*பூலோகத்தின் வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருக்குறுங்குடி நம்பி கோயிலில் மட்டுமே அமைந்துள்ள மூச்சுவிடும் காலபைரவர்,*
திருக்குறுங்குடி நம்பி கோயில் பிராகாரத்தைச் சுற்றி வரும்போது பிரமாண்ட உருவினராக நமக்கு தரிசனம் தருபவர் கால பைரவர்.
ஆமாம், சிவ அம்சமான பைரவர்தான்.
பொதுவாகவே சிவன் ஆலயங்களில் பைரவர், அந்தக் கோயிலைக் காக்கும் தெய்வமாகவே வணங்கப்படுவார்.
இரவில், பூஜைகளை முடித்து விட்டு, கோயிலைப் பூட்டி, சாவியை பைரவரிடம் சமர்ப்பித்துவிட்டுச் செல்வதும் மறுநாள் காலையில், அவரிடமிருந்து
சாவியைப் பெற்றுக் கொண்டு கோயிலைத் திறப்பதும் நடைமுறை.
அந்தவகையில், இங்குள்ள காலபைரவர், பெருமாளுக்கும் காவலராகப் பணிபுரிகிறார் என்றே சொல்லலாம்.
பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை சிவபெருமான் இந்தத் திருக்குறுங்குடி தலத்தில்தான் போக்கிக்கொண்டார் என்பதால், அவருடைய அம்சமான பைரவர்,
அந்த நற்பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாறு இங்கு காவல் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
திருக்குறுங்குடி நம்பிகளை தரிசனம் செய்வது என்பது வெறும் அர்ச்சாவதார தரிசனமாக இருக்காது.
பெருமாளை அப்படியே உயிரோட்டமாக, உணர்வுபூர்வமாக சந்திப்பதாகவே இருக்கும்.
ஆமாம், பட்டர் தீபாராதனைத் தட்டை மேல் தூக்கி நம்பிகளின் முகத்தருகே கொண்டுபோகும்
போது, அந்தச்
சிலையின் விழிகள் அசைவது நம்மை அப்படியே சிலிர்க்க வைக்கும்.
என்ன மாயம் இது!
பகவான் நம்மைப் பார்த்துக் கொண்டேயிருக் கிறான் என்பதற்கான அறிகுறி இதுதானா?
இடமிருந்து வலமாக
தீபம் அசையும்போதும் மேலிருந்து கீழ்,
கீழிருந்து மேல் என்று போகும்போதும், அந்த ஒளியில் மின்னும் பெருமாளின் விழிகள் அந்தந்த திசை
நோக்கித் திரும்புவதை அனுபவித்து
பார்த்துதான் உணர முடியும்.
அதை நம்ப முடியாமல் கண்களைக் கசக்கிக்கொண்டு மறுபடி நம்பிகளைப் பார்த்தால், தன் தாமரை மலர்க் கண்களால் அவர் சிரிக்கிறார்.
அது தீபாராதனையின் ஒளி மாயமோ, தேர்ந்த சிற்பியால் வடிக்கப்பட்ட அந்தக் கண்களின் பளபளப்பு மாயமோ, எதுவாயினும் சரி, ‘‘என்ன சௌக்கியமா?’’ என்று கேட்கும் அந்தப் பார்வை அதிசயமானதுதான், அபூர்வமானதுதான்.
தரிசனம் முடித்துத் திரும்பும்போது தற்செயலாக மறுபடி அந்தக் கண்களை ஒரு நேர்க்கோட்டு வீச்சில் கவனிக்கும்போது, ‘‘போய்வா, சந்தோஷமாக இருப்பாய்,’’ என்று ஆசிகூறும் ஒளியை சந்திக்க முடிகிறது!
விழியசைத்து வியப்பளிக்கும் திருக்குறங்குடி பெருமாளைப்
போலவே, இந்த கால பைரவரும் தன் மூச்சிழையால் பக்தர்களின் மனதில் பரவசத்தைப் பரப்புகிறார்.
ஆமாம், இந்த கால பைரவருக்கு இடது பக்கத்தில் ஒரு
விளக்குத் தூண்.
இதன் மேல் பகுதியில் ஒரு விளக்கு, கீழ்ப் பகுதியில் இன்னொரு விளக்கு.
இவை தவிர
இரண்டு சர
விளக்குகளும்
உண்டு.
இந்த நான்கு விளக்குகளிலும்
தீபம் ஒளிசிந்தி பைரவரின் முழு ரூபத்தையும்
தெளிவாகக் காட்டுகின்றன.
இதில் அதிசயம் என்னவென்றால்,
மேலே உள்ள விளக்கின் ஜ்வாலை, காற்றுபட்டால் அசையும் தீபம் போல அலைவதுதான்.
ஆனால் பிற மூன்று விளக்கு ஜ்வாலைகளும் சீராக எந்தச் சலனமுமில்லாமல்
எரிந்து கொண்டிருக்கின்றன.
மேல் விளக்கு ஜ்வாலை மட்டும் அசைவானேன்?
அது பைரவரின் மூச்சுக் காற்று ஏற்படுத்தும் அசைவு!
மூச்சு இழுக்கும்போது ஜ்வாலை அவரை நோக்கித் திரும்பியும் விடும்போது எதிர்திசையில்
விலகியும் அசையும் சலனம்!
விஞ்ஞானபூர்வமாக சிந்திக்கவும் காரணம் கண்டு பிடிக்கவும் இயலாத தெய்வீகம்.
பிரமிப்பில் விரியும் விழிகள் இமைக்க மறப்பது அனுபவபூர்வமான உண்மை.
இவருக்கு வடைமாலையும் பூச்சட்டையும் சாத்துவது பிரதான பரிகார வழிபாடாக மேற்கொள்ளப்படுகிறது.
வடைமாலை என்றால் ஆஞ்சநேயருக்கு சாத்துவார்களே
அதுபோல அல்ல; மிகப்பெரிய ஒரு
அளவில்
ஒரேவடையாகத் தட்டி அதை நிவேதனம் செய்யும் முறைதான்
இது.
இந்த பைரவர் 75 சதவீதம் கல்லாலும், மேலே 25 சதவீதம் சுதையாலும் ஆன சிற்பமாகத் திகழ்கிறார்.
மூலிகை வண்ணத்தால் இவருக்கு அழகு தீட்டியிருக்கிறார்கள்.
300 வருடங்களாகியும் அந்த வண்ணங்கள் வெளிராமலும் மெருகு குலையாமல் இருப்பதும் அதிசயம்தான்.
இவருக்குத் தயிரன்னம் நிவேதிக்கப்படுகிறது. திருமண வரம் வேண்டியும் மழலைப் பேறு கோரியும் வரும் பக்தர்கள் இவர் அருளாசியால் அந்த பாக்கியங்களைப் பெற்று மகிழ்கிறார்கள்.
கால பைரவரின்
மூச்சுக் காற்றினால்
மூச்சு இழுக்கும்போது
மேல் விளக்கு ஜ்வாலை அவரை நோக்கித் திரும்பியும் மூச்சு விடும்போது எதிர்திசையில்
விலகியும் அசையும் தீபத்தின் அதிசியமான
காணொளிக்காட்சி
ohm ohm
ReplyDelete