தேவையானது, தேவையற்றது என்று எதுவும் இல்லை..!
காலம் அறிந்து தேடுதல் தேவையானது.
காலம் தவறிய தேடுதல் தேவையற்றது.
வாழ்வின் தேவைகள் அதிகரித்தால் தேவை இல்லாதது எல்லாம் தேவைபடும்.
நான்கை தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாததால் நாற்பதை தேர்ந்தெடு அதில் நான்கு இக்கேள்விக்கு விடையாக இருக்கும்.
பித்தனாக சித்தனை தேடி அலைகின்கின்றான்.
தன் சித்தத்துள்ளே இருப்பது அறியாமல் கோடி கோடி தேடி சென்ற இடங்களிலும்
தேடாத செல்வம் "நீ" சிவனே அய்யா....
என் எண்ணங்களுக்கு என்றுமே முடிவு இல்லை;
ஒருவரின் பாடலுக்கு யார் வேண்டுமானாலும்
உரிமை கொண்டாடலாம்.
ஆனால் இயற்றியவருக்கே பொருள் தெரியும்.
இவ்வுலகமே புகழ்சியின் அடிமைகள்.
ஆகையால் திருடுங்கள் தவறு இல்லை. (இல்லாதவனே திருடுகின்றான்)
ஆனால் பொருள் தெரியாமல் விளக்கம் அளிக்காதீர்கள்.
அது உன்னையும் "அழித்து" உன்னை
சார்ந்தவர்களையும் "அழிக்கும்"
பிறந்தோம், இறந்தோம் என்றில்லாமல்.
வாழ்க்கையை முழுமையாக்குங்கள்
ஆயிரம்பேருக்கு ஆசிரியராக இருப்பது
முக்கியம் அல்ல,
ஒருவருக்கேனும் குருவாக இருப்பதே
முக்கியம்......
எப்பொழுதும் யாரிடமும் வாதம் செய்யாதே.
சிலர் உன்னை அறிவாளியாக நினைப்பார்கள்.
பலர் உன்னை முட்டாள் என்பார்கள்.
உன் அறிவுரைகள் கேட்க இங்கு எவரும் இல்லை.
அனைவரும் அறிவுரை சொல்லவே ஆசைப்படுகின்றார்கள்.
ஆதலால் நீ ஊமையாக இரு
ஏதோ நான்கு விஷயம் அறிந்து மனதை
குழப்பும் புத்திசாலியை விட முட்டாள் மேல்.
கடவுள் நம்பிக்கை தானே உருவானது அல்ல
சித்தஞானியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு
கண்ணுக்கு தெரியாத மாயை.
"அறிந்தவர்கள் எவரும் இல்லை"
"உணர்ந்தவர்களே அதிகம்"
அறியாத வயதில் செய்யும் தவறுகளை
அறிந்த வயதில் புரிவதும்,
அறிந்த வயதில் செய்யும் தவறுகளை
தெளிந்த வயதில் உணர்வதும் மனிதனின்
இயல்பு.
எஞ்சுவது காலங்களினால் கிடைக்கும்
"அனுபவம்" மட்டுமே.
எதர்க்கும் கலங்காதே
தெளிந்த நீருடன் கலங்கிய நீர் சேரும் பொழுது
கலங்கியது போல் தெரியும்
உற்று கவனித்தால் கலங்கிய நீரை தெளிந்த நீர்
தன்னுள் இணைத்து தெளிய செய்யும்
தன்னை விட மேலான தெளிந்தவர்களோடு
கலந்து இருங்கள்
"உன் மனத்தால் பிழைக்கின்றான் குழப்பவாதி"
உன்னை குழப்பம் அடைய செய்வதே இவன்
வேலை.
அதற்காக அவன் பயன்படுத்தும் ஆயுதம்
விழிப்புணர்வுடன் இருங்கள் என்பது.
எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட
முடியும்?
நடக்கபோவது யாருக்கு தெரியும்.
அனைத்து கலையும் கற்ற தருமரும் ஏன்
சகுனி அழைப்பிற்கு சூதாட்டத்திற்க்கு
சென்றார்.
விழிப்புணர்வு இல்லாமலா?
வருங்காலம் அறியாமலேயே.
வஞ்சகம்தனை உணர்ந்தார் பரதபோரின்
முடிவினிலே.
ஆகையால் உங்களது செயல்களை திறன்பட
செய்யுங்கள் நிம்மதி கிடைக்கும்.
யாரிடம் வேண்டுமானாலும் உபதேசமும்
கேளுங்கள் ஆனால் அடிமை ஆகாதீர்கள்.
"குரு திருவடிகளே போற்றி"
"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"
"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்கள் வழிகாட்டுதல் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்"
No comments:
Post a Comment