Monday 6 November 2017

தொழிலில் சிறக்க கவுமாரி அம்மன் ஆலயம்




வியாபார விருத்திக்கு வித்திடும் மணக்கால் நங்கையாரம்மன்

திருச்சி மாவட்டம் லால் குடி அருகே உள்ள மண க்கால் கிராமத்தில் அமைந்துள்ளது கவு மாரி மற்றும் சப்தமார் கோவில். இந்தக் கோவி லுக்கு நங்கையாரம்மன் என்ற புராணப் பெயரும் உண்டு. ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய இந் தக் கோவிலின் தல விரு ட்சம் நருவளி மரம். கோவில் பிரகாரத்தில் மதுரை வீரன் சன்னிதி, செட்டியப்பர் உருவம், துவார பாலகிகள், கருப்பண்ணன், அய்யனா ர், யானை, குதிரை வாகனங்கள் போன்றவை
உள்ளன.

சப்தமார் கோவில்
கோவிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறம் மதுரைவீரன் சன்னிதி உள்ளது. அதை அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலதுபுறம் செட்டி யப்பரின் வடிவம் உள்ளது. அர்த்த மண்டப நுழைவு வாயிலின் இரண்டு புறமும் திருமேனிகள் அமைந்துள்ளன. கருவறையில் சப்தமார்கள் அழகுற அமைந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்ற னர். இங்குள்ள சப்தமாதரை வணங்கினால் மாங்கல்ய பலன் அளித்து மஞ்சள், குங்குமம் நிலைக்க செய்வார்கள் என்பது பக்த ர்களின் நம்பிக்கை.

பிரகாரத்தில் யானை சிலையும், குதிரை சிலையும் சுதை வடிவில் காட்சி தருகின்றன. யானையின் மேல் அய்யனாரும், குதிரையின் மேல் கருப்பண்ணசாமியும் அமர்ந்திருக்கின்றனர். சாமிக்கும், அவர் சவாரி செய்யும் குதிரைக்கும் மாலை போட்டு பிரார்த்தனை செய்தால் கடன் தொகை வசூலாகும், திருமணம் இனிதே நடை பெறும் என்று சொல்லப்படுவதால் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து கருப்பண்ண சாமியை வழிபட்டுச் செல்கிறார்கள்.

குழந்தை பாக்கியம்
இந்தக் கோவிலின் தல விருட்சமான நருவளி மரம் தெற்குப் பிரகாரத்தில் பிரமாண்டமாக பரந்து விரிந்து வளர்ந்து உ ள்ளது. இந்த மரத்தை வல ம் வந்து பிரார்த்தனை செ ய்து வழிபடுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்ச யம் கிடைக்கும் என்பது இதற்கு முன்பு இங்கு பிரா ர்த்தனை செய்து, அது நிறைவேறப்பெற்றவர்கள் கூறும் நம்பிக்கை மொழி யாகும். மேற்குப் பிரகாரத்தில் அய்யனார் சன்னிதியும், எதிரில் யா னை சிலையும் உள்ளன. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயம் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களின் குலதெய்வமாக திகழ்கி றது.

இந்த கோவில் தல வரலாற்றைப் பார்ப்போம்.
செட்டியப்பர், ஒரு மலையாள மந்திரவாதி. இவர் மந்திரவாதியாக இருந்தாலும் தனது மந்திரத்தை எவருக்கு எதிராகவும் பயன்படுத் தியது கிடையாது. வியாபாரம் செய்வதையே பிரதான தொழிலாக அவர் செய்து வந்தார். அதிலும் செட்டியப்பர் செய்தது மஞ்சள் வியாபாரம். ஒரு முறை வியாபார விஷயமாக அவர் மணக்கால் கிராமத்திற்கு வந்தார். வழியில் ஒரு ஆலயம் இருப்பதையும், அந்த ஆலயத்தின் எதிரில் உள்ள திருக்குளத்தில் வைஷ்ணவி, ம கேஸ்வரி, கவுமாரி, சாமுண்டி, பிராம்மி, வராகி, ருத்ரணி ஆகிய சப்தமாதர்கள் நீராடிக்கொண்டு இருப்பதையும் பார்த்தார்.
மஞ்சள் வியாபாரம்
தெய்வீக அழகு நிரம்பிய அவர்களின் அருகில் சென்ற செட்டியப்ப ர், ‘உங்களுக்கு மஞ்சள் வேண்டுமா?’ என்று கேட்டார். விளையா டியபடியே நீராடிக்கொண்டு இருந்த கன்னியர்கள், செட்டியப்பரி டம் ‘தங்களுக்கு மஞ்சள் வேண்டாம்’ என்று கூறினார்கள். அதை க்கேட்டதும் அவருக்கு தன்னிடம் உள்ள மஞ்சள், வியாபாரம் ஆக வில்லையே என்ற வருத்தத்தைவிட தேவகன்னியர்கள் போல் தோற்றம் அளித்த அவர்களிடம் தனது வர்த்தகம் நடக்கவில்லை யே என்ற வருத்தமே மேலோங்கியது. அந்தப் பெண்களை மிரட்டி யாவது தன்னிடம் உள்ள மஞ்சளில் சிறிதளவேனும் வாங்க வைக் க வேண்டும் என்று அவர் எண்ணினார்.
இதனையடுத்து அவர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டார். நீராடி க்கொண்டு இருந்த சப்த கன்னியர்கள் தாங்கள் அணிந்து வந்து இருந்த ஆடைகளை திருக்குள கரையில் வைத்து இருந்தனர். அந்த ஆடைகள் அனைத்தையும் செட்டியப்பர் சுருட்ட ஆரம்பித் தார். முருகனின் சக்தியான கவுமாரி அதை பார்த்து விட்டாள். உடனே செட்டியப்பரை அழைத்தாள். எனக்கு ‘கொஞ்சம் மஞ்சள் வேண்டும்’ என்றாள். அதைக்கேட்டதும் மனம் மகிழ்ந்த செட்டிய ப்பர் ‘எவ்வளவு மஞ்சள் வேண்டும்?, ஒரு பணத்துக்கா? இரண்டு பணத்துக்கா?’ என்று கேட்டார்.

பூவின் எடைக்கு…

அவர் அவ்வாறு கேட்டதும் கவுமாரி, ‘இதோ, இதன் எடைக்கு எடை மஞ்சள் கொடுத்து விட்டு பணத்தை வாங்கிக்கொண்டு போ ’ என்று கூறியதோடு, தனது தலையில் இருந்த ஒரு மலரை தூக்கி அந்த வியாபாரியை நோக்கி வீசினாள். உடனே வியாபாரி அல ட்சியமாக அந்த மலரை எடுத்து தன்னிடம் இருந்த தராசு தட்டின் ஒரு பகுதியில் வைத்தார். அதன் எடைக்கு சரியாக மஞ்சளைப் போட்டார். பூ இருந்த தராசு தட்டு கீழே இறங்கியது. இதனைய டுத்து வியாபாரி மேலும் மஞ்சளை போட்டார். தட்டு மேலும் கீழே இறங்கியது.
‘என்ன இது… ஆச்சரியமாக உள்ளதே!’ என்று வியந்த செட்டியப்பர் தான் மூட்டையில் கொண்டு வந்து இருந்த மொத்த மஞ்சள்க ளையும் தராசு தட்டில் வைத்தார். என்ன செய்து பார்த்தாலும், பூ இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. சிறிது அளவு கூட மேலே வர வேயில்லை. ‘மந்திரவாதியான தன்னிடமே மாயாஜாலம் செய்கி றார்களோ’ என்று யோசித்தார். அப்போதுதான் அவருக்கு உண் மை புரிந்தது. அந்த பெண்கள் அனைவரும் சாதாரண பெண்கள் அல்ல, தெய்வ பெண்கள் என்பதை உணர்ந்தார். உடனே அவர் களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். அங்கேயே சிறியதொ ரு கோவிலை அமைத்து சப்தமாதரை வழிபட்டார்.

இன்றளவும் மணக்காலை ஆட்சிசெய்யும் கவுமாரி மற்றும் சப்த மார்கள் தன்னை வேண்டி வரும் பக்தர்களை தனது பிள்ளையாக பாவித்து அருள்புரிந்து வருகிறார்கள். குழந்தை வரம், கடன் வசூலாகுதல், வியாபார விருத்தி ஆகிய கோரிக்கைகளுக்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருவிழாக்கள்

பிரசித்தி பெற்ற இந்தக் கோவிலில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்து இருக்கும். மாசி மாதத்தில் வரும் அமா வாசையை தொ டர்ந்து நடைபெறும் கரக திரு விழா இங்கு வெகு சிற ப்பானது. பல ஆயிரக் கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு சப்த மாதர்களை வழிபாடு செய்வார்கள். நவராத்திரி விழா நடைபெறு ம் 10 நாட்களும் இறைவிக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது. பத்தாம் நாள் நடைபெறும் தயிர் பாவாடை எனும் வழிபாடு வித் தியாசமானது.

பொதுவாக அனைத்து கோவில்களிலும் சப்த கன்னிமார்கள் ஆ லயம் வடக்கு நோக்கியே அமைந்திருக்கும். ஆனால் இந்த ஆலய த்தில் கிழக்கு திசை நோக்கி அமைந்து இருப்பதும் தனிச்சிறப்பா கும்.

No comments:

Post a Comment