காப்பு
மாதவன் மறையவன் காணா சோதியே
ஆதவன் ஆயிரம் ஈடில்லா சோதியே
மாதவன் அகத்தியன் வன்புகழ் பாடிட
வேதியன் நின் அடி காப்பு
அகத்தியர் திருப்புகழ் பாடல்
கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி
கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி
அகத்தீசாய வாழ்க ஆசான் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
ஈசன் தன் நிகர் நின்ற குரு முனிவன் தாள் வாழ்க
உன்னத தவ ஞான உத்தமன் தாள் வாழ்க
ஓம் நிலை தாண்டி உயர்ந்தவன் தாள் வாழ்க
கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி
எண்ணங்கள் தாண்டி நிலைத்தவன் அடி வாழ்க
ஏகம் பரம் என்று நிறைந்து இருந்தோன் வாழ்க
ஐம்புலன் தாண்டி அகம் நிறைந்தோன் வாழ்க
ஒப்புயர்வு இல்லா உதித்தவன் அடி வெல்க
ஓங்காரமாகி ஒளிர்பவன் கழல் வெல்க
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
அவ்வியம் அறு போற்றி
கன்மம் அறு போற்றி
காமம் அறு போற்றி
கிட்டார் அறு போற்றி
கீழ்நிலை மாற்றும் ஈழகன் அடி போற்றி
கேடு நீக்கி நிற்கும் சித்தன் அடி போற்றி
கேடில் தவத்தோன் நம் அத்தன் அடி போற்றி
குன்றாத இன்பம் அருளும் குரு போற்றி
அகத்தியம் எனும் அருளே போற்றி
அகத்தினில் உறையும் நாயக போற்றி
அகத்தியம் எனும் அருளே போற்றி
அகத்தினில் உறையும் நாயக போற்றி
குருபரன் என் சிந்தையுள் நின்ற அதனால்
கூரருளாளன் அவன் தாள் வணங்கி
கைமாறு அறியோன் குரு புராணம் தன்னை
கொடுமை வினை முழுதும் ஓய உரைப்பன் யான்
கோதில்லான் தன் கருணை கண் காட்ட வந்தெய்தி
கௌரி நந்தனனை குருவாய் அடைந்தோங்கி
சத்தியத்திற்க்கோர் வடிவாய் நின்றாய் விளங்கொளியாய்
சாற்றுதற்கு இயலாத சற்குரு பெரும் சீர்
சிவனார் கொழுந்தே புகழுமாறு ஒன்றறியேன்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
சீவனுள் சிவனாகி சித்தம் நிறைவாகி
சுற்றம் பலம் எல்லாம் சிற்றம்பலம் ஆகி
சூழ்முனை ஏறி சுருதி நல் கூடி
செய் செயலுமான பொய்யிலா தத்துவனை
சேனாபதியோன் நல்கிய நற்றமிழின்
சொல்லாய் நிறைந்தான் குறுமுனிவன் எம்பெருமான்
பொதிகை மேவிய ஜோதியே போற்றி
விதியை மாற்றிடும் வித்தக போற்றி
பொதிகை மேவிய ஜோதியே போற்றி
விதியை மாற்றிடும் வித்தக போற்றி
சோராது சொல்லாது கண்டு இன்று வீடுற்றேன்
சோதியாய் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்று
தவமாய் சிவமாய் உள்ளமர்ந்த உத்தமனே
தாயாய் இருந்தென்றும் பேணுகின்ற பேரொளியே
கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி
கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி
திடமாய் திறனாய் உரித்தானவா விமலா
தீராத இப்பிறவி பிணி தாண்ட வந்தருளி
மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
துய்ஞ்ஞானம் இல்லாதே இன்ப பெருமானே
துர்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
அகல்விக்கும் நல்லறிவே
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
தூலம் அளவு இறுதி இல்லாய்
தெரிவதெல்லாம் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய்
தெருள் தருவாய் போக்குவாய் என்னை
தேற்றுவாய் நின் தொழும் பின்
தொட்டனைத்தூறும் ஓர் நீராய் நணியானே
தோற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
நின்ற மறையோனே
..........
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
தோற்றம் பல நீக்கி தொல்வினைகள் போக்கி
படர்ந்து அடியார் சிந்தனையில் தேனூறி நின்று
பகுத்து மலம் அறுக்கும் எங்கள் பெருமான்
பாதங்கள் ஓர் பேர் துணையாய் சான்றோர்கள் ஏத்த
பரந்திருந்தாய் எம்பெருமான்
பரந்திருந்தாய் எம்பெருமான்
......
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
பாழ்வினையேன் தன்னை மறைத்திட மூடிய மாய இருளை
வினை பாவமெல்லாம் கலைந்தருளும் தந்து
பிறப்பால் ஒன்றி நின்ற மும்மலங்கள் நீக்கி
பீசமெனும் ஒன்பது வாயில் குடில்
புலன்கள் எனும் கள்வர் வஞ்சனையை போக்கி
புரங்கள் அறுக்கும் விமலா
எனக்கு ....புருவ நடுவாகி புரிந்த பொருளாகி
புறந்தான் இல்லாத அகமாய் காண் என்று
புவியுள் வந்ததென்தன் சூக்குமம் தான் காட்டி
பூவுள் மலராய் கிடந்த அடியேற்கு
பூத்தல் அளித்த தயாவான தத்துவனே
அகத்தியம் எனும் அருளே போற்றி
அகத்தினுள் உறையும் நாயக போற்றி
அகத்தியம் எனும் அருளே போற்றி
அகத்தினுள் உறையும் நாயக போற்றி
பைந்தமிழ் தன்னை பனித்த மலர்ச்சுடரே
பொதிகையின் மாமுனியே குருமுனியே
போற்றுவார் தம்மை பாலித்து நிற்கும் ஆரியனே
போதமருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட
போக்காக நின்ற பெருங்கருணை பேராறே
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
ஓம் அகத்தியாய ஓம்
நற்றோர் துணையை அளவிலா பெம்மானே
நாற்றாள் விக்ஞானம் அளிக்கும் ஒளியானே
நிரலால் அடைந்திடும் உள்ளொளியாய் நின்றானே
நீக்கறு கதியாய் நின்றானே உள்ளானே
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
நுட்பருக்கு நுட்பனே யாவையுமாய் அல்லையுமாம்
நுட் பொருளே நுண்ணறிவே தோன்றா பெருமையனே
நெக்குருகி நின்ற அடியார்கள் தமை ஈர்த்து
நேயமுடன் ஆட்கொண்ட எந்தை பெருமானே
மெய்கல்வி ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
பொதிகை மேவிய சோதியே போற்றி
விதியை மாற்றிடும் வித்தக போற்றி
பொதிகை மேவிய சோதியே போற்றி
விதியை மாற்றிடும் வித்தக போற்றி
மரணம் இல்லா பேற்றை தரும் புண்ணியனே
மார்க்கம் சீரடியே காண்பரிய பேரொளியே
மிகுதி இன்ப வெள்ளமே ஊற்றாய் உள்ளாய் நின்று
நீளத்தளைகள் இல்லா வற்றாத மெய்யுணர்வாய்
முற்றுரா வையகத்தில் மும்மாயயை வந்தழிப்பாய்
முத்தனே முதுபொருளே என் சிந்தனையுள்
மூன்றான முத்தே எந்தன் உடையானே
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
மோன விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
வல்லோய் எம் அய்யா , குருவே என்றென்று
வாசியறிந்துணர்ந்து பொய் கேட்டு மெய் ஆனார்
விடுதி கண்டு வந்து வினைப்பிறவி சாராமே
மீள்வு புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
வெஞ்சமனை வெல்ல வகையான நாதனே
கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி
கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி
வேள்வியில் பூத்தனே வெண்ணீறு பூண்டோனே
வேகு ம் பிறவி அறுப்பானே ஓ வென்று
வேலன் தன் அடியானை சொல்லி திருவடிக்கீழ்
வேண்டிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
வேண்டில் தென்பொதிகை உள்ளார்
குருவடிக்கீழ் வையத்துள் தம்மை அறிந்து
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
ஏழ்கடல் அருந்திய அகத்தியா போற்றி
வாழ்வினை அளித்திடும் குருமுனி போற்றி
கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி
கன்னாரமுத கடலே போற்றி
எண்ணாதவர்க்கும் துணைவா போற்றி
https://youtu.be/-BG-E12XGXI
https://youtu.be/-BG-E12XGXI