Tuesday, 10 January 2023

பொதுவான அகத்தியர் ஜீவ நாடி அருள்வாக்கு - பக்தர்களுக்காக

 குருபூஜை விழா மார்கழி ஆயில்யம் நட்சத்திரம் 09.01.2023


ஸ்ரீ அகத்தியர் சித்தர்கள் பீடம் 

பொகளூர் , கோவை 

நாடி வாசிப்பு - குருஜி இறைசித்தர்


காலை 5 மணி , பொதுவான அகத்தியர் ஜீவ நாடி அருள்வாக்கு - பக்தர்களுக்காக 



அருவாய் உருவாய் திருவாய் போற்றி 

திருவாய் மலரடி பணிகின்றேன் போற்றி 

வருவாய் குகனே அருள்வாய் போற்றி 

தில்லையில் ஆடுகின்ற அம்பலத்தான் போற்றி 


நீலகண்டன் திருமேனி யாம் பணிந்து 

எம் மக்களுக்கு 

அவதார நாள் தன்னிலே 

அருள்தன்னை உரைக்கின்றேன் 

கேள் மக்களே கேள் நன்மக்களே 


இவ்வருடமது மும்மாரி மழை பெய்யும் 

நிலைகடலும் துர் பீடைகளும் கிருமிகளும் 

எம் மக்களை விட்டு விலகும் அப்பா 


எம் மக்களை யாம் காப்போம் 

என் மழலைகளுக்கு பூரண நல்லாசிகளே 


அருள் கேட்க வந்திருக்கும் 

அடி நிலை பெற்ற 

எம் மக்களே 


கிரக நிலைகளை மாற்றம் கண்டு 

மனம் கலங்கி நிற்கின்றீர்கள் 


மனம் தளர வேண்டாம் 

யாம் இருக்கிறோம் எம் மக்களை காக்க 


கோள்கள் என்ன செய்யும் 

நாள்கள் என்ன செய்யும் 


யாம் இருக்கிறோம் உங்களை காக்க 


கண்டம் விட்டு கண்டம் இருக்கும் 

குளிர் பிரதேசம் தன்னிலே 

பெரும் மழையால் வெள்ள சேதம் அது ஏற்பட்டு 

உயிர் நிலைகள் மடியும் அப்பா 


யாம் ஜனனம் ஈன்ற இத்தமிழ் மண்ணிலே 

செல்வம் பெருகும் அப்பா 


அரசாளும் நிலைகள் மாற்றம் பெரும் 

எங்கும் தமிழ் ஒலிக்கும் அப்பா 

தமிழே ஆட்சி அதிகாரத்தில் நிலை நிற்கும் அப்பா 


நிலை கெட்ட யாம் வழங்கும் ஸ்தலங்கள் எல்லாம் 

நிலை நிற்கும் அப்பா 


இவ்வருடத்திலே என் மக்களே 

யாம் காப்போம் 

மனதை மென்மைப்படுத்துங்கள் 


வேலவன் துணை புரிவான் 

ஆதி சக்தி அருள் தருவாள் 


பொய்யுரைக்கும் மாந்தரெல்லாம் சீர் கெடுவான் 

வஞ்சம் செய்யும் மாந்தரெல்லாம் அடி பணிவான 


அத்துனை மாந்தருக்கு தேகத்தில் இருக்கும் 

கபம் சார்ந்த தொல்லைகள் அது 

விட்டு விலகுமப்பா , தை மாதத்திலே 


நிலை மாறும் 

அரசியலில் நிலை மாற்றம் பெரும் 

நாவடக்கம் இல்லாமல் நஞ்சம் ஒன்று பேசி 

அங்கும் இங்கும் ஆடும் 

நிலை கெட்ட மாந்தரெல்லாம் 

கள்ளனவனும் குள்ளவனும் விட்டு விலகி செல்வானே 


எம் பூரண நல்லாசிகள் எம் மக்களுக்கு 

யாம் மனம் மகிழ்ந்தோம் மழழைகள் தனை கண்டு 

நிறைவு வாழ்வு தனை பெறுவாய் , முற்றே



குறிப்பு


ஜீவ நாடி என்றால் என்ன, எப்படி பார்ப்பது, அதனால் என்ன பயன், போன்றவற்றை தெரிந்து கொள்ள கிழே உள்ள இணைப்பை சொடுக்கவும்


https://agathiyarpogalur.blogspot.com/2018/08/blog-post_16.html?m=1


ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583

https://agathiyarpogalur.blogspot.com/?m=1


முன்பதிவு செய்து நேரில் வந்தால் தான் ஜீவ நாடி வாசிக்கப்படும்.


*குறைந்த பட்ச கட்டணம் Rs.1001*, ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம் தேங்காய், பூ, ஊதுபத்தி, கற்பூரம் வைத்து கொடுக்க வேண்டும்.


தொலை பேசியில் அழைத்து பெயரை கூறி முன்பதிவு செய்ய வேண்டும்.


ஓரளவு புண்ணிய ஆத்மாக்களுக்கு மட்டும் நாடி வழி அருளுரைக்கப்படும். நாடியில் எழுத்துக்கள் வந்தே ஆக வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. சிலருக்கு நாடி வழி செய்தி வராமலும் போவதுண்டு.

பவுர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் நாடி வாசிக்கப்பட மாட்டாது. காலை 10am - 1pm மட்டும் நாடி வாசிக்கப்படும். நாடி வாசிக்கும் போது தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் அருகில் அமரலாம். நண்பர்கள் மற்றும் பிற உறவினர்கள் வந்தால், உடன் அமர அனுமதி கிடையாது. வெளியே காத்திருக்க வேண்டும். மது, புகை, மாமிசம் ஆகியவற்றை 1-2 நாள் முன்பாகவே தவிர்த்துவிட வேண்டும், இல்லையேல் விளைவுகள் விபரீதம்.

நாடியில், உங்கள் பெயர், கும்பிடும் தெய்வம், குடும்ப விவரம், படிப்பு விவரம், இப்போது சந்திக்கும் பிரச்சனைகள் அவை கூறப்படும். பிறகு 5-6 கோவில்கள் சென்று வழிபடும் முறையுடன் பரிகாரம் கூறப்படும். அவைகளை மூன்று மாதத்திற்கு உள் செய்து முடித்து திரும்ப வந்து, அதே முறையில் நாடியில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நாடியில் வரும் தகவல் புத்தகத்தில் எழுதி கொடுக்கப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருந்து மீண்டும் வரும் போது கொண்டு வர வேண்டும்.

மொபைல் போனில் நாடி வாசிப்பை பதிவு செய்து கொள்ளலாம். நாடி வாசிக்கும் போது flight mode இல் தொலைபேசியை வைக்கவும்.


தயவு செய்து ஆண்களும் பெண்களும் பாரம்பர்ய உடை அணிந்து வரவும் 🙏


Agathiyar Temple JeevaNadi

Tiruppur, Tamil Nadu

093843 95583


கூகிள் வரைபடம் வழி கீழே 👇


https://maps.google.com/?cid=12305587362742028797&hl=en&gl=in


முகநூல் -


https://www.facebook.com/அகத்தியர்-சீவ-நாடி-அன்னூர்-1903278616577199/

No comments:

Post a Comment