Thursday 3 October 2019

ஸ்படிகம் பற்றிய இதுவரை நீங்கள் அறிந்திராத அபூர்வ ரகசியங்கள்

*ஸ்படிகம் பற்றிய இதுவரை நீங்கள் அறிந்திராத அபூர்வ ரகசியங்கள்*
************************************************************************

ஸ்படிகத்தை பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருக்கும். அப்படியொரு வசீகரம் அதற்கு உண்டு. ஆன்மிகத்தில் ஸ்படிகத்திற்கென்று தனித்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. சரி, ஸ்படிகம் எப்படி உற்பத்தி ஆகிறது? அதை மாலையாகக் கோர்த்து அணிந்து கொள்வதால் என்ன பயன்? அதனை ஏன் அணிய வேண்டும்? என்பதைப்பற்றி அறிவோமா? பலநூறு ஆண்டுகளாக பூமிக்கு அடியில் உறைந்து போகும் நீர் பாறைகளாக உருப்பெற்று விடும். அந்த நீர்ப்பாறைகளை வெட்டி எடுத்து அதற்குள் அழுக்கில்லாத, தூசிகள் இல்லாத, கம்பிகள் இல்லாத, உடைசல்கள் இல்லாத, தூய்மையான கற்களை தேர்ந்தெடுத்து அதனை பலவித அளவுகளில் , உருண்டையாகவும், பட்டை தீட்டியும் தயாரிக்கலாம்.

பின்னர், ஒவ்வொரு மணியிலும் துவாரமிட்டு மாலையாக்கி அணியலாம். இதையே நாம் ஸ்படிக மாலை என்கிறோம். இந்த ஸ்படிகப் பாறைகள், பெரும் மலையின் பாறைகளைப் போலில்லாமல் ஆறு பட்டைகள் கொண்ட தூண்கள் போலவும், ஏழு பட்டைகள் கொண்ட குச்சிகள் போலவும் பூமிக்கு அடியில் கொட்டிக் கிடப்பதுண்டு. இந்த ஸ்படிக குச்சி வகைகளை பாலிஷ் செய்து ரெய்க்கி, ஹீலிங் பயிற்சிக்கு பயன்படுத்துவதும் உண்டு. உயர்ந்த வகை ஸ்படிகமணி மாலையை நீரில் போட்டால் தெரியாது, நீரோடு நீராக ஒன்றி இருக்கும்.
முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என பத்தாம் தரம் வரை ஸ்படிக மாலைகள் கிடைக்கின்றன. முதல் தர ஸ்படிகமணி மாலைதான் நல்ல பலனைத் தரும்.

 துல்லியமற்றதும், ஊடுருவும் தன்மையற்றதும், வெள்ளையாகவும் இருக்கும் ஸ்படிகமணி மாலைகள் எதற்கும் உபயோகமற்றதாகும். அப்படி என்னதான் இருக்கின்றது அந்த உயர்ந்த ஸ்படிகமணி மாலையில்? மனிதர்களாகிய நாம் ஒருநாளில் விடும் மூச்சு எண்ணிக்கை என்ன தெரியுமா? சராசரியாக 21,600 மூச்சாகும். ஆனால், இன்றைய பரபரப்பு உலகில் முப்பதாயிரம் வரை விடுவதாக சொல்கிறார்கள்.
இதனால் ஆயுள் குறையும் என்பது விஞ்ஞான பூர்வமான விளக்கமாகக் கருதப்படுகிறது. ஸ்படிக மணி ஒரு மணி நேரத்திற்கு 21,600 அதிர்வலைகளை வெளிப்படுத்துவத
ாக கண்டறிந்திருக்கின்றார்கள்.

 அப்படியானால் நம் கழுத்தில் அணியும் 108 ஸ்படிகமணிகள் கொண்ட மாலை எவ்வளவு அதிர்வலைகளை நம்மைச் சுற்றிலும் பரவிடச் செய்யும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு அரண்போல நம்மை பாதுகாக்கும்.

 முழுமையான கவசமாக ஸ்படிக மணி விளங்குகிறது. இதனால், தெய்வ அருள், மன அமைதி, சாந்தம், நல்ல சிந்தனை, தெளிவான அறிவு , தீர்க்கமான முடிவு போன்ற அற்புதங்களை நம்முள் நிகழ்த்தும்.

ஸ்படிகமணி மாலையுடன் வேறு எந்த மணிகளையும் சேர்த்து மாலை அணியக்கூடாது. (ருத்ராட்சமாக இருந்தாலும் சேர்க்கக் கூடாது அதனை தனியாக அணிந்து கொள்ளலாம்) கொஞ்சம் தரமற்ற ஸ்படிகமணி மாலையாக இருந்தாலும் அது செயல்படாது. ஸ்படிக லிங்கமும் அநேக மடங்கு பலன் தரும். முக்தி லிங்கம், கேதார்நாத், வரலிங்கம் நீலகண்ட ஷேத்திரம் (நேபாள்), மோட்ச லிங்கம் சிதம்பரம், போகலிங்கம் சிருங்கேரி, யோகலிங்கமாக சந்திரமௌலீஸ்வரராக காஞ்சியில் ஈசன் அருள்பாலிக்கிறார். இவையெல்லாமுமே ஸ்படிக லிங்கங்கள்தான். தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.

ஸ்படிக மாலை அணிவதால் கிடைக்கும் அறிவியல் ரீதியான பலன்கள்.

1] ஸ்படிக மாலை அணிவது. நமது உடலில் அதீதமாக உள்ள சூட்டை கட்டுபடுத்தும். ஸ்படிக மாலை. நமது உடலில் சரியான அளவில் உள்ள சூட்டை குறைக்காது. உடல் சூட்டை சீரான. சரியான அளவில் வைக்கும்.

2] மனித மனம் ஆல்பா, பீட்டா என்று இரண்டு நிலைகளில் இருக்கும். இன்று பெரும்பாலான மனித மனம் பீட்டா நிலையிலேயே இருக்கிறது. மனித மனம் ஆல்பா நிலையில் இருந்தால் தான் அமைதியாக இருக்கும். ஸ்படிக மாலை. நமது மனதை. அலை பாயும் பீட்டா நிலையில் இருந்து. அமைதியான ஆல்பா நிலைக்கு அழைத்து செல்லும். ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு. ஸ்படிக மாலையை விட சிறந்த மருந்து எதுவும் இல்லை. நமது உடல் சூடு, உள்ள சூடு இரண்டையும் தணிக்கும் ஆற்றல் ஸ்படிகத்திற்க்கு இணையாக. வேறு எதற்கும் இல்லை.

மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக. சித்த புருஷர்களும், ரிஷிகளும் அறிவியலை. ஆன்மீகம் என்னும் தேனில் கலந்து கொடுத்தார்கள். அது போலவே ஸ்படிகம். பின்னால் வந்த. குறுக்கு புத்தி உடைய சில சாமானிய மக்கள். ஸ்படிக மாலை. இன்னார், இன்னார் அணியலாம். ஸ்படிக மாலை அணிய. இன்ன, இன்ன விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று.அவர்கள் இஷ்டத்திற்க்கு மனதில் தோன்றியவைகளை எழுதி வைத்து விட்டுச் சென்று விட்டார்கள்.

அறிவியல் ரீதியாக. ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். காற்று, சூரியன், சந்திரன், நீர் என்று. இறைவனின் அணைத்து படைப்புகளும் அனைவருக்கும் பொதுவானது தானே. நீர் அனைவர்க்கும் பொதுவானது என்றால். நீர் பாறையில் இருந்து கிடைக்கும் ஸ்படிகம் மட்டும் எவ்வாறு? ஹிந்துக்களுக்கு மட்டும். உரிய ஒன்றாக ஆகும். நாஸ்திகர்கள் உட்பட. இதை யார் வேண்டுமானாலும் அணியலாம்.

தெய்வ பக்தி உள்ளவர்கள். 108 மணிகள் உடைய ஸ்படிக மாலையை கையில் வைத்து. உங்களுக்கு பிடித்த இறைவனின் பெயரை. கிடைக்கும் நேரத்திற்குத் தகுந்தாற் போல். ஜெபம் செய்யலாம். அதை தவிர்த்து. இறை நம்பிக்கை உடையவர்கள், இல்லாதவர்கள் இருவருமே. அதி காலையில் எழுந்து. மொட்டை மாடி போன்ற திறந்த வெளியில் உங்கள் லட்சியம் என்னவோ. அதையே. திரும்ப, திரும்ப சொல்லி. மொட்டை மாடியில். ஜெபம் போல் ஸ்படிக மாலையை வைத்து செய்யுங்கள்.
நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் மனம் ஒருநிலைப்பட வேண்டும். அமைதியான அதிகாலை வேளை தான் மனதை ஒரு நிலை படுத்த சரியான நேரம். பிரும்ம முகூர்த்தம் எனப்படும் மூன்றிலிருந்து ஐந்து. இதை நீங்கள் சும்மா. முயற்சி செய்து பாருங்கள்.

 உங்களுடைய ஆசை நியாயமான ஆசையாக இருந்தும். அது நிறைவேற கால தாமதம் ஆனால். இவ்வாறு செய்வது. அதன் கால தாமத்தை குறைக்கும். முக்கியமாக. இதன்மூலம் உங்களுடைய நேர்மறை எண்ணம் அதிகரிக்கும்.
ஸ்படிக மாலையை நீங்கள் கழிவறை செல்லும் நேரம் தவிர. மீதி அனைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். முக்கியமாக நீங்கள் குளிக்கும்பொழுது. கழுத்தில் ஸ்படிக மாலையோடு குளிப்பது நல்லது.

ஸ்படிகமாலையை ருத்ராட்சம் இல்லாமல் அணியக்கூடாது. அசைவ உணவு சாப்பிடும், தூங்கும் போது, தீட்டு வீடுகளுக்கு செல்லும் போதும் அணியக் கூடாது. ஸ்படிகத்திற்கு மின்சாரத்தை தாங்கக்கூடிய சக்தி உள்ளது.
ஸ்படிக லிங்கம் வீட்டில் வைத்துபூஜை செய்தால் சகலவித நன்மைகளும் கிடைக்கும். இராமேஸ்வரத்தில் இராமநாதர் சன்னதியில் அதிகாலை 4 மணிக்கு ஸ்படிகலிங்க தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

எனவே ஸ்படிகம் அணிவது உடலுக்கு மிகவும் நன்மை தருகிறது தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும் நம்பிக்கைகள் போலவே படிக மாலை அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள் உண்டு.

இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம். படிக மாலையை தண்ணீர் பால் என்பவற்றில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி. எந்த காலமானாலும் வெப்பத்தை தடை செய்யும் சக்தி இம்மாலைக்கு உண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம்மாலைக்கு இயலும்.இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தருணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறைவதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்களுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.

ஸ்படிகப் பாறைகளை அனைவரினதும் கண் பார்வை படுமாறு வைக்கும் போது அந்த இடத்தின் தன்மை மிகவும் சாந்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். ஸ்படிகத்தை எந்த வடிவில் வைத்திருந்தாலும் வாரம் இரு முறையாவது தண்ணீருக்குள் அந்த ஸ்படிகத்தைக் குறைந்தது 4 மணி நேரம் ஊறவிடவேண்டும், பின்பு அதை அதன் இடத்திலேயே வைக்கலாம். அதை அபிஷேக முறையிலும் செய்யலாம்.

ஜபம் செய்யும் பொது அந்த வெண்மை நிறமான படிகத்தை உருட்டும் போது கையில் அழுத்தம் ஏற்பட்டு உடலில் குளிர்ச்சியை உண்டாக்குகிறது. மேலும் அந்த படிக மணியிலிருந்து வெளிப்படும் நிறமாலைகள் நம் கட்டைவிரல் மற்றும் நடுவிரல் நுனியின் மூலமாக மூளை,பினியல் சுரபி, கண்கள்,காதுகள் ஆகிய உறுப்புகளை சென்றடைந்து அந்த உறுப்புகளைத் தூண்டுவதோடு குளிர்ச்சியையும் அளிக்கிறது .
இந்த மணி மாலையை அணிவதால் இது தோலிலும் ,நெஞ்சிலும் பட்டு இதன்குளிர்ச்சியும் இதன் நிறமாலைகளும் உள்ளே ஊடுருவிச் சென்று இருதயத்திற்கு நன்மை செய்வதோடு ரத்த அழுத்த நோயை குணப்படுத்துவதோடு நீரழிவு நோயையும் குணப்படுத்தும்.

இரவு வேளை இம்மாலையை தண்ணீரில் இட்டுவைத்து மறுநாள் அத்தண்ணீரைக் குடித்தால் ஆண்மை விருத்தியடையும் என்று நம்புகின்றனர். பெளர்ணமி நாள் ஸ்படிகமாலை அணிந்தால் உடல் சக்தி கூடும்
மிகவும் குளிர்ச்சியான பிரதேசங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்றவர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத்தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான்.

 காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும்.
காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாகவும் இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.
ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். இவ்வளவு அற்புதமான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம்.

 ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.
ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மெகரு. இந்த மெகரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும்.அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லட்சுமி கடாட்சம் வரும். இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்களாக....

       - திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
         சித்தர்களின் குரல் shiva shangar