



நேற்று நமது குழுவை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத புதிய கொடை வள்ளல் பத்தாயிரம் கொடுத்து அதை நல்ல முறையில் இந்த மாத தானத்தில் இல்லாதவர்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்


நான் மிகவும் ஊக்கமடைந்து எவ்விதம் இந்த தான காரியங்களை மேலும் சிறப்பாக செய்வது என்று என்னையே கேட்டுக்கொண்டேன்.


எனக்கு எல்லாமே அகத்தியர் தான். அகத்தியர் வேறு தருமர் வேறு இல்லை. தருமர் வெரி தருமம் வேறு இல்லை. 

எம் அய்யனே தருமர் வடிவெடுத்து எம்முள் எண்ணங்களாக தோன்றி பிரதிபலித்த சில விஷயங்களை முடிந்த வரை எழுத்தாக்கம் செய்து, இந்த பதிவின் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


முதலில் அனைவரையும் தமிழ் மாத பிறப்பு அன்று அவரவர் இல்லத்தில் விளக்கு ஏற்ற சொல். தருமரை வேண்டு தருமரின் வாக்குப்படி தரும வழியில் தான தருமம் செய்வதால், அவர்களது ஆன்மாவை நம்மில் கொண்டு வர நம் இல்லில் ஐந்து ஐந்தாக வைத்து வழிபட வேண்டும். அதாவது ஒரு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி கோலமிட்டு ஐந்து விளக்கு, ஐந்து மலர்கள் ஐந்து வெற்றிலை ஐந்து பாக்கு ஐந்து எண்ணிக்கை பழம், ஐந்து தூபம் என்று வைத்து - மனதினில் தருமரை பிரார்த்தித்து எழுந்தருளி ஆசி புரிய வேணுமாய் கேட்டுக்கொண்டு இன்று நான் என்னால் முடிந்த ஒரு தொகையை நமது குழுவின் மூலம் தானம் கொடுத்து உள்ளேன், அந்த தானம் சிறப்பாக நடைபெற்று நல்ல பலன்களை வழங்கி நமக்கு புண்ணியத்தை சேர்க்க வேண்டும். மேலும் தான தருமங்கள் இவ்வுலகினில் தழைத்தோங்கிட வேண்டும் என்று வேண்டி கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கி கல்கண்டு நெய்வேத்தியம் வைத்து பிரார்த்தனை செய்து விட்டு தமது அன்றாட பணிகளை துவக்கலாம். மேலும் இந்த மாத பிறப்பு அமாவாசையில் வருவதால் மிக சிறப்பானதாகும்.



மனதினில் ஒரு கேள்வி உள்ளது - எவ்விதம் இந்த தான தருமங்களை மேலும் சிறப்பாக செய்ய முடியும்


பல வகையான தான தருமங்களை செய்ய வேண்டும் - சில வகைகளை கூறுகிறேன்


1. நீர் தானம்


2, நிலம் தானம்


4. கோ தானம்


5. ஆடை தானம்


6. அன்னம் தானம்


7. கல்வி தானம்


8. அறிவு தானம்


9. உடை தானம்


10. விசிறி தானம்


11. குடை தானம்


12. போர்வை தானம்


13. இனிப்பு தானம்


14. கீரை தானம்


15. ஆலய யதானம்


16. சிலை தானம்


17. ருத்திராக்ஷ தானம்


18. தீப தானம்


19. மருந்து தானம்


20.  அந்தணனுக்கு தானம்


21. முதியவருக்கு தானம்


22. மலர்கள் தானம்


23. வெள்ளி தானம்


24. பித்தளை தானம்


25. செம்பு தானம்


26. சங்கு தானம்


27. கலச தானம்


28. கண்ணாடி தானம்


29. கைத்தடி தானம்


30. புஸ்தக தானம்


31. வெள்ளை ஆடை தானம்


32. புடவை தானம்


33. சாக்கடை சுத்தம் செய்பவருக்கு தானம்


34. கோவில் பண்டாரம் அவர்களுக்கு தானம்


இது போல பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம்


தானங்கள் பலவகை ; நாம் கொடுத்து பழக வேண்டும்


குழுவில் அனைவரது ஈடுபாடும் வேண்டும்


தானத்தின் மூலம் வரும் புண்ணியம் முழுமையாக கிடைக்க வேண்டுமானால் , வெறும் பணம் செலுத்துவதோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல் மேற்கூறிய பஞ்ச தீப வழிபாடு மற்றும் தான் வசிக்கும் ஊரில் உள்ள தானம் பெறுபவர்களை தேர்ந்தெடுத்து ஏதாவது ஒரு தானத்தை தம் கரங்களால் செய்ய வேண்டும். அதற்கு உண்டான பணத்தை குழுவின் பொது நிதியில் இருந்து பெற்று செய்ய வேண்டும். அது தான் முறை. சேர்ந்து செய்யும் காரியங்கள் மிகவும் பெருகி நிறைவான ஆத்ம திருப்தியை அளிக்கும்



நீர் தானம்


பன்னீர் அளிப்பது

குடிநீர் அளிப்பது

புண்ணிய நதிகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்வது

கிணறு அமைப்பது

கங்கை தீர்த்தம் அளிப்பது


நிலம் தானம்


ஆலயத்துக்கு நிலம்


நிலம்  சம்பந்தப்பட்ட தானங்கள்

மரக்கன்று, பூச்செடிகள் தானம்

தரைத்தளம் அமைத்தல்

இருக்கை தானம்

நிலங்களை சாணமிட்டு மெழுகுதல்

மண் கொட்டி சமன் செய்தல்

நில பாதுகாப்பு - வேலி அமைத்தல் போன்றவை


கோ தானம்


கோமாதா வை தானமாக அளித்தல்

கோவிற்கு தேவையான உணவுகளை அளித்தல்

கோ பூஜை செய்தல்

கோ பராமரிப்பில் ஈடுபடுதல்

கோசாலை அமைத்தல்

ஆடி மாடுகளை வாங்கி அவைகளை பராமரித்தல்

கோ இறந்தால் நல்லடக்கம் செய்தல்

கோ சம்ரக்ஷணை யை பற்றி எடுத்து உரைத்தல்


ஆடை தானம்


சிறுவர் சிறுமியருக்கு ஆடை

பெரியவர்களுக்கு வேஷ்டி புடவை

இறை மூர்த்தங்களுக்கு புத்தாடை

கோமாதாவுக்கு பட்டு ஆடை சாற்றுதல்

பூரணாகுதிக்கு பட்டு வஸ்திரம் அளித்தல்


அன்ன தானம்


மளிகை பொருள் அளித்தல்

சமையல் செய்தல்

சமையல் செய்பவர் கூலி அளித்தல்

தன் கைகளால் சமைத்து பரிமாறுதல்

சமைத்த உணவை பரிமாறுதல்

இலை எடுத்தல்

சமையல் தட்டு - பாக்கு மட்டை வாங்கி கொடுத்தல் , வாழை இல்லை வாங்கி கொடுத்தல்

சமையல் எரிபொருள் அளித்தல்

தாம்பூலம் தரிக்க ஏற்பாடு செய்தல்

ஓட்டலில் டோக்கன் வாங்கி இல்லாதவருக்கு கொடுக்கலாம்

ஓட்டலில் பார்சல் வாங்கி இல்லாதவருக்கு கொடுக்கலாம்

காகத்துக்கு அன்னம் மயிலுக்கு அன்னம் குயிலுக்கு அன்னம் மீனுக்கு அன்னம் பைரவருக்கு அன்னம் போன்றவை

No comments:

Post a Comment