Monday 7 October 2019

திருக்குறள் - "அரிது"

*திருக்குறள் கூறும்*
*அரியவை* .18
      ***********
*இணையில்லான் வழிநில்லார்*
*மனக்கவலை தீர்ப்பரிது* 7

*அறவாழி துணைகொள்ளார் இகவாழ்வைக் கடப்பரிது*. 8

*வான்மழையின் நீரின்றேல்*
*தரையினிலே புல்லரிது* . 16

*குணப்பெரியார் சினங்கொள்ளின்*
*கணப்பொழுதும் காப்பரிது*.29

*உதவியவர் செயல்தனக்கு*
*உலகினையும் தரலரிது* 101

*பகிர்ந்துண்பார் வாழ்வினிலே*
*பசிப்பிணியும் வரலரிது* .227

*இறந்தபின்பும் புகழ்வாழ்வு*
*எல்லோருக்கும் பெறலரிது* .235

*பொருளற்றார் பூத்தாலும்*
*அருளற்றார் வளர்வரிது*. 248

*வகுக்காதான் பெருஞ்செல்வம்*
*வாய்ச்சோறும் தரலரிது* . 377

*நல்லுரைகள் கேளாதான்*
*நலவாழ்வு அடைவரிது* .419

*பலமற்ற மனிதரையும்*
*அவர்மண்ணில் வெல்லரிது* .499

*பெருமனிதர் உதவிடினும்*
*முயற்சியிலான் சிறப்பரிது* .606

*சொல்வன்மை உள்ளானை*
*வெல்லுவதோ மிகவரிது* .647

*நம்பியவர் ஐயமுறின்*
*நம்வாழ்வு உயர்வரிது* .693

*எதிர்த்தவரை வீழ்த்தும்செயல்*
*எல்லோரும் பெறலரிது* .762

*தற்பெருமை உரைப்பவர்க்கு*
*தரணியிலே புகழரிது* . 843

*உறவினுக்குள் பகைதோன்றின்*
*அழிவினையே தடுப்பரிது* .886

*வளர்தீயில் படுத்திடினும்*
*வறுமையினில் உறங்கரிது*. 1049
       *