Saturday, 21 January 2023

எது உண்மை பலம் தேக பலமா? ஆத்ம பலமா? எது பெரிது

 1930 . மதராஸ், திருவல்லிக்கேணி...  இளம் பிரம்மச்சாரிகளின் புகலிடம்... 


அங்கு ஒரு  ஹோட்டல் (கோபால கிருஷ்ண விலாஸ் ) முதலாளி.... வைதீஸ்வர ஐயரின்  கல்லாவில் எதிரில் ஒரு  . ஒரு " இஞ்ச்"+  உறுதியான கனமான " டேபிள் டாப்" பெல்ஜியம்  கண்ணாடி டேபிள்... இருக்கும் 


அன்று , அதை சுற்றி சில இளைஞர்கள் அமர்ந்து கொண்டு ஏதோ தீவிரமாக விவாதித்தபடி.... தங்கள் காலை சிற்றுண்டியை சாப்பிட்டு க் கொண்டு இருந்தனர்... 


 ஐயர் கவனித்தார்... அவர்கள் விவாதம்.....  "தேக பலத்தால் சாதிக்க முடியாததை ஆத்ம பலத்தாலும் முடியாது... எது உண்மை பலம் தேக  பலமா?   ஆத்ம பலமா? எது பெரிது?"


 பலர் தேக பலத்துக்கு ஆதரவு.. ஆத்ம பலத்தால் முடியாது என கூற


 அந்த சிவந்த.. , மெலிந்த, வட நாட்டு நீண்ட தலை முடி, தாடி யுடன் கூடிய இளைஞர் மட்டும்... "ஆத்ம பலத்தால் எதையும்  சாதிக்க முடியும்..தேக பலம் இரண்டாம் பக்ஷம் தான்" என வாதித்தார். தமிழ், ஆங்கில, சமஸ்கிருத... மணிப்பிராளவத்தில். 


அவரை ஐயருக்கு தெரியும்,, அவர் மஹாராஷ்டிரா வை சேர்ந்தவர், பனாரஸ் ஹிந்து கல்லூரியில் MSc (Zoology) தங்க மெடல் பெற்று  சென்னையில்  மீன் வளத்துறையில்  PhD  பட்டம் பெற   வந்துள்ளார்... ,(பின்னர்  BL  பட்டமும்) °ஐயரின்  வாடிக்கையாளர். 


ஐயருக்கும்  உற்சாகம் வந்து விட்டது,... விவாதத்தில் கலந்து கொண்டு.. ,,


 "வெறும் பேச்சு எதற்க்கு நிரூபிக்கலாமே."  என்றார்....எப்படி? 


அந்த கனமான கண்ணாடி "டேபிள் டாப்பை" ஒரே குத்தில் உடைக்க வேண்டும்,


"உடல் பலம் பேசிய  பார்ட்டிகள்" முயன்றன  ஒரு  கீறல் கூட விழவில்லை.. பின் வாங்கின,


 மராட்டிய இளைஞர் நம்பிக்கையுடன் "உடைப்பேன், ஆளால் புது கண்ணாடி நான் தான் வாங்கித் தருவேன்" என்றார் ..ஐயர் . ஒப்பினார்...... 


,, யாருக்கும் நம்பிக்கை இல்லை..சிரித்தனர்.., இதை இந்த ஒல்லிக் குச்சி  ஆளாவது,  உடைப்பதாவது? அதுவும் ஒரே குத்தில்.


 இளைஞர் எழுந்து நின்று  கையை உயர்த்தி முஷ்டியை மடக்கி , கண்ணை மூடி, தியானத்தில்  இருப்பது போல் ஒரு நிமிடம்...... தன் பலம் எல்லாம் "முஷ்டியில்" தேக்குவது போல்...இருந்தார்..

 பின், அவர் கை டேபிளை நோக்கி மின்னல் வேகத்தில்  பாய்ந்தது, "படீல்" என ஒரு சப்தம். 


கனமான கண்ணாடி  உடைந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம்... இந்த மெலிந்த உடலில் இத்தனை (ஆத்ம) சக்தியா? 


அவர்.... குருஜி ஸ்ரீ. "மாதவ்ராவ் சதாசிவ்ராவ் கோல்வால்கர்". பிற்க் கால RSS தலைவர். (குருஜீ பட்டம் அவர் கல்லூரியில்  படிக்கும் போதே சக மாணவர்களால் வந்து விட்டது) 


குருஜி, குருஜீ, குருஜீ  என்று அவரை நெஞ்சார அழைத்துக்கொண்டு, லட்சோய, லட்சம் தொண்டர் கள் அவர் இட்ட பணிகளை வேத  வாக்காக கருதி சிரமேற்க்கொண்டு  ஈடேற்றிய காரணம் என்ன? 


ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் எண்ணற்ற அடக்கு முறைகளுக்கு பின்னும் RSS, பீனிக்ஸ் பறவை போல் புது உத்வேகத்துடன் மறு மலர்ச்சி பெற்றது எனில்... அதற்க்கு காரணம் என்ன? 


Secular.. என்று கூறிக்கொண்டவர்களும்.... , ஹிந்து சமய வளர்ச்சியில் ஒளிவு மறைவு இன்றி அதில் ஆழ ஈடுபட்டு இருந்த குருஜி க்கு ஒரு தனிப்பட்ட மரியாதை தந்திருந்தார்களே, அது எப்படி? 


இதற்க்கு எல்லாம் விடை ஒன்று தான், அது அவருடைய, குருஜி யுடை... ஆத்ம சக்தி,... சுத்தி.. ஒப்பற்ற தூய்மை உள்ளம். 


ஒருவர்... சுயநலத்திற்காக ஒரு கொள்கைளை பின் பற்றாமல், தன் சுய நலம் அனைத்தையும் ஒரு கொள்கைக் காக தியாகம் செய்து விட்டால்... அவரை உலகம் வணங்கத் தான் செய்யும்..


தன் கொள்கைகளுக்காக அந்தரங்க சுத்தியுடன் போராடிய மா வீரர் குருஜி....

 

அவருக்கு என்று, வீடோ, வாசலோ, குடும்பமோ கிடையாது... தொண்டர் களையே தன் குடும்பமாக கொண்டு... பல பல ஆண்டுகள் ரயில் பெட்டிகளையே  தன் வீடாகக் ..  தேசம் முழுவதும்., 65 முறை சுற்றித் திரிந்து   தன் கொள்கைளை  பிரச்சாரம் செய்த  தீரர் அவர். 


அவரது ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை அன்பு... பாசத்தில் கட்டுப்பட்ட தொண்டர் கள் அவரிடம் மாறாத பாசம் கொண்டிருந்ததில் வியப்பு உண்டோ?. 


வாழ்க அவர் புகழ், வந்தே மாதரம் 


Ps. With inputs from அன்பு நண்பர்.. என் குருஜி "ஸ்ரீ நிதி பட்"


Venugopal Iyer

No comments:

Post a Comment