Sunday, 22 January 2023

ஆலய பணிகள் 22ஜனவரி2023

 நமது அகஸ்தியர் பீடத்தில் நடந்து வரும் கட்டிட வேலைகள் பற்றிய பதிவு கொடுக்கப்பட்டுள்ளது என்னென்ன கட்டிடங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்ன கையிருப்பு கட்டுமான பொருட்கள் இருக்கின்றன என்பது விவரிக்கப்பட்டுள்ளது உங்கள் பார்வைக்காக மிக்க நன்றி 


மேலும் நமக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் செலவில் வாசியோக குடிலிற்கு மேற்கோரை அமைக்க வேண்டி உள்ளது 

இதற்கு சுமார் ஒரு டன் இரும்பு கம்பி கூலியாக சுமார் 60 ஆயிரம் ரூபாய் மேலும் 40 50 மூட்டை சிமெண்ட் மற்றும் 3000 சிமெண்ட் கற்கள் செங்கற்களை போல உருவம் கொண்ட சிமெண்ட் கற்கள் 3000 கற்கள் தேவைப்படுகிறது மொத்தம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்

நமது அகஸ்தியர் பீடத்தில் குருபூஜை முடிந்து குருபூஜை எந்த வகையில் நடந்தது என்பதை பற்றி பொது நாடி அகஸ்தியரிடம் கேட்கப்பட்டது 


அதில் அகஸ்தியர் குருபூஜை நடந்த போது ஒரு சிறு மழையாக வந்து ஆசீர்வதித்ததாகவும் மேலும் வெள்ளை கருடன் வடிவத்தில் வந்த 33 முறை ஆசிரமத்தை சுற்றி வட்டமிட்டதாகவும் மேலும் ஒளி ரூபமாக காட்சி அளித்ததாகவும் நாடியில் தெரிவித்தார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் 


ஒளி ரூபமாக அளித்த காட்சி எதேட்சையாக நமது நண்பர் ஒருவர் எடுத்த புகைப்படத்தில் பதிவாகி இருந்தது


 அது ஏற்கனவே நமக்கு தெரியும் 


மழை என்பது சிறுசிறு துளிகள் போல தான் விழுந்திருக்கிறது என்று அகஸ்தியர் ஐயா கூறினார் பெரிய மழை என்று வரவில்லை


 அதனால் நாம் அதை கவனிக்கவில்லை


 மேலும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்ததால் கருடன் வட்டம் அடைத்ததையும் சில பேர் பார்த்திருக்கக்கூடும் பலர் பார்த்திருக்க மாட்டார்கள் 


மேலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் நமது மேற்கூரை அமைக்கும் பணி நடைபெறும் போது ஐயா அவர்கள் மீண்டும் வெள்ளை கருடன் படிவத்தில் பறந்து வந்து தொடர்ந்து சுற்றி வட்டமிட்டு கொண்டு படியே இருந்தார் மாலை வரை ஆசிரமத்தை சுற்றி வட்டம் எடுத்து விட்டு பிறகு தான் விடை பெற்றார் 


இதை அனைவரும் பார்த்துள்ளனர் 


மேலும் ஆலய பணி ஆனது 13 திங்களுக்குள் நிறைவு பெறும் ஏன்று அகஸ்தியர் ஐயா வாக்கு அளித்துள்ளார் 


விளக்கு ஒன்றை ஏற்றி இந்த ஆலய பணி நடக்கும் இடத்தில் வைக்க சொல்லி உத்தரவு போட்டுள்ளார்


 மேலும் நமது பீடத்தின் நண்பர்கள் மூலமாக இங்கு விளக்கு ஏற்றி இங்கிருந்து அனையாமல் எடுத்து கொண்டு போய் அந்த இடத்தில் கொண்டு போய் சேர்ப்பதற்கு உத்தரவு கொடுத்துள்ளார்கள்


 தற்போது மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது 8 எண்ணிக்கையில் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது மேலும் வாசி யோக குடில் மேற்கூரை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது 


மேலும் செப்டிக் டேங்க் பூச்சு வேலை எலக்ட்ரிகல் வேலை பிளம்பிங் வேலை ஆகிய வேலைகள் பாக்கி உள்ளன 


எந்த ஒரு பெரிய நிதி உதவியும் இல்லாத நிலையில் நமது குருஜி ஐயா அவர்கள் தொடர்ந்து நாடி வாசித்து அதிலிருந்து வரும் தட்சினை பணத்தை தனது குடும்ப செலவுக்கு ஒரு சிறிதளவு மட்டுமே வைத்துக் கொண்டு பெரும் பகுதியை பணியாளர்களுக்கு கூலி கொடுப்பதற்காக அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது


 முடிந்தவர்கள் அனைவரும் இந்த இறைப்பணியில் பங்கு பெற்று அகத்தியர் அருளுக்கு பாத்திரமாகுமாறு கேட்டுக்கொள்கிறோம்


 ஐயா அவர்கள் பொது நாடியில் உரைத்த போது என் மக்களை யாமை காப்போம் எந்த நிலையிலும் கைவிட மாட்டோம் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று கூறியுள்ளார்


 மேலும் கிரக நிலை மாற்றங்களும் சிலருக்கு சில பிரச்சனைகள் ஏற்படுகிறது அவை எல்லாம் சரியாகும் என்றும் கூறியுள்ளார்


 மிக்க நன்றி 


உங்கள் பேராதரவினால் இந்த பெரும் தொண்டு நடைபெற்று கொண்டு இருக்கிறது 


தற்போது நமது பசுமாடு கன்று எனும் நிலையில் இருக்கிறது 


நம்மிடம் இருந்த காய்ந்த வைக்கோல் கதிர்கள் மழையில் நனைந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன 


மேலும் புதிதாக வைக்கோல் வாங்க வேண்டும்

 வைகோல்களில் மழை பனியில் நனையாமல் இருப்பதற்கு தார்பாலின் எனப்படும் சீட் வாங்கப்பட உள்ளது


 இதற்கு சுமார் 2000 ரூபாய் தேவைப்படும்


 முடிந்தவர்கள் உதவி செய்யலாம்


ஆலய பணிக்கு பொருட்களாகவோ அல்லது பணமாகவோ உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன














No comments:

Post a Comment