Wednesday 3 April 2019

மோட்சம் யாருக்கு கிட்டும்? நேர்மையாக வாழ்பவர்களுக்கு இறை எவ்வாறு உதவுகின்றது?

*அஉம் சிவ புத்திரன், கந்த சீடன், பொதிகை வாழ் குருநாதன் அகத்திய மஹரிஷிகள் பாதம் காப்பு*



*அடியவர் கேள்வி*:-
மோட்சம் யாருக்கு கிட்டும்? நேர்மையாக வாழ்பவர்களுக்கு இறை எவ்வாறு உதவுகின்றது?

*சித்தன் பதில்*:-

ஒரு சிறு துளி "கடன்" போலும் இல்லாமல் வாழும் ஆத்மாக்களுக்குத்தான், மோக்ஷத்திற்கு வாய்ப்பே. கவனிக்க - "வாய்ப்பு". அந்த துளி கூட இல்லாமல் இருப்பவர் யார் என்று நீ தேடினால், ஒருவர் கூட இந்த உலகில் அகப்படமாட்டார். புத்திக்கு எட்டிய வரை கடன், மனித உணர்வுக்கே எட்டாத கடன் என இன்னொன்றும் உண்டு. சுருக்கமாக சொன்னால், ஒரு தூசு அளவுக்கு கூட கர்மா ஒட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் எனத்தான், மனிதர்கள் விரும்ப வேண்டும். அதற்கும் ஒரு எளிய வழி, சித்த மார்கத்தில் உண்டு. ஒரு மனிதனானவன் தினமும், ஒவ்வொரு நிமிடமும், ஏதேனும் கொடுக்கவோ அல்லது வாங்கவோ வேண்டும். அதுதான் அவன் விதி. இந்த கொடுக்கும், வாங்கும் நிகழ்ச்சிதான் அவனுக்கு சேர்கிற கர்மாவில் பெரும் பங்கு வகிக்கிறது. இது போக, அவன் எண்ணம். ஆசை. அவன் பார்வை போன்றவை, பலவித கர்மாக்களை ஒன்று சேர வைக்கிறது. அதையும் மீறி ஒருவன், நான் நேர்மையாகத்தான் வாழ்வேன் என்று தீர்மானித்து, நடந்து சென்றால், இவ்வுலக மனிதர்கள், அவன் தலை மீது அத்தனை குப்பை கர்மாவையும் கொண்டு கொட்டுவார்கள். *கொட்டிவிட்டு போகட்டும், கொட்டப்படுவது, என்னுள் உறையும் இறை மீது என்று நடந்து சென்றால், கொட்டியவர்களே, திட்டி தீர்த்து, அவன் கெட்ட கர்மாவை வாங்கிக் கொள்வார்கள். அவன் ஆத்மா மற்றவர்களால்  வெகு எளிதில் சுத்தப்படுத்தப்பட்டுவிடும். அதுவும் குப்பை கொட்டியவர்களாலேயே! என்ன விசித்திரமான தண்டனை என்று பார், என்று நிறுத்தினார்.*

*குருநாதர் அகத்திய மஹரிஷிகள் தாள் சரணம்*