Wednesday, 17 April 2019

திருமூலர் சித்தர் பற்றி அகத்திய மாமுனிவரின் வாக்கு

*இன்றைய தின அகத்தியர் வாக்கு :*

*கேள்வி : திருமூலர் சித்தர் பற்றி கூறுங்கள் ஐயனே 🙏*

*அகத்திய மாமுனிவரின் வாக்கு :*

*சிவலாேகத்தில் உள்ள "சுத்த சதாசிவர்" என்ற மகான்*, *ஒருமுறை பூமியிலே இறைவனின் சிலை வடிவத்தைக் காண்பதற்காகவும், எம்மை(அகத்தியர்) தரிசிப்பதற்காகவும் (யாம் அப்பாேது பாெதிகை மலையில் இருந்தாேம்), சில அரிய கருத்துக்களை தெரிந்து காெள்வதற்காகவும் பூமிக்கு வந்து, பல ஸ்தலங்களை தரிசித்து வருகையிலே*, ஆடு, மாடுகளை மேய்த்துக் காெண்டிருந்த "மூலர்" என்ற ஓர் இடையர் உயிர் இழக்க, அந்த தேகத்திற்குள் இந்த முனிவரின் ஆத்மா புகுந்து, சில லீலைகள் புரிய வேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளமாக இருந்தது.

கண்ணீர் விட்டுக் காெண்டிருந்த ஆவினங்கள்(பசுக்கள்)மீது இரக்கம் காெண்டு, தன் தேகத்தை பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்துவிட்டு "மூலர்" உடம்பினுள் இந்த முனிவர் புகுந்து, ஆடு, மாடுகளை அந்தந்த வீடுகளில் சேர்த்துவிட்டு, மீண்டும் உடலைத் தேடியபாேது, *இறைவன் அசரீரி வாக்காக, "உன் உடலை யாம் மறைத்துவிட்டாேம். இனி இந்த உடலிலே இருந்து நீ செய்ய வேண்டிய செயல்களைச் செய்" என்று கூற, பிறகு அந்த உடலிலேயே இருந்து பலருக்கு உபதேசம் செய்ததாேடு, 3000 ஆண்டுகள் கடுமையான தவத்தில் இருந்தார்.*

ஆண்டுக்கு ஒன்றாக பாடலைப் பாடி *யாேகம், ஞானம், மந்திரம், தந்திரம், வித்தை, கலை, சாஸ்திரம், வேதம் என்று அனைத்து மூலக்கூறுகளிலும் மனிதனுக்கு புரியும் வகையிலும், துன்மார்க்கர்களுக்கு எட்டாத வகையிலும் நுட்பமாக மனித தேகம், தேகம் நிலையாமை, தேகம் தாேன்றுகின்ற தன்மை, ஆன்மாவின் தன்மை*, என்றெல்லாம் பல கூறுகளாகப் பிரித்து, அதே சமயம் மரபு, சாஸ்திரம் என்ற பெயர்களில் மனிதர்கள் புரியாமலும், புரிந்த பிறகு சுயநலத்தாலும் செய்து வரும் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி நல்லதாெரு தத்துவ, ஞானப் பாடல்களையெல்லாம் இறைவன் அருளைக் காெண்டு எழுதி வைத்தார். *அப்படிபட்ட அற்புதமான மகான் அப்பா அவர்.*

*திருமூலர் சித்தரின் ஜீவசமாதி உள்ள இடம் :*

*திருவாவடுதுறை, காேமுக்தீசுவரர் காேவில் (3000ஆண்டுகள் தவம் செய்த இடம்), கும்பகாேணம் அருகில்.*

                🙏 *-சுபம்-* 🙏

🙏 *ஓம் அகத்தீசாய நம.* 🙏

*குருநாதா சரணம்! சரணம்!*🙏

ஜீவ நாடி முகவரி : முன்பதிவிற்கு மாலை 4:00மணிக்கு மேல் அழைக்கவும். அகத்தியர் இறைச்சித்தன் சித்தர்கள் பீடம் கதவு எண் 1/119, அழகப்பகவுண்டன் புதூர், பொகளூர், மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலை, தமிழகம். இறை சித்தன் : 73738 38104, 95850 18295, 73738 35583
https://agathiyarpogalur.blogspot.com/?m=1