அகஸ்தியர் அருளிய ஐயப்ப மாலை,
1. விருப்பமும் வெறுப்புமின்றி வினைப் பயன் எல்லா முந்தன்
திருப்ப தம் தன்னில் வைத்து திருப்தியும் திறனு முற்று
ஒருப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடாது அன்பே பூண்டுன்
திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே
2. வையமும் வானும் வாழ மறை முதல் தருமம் வாழ
செய்யும் நற் செயல்கள் வாழத் திருவருள் விளக்கம் வாழ
நையும் ஊழுடையார் தத்தம் நலிவகன்றினிது வாழ
ஐயனாய் அப்பனானான அவர் பதம் வணக்கம் செய்வோம்
3. மெய்யெல்லாம் திரு நீறாக வழியெலாம் அருள் நீராக
பொய்யில்லா மனத்தராகி புலனெல்லாம் ஒருத்தராகி
வெய்ய வேறற்றவுள்ள விளக்க முற்றான் பால் விம்மி
ஐயனே ஐயப்பா என்பார் அவர் பாதம் வணக்கம் செய்வோம்
சபரிமலை மகாத்மியம்,
4. சக்தியெல்லாம் சபரிமலை தத்வமெலாம் சபரிமலை
சித்திமெலாம் சபரிமலை மோனமெலாம் சபரிமலை
முக்தியெலாம் சபரிமலை சிற்பரமாம் சபரிமலை
புத்தியெலாம் சபரிமலை போற்றிடுவாய் நீ மனமே
5. ஓங்காரமான மலை ஓதுமறை ஓங்குமலை
ஹ்ரீங்கார மந்த்ரமலை ரிஷிகணங்களேத்து மலை
ஆங்காரம் அழிக்கும் மலை ஆனந்தம் கொழிக்கும் மலை
பாங்கான சபரிமலை பல்வளஞ்சேர் மலை வளமே
6. கோடி மலைகளிலே கொழிக்கும் மலை எந்த மலை
வஞ்சி மலை நாட்டினிலே உயர்ந்த மலை எந்த மலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை
ஜனகாதி முனிவ ரெல்லாம் தேடி வரும் சபரிமலை
7. ஹரிஹர புத்ரா போற்றி
அன்பான குருவே போற்றி
புஷ்களை ரமணா போற்றி
எனையாள் குருவே போற்றி
கண்கண்ட நாதா போற்றி
சபரிமலை வாசா போற்றி
கஞ்சமலர்ப் பாதா போற்றி
ஐயனே போற்றி போற்றி
முந்திய சிவனார் போற்றி
மூர்க்கனும் அசுரன் போற்றி
இந்திர வரவும் போற்றி
ஈசனார் வேசம் போற்றி
பந்தடி கமலம் வெற்றி
வந்ததோர் விரதம் போற்றி
சந்ததியான மூர்த்தி தர்ம சாஸ்தாவே போற்றி போற்றி
ஓம் தேவ தேவோத்தம தேவதா ஸார்வ பௌம
அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயக
ஸ்ரீ பூர்ணா புஷ்களா ஸமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர
சுவாமின்.........ஜெய விஜயீ பவ
விருத்தம்,
1. ஆனைமுகத்தோன் தம்பி அருள் குமரனுக் கிளையோன்
வானவர் போற்றும் வாணி வந் தெனக்கு அருள வேனும்
சேனையில் தலைவர் போற்றும் தென் குளத்தூரிலையன்
கானக விளையாட்டெல்லாம் கருத்துடன் போற்றாய் நெஞ்சே
2. அந்தணர் முனிவர் சூழ் அற்புத சபையைப் போற்றி
மந்திரம் கையிலேந்தும் வாழ்குளத்தூரான் மீதில்
சிந்தையில் உதித்த செல்வம் செப்புமென் கவி விளங்க
கந்தனும் குருவும் வாணி கஜமுகன் காப்பதாமே
3. சாஸ்தா நமக்குண்டு தாய் போல் வருவார் இந்தத் தனி வழிக்கே
பார்த்தால் நமக்கு பயமேது மில்லை பயந்து பயந்து
ஆற்றாமல் சொல்லி அபய மிட்டோடி வரும் சுரர்தமை
கார்த்தே வரும் கடிய குன்றேறிய காவலனே
4. வாழையும் தெங்கும் வரிகை பலாவுடனே மாங்கனியும்
சோலையும் அருள் வண்டுலாவும் குளத்தூர் பதியில் சென்றால்
கங்கா நதிக்கும் ஹிமசேது மட்டுக்கும் இந்த கலியுகத்தில்உன் காலில் அதிசயம் போல் கண்டதில்லை என்பவர்க்கு
சிங்கார வஞ்சிமலையேறி சனிவாரம் தொழுதவர்க்கு
மங்காத சர்வ பீஷ்டமும் கொடுப்பதாமே
No comments:
Post a Comment