Wednesday 30 October 2019

என் கோவில் இடிக்கப்பட்டது!! உன் இல்லத்தில் எனக்கு ஒரு இடம் கொடு!! இதோ இந்த திண்ணையிலேயே இருந்து கொள்கிறேன்!! இங்கேயே சிறிய ஆலயம் எழுப்பு!! செய்வாயா!!

🕉
🙏

காசி க்ஷேத்ரத்தில் ஶ்ரீஅன்னபூர்ணா பகவதியின் மஹிமை

"கமலா!! நாளைக்கு மத்யான்னம் இங்கிருக்கற ஸாதுக்களுக்கெல்லாம் சாப்பாடு போடறதுங்கற நீண்ட நாள் அபிலாஷையை பூர்த்தி பண்ணலாம்ங்கள எண்ணம்!! நீ என்ன சொல்லறே!! பதார்த்தங்கள் எல்லாம் தயார் பண்ணிடலாமோல்லியோ!!" நாராயண தீர்த்தர் தன் மனைவியிடம் கேட்டார்!!

"ஆகட்டும் நா!! சமைக்கறதுக்கு வேண்டிய பதார்த்தங்கள் எல்லாம் இருக்கு!! ஸந்யாஸிகள் நம்மாத்தை தேடி வந்து பிக்ஷை வாங்கிக்கறதை விடவும் பாக்யம் உண்டா!! அவசியம் அழைங்கோ!!" முதல் நாள் கமலாவும் தன் கணவனிடம் கூறிவிட்டு சமையலுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி விட்டார்!!

முதல் நாள் மாலையே முக்யமான ஸாதுக்களிடமும், ஸந்யாஸிகளிடமும் பிக்ஷை எடுத்துக்கொள்ள வீட்டிற்கு வரச் சொல்லியாகிவிட்டது!!

மறுநாள் விடியற்காலை ஸ்நாநம் முதலிய ஆச்சார அனுஷ்டானங்களை பூர்த்தி செய்து விட்டு, கமலாவைத் தேடினார்!!

"கமலா!! கமலா!!"

கொல்லைப்புறத்திலிருந்து குரல் கேட்கிறது "மன்னிச்சுடுங்கோன்னா!! திடீர்னு தூரமாய்ட்டேன்!! எதிர்பார்க்கவேயில்லை!! என்ன பண்றது தெரியல்லியே!!" படபடப்புடன் கமலா கூறினாள்!!

"அட விச்வநாதா!! கமலா!! இப்போ என்னடீ பண்றது!! அன்னபூர்ணே!! விசாலாக்ஷி!! ஸாதுக்களெல்லாம் வரத்தொடங்கிடுவாளே!! அம்மா!! நீ தான் ரக்ஷிக்கனும்!!" என்றபடி மனக்கலக்கத்துடன் நாராயணர் வீட்டிற்குள் சென்றார்!!

சரியாக ஸூர்யோதயம் ஆகும் போது வீட்டு வாசற்கதவை யாரோ தட்டியது போலிருந்தது!! கதவைத் திறந்தாள் பழுத்த ஸுமங்கலியாக ஒரு மாமி!!

"இது நாராயணர் அகம் தானே!! ஸாதுக்களுக்கெல்லாம் இன்னி மத்யான்னம் இங்க சாப்பாடுன்னு ஜனங்கள் பேசிண்ட்ருந்தா!! அதான் ஏதாவது உபகாரம் தேவைப்படுமான்னு கேக்கறதுக்கு வந்தேன்!!" என்றாள் அந்த மாமி

"ஆஹா!! மாமி!! ஸாக்ஷாத் அன்னபூர்ணாம்பாளே வந்தது போலிருக்கு!! நல்ல ஸமயத்துக்கு வந்தேள்!! ஆத்துக்காரி திடீர்னு தூரமாய்ட்டா!! என்ன பண்றது தெரியல்லியே!! ஸாதுக்கள் மனஸ் வேதனைப்படும்படி ஆய்டுமோன்னு ஒரே கவலை!! அம்பாளே வந்தாப்போல நீங்க வந்துருக்கேள்!!

சித்த ச்ரமம் பாக்காத ஸாதுக்களுக்கு நீங்க தான் சமைச்சு போடனும்!! உபகாரம்ன்னு வந்தவாளை வேலை வாங்கறனேன்னு நினைக்கப்படாதா!!" விநயத்துடன் கூறினார் நாராயணர்.

"அடாடா!! அதுக்குத்தானே நான் வந்துருக்கேன்!! நீங்க கவலையே படாதேள்!! சமையலறையை மறைக்கும்படியா ஒரு திரையை மட்டும் போட்டுடுங்கோ!! எல்லா பதார்த்தமும் ஜம்முனு பண்ணிடலாம்!! ஸாதுக்களுக்கு பரிமாறறதுக்கு ஸ்த்ரீகள் இருக்காளோல்லியோ!!" என்றாள் மாமி.

"ஆஹா!! இருக்கா மாமி!!" என்றபடி மாமியை உள்ளே அழைத்து வந்தார் நாராயண தீர்த்தர்.

சமையலறையை மறைக்கும் விதமாக திரைச்சீலை போட்டாயிற்று. சமையலறையிலிருந்து கமகமவென்று வாசனையும் வரத்தொடங்கியது!!

பலபலவென விடிந்த பின்னர் ஸாதுக்களும் ஸந்யாஸிகளும் வரத்தொடங்கியாயிற்று!! எதிர்பார்த்ததை விட இரண்டு மூன்று மடங்கு ஸந்யாஸிகள் வந்திருந்தனர்!!

நாராயணருக்கு அடுத்த கவலை!! "விசாலாக்ஷி!! நல்லபடியா இவா எல்லாரும் த்ருப்தியாக சாப்பிட்டுட்டு போகனுமே!! அன்னத்துக்கு குறைவு இயுக்கப்படாதே!!" என்று அம்பிகையை ப்ரார்த்தித்தார்.

விதவிதமான பக்ஷணங்கள், பலகாரங்கள், சித்ரான்னங்கள், பாயஸங்கள், போளி, வடை முதலிய பதார்த்தங்கள் என சமையலறையிலிருந்து வந்துகொண்டே இருந்தது!!

நாராயணருக்கு ஆச்சரியம்!! "இருந்த சாமான்களோ குறைவு!! எப்படி இவ்வளவு பதார்த்தங்கள்!?! அதுவும் மூன்று மடங்கு ஜாஸ்தியாக ஸாதுக்கள் வந்துவிட்ட பின்னரும் இவ்வளவு பதார்த்தங்களை சமைக்க முடிந்தது!!"

சித்ரான்னங்களும் போளி முதற்கொண்ட பதார்த்தங்கள் அமுதசுரபி போன்று வந்துகொண்டே இருந்தன!!

ஸாதுக்கள் அனைவரும் "நிரம்ப த்ருப்தி!! நிரம்ப த்ருப்தி!! காசி க்ஷேத்ரத்திலேயே இது போன்ற.உணவை எங்கும் சாப்பிட்டதில்லை!! விச்வநாதர் அருள்!! அன்னபூர்ணா பகவதி அனுக்ரஹம்!! என்றபடி அனைவரும் ஆசீர்வதித்துச் சென்றனர்!!

நாராயணருக்கு மிகுந்த ஸந்தோஷம்!! அத்தனை ஸாதுக்களும் வாய் நிறைய ஆசீர்வதித்தது மட்டுமல்லாமல், அத்தனை பேர் வயிறும் நிறையும் படி அம்பிகை செய்தாளே என்று!!

அவ்வளவு பேர் சாப்பிட்டுச்சென்ற பின்னரும் இன்னும் ஐம்பது பேர் சாப்பிடும் அளவிற்கு பதார்த்தங்கள் நிரம்பியிருந்தது!!

அனைவரும் சென்ற பின்னர் தான் சமையலறையை விட்டு மாமி வெளியில் வந்தாள்!!

"நாராயணரே!! எல்லோருக்கும் ஸந்தோஷமா!! எல்லார் வயறும் நிறைச்சதா!!" என்றாள் மாமி!!

"ஆஹா பாக்யம் மாமி!! எல்லாரும் ஸந்தோஷமா வயறு நிறைய சாப்ட்டு ஆசீர்வாதம் பண்ணினா!! உங்க புண்யம்!!"

"சரிப்பா!! நா உத்தரவு வாங்கிக்கறேன்!!"

"ஆஹா!! வாங்கோ!!"

பழுத்த சுமங்கலியான அந்த மாமி வீட்டு வாசல்படியை தாண்டிய பிறகு தான் நாராயணருக்குத் தோன்றியது
"அடாடாடா!! வந்த மாமிக்கு குங்குமம் கூட குடுக்கல்லியே! ஈச்வரா!! ஸம்பாவனையும் பண்ணலை!! காலம்பறலேந்து வெளில வராம சமைமலறையிலேயே புழுங்கிண்டு இருந்தாளே!! ஒரு மர்யாதையும் பண்ணல்லியே!! தாம்பூலம் வஸ்த்ரம் ஸம்பாவனை எல்லாம் கொடுக்கனும்ன்னு நினைச்சுண்ட்ருந்தோமே!! மறந்துடுத்தே!!" என்று பதறியபடி

"மாமி!! சித்த நில்லுங்கோ!!" என்றபடி வெளியில் பார்த்தால் மாமியைக் காணும்!!

"எங்க போய்ருப்பா!! இவ்ளாம் பெரிய தெருவை எப்படி தாண்டி போய்ருப்பா!! வாசப்படி தாண்டி ரெண்டு நிமிஷம் கூட ஆகல்லியே!!" என்று வியந்தபடி காசி க்ஷேத்ரம் முழுவதும் அந்த மாமியைத் தேடினார்!! எங்குமே இல்லை மாமி!!

அலுத்து சலித்து நடுநிசி இரவில் வீட்டுத் திண்ணையிலேயே படுத்து உறங்கி விட்டார்!!

அவரது ஸ்வப்னத்தில் "நாராயணா!! வந்தது யாருன்னு தேடறியா!!" என்றபடி ஸாக்ஷாத் பகவதி ஶ்ரீலலிதா ராஜராஜேச்வரி ஒரு கையில் ஸ்வர்ண கரண்டியும், மறுகையில் பாயஸான்னம் நிரம்பின பாத்ரமும் கொண்டு மூன்று கண்களும், சிரஸில் அலங்கரிக்கும் சந்த்ரபிறையும் தாங்கியவளாகவும், லக்ஷ்மியும் பூமா தேவியும் பணி புரிய, ஸிம்ஹாஸனேச்வரியாக ஶ்ரீசக்ரராஜத்தில் வஸிப்பவளாக, அகில உலகிற்கும் அமுதமாம் அன்னத்தை வழங்கும் ஜகன்மாதா அன்னபூர்ணேச்வரியாக காக்ஷியளித்தாள்!!

"அம்மா!! தாயே!! அன்னபூர்ணி!! ராஜராஜேச்வரி!! பராசக்தி!! ஜகதம்பா!! இந்த ஏழை வீட்டுக்கு நீயா வந்தே!! காமாக்ஷி!! இந்த க்ருஹத்திற்கு வந்து நீயா சமையல் பண்ணினே!! அம்மா!! விசாலாக்ஷி!! உன்னையா நான் வேலை வாங்கினேன்!! அம்மா!! உனக்கா நான் குங்குமம் கூட கொடுக்காம அனுப்பினேன்!! அம்மா!! தாயே!! மன்னிச்சுடம்மா!!" என்றபடி கதறினார்!!

"நாராயணா!! பெற்றவள் தன் பிள்ளைகளிடம் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை!! உன் பக்திக்கு கட்டுப்பட்டே உன் இல்லத்தைத் தேடி வந்தேன்!! இந்த காசித்தலத்தில் நான் வசிக்க இடம் இல்லாது வீதி முழுவதும் அலைகிறேனப்பா!! (அவுரங்கசீப்பால் காசி விச்வநாதர் கோவில் தரைமட்டமாக்கப்பட்ட சமயம் அது!!)
என் கோவில் இடிக்கப்பட்டது!! உன் இல்லத்தில் எனக்கு ஒரு இடம் கொடு!! இதோ இந்த திண்ணையிலேயே இருந்து கொள்கிறேன்!! இங்கேயே சிறிய ஆலயம் எழுப்பு!! செய்வாயா!!" என்றபடி மறைந்தாள் அன்னபூர்ணா பகவதி!!

"அம்மா!! அம்மா!! என்ன சோதனை இது!! உனக்கு வசிக்க இடமில்லையா!!" என்று அலறியபடி விழித்துப் பார்த்தால் வைர மூக்குத்தி ஒன்று நாராயணர் அகத்து திண்ணையில் பளிச்பளிச் என்று மின்னிக்கொண்டிருந்தது!!

"அம்மா!! அன்னபூர்ணா!!" என்று இருகண்களிலும் கண்ணீர் பொங்க நாராயணர் விஷயத்தை ஊர் மக்களிடம் கூறினார்!! அன்னபூர்ணா தேவிக்கு அழகிய சிறிய ஆலயம் ஒன்று அந்த வீட்டின் திண்ணையிலேயே எழுப்பப்பட்டது!!

அம்பாளின் காருண்யம் எப்படிப்பட்டது!! தன் குழந்தையின் இல்லத்திற்கு தானே வந்து, சமைத்து, அங்கேயே வசிக்க விருப்பமும் கொண்டாள் எனில்  அவள் கருணைக்கு ஈடு உண்டோ!!

🕉🙏🙏🕉